அத்தியாயம் - 8 💫

நான் வெளியில் உணர்ந்த அதே உணர்வு எனக்குள் தீடிரென்று பற்றிக் கொண்டது. அது வரை ஜனலில் விழுந்த மாமரத்து நிழல் என்று நான் நம்பிக் கொண்டிருந்த நிழல் கிரில் கம்பியைப் பற்றிக் கொண்டு இருக்க, அப்போது தான், ஒரு குரங்கு குட்டித் தொங்கிக் கொண்டு இருப்பதைப் பார்த்தேன்.

அந்த இருட்டில் , என் பின்னால் யாரோ இருப்பதுப் போல் உணர்ந்து, நான் திரும்பியக் கணப் பொழுதில் , குரங்கு குட்டி என நான் நினைத்த அடர்ந்த கருப்பு நிற நிழல் என்னைத் தாண்டிச் சென்று என் பின்னால் நின்ற அவனின் தாயோடு போய் நின்றது.

என் கண்கள் இமைக்க மறந்து அவர்களைப் பார்த்துக் கொண்டு இருந்தன, நான் என் பாட்டியைக் கைகளால் தட்டி அழைக்க அவள் சிறிதும் நகரவில்லை. அடுத்த நொடியே அவைகள் காற்றில் கரைந்தன.

என்று ரதி அன்று நடந்தவையைக் கூறி முடித்தாள்.

"சரி, நீ சொல்றத வச்சுலாம் எதும் என்னால நம்ப முடியாது , புரூப் வேண்டும் " என்றான் நித்விக்.

"நம்புனா மாதிரியே , அப்போ எதுக்கு எல்லாத்தையும் கேக்குறீங்க ? " என்று கடுப்பில் எகிரினாள், ரதி.

அவள் இதுவரைக் கூறியவற்றை உண்மை இருக்கா என்பதற்காக அவளைச் சீண்டி விட்டு சோதித்துப் பார்த்தான், நித்விக்.

"அப்படி சொன்னால் தான நீ எல்லாத்தையும் மறைக்காமல் உண்மையைச் சொல்லுவ " என்று அவனின் இடக் கையில் நடு விரலில் அணிந்திருந்த மோதிரத்தை விரலோடு சுற்றி விட்டு மீண்டும் அதை அணிந்துக் கொண்டான். அந்த மோதிரத்தை அபோதாவுது ரதி பார்திருந்திருகளாம் , ஆனால் விதி வலியது , அவற்றை மாற்ற முடியாது அல்லவா!

"என்ன ? இதுக்குத்தான் இந்த pschyologists லாம் நம்பவே கூடாது" கண்களை உருட்டினாள், ரதி.

"அடுத்த நாள் நீ உங்க பாட்டி கிட்ட இதைப் பற்றி ஏதும் சொல்லலையா ? " என்று முழுவதையும் தெரிந்துக் கொள்ளும் நோக்கத்துடன் வினவினான், நித்விக்.

"நான் இப்படி பார்த்தேன் சொன்னால், நம்ப மாடாங்கனு எனக்குத் தோனுச்சு, அதான் பாட்டி கிட்ட யாராச்சும் இப்போ ரிசன்ட்டா அம்மா மகன் இறந்தங்களானு கேட்டேன். எங்க பாட்டி இல்லன்னு சொல்ல, வீட்ல வேலைப் பார்த்த ஒரு அக்கா, ஆமா பாப்பானுச் சொல்லி எனக்கு எப்படித் தெரியும் என்று கேட்டார்கள், அதுக்கப்புறம் தான் நான் பார்த்தது ஆத்மானு முடிவு பண்ணேன் " என்றாள்.

"ஹ்ம்ம்..சின்ன வயசுல இப்படி நடந்துசுன்னு பயம் இல்லையா உனக்கு?" என்றான்.

"அத ஏன் கேக்குறீங்க, எனக்கு ஃபீவரே வந்துருச்சு. ஆனால் நாட்கள் செல்ல செல்ல, இதைப் பார்த்த பிறகு அது என்ன ? ஏன் அப்படி தெரிஞ்சு ? அப்படினா என்ன ? என்று எனக்குள் நிறைய விடைத் தெரியா கேள்விகள் வர, அதுல எனக்கு அவற்றைப் பற்றி தெரிந்துக் கொள்ள ரொம்ப ஆர்வம் வந்துச்சு , சோ... சோ..." என்று இழுத்துக் கொண்டே முழித்தாள் ரதி.

"சோ... " என்று அவளின் ராகத்திலியேக் கேட்டான், நித்விக்.

"அதுக்கிட்ட ... அதுக்கிட்ட..."

"அதுக்கிட்ட வாங்க பழகலாம்னு கேட்டியாமா " என்று அங்கு கண்ணாடிக் குவளையில் இருந்த தண்ணீரைக் குடித்தான், நித்விக்.

"ஆமா சார், நேராப் பார்த்த மாதிரியேச் சொல்லுறீங்க, அதுக்கிட்டையேப் பேசி தெரிஞ்சிகிடலாம்னு , அதுக் கிட்டப் பேச முயற்சி பண்ணேன் " என்று வேகமாகச் சொல்லி முடித்தாள்.

நித்விக்கிற்கு பொறை ஏற, இரும்பியவன், கைகளால் அவன் தலையைத் தட்டிக் கொண்டான். "ரொம்ப ஆர்வக்கோளாரான ஆளாக இருப்பப் போலியே" என்று அவனை ஆசுவாசப் படுத்திவிட்டுக் கூறினான்.

"ரொம்ப இல்ல, கொஞ்சூண்டு " என்று பெருவிரலை மடக்கி ஆள்காட்டி விரலோடு அறை சதவீதம் தான் என்பது போல் காட்டினாள்.

முதல் சந்திப்பில்லே இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சீண்டிக் கொண்டு இருப்பது , இருவருக்கும் பல நாள் பழகியதுப் போல் தோன்றியது.

"சரிங்க மேடம், என்ன தான் பண்ணீங்க ? " அவன் மூக்குக் கண்ணாடியை சரி செய்துக் கொண்டேக் கேட்டான்.

"அத ஏன் சார் கேக்குறீங்க... பேய் கிட்ட பேசலாம்னு போய், நான் எங்க அம்மா கிட்ட கன்னத்தில வாங்கினது தான் மிச்சம்"  முகத்தினை வாடியப் பயிர்ப் போல் தொங்கவிட்டு கூறினாள், ரதி.

"இன்னும் இந்த சீன் வரவில்லையேனுப் பார்த்தேன் " என்று நக்கலாக கூறினான் நித்விக்.

"ஆனால் அங்க ஒரு விஷயம் எனக்குப் புரிந்தது டாக்டர். அது எப்படி சொல்றது,....இப்போ ஒரு பேச்சுக்கு சொல்லுறே, எனக்கு இங்க ஏதாச்சும் ஸ்பிரிட்ஸ் இருந்தா அது என்னால ஃபீல் பன்ன முடியும். அது ஏன்னு எனக்குத் தெரியல....இந்த மாதிரி   எனக்கு இன்னும் நிறைய டவுட் இருக்கு  " இரண்டு கைகளையும் விரித்து விசாலப் படுத்திக் கூறினாள், ரதி.

"ஒவனா கிளியர் பணிரலாம், இப்போ நீ கேடதுக்குப் பெயர் spooky . ஸ்பிர்ட்ஸ் இல்ல ஆத்மா நீ அதுக்கு என்ன பெயர் வச்சுக்கிடாலும் , அது இப்போ இந்த புவியில் உருவம் இல்லாமல் இருக்கும் ஒரு எனர்ஜி அவ்ளோதான். சில பேறினால் அவற்றை உணர முடியும். அது போல் தான் உனக்கும் இருந்திருக்கு" என்று விளக்கம் தந்தான் நித்விக்.

கையில் கடிகாரத்தைப் பார்த்தவன், மணி ஆறு என்பதைக் காட்ட , அவன் அடுத்த நாள் காலை பத்து மணி அளவில் வருமாறுக் கூறிவிட்டு எழுந்தான்.

"டாக்டர் சார் , அப்போ ராஜேஷ் " என்று அவனிடம் இருந்து அவள் எதிர் பார்த்த பதில் வராததால் பதறினாள், ரதி.

அவன் ராஜேஷைப் பற்றி யோசித்து, அவளுக்கு தற்காலிகமாக ஒரு விடயம் செய்யுமாறு கூறினான். ரதியும் அதற்கு ஒத்துக் கொண்டு கிளம்பினாள்.

அவளுக்கு பிடித்த சந்திரன் முழு முகமாய் காட்சிக் கொடுக்க அவற்றை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தவள் நினைவில் தற்போது நித்விக் கின் நியாபகம் சூழ்ந்து கொண்டது.

"அம்மு ... அம்மு " என்று ஆதவன் அவளைப் பல முறை அழைத்தும் பதில் கூறாமல் அவள் நின்றுக் கொண்டு இருக்க. ஆதவனுக்கு சற்று கலக்கமாக இருந்தது 'இவளுக்கு என்ன ஆச்சு நல்லா தான இருந்தா '

"ரதி " என்று ஆதவன் அவளின் தோளில் அடிக்க, சுய நினைவிற்கு வந்தாள்.

"சொல்லு டா, என்னாச்சு ? " கையில் ஏதோ ஒன்றை பின்னாடி மறைத்துக் கொண்டாள்.

"இப்போ எப்படி இருக்கு, உனக்கு ஒன்னும் இல்லை தானே, நான் எப்படி பயந்துடேன் தெரியுமா" கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது ஆதவணுக்கு.

"ஹே லூசு, எனக்கு ஒன்னும் இல்ல, நான் தான் இப்போ நல்லா ஆகிடேன்ல, ஏதோ கெட்ட கனவு நேத்து, அவ்ளோ தான் லோ பிரஷர் ஆகிருக்கு" என்று அவனிடம் எதையும் கூறாமல் மலுப்பினாள்.

"சரி கீழே வா, அம்மா சாப்பிட கூப்பிடுச்சு " என்று அவளின் வலது கையை அவனோடு கோர்த்துக் கொண்டான்.

"இரு வரேன் " என்று போர்வையில் கையில் வைத்திருந்த பொருளை மறைத்து வைத்து அத்துடன் தலையனையையும் எடுத்துக் கொண்டாள் .

"எதுக்கு இது ? இப்போ தோவைக்க போறியா? " அவளின் நடவடிக்கைகள் புரியாமல் கேட்டான் ஆதவன்.

"ஆமா, தோவச்சுக் காயப் போட போறேன் , ஐய்ய.. இந்த நேரத்துல எவன் பண்ணுவான் " தோளைக் குலுக்கினாள் ரதி.

"அதானப் பார்த்தேன், நீ தான் தெய்வீக குரங்கு ஆச்சே, சும்மாவே ஒரு வேலையும் செய்ய மாட்ட மகாராணி " குரங்குப் போல் செய்கைக் காட்டினான் ஆதவன்.

"டேய், நா குரங்குனா நீயும் குரங்கு தான, வா கீழே போவோம்" என போர்வை தலையணை அத்துடன் அவள் மறைத்து வைத்திருந்த பொருளையும் கையில் எடுத்துக் கொண்டு இருவருமே இறங்கினார்கள்.

"என்னடி இப்போ தான உன் பில்லோ கவர் மாத்துனேன் " ரதி கையில் அனைத்தையும் எடுத்துக் கொண்டு இரங்குவதைக் கண்டு கூறினாள் தேன்மொழி.

"அம்மா, இன்னிக்கு நான் உங்க கூடத் தூங்க போறேன்" என்று கண்ணைப்  பெரிதாக்கி உருட்டிக் கூறினாள், ரதி.

"செத்தான் சிவனாண்டி " கத்தி சிரித்திக் கொண்டே அவளுக்கு முன்னாள் இறங்கி வந்தான் ஆதவன்.

"பரவா இல்லை வந்துப் படுத்துக்கோ , உடம்பு சரி இல்லவேற நானே சொல்லலாம்னு தான் இருந்தேன் அம்மு,  " என்று சாப்பாடை தட்டில் எடுத்து வைத்துக் கொண்டு இருந்தார், தேன்மொழி.

"நீ ஏன்டா அப்படி சொல்ற " மேலிருந்து தலையணையை தூக்கிப் போட்டாள் ரதி.

"நீ மனுஷி மாதிரியா தூங்குவ , பெட்யில் உருண்டு ஓடும் வித்தக்காரி, ராட்ஷசி உன்கிட்ட மனுஷன் படுத்து தூங்குவான்னா "என அவள் தூக்கிப் போட்ட தலை அணையை லாவகமாக பிடித்தான் ஆதவன்.

"டேய்... நீ எல்லாம் வாய் பேசாத , அப்படியே ஓடி போய்ட்டு.. அம்மா ...அவனை வாய மூடச் சொல்லு" என்று ஆதவனை அடிப்பதற்கு வேகமாக இறங்கி வந்தாள் ரதி.

"டேய், ரெண்டு பேரும் அமைதியா வந்துச் சாப்பிடுங்க... உங்க அப்பா வேற அப்பளம் ஃபேக்டரி திறக்குறதுக்கு ஒருத்தரைப் பார்க்கணும்னு தேனிக்குப் போய்ருகாரு, வரதுக்கு மூணு நாள் ஆகுமாம். நீங்க அமைதியா இப்போ இருந்தா படத்துக்கு சன்டே மால் கூட்டிப் போவேன் " என்று அவர்களை வழிக்கு கொண்டு வருவதற்கு சூட்சமம்மாக யோசித்துக் கூறினாள், தேன்மொழி.

அவர்கள் இருவரும் அதற்கு ஒப்புக் கொண்டு அமைதியாக இரவு உணவை உண்டு எழுந்தனர். கண்ணனிற்கு படம் ,  மால் இவற்றில் எல்லாம் சிறிதளவும் இஷ்டம் கிடையாது. சொல்லப் போனால், இவ்விஷியங்கள் அனைத்தும் அவருக்குப் பிடிக்கவே பிடிக்காது. அதனால் , அவர் இல்லாத பொழுது, இப்படித் திருட்டுத் தனமாகச் சென்றால் தான் உண்டு. அதில் இவர்கள் மூவரும் கூட்டுக் கலவாணிகள்.

"அம்மு , ஏ.சி யை ஆஃப் பண்ணு " என்று தேன்மொழி கூற அதை அனைத்து விட்டுப் படுகையில் அவள் தலை அனைக்குள் மறைத்து வைத்திருநதப் பொருளை எடுத்தாள். அப்பொருளைப் பார்தவளுக்கு நித்விக் கூறியது நினைவிற்கு வந்தது.

" நான் முன்னாடியேச் சொன்ன மாதிரி ஸ்பிரிட்ஸ்க்கு ஆக்டிவ் வா இருக்க எனர்ஜி தேவைப் படும். The law of conservation of energy states that energy can neither be created nor destroyed - only converted from one form of energy to another. எனர்ஜி ஒன்னுல இருந்து இன்னொரு பொருளுக்கு தான் போகும். அதனால், ஐயன் அல்லது சில்வர் இந்த ரெண்டு மெட்டலும் எந்த ஸ்பிரிட்ஸ் ஆக இருந்தாலும் அதாவது பாஸிட்டிவ் இல்ல நெகடிவ் எதுவாக இருந்தாலும், அதோட எனர்ஜியை அதனுள் இழுத்துக்கும் தன்மை உடையது. இதுல ஸ்பிரிட்ஸ் கிட்ட எனர்ஜியை குறைக்க முடியும். அதுனால அது ஆக்டிவ் வா இருக்க முடியாது. இதுக்குப் பெயர் The cold iron theory னு சொல்லுவாங்க. சோ நீ ஏதாவது ஐயன் ராட் பக்கத்துல வச்சு தூங்கு , ஆனால் இது தற்காலிகமாக தான் சொல்லுறேன். என்ன ஏதுன்னு ஃபுல்லா தெருஞ்சுக்காம ஏதும் பன்ன முடியாது. " என்று நித்விக் கூறியவற்றை யோசித்துக் கொண்டு இருந்தாள், ரதி.

ராஜேஷ் இன்னிக்கு வர மாட்டான் என்று எண்ணிக் கொண்டே நிம்மதியாகத் தூங்கினாள் ரதி. அவள் கண் உறங்கிய சில நிமிடங்களில், அவர்களின் கதவு டமார் என்று திறந்த சத்தம் கேட்டு எழுந்தவுள்ளுக்கு அங்கு ஒரு உருவம் ஏளனச் சிரிப்புடன் நின்றுக் கொண்டு இருந்தது.

          ~அவளின் உலகம் தொடரும்!

   
Hi Guys!

How is the update?

Unga comments and suggestions solunga.

Neenga pei irukunu nambuninganaa , naan sonna vishiyangal unmai.

Apdi ilanu ninacha oru fantasy mathiri eduthukonga.

Dr. Nitvik ah MBA paduchatha solirunthaen but science major ithuku theva padura naala Cardiologist ah mathirukaen avlo thaan.

Thanks for Reading,

With lots of love,
Lolita! 💙

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top