அத்தியாயம் - 7💫
"உங்களை அறிமுகப் படுத்துங்க " என்று அவனின் டேபிளில் இருந்த மூக்குக் கண்ணாடியை எடுத்து, அவன் புருவத்தை அனைக்கும்படி அணிந்தான், நித்விக்.
"என் பெயர் ரதி, நான் ஒரு மீடியம். " அவள் கூறியதை நித்விக் நம்புகிறானா என்று தெரிந்துக் கொள்ள பல்லைக் காட்டி வழிந்துக் கொண்டே நிறுத்தினாள், ரதி.
"மீடியம் நா என்னன்னு தெரிஞ்சு தான் சொல்லுறிங்களா? " புருவத்தை உயர்த்திக் கேட்டான், நித்விக்.
"ஹ்ம்ம்..ஆமா , பிரவுஸ் பண்ணி தெரிஞ்சுகிட்டேன் " என்று மனதில் அவளை மெச்சுகிட்டு, பல் வரிசைக் காட்டினாள், ரதி.
"எதுக் கெடுத்தாலும், பல்ல பல்லக் காட்டாத, இது எவ்வளோ சீரியஸான விஷியம்னு தெரியுமா ? இதுல உனக்கு தெரியாத நிறைய பிரச்சினை இருக்கு " என்று குரலை சற்று உயர்த்திக் கூறினான், நித்விக்.
"அதான் எல்லாம் தெரிஞ்ச நீங்க , எனக்குத் தேவைப் படுறிங்க" என்று அவனின் கண்களைப் பார்த்துத் தடு மாறி உளறினாள். ரதியிடம் சற்று குரல் உயர்த்திப் பேசினால் கூட அவள் உடல் நடுங்கிடும். இதில், நித்விக்கின் குரல் பற்றிச் சொல்லத் தேவையில்லை.
"என்ன? " என்றான்.
"ஆங்..அது வந்து... அது வந்து.., உங்களால எனக்கு ஹெல்ப் பண்ண முடியும்னு நம்புறேன் , அதத் தான் சொல்ல வந்தேன்" என்று சமாளித்தாள், ரதி.
'இவன் கிட்ட வேற வாய வச்சிட்டு சும்மா இருக்காம வம்புக்கு இளுத்து வச்சிட்டோம் , வர வர பேசக் கூட முடியாம மைண்ட் வாய்சாவே போயிட்டு இருக்கு, இப்படியே போன, நீ பேசக் கூட மறந்திருவ ரதி ' என்று அவளுகுள் எண்ணிக் கொண்டாள்.
"சரி இல்லாத மூளையை வச்சு ரொம்ப யோசிக்காத , பண்ணலாம். எதையும் ஃபுல்லா தெருஞ்சுக் கிடாம, என்னால எதும் பன்ன முடியாது" என்று அவன் இருக்கைகளையும் மடித்துக் கோர்த்து அவனின் மேஜையில் வைத்துக் கூறினான்.
'இப்போ என்ன சொல்ல வரானு தெரியலையே... ஹையோ சந்திரா... இப்பவும் மைண்ட் வாய்ஸ்லத்தான் பேசுறேன்னா..என்ன மூளை இல்லனுல சொன்னான்ல '
" என்ன மூளை இல்லையா...ஹலோ மிஸ்டர் , நான் உங்க பேஷண்ட்... மரியாதையா நடத்துங்க.... இல்லாட்டி கையைப் பிடிச்சு இழுதிங்கன்னு சொல்லி கம்லைன்டு பண்ணிடுவேன், ஹெல்ப் பண்ண முடியாடி டாரெக்ட்டா சொல்லுங்க , அதை விட்டுட்டு சும்மா கத்துறது, திட்டுறதுனு இருக்காதிங்க. உங்களுக்கு தான் மூளை இல்லை. எனக்கு என்னமோ உங்களுக்கு தான் இதப் பத்தித் தெரியாம, ஊர ஏம்மத்திகிட்டு இருக்க மாதிரி இருக்கு.. அண்ட் லாஸ்ட்லி எனக்கு கத்துனா சுத்தமா பிடிக்காது , டொண்ட் பிகேவ் லைக் திஸ் டு மீ " என்று எங்கு இருந்து அவ்வளவு தைரியம் வந்தது என்ன தெரியாமல் மூச்சு விடாமல் பேசி எழுந்தாள், ரதி.
அவள் பேசிய அடுத்த நொடி, 'இனிக்கு நைட் அவன் உங்களை கொண்ணாலும் கொன்றுவான் டாக்டர், நீங்க செத்துட்டா என் கிட்ட வந்துப் பேசுங்க , அப்போ உங்களுக்குத் தெரியும் அது உண்மையா இல்லையா என்று ' அவள் பேசிய வாய்ஸ் ரெக்கார்டு ஓடியது.
"அம்மா அப்பாக்கு தெரிஞ்சு முடிஞ்சு சோலி " மைண்ட் வாயிஸ் என்று நினைத்து சத்தமாகப் பேசினாள்.
"அதே தான், முடிஞ்சு சோலி" என்று கையைக் கழுத்தில் வைத்து வெட்டுவதுப் போல் செய்துக் காட்டினான்.
"ரொம்ப மரியாதையாக பேசி இருக்க, என் தாத்தா கிட்ட. இப்போ என்ன கம்பிளைன்டு பன்ன தான போற , அக்னிச் சிறகே " என்று கையை விரித்துச் சிலாகித்தான், நித்விக்.
" ஐ யம் பாவம், இதுக்கு மேல் எதுவும் வேண்டாமே" என்று அவளின் சாயம் தீட்டாத செவ்விதழ்களைப் பிதுக்கி, முகத்தைச் சுருக்கிக் கூறினாள், ரதி.
" சரி வந்து உட்காரு, உனக்கு என்ன தெரியுது, எனக்கு என்ன தெரியுதுனுப் பார்ப்போம்... எல்லாத்தையும் மறைக்காமல் நீ என்கிட்ட சொல்லு, அப்படியானத் தான், என்னால இதுல கண்டிப்பா உனக்கு ஹெல்ப் பண்ண முடியும், ஆனால் ஒரு கண்டிஷன். " என்று அமரும் படி சைகைக் காட்டினான், நித்விக்.
நித்விக் கூறிய கண்டிஷன், ரதிக்கு அவன் கேட்டதுப் பெரிய அளவில் தெரியாததால் ஒற்று கொண்டாள். நித்விக் இதற்கு முன் யாரிடமும் ஒருமையில் பேசியது இல்லை. தற்போது இவளிடம் இந்த வழக்கம் ஏன் வந்தது என்று அவனுக்குத் தெரியவில்லை.
"ரொம்ப சாரி, ஐ மீன் இட் " என்று பல்லைக் காட்டி , பின் அவன் சொல்லியது நியாபகம் வர வாயை மூடிக் கொண்டாள்.
"இப்போ உன் பிரச்சினை என்னன்னு சொல்லு ? " என்றான்.
"ராஜேஷ், அந்த ஆத்மா இப்போ என்ன கொல்ல வந்துச்சு , நான் எப்படியோ புத்திசாலி யா இருக்கனாலத் தப்பிப் பிளைத்தேன் " என்று நெஞ்சில் கையை வைத்துக் கூறினாள், ரதி.
" ஹ்ம்ம்.. சான்ஸஸ் இருக்கு, சொன்னேன்ல ரொம்ப பெரிய ரிஸ்க்குனு , வேற ஏதாச்சும் உன் உடல் அளவுல வித்தியாசம் தெருஞ்சா ?" என்றான்.
"இப்போ இரண்டு மூன்று நாளா என்னால தூங்க முடியல, ரொம்ப கை கால் அப்புறம் கழுத்து தலை எல்லாம் வலிக்குது. இப்போதைக்கு இது தான் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு " என்று பொடனியைப் தேய்த்துக் கொண்டுக் கூறினாள்.
"ஹ்ம்ம்... எத்தனை மாதமா இப்படி நீ மீடியம்மா இருக்கனுத் தோணுச்சு? " என்றான்.
"ஹாஹா... மாதம்லா இல்ல , வருஷம். அதுவும் நான் அஞ்சாவுது படிக்குறதுல இருந்து " என்றாள்.
"வாட்? " சற்று அதிர்ந்து தான் போனான், நித்விக் .
"ஆமா, அப்போ தெரியாது . ஆனால் டிரீம்ஸ் மூலம் நான் பேசுறேனு எனக்குத் தெரிஞ்சது காலேஜ் ஃபர்ஸ்ட் இயர் " என்றாள்.
"இன்றெஸ்டிங் , எனக்கு நீ ஃபர்ஸ்ட் ல இருந்து இப்போ வர உனக்கு நடந்ததச் சொல்லு "
'என்ன இவன் கதைக் கேட்க உட்காந்துட்டான் போலியே, காசுக் குடுத்து ஒருத்தனுக்கு கதைச் சொல்டு இருக்கியே ரதி , நான் சொல்றது வச்சு கதை கிதை எழுதிருவானோ '
"ரொம்ப மைண்ட் வாய்ஸ் பேசுவியோ ? " என்று நக்கலாக சிரித்துக் கேட்டான்.
"அப்படி லாம் ஒன்னும் இல்ல "
"ம்ம் , பார்த்தா அப்படித் தெரியலையே"
"சரிச் சொல்லுறேன் "
" ஐந்தாம் வகுப்பு முழுத் தேர்வு பள்ளி விடுமுறைக்கு கிராமத்தில் இருக்கும் என் பாட்டி வீட்டுக்குப் போயிருந்தேன், அப்போ தான் அது நடந்தது, இவளோ வருடங்கள் ஓடியும், ஏன் என்று தெரியவில்லை, நான் இன்னும் அவற்றை மறக்காமல் நியாபகம் வைத்திருக்கிறேன். அதுக்கு அப்புறம் நடந்தத பல நிகழ்வுகள் எனக்கு நியாபகம் இல்லை. ஒரு வேளை , இது ஃபர்ஸ்ட் டைம்னால இருக்கும்னு நினைக்கிறேன்.
"பேய் மழை அடிக்குது " என்றாள் என் அம்மாவின் அம்மா , சீதா.
"ஜாலி" என்று குதுகளத்தொடுக் குதித்துக் கூறினேன்.
சொன்ன இரண்டு நிமிடத்தில், எங்கள் வீட்டில் கரெண்ட் இல்லாமல் போனது. மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் பால்கனியில் இருந்த படி தோசை ஊட்டி விட்டுக் கொண்டு இருந்தாள், என் பாட்டி சீதா.
சுற்றியும் கண்ணுக்கு எட்டும் வரை இருட்டு மட்டுமே, அப்படியே நான் பால்கனி ஊஞ்சலில் நிலாவைப் பார்த்து ஊட்கார்ந்திருந்தேன், எனக்கு தோசை தொண்டையில் பொறை ஏற,
"அம்மு நீ இங்கையே இரு பாட்டி வந்துறேன் " என என் பாட்டி தண்ணீர் எடுக்க உள்ளேச் சென்றாள்.
ஈரக் காற்றுத் தீண்ட என் கால்களை மடக்கி கைகளை மொட்டியோடு வைத்துக் கட்டிக் கொண்டேன். அந்த மூங்கில் ஊஞ்சலில் உள்ளே நன்குச் சாய்ந்து உட்கார்ந்தேன். யாரோ என் ஊஞ்சலை ஆட்டி விடுவதுப் போல் முதலில் எனக்குத் தோன்றியது. நான் சிறிதும் பயம் இல்லாமல் மெதுவாகத் திரும்பிப் பார்த்தேன்.
"யாரும் அங்க இல்லை, இல்லனு எனக்கு நல்லா தெரியும் " என்று பயத்தைக் காட்டிக் கொள்ளாமல் இருக்க வெளியே கேட்கும் படி சத்தமாகக் கூறினேன்.
இருப்பினும், யாரோ அங்கு நிற்பதுப் போல் என் உள் மனதுக்குள் தோன்றியது. என் பாட்டி குவளையில் தண்ணீர் குடிக்க எடுத்து வந்ததை என் கையில் திணித்தாள். அதை வாங்கி மடக் மடக் என்ன கண்களை மூடிக் கொண்டு குடித்து முடித்து கண்களைத் திறந்த நான்,
"அம்மா....பாட்டி..பாட்டி நீ உள்ள வா...." குவளையைக் கீழே போட்டுக் கத்திக் கொண்டு வீட்டினுள் ஓடி விட்டேன். என் முன் கருகிய உருவம் வெறும் நிழல்ப் போல் அங்கு எனக்குத் தோன்றியது.
"அம்மு .. அம்மு...ஒன்றும் இல்லை , பயப்டாதச் செல்லம்... செல்லம்.... அது கேண்டில்க்குப் பாட்டியோட நிழல் தான் விழுந்துச்சு " பாட்டி நான் அவள் நிழல் விழுந்தச் சுவர்ரைப் பார்த்துப் பயந்தேன் என்று என்னை ஆசுவாசப் படுத்தினாள்.
ஆனால் நான் அங்கு கண்டது என் பாட்டியையும் சேர்த்து மூன்று நிழல்கள். ஒரு பெண்ணின் கையில் என் உயரத்தில் ஒரு சிறுவனும்.
என் பாட்டி நான் எவ்வளவு கூறியும் என்னை நம்பவில்லை. இரவு அவளின் முந்தானையைப் பிடித்துக் கொண்டு தூங்கிவிட்டேன்.
அந்த இரவு பொழுது மின்னல் வெட்ட, இடி சத்தத்தோடு மழையின் துள்ளலில் காற்றும் ஒன்றுச் சேர இசைத் தென்றல் லாய் அமைந்தது. கட்டிலுக்கு எதிரில் இருக்கும் கிரில் அமைத்திருந்தக் கண்ணாடி ஜன்னலின் வழியே இவற்றை ரசித்துக் கொண்டு இருந்தேன்.
என் பின்னாடி ஏதோ சல சலப்புக் கேட்க, பின்னாடி திரும்பாமல் அப்படியேப் பாட்டியின் முந்தானையை கையில் பிசைந்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன்.
நான் வெளியில் உணர்ந்த அதே உணர்வு எனக்குத் தீடிரென்று பற்றிக் கொண்டது. அது வரை ஜனலில் விலுந்த மாமரத்து நிழல் என்று நான் நம்பிக் கொண்டிருந்த நிழல் கிரில் கம்பியைப் பற்றிக் கொண்டு என் அருகே.....
Hi Guys,
How is the update ?
Rathi pawam ah ila Nitvik pawamah?
Please give your valuable votes and comments!
Thanks for reading!
With Lots of Love,
Lolita! 💙
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top