அத்தியாயம் - 6💫

ரதிக்கு சில விடயங்கள் புறியாத புதிராகவே இருந்தது, எதனால் அவளுக்கு அன்றிரவு அவளுக்கு அவள் உயிர் பிரிந்தார்ப் போல் இருந்தது என்று புலப்படாமல் சிரமப் பட்டுச் சிந்தித்துக் கொண்டு இருந்தாள்.

'ஒரு வேளை ராஜேஷ் தான் என் உடம்பிற்காக , என் தலையில் அடுச்சுக் கொல்ல முயற்சி செய்து இருப்பானோ , அவனோட வேலையாத்தான் இருக்கும் மண்டையைலையே அடுச்சுடான் போலையே... கழுத்தும் சேர்ந்து வலிக்குதே...ஐயோ சந்திரா' என்று கண்களை மூடி அந்தக் குட்டி மூளையைக் கசக்கி சிந்தித்துக் கொண்டு இருந்தவள், அப்படியே கண் அயர்ந்து விட்டாள்.

ரதி அசந்து உரங்கிவிட , அவளைத் தொந்தரவுச் செய்யாமல், அங்கு நடந்த எல்லாவற்றையும் மறைந்து நின்றுப் பார்த்துக் கொண்டு இருந்தான், ராஜேஷ்.

அவளின் எண்ணங்களை உணர்ந்தவன், இந்நிலைக்கு காரணம் அவன் இல்லை என்று அவளிடம் சொல்லாமல், அமைதியாக அவ்விடத்தை விட்டு நகன்றான்.

இரவு உணவை முடித்து விட்டு ரதி உடன் அனைவரும், மருத்துவமனையில் தங்கி விட்டனர். 

சண்டை வரும் என்று நினைத்த தேன்மொழிக்கு கண்ணனின் இந்த மையான அமைதி இன்னும் கதி கலங்க வைத்தது.

" ஏன்டா  ஆதவா ...  உங்க அப்பா என்ன டா அமைதியா இருக்காரு " என்று ராகத்துடன், ஆதவன் காதருகில் ரகசியம் பேசுவது போல் முனு முனுத்தாள் தேன்மொழி.

"இங்க உன் பொண்ணு படுத்த படுக்கை யா கிடக்கா , நீ என்னனா... உன் புருஷன் பேசலனு ஃபீலிங்கா இருக்கியாமா" என்று தூங்கிக் கொண்டிருந்த ரதியின் விரல்களை தடவிக் கொண்டே கேட்டான், ஆதவன்.

"லூசு பயலே.. அவரு திட்டி தீர்த்து டா கூட பிரச்சனை இல்லை, இப்படி அமைதியா இருக்கிறது உள்ளுக்குள்ள பக்கு பக்குனு இருக்கு... பெருசா புயல் வந்திருமோனு " என்று ஓரக் கண்ணால் அங்கு இருந்த நாற்காலியில் , அமர்ந்திருந்த கண்ணனைப் பார்த்துக் கொண்டே கூறினாள், தேன்மொழி.

"ஓஓஓ...இது தான் புயல் வரும் முன் அமைதியா... எப்டியும் வரத்தானப் போகுது, எப்போ வந்த என்ன ? உனக்கு அவ்ளோ ஆசை இருந்தா , நான் போய் அப்பா கிட்ட சிபாரிசு பண்ணவாமா " என்று கிண்டலாக கூறி எழுந்தவனை  "கூறுக் கெட்டவனே... உக்காருடா... அவரே சும்மா இருந்தாலும், ஸ்கிரிப்ட் எழுதிக் கொடுத்துட்டு வருவ போலையே... " என்று ஆதவனின் மண்டையில் அடித்து அமர வைத்தாள், தேன்மொழி.

இவர்கள் சம்பாஷனைகள் கேட்டும் கேட்காமல் இருப்பது போல் இருந்தார்.
'ரதியின் தீடீர் இந்த நிலைக்குத் தானும் ஒரு காரணமாக இருந்திருக்கக் கூடுமோ? ' என்று
கண்ணன் இங்கு ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார்.

அவருக்கு தேன்மொழியும் ஒரு குழந்தை போல் தான். எது சொன்னாலும் எதையும் ரொம்ப யோசிக்க மாட்டாள், மிக வெகுளி, அவளின் தாயார் வீட்டிற்கு கூட தனியாக அவளை எங்கேயும் அனுப்ப மாட்டார், கண்ணன். பிள்ளைகளுக்கும் அப்படியே, எல்லாம் பார்த்து பார்த்துச் செய்பவர். அவ்வீட்டில், எல்லாமே கண்ணன் தான்.

இருப்பினும் , அம்மூன்று பேருக்கும் ஒரு ஸ்டிரைக்ட் ஆன கமாண்டோ தான் கண்ணன். எல்லா வேலைகளும் அவருக்குச் சரியான நேரத்தில் சரியாகச் செய்திருக்க வேண்டும் , காலை எழுவதில் இருந்து, பால் குடிக்கும் நேரம், காலை , மதியம் , இரவு உணவு , தூங்குவது என்று எல்லாமே அவருக்கு சொன்ன நேரத்தில் நடந்திருக்க வேண்டும்.

அதிலும், 8 மணிக்கு இரவு உணவு என்றால், 7.59 வரும் வரைக் காத்திருப்பார். இதைக் கடைப் பிடிக்கவில்லை என்றால் , அவர்கள் செய்த தவறுக்கு ஏற்றவாறு தண்டனைகள் வழங்கப்படும். அதனால், கண்ணனைப் பார்த்தால் பயம் தான் வரும் மூவருக்கும்.

'எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்துக் காரியங்கள் செய்த நான் , என் மகள் என்னிடம் மனம் விட்டுப் பேச சுதந்திரம் தராமல் விட்டுட்டேன் ' என்றக் குற்ற உணர்வு அவரின் மன நின்மதியைப் பறித்துக் கொண்டது.

காலை எட்டு மணி அளவில் டாக்டர் அவளின் உடல் நிலையைப் பரிசோதனைச் செய்து விட்டு, அவளை வீட்டுக்கு அழைத்துச் செல்லலாம் என்று கூறியப் பின் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்தடைந்தனர், நால்வரும்.

அன்று மாலை நான்கு மணிக்கு ஆதவனைத் தவிர மூவரும் psychic clinic க்குத் துரிதமாக கிளம்பினார்கள்.

டாக்டர் ஷ்யாம் கூரியதுப் போல் எந்த கிளினிக்கும் அவர்கள் கண்களுக்குத் தென்படவில்லை.

"அம்மு உனக்கு ஏதாச்சும் கிளினிக் தெரியுதா" என்று காரை ரோடின் ஓர் ஓரமாக நிறுத்திக் கேட்டார் கண்ணன்.

"இல்லையேப்பா " என்று சுற்றிப் பார்த்தவள், கையில் இருந்த கார்டில் மியூசியம் க்கு எதிர்ப்புறம் என்று அச்சீட்டு இருக்க, காரின் கதவைத் திறந்து இறங்கினாள்.

"இது தான் மியூசியம் , ஆனா அதுக்கு எதிர்ல, இங்க ஒன்னும் இல்லையே...ஐயோ சந்திரா " என்று அவளின் கண்கள் அவ்விடத்தை மேய, அவளின் மோதிர விரலின் நகங்களைக் கடித்து கொண்டு இருந்தாள் ரதி.

ரதி , அவளுடன் பேசி அந்த இடத்தையே சுற்றிக் கொண்டு இருந்தாள். அவளின் இச் செய்கையை இங்கு ஒருவன் ரசித்துக் கொண்டு இருந்தான்.

பின் சிறிது அடி தூரம் தேடியவள், தலையைச் சொரிந்துக் கொண்டே கார்டை கையில் ஏந்தி அவனை நோக்கியே அவள் வந்தாள்.

அருகில் இருந்த டீக் கடையை நோட்டம் விட்டவள், அங்கு அந்தக் கடைக்கும் அவனுக்கும் சம்பந்தம் இல்லாமல் , ஏதோ இவன் வைத்திருந்த டைட்டானிக் கப்பல் கவிழ்ந்தார்ப் போல் கையைக் கன்னத்தில் வைத்துச் சோகத்துடன் பூட்டப் பட்டிருந்த டீக் கடை வாயிலில் அமர்ந்திருந்தான்,  அவன்.

சும்மா வெட்டியா தான இருக்கான்,  பையன் இவன் கிட்டையேப் போய் கேட்போம் " எக்ஸ்க்யூஸ் மீ , சார் , psychic clinic எங்க இருக்குனு தெரியுமா ?" என்று அந்த கார்டை கையில் அவனிடம் காட்டிக் கேட்டாள், ரதி.

அவன் அந்த கார்டை பார்த்ததும், ' இது தான் அந்தக் கேஸா ' என்று மனதில் எண்ணிக் கொண்டு , "அதோ அது " என்று டீக் கடையின் மாடியின் மேல் ஒரு பூட்டப் பட்டிருந்த ஒரு அறையைச் சுட்டிக் காட்டினான்.

"என்னப் பூட்டிருக்கு ? " என்று ஏதோ அவன் தான் அங்கு வேலைப் பார்க்கும் வாட்ச் மேன் போல் ஒரு பார்வையை அவனிடம் வீசினாள்.

"இப்போ சாவி எடுத்துட்டு வந்துருவாங்க " என்று அவனின் குரல் கணிர் என்று ஒலித்தது, ரதிக்கு.

அவன் குரலுக்கும் ஆளுக்கும் சமந்தமே இல்லாததுப் போல் ஒரு கணம் இருந்தது. அவளுக்கு அவளின் தந்தைத் திட்டிக் கத்துவதைக் கேட்டு, இவனின் குரலில், சற்று உடல் பயத்தில் சிலிர்த்தது, இருந்தும் அவள் அதைக் காட்டிக் கொள்ளாமல் தொடர்ந்தாள்.

"நீங்க ரெகுலர்ப் பேஷண்ட்டா " என்று அவள் மென்மையாகக் கேட்க , பதில் ஏதும் சொல்லாமல் அவளை முறைதான். அந்த பார்வைக்கு, இதற்கு மேல் வாயைத் திறக்காத என்ற அர்த்தம் போல் இருந்தது, ரதிக்கு.

'இவனுக்குத் தான் பேய் பிடிச்சிருக்குப் போல, மண்ட குஸ்கா' என்று மனதில் கரித்துக் கொண்டு நின்றாள்.

அவளின் தந்தையை இங்கு வருமாறு கையைக் காட்டி அழைத்து, மீண்டும் தொடர்ந்தாள்,
"எதுக்கு கேக்குறேன்னா, நித்விக் தாத்தா ஒழுங்கா டிரீட்மெண்ட் பார்ப்பாரானுக் கேட்கத் தான், நான் தெரிஞ்ச வரை காசுக்காக இந்த மாதிரி போலி டாக்டர்ஸ் ரொம்ப இருக்காங்களா, நீங்களும் அந்த டாக்டர் கிட்டப் பார்த்து இருங்க, " என்று எல்லாம் தெரிஞ்சு பக்குவமாக பேசும் கிழவிப் போல் பேசிக் கொண்டு இருந்தாள், ரதி.

"அப்படியா மேடம்? " என்று அவனின் எதிரில் கன்னங்கள் சுருங்கிய ஒரு வயதானத் தாத்தாவைக் கண்டதும் எழுந்தான், அவன்.

"உங்களுக்கு தெரியாதா...அச்சச்சோ " என்று அவளின் செவ்விதழகளைக் குவித்துப் பொய்யான கரிசனம் காட்டினாள்.

அவளின் பெற்றோர்கள் வரவும், கையில் டாக்டர்கள் அணியும், கோட்டைக் கையில் ஏந்திக் கொண்டு முதியவர் வருவதற்கும் சரியாக இருந்தது.

"இந்தாங்கத் தம்பி " என்று அந்த முதியவர், அவனிடம் கோட்டையும் ஒரு சிலப் புத்தகத்தையும் குடித்ததும், ரதியின் மூஞ்சியில் ஈ ஆடவில்லை, அப்படியே கப் சிப் என்று அவளின் தந்தைப் பின்னால் சென்று நின்றுக் கொண்டாள்.

"நீங்கத்  தான் டாக்டர் ரா தம்பி? " என்று தேன்மொழி வினவ , "ஆமா மேடம் , ஷ்யாம் தாத்தா சொன்னாரு,  உள்ள போய் பேசலாம் வாங்க " என்று அவன் முன்னேச் சென்றான்.

இவர்கள் வெளியில் இருக்கும் சோஃபாவில் அமர்ந்து அங்குப் மாட்டப் பட்டிருந்தப் புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

"இது என்ன கிளினிக் மாதிரியே இல்ல ஏதோ மியூசியம் மாதிரி இருக்கு " என்று குழந்தைப் போல் கூறினாள்.

"அம்மா, இது ஹாஸ்பிடல் இல்லை, இது மனசு சமந்தப் பட்டதுனால இப்படி தான் மனசுக்கு அமைதி தரக்கூடிய இயற்கை அழகு நிறைந்த படங்கள் நிறைந்திருக்கும். " என்று சொல்லி முடித்தாள், ரதி.

"சார், நீங்க உள்ளப் போகலாம் டாக்டர் வரச் சொன்னாங்க " என்று சிவராம் முதியவர் வந்துக் கூறியதும் , மூன்று பேரும் அவனின் தனி அறைக்குச் சென்றார்கள்.

அவர்கள் அனைவரும் உள்ளே சென்று அமர்ந்தவுடன், அவன் அவனை அறிமுகப் படுத்திக் கொண்டான். டாக்டர் ஷ்யாம் , அவர்களின் பேரன் தான் நான், Dr. Nitvik Niranjan , என்று முடித்தான்.

" என்ன பேரன்னா ? " என்று அதிர்ந்தாள்.

'ஆத்தி, பேரன் கிட்ட பிளான் பண்ணி மாட்டி விட்டுருக்குப் பெருசு ' என ரதியின் மூளை அவளுக்கு முழக்கம் விட்டது.

ஒரு நமட்டுச் சிரிப்பு சிரித்தான், நித்விக். அந்தச் சிரிப்பின் பொருள் ரதிக்கு மட்டும் தான் தெரிந்தது.

"ஓ..உங்கத் தாத்தா தானா ? " என்று தேன்மொழி கேட்டாள், "ஆமா, மேடம் " என்றதுடன் முடித்துக் கொண்டான். அவனுக்கு எப்போதும் அளவாக கருத்துடன் பேசுவது தான் பிடிக்கும்.

"நல்லதாப் போச்சு, அவர் எங்க ஃபேமிலி டாக்டர் தம்பி, நானும் உன் சித்தப்பா குமரன் கூட ஒன்னாப் படிச்சவுங்கத் தான்.  நான் கூட பயந்தேன் , புதுசா ஒருத்தர் கிட்டப் பாக்க வரோம்னு, ஆனால் தம்பி நீங்க Cardiologist முடுச்சுட்டு , உங்க தாத்தா கூட ஹாஸ்பிடல் பாற்குறாதா, சொன்ன நியாபகம் " என்றார் கண்ணன்.

"ஆமா சார், இது நான் பார்ட் டைம் பார்க்கிறது, இது என்னோட ஆசைனு அப்பாவும் ஒன்னும் சொல்லல " என்று கூறி முடித்தான், நித்விக்.

அவனுக்கு மனதின் உள்ளே 'யாரு டாக்டர் நான் தான் கேள்விக் கேட்கணும், இவனுங்களே கேள்விக் கேட்டு பதிலும் சொல்லிக்கிடுராங்க , மொத்தக் குடும்பத்துக்கும் கவுன்சிலிங் குடிக்கணும் போல ' என்று நினைத்துக் கொண்டு இருந்தான்.

இதற்கு மேல் முடியாது என்றதுப் போல் , " யாருக்கு என்ன பிரச்சனை? " என்று கீழ் உதட்டைக் கடித்துச் சிரித்துக் கொண்டு கேட்டான்.

"இவள் தான் எங்கப் பொண்ணு ரதி, அவளுக்கு கொஞ்சம் தூக்கம் வராமல் இருக்கு. கண்ணப் பாருங்கள், கருவளையம் வந்து பூதம் மாதிரி இருக்கு " என்று ரதியின் கண்களுக்குக் கீழ்த் தொட்டுக் காட்டினாள், தேன்மொழி.

"ஹையோ அம்மா, கண்ணைக்  குத்திராத " என்று தேன்மொழி கையைப் பிடித்தாள், ரதி.

"சரி அவுங்க மட்டும் இங்க இருக்கட்டும் " என்று அவன் கூறியதில், அவர்களை வெளியேச் செல்ல சொல்கிறான் என்றுப் புரிந்து , அதில் ரதியின் பெற்றோர்கள் நாங்க வெளியே  காத்திருக்கிறோம் என்று கூறி நகன்றனர்.

"உங்களை அறிமுகப் படுத்துங்க " என்று அவனின் டேபிளில் இருந்த மூக்குக் கண்ணாடியை அணிந்தான், நித்விக்.

"என் பெயர் ரதி, நான் ஒரு மீடியம் ...

Hi guys ?

How is the update?

Sorry, for the long update! Next fullah story koncham vegama Odum athuku intha break theva paduthu!

Please give your priceless votes and valuable comments! 🤗

Thanks for reading,
Lolita! 💙

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top