அத்தியாயம் - 5💫
" ரதி , நீ என்கிட்ட எதையும் மறைக்காமல் , உண்மையைச் சொன்னால் தான், என்னால் உனக்கு ஹெல்ப் பண்ண முடியும்... யூ ஷுட் கோப்பேரட் வித் மீ ( you should co-operate with me) " என்று தீர்க்கமாகச் சொன்னார், ஷ்யாம்.
சிறிது நேரம் யோசனையில் இருந்த ரதி, 'வேறு வழி இல்லை, நடப்பதும் ஏதும் புரியவில்லை' என்று மனதில் எண்ணிக் கொண்டே " சரி டாக்டர் .. ஐ வில் " என்று பெரும் மூச்சை வெளியே விட்டப்படிக் கூறினாள்.
"ராஜேஷ் யாரு ? உங்க காதலனா ? " என்று அவர் ரதியின் கண்களைப் பார்த்துக் கேட்டார்.
"இல்ல டாக்டர், அவன் சின்னப் பையன் " என்று பொறுமையாகப் பதில் கூறினாள்.
"சரி , ராஜேஷ் எப்படிச் செத்தாரு ? " என்று கையில் இருந்த ரெக்கார்டர் டேப்பை ஆன் செய்தார், ஷ்யாம்.
"தெரியாது, ஆனால், அவன் செத்துடானு மட்டும் தெரியும் " என்றாள் ரதி.
"ஓஹ.. பாவம்.. யார் சொன்னாங்க அவன் செதுட்டானு " என்றார் ஷ்யாம்.
"அவனேத் தான் வந்து சொன்னான் " என்றாள்.
"அவன் சாகுறப் போறதுக்கு முன்னாடி கேட்கலமா , அவன் செத்தது உனக்கு யார் சொன்னாங்க ? " என்று அவர் தெளிவாகக் கேட்பதாக எண்ணி மீண்டும் கேட்டார்.
"இல்ல சார், அவன் செத்தப் பிறகு தான் வந்து சொன்னான் " என்றாள் ரதி.
"வாட் ? " என்று அதிர்ந்து போய் கேட்டார் ஷ்யாம்.
"ஆமா டாக்டர், அவன் செத்து இருந்தால் தான் , என் கூட கனவில் பேசிருக்க முடியும்" என்றாள் ரதி.
"ரதி, அப்படி ஏதும் நடந்திருக்க முடியாது , அது எல்லாமே உங்கள் எண்ணங்கள் தான் கனவில் தோன்று கிறது " என்று அவரின் கையில் ஒரு பேனாவை வைத்துச் சுற்றிக் கொண்டேக் கூறினார், ஷ்யாம்.
"இல்ல டாக்டர், என்னால ஆத்மாக்கள் கூட கனவில் உணர்ந்துப் பேச முடியும்" என எப்படியும் இவள் கூறுவதை இந்த டாக்டர் நம்பமாட்டார் என்று, எரிச்சலோடு கூறினாள்.
"அதுக்குப் பெயர் , sleep paralysis ரதி, அது தான் வேற ஒன்னும் இல்லை, இப்போ நீங்க தூங்கிட்டு இருக்கும் போது, உங்களால கை கால் அசைக்க முடியாமல் அப்படியே தூக்கத்துல paralyse ஆகி இருப்பீங்க " என்றார் , ஷ்யாம்.
"அப்போ எப்படி எனக்கு ராஜேஷ் , என் கண்ணுக்குத் தெரிவான் " என்று கையை கட்டிக் கொண்டு கேட்டாள், ரதி.
"இட்ஸ் ப்காஸ் ஆஃப் Narcolepsy, நீங்கப் பாக்குறது எல்லாமே ஹால்லுசினேஷன் , சோ நீங்க சொல்ற பேய், பிசாசு, ஆத்மா அதெல்லாம் ஒன்னும் கிடையாது ரதி " என்றார்.
ஷ்யாமிடம் கையில் இருந்த பேனாவையும் பேப்பரையும் வாங்கினாள், ரதி.
" நோ டாக்டர், எனக்கு நீங்க சொல்ற எல்லாமேத் தெள்ளத் தெளிவாகத் தெரியும் , நீங்க சொல்ற ஹால்லுசினேஷன்யே ரெண்டு வகை இருக்கு,
hypnagogic hallucinations , இது வந்து நம்ம தூங்க போறப்ப வரக் கூடியது. இந்த கனவு எதுனால என்றால் சடனா வர Rapid Eye Movement (REM) ஸ்லீப்.
நம்ம REM ஸ்லீப்ல இருக்கும் போது தான் நம்மக்கு கனவுகள் நிறைய வரும். ஏன்னா, உடல் ஓய்வுல இருந்தாலும், மூளை இந்த ஸ்லீப்ல வேலைப் பார்க்கும். சில ஆய்வுகள் சொல்லுது , மொத்த போபிலேஷன்ல 70% இந்த hypnagogic hallucinations னாலப் பாதிக்கப் பட்டு இருக்காங்க என்று. இதுக்கு சிகிச்சை ஏதும் எடுக்காமல் கஷ்டப் பட்டு இருக்கவுங்க பலர்.
இன்னொன்று hypnopompic hallucinations , இது நம்ம REM sleep ல இருந்து எழுந்திருக்கும் போது வரக் கூடியது. முக்கால்வாசி நேரம் அது விடியற் காலையில் வரும். " என்று அவள் ஆராய்ந்து கத்துக் கொண்ட எல்லாவற்றையும் அப் பேப்பரில் எழுதினாள் ரதி.
இதைச் சற்றும் எதிர் பாராத ஷ்யாம், அவள் வாயையும் பேப்பரையும் மாத்திப் மாத்திப் பார்த்துக் கொண்டு இருந்தார்.
"Psychology படிக்கிறாயா ? " என்று இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் கேட்டார், ஷ்யாம்.
"இல்லை , இது எல்லாமே நானாகவே பிரவுஸ் செய்து இன்டர்நெட்டில் படிச்சது " என்றாள் ரதி.
"இவளோ விஷயம் உன்னகேத் தெரியுதுல மா, அப்புறம் ஏன் இன்னும் ஆத்மா, பேய், பிசாசுனுச் சொல்லிட்டு இருக்க ? " என்றார் ஷ்யாம்.
"இதையும் தாண்டி இன்னொரு உலகம் இருக்கு டாக்டர், அதுக்குத் தான் இப்போ உங்க கிட்ட இருந்து ஹெல்ப் வேண்டும் " என்று கொஞ்சம் நக்கலுடன் கூறினாள், ரதி.
"நீ சொல்றது புரியல " என்று கண்களை பெரு விரலால் தேய்த்தவாருத் துடைத்துக் கொண்டுக் கேட்டார், ஷ்யாம்.
"இப்போ நீங்க என் கிட்ட பேசுனத , ராஜேஷ் கேட்டுட்டு இருப்பான், இனிக்கு நைட் அவன் உங்களை கொண்ணாலும் கொன்றுவான் டாக்டர், நீங்க செத்துட்டா என் கிட்ட வந்துப் பேசுங்க , அப்போ உங்களுக்குத் தெரியும் அது உண்மையா இல்லையா என்று " என அவள் பொய்யாக இப்போதுக் கூறியது டாக்டர்க்குப் பயத்தை உண்டாக்கியது.
"என்ன மா இப்படி செத்துருவேனுலாம் பேசுற, உனக்கு நான் வேற psychologists பாக்கச் சொல்லுறேன், இந்த ஹாஸ்பிடல் பக்கம் வந்துறாத நீன்னு " என்று சிடுச் சிடுத்துக் கொண்டு கூறினார், ஷ்யாம்.
"அது வந்து உங்களுக்கு தெரிஞ்ச பரனோர்மல் ரிசர்ச் பன்ற சைகேட்ரிஸ்ட் இருந்தாச் சொல்லுங்க டாக்டர் " என்று தட்டும் தடு மாறிக் கேட்டாள், ரதி.
"ஹ்ம்ம்... ஓகே அதுவும் நல்லது தான்... எனக்கு தெரிஞ்ச டாக்டர் ஒரு கிளினிக் வச்சிருக்காரு , அங்க போறது உனக்குச் சரியா வரும்" என்று அவர் சீடில் இருந்து எழுந்து ஒரு விசிடிங் கார்டைக் குடுத்தார், ஷ்யாம்.
அதில் Psychic Clinic Dr. Nitvik Niranjan, Parapsychologists, Doctorate in Paranormal Research, என்று அச்சிடுக்கப் பட்டு இருந்தது.
"நன்றி டாக்டர் " என்று வாங்கியவள், Dr. Nitvik Niranjan என்று அவள் மனதுக்குள் சொல்லிப் பார்த்தாள்.
"என் பிரென்ட் கிளினிக்த் தான் மா, முன்னாடியே கால் பண்ணிட்டுப் போ " என்று மீண்டும் அவரின் இருக்கையில் அமர்ந்து கொண்டார், ஷ்யாம்
'இந்த தாத்தா கிட்ட இருந்து அந்தத் தாத்தா கிட்ட போய் மாடிக்கப் போற ரதி ' என்று அவளின் மனதுக்குள் கரித்துக் கொண்டு இருந்தாள், ரதி.
"ரொம்ப தேங்க்ஸ், டாக்டர். நான் அப்படி பேசினதற்கு சாரி " என்று மெல்லிய சிரிப்புடன் கூறினாள், ரதி.
' என்கிட்ட உன் வால ஆட்டலாம், அந்த டாக்டர் கிட்டப் போய் நீ நல்லா மாட்டிக்கப் போற ரதி , அவன் உன் வால நருக்கிருவான்' என்று மனதில் எண்ணிக் கொண்டு, "தட்ஸ் ஓகே, சின்னப் பொண்ணு தான பரவாயில்லை, உன் வயசுல எனக்கு பேத்தி பேரன் லாம் இருக்காங்க" என்று அவரின் சுண்ணாம்பு நிறத் தாடியை வருடிக் கொண்டேக் கூறினார், ஷ்யாம்.
"டாக்டர், இன்னொரு ஹெல்ப், என் பெற்றோர்கள் கிட்ட, எனக்குக் கொஞ்சம் மைண்ட் அண் ஸ்டேபிள் மற்றும் வேற psychologists கிட்ட நீங்களே அனுப்பிற மாதிரி சொல்லுங்க பிளீஸ் " என்று அவளின் கையைப் பிசைந்து கொண்டே, ஷ்யாம் யிடம் கேட்டுக் கொண்டாள்.
அவரும் அதற்கு ஒத்துக் கொள்வதுப் போல், தலையை அசைத்து , " ஓவர் புத்திசாலித்தனமும் ஆபத்து தாம்மா " என்று கூறினார்.
இதற்கு என்ன பதில் கூறுவது என்று விளங்காமல், அவரையேப் பார்த்துக் கொண்டு இருந்தாள், ரதி.
"கண்ணன், ரதி ரொம்ப ஸ்டேபிள் இல்லாம இருக்கா, அதனால், நான் சொல்ற psychologists கிட்டப் போய் பாருங்கள், அந்த கிளினிக் என் பிரென்ட் கிளினிக் தான் " என்று ரதியிடம் குடுத்த விசிட்டிங் கார்டை தற்போது, கண்ணனிடம் கொடுத்தார், ஷ்யாம்.
"நாங்க இப்போ அவ கிட்ட பேசலாமா டாக்டர் ? " என்று ஏக்கத்தில் கேட்டாள், தேன்மொழி.
"நீங்க கண்டிப்பா அவக் கிட்ட பேசலாம், அண்ட் ஒன் மோர் திங், ராஜேஷ் ஏதோ படத்துல வந்த கேரக்டர் தான், நீங்க ஏதும் தப்பா நினைக்க வேண்டாம்" என்று ரதி டாக்டர் யிடம் கேட்டு கிட்ட தற்கு இணங்க அவள் கூறியதை அப்படியேக் கூறினார், ஷ்யாம்.
"எனக்குத் தெரியும், என் பொண்ணப் பத்தி " என்று டாக்டரிடம் கூறி, பார்வையை கண்ணனிடம் விட்டாள், தேன்மொழி.
டாக்டர் அடுத்த நாள் காலையில் வீடு செல்லலாம், இன்று ஒரு நாள் இரவு இங்கு மருத்துவமனையில் இருக்கட்டும் என்று கண்ணனிடம் கூறிவிட்டு நகர்ந்தார். ஆதவனும் தேன்மொழி யும் ரதியைப் பார்க்க வேகமாக உள்ளேச் சென்றனர்.
இங்கு நடந்த எல்லாவற்றையும் யாருக்கும் தெரியாமல் ஒருவன் மறைந்திருந்துக் கேட்டுக் கொண்டு இருந்தான்.
~அவளின் உலகம் தொடரும்!
Hi Guys!
Update epdi iruku ?
Romba scientific terms irukaa ?
Ithu ellamae unmai thaan friends.
Namaloda sleep romba mukkiyam, so elarum avunga sleep schedule ah crt ah maintain panunga, ( including me ) nama body and brain rendukum rest venum , so take care of yourself friends. Two pictures iruku athaium refer panikonga.
Any doubts suggestions and comments , don't hesitate to contact me. You can ping me anytime.
Please vote and comments panunga , read pandringalanu theriyama update poda kastama iruku. If you find interesting, pls unga friends kudaium share panunga!
Thanks for Reading,
With Lots of Love,
Lolita! 💙
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top