அத்தியாயம் - 3💫
"நான் செத்துட்டேன்னா ? " என்று ரதியின் கரு விழிகள் கப் அண்ட் சாஸர் போல் அதிர்ச்சியில் விரிந்து விழித்தது.
அவள் மீண்டும் அவளின் உடம்பிற்குள் செல்ல முற்பட்டும் , பலன் இல்லை. "இல்லை நான் சாக வில்லை...சாக வில்லை...இது கண்டிப்பா கணவாகத் தான் இருக்கும்" என்று பல முறை அவளுக்குள் சொல்லிக் கொண்டாள், ரதி.
சுற்றியும் தேடிப் பார்த்தாள், அவள் கண்ணில் ராஜேஷின் உருவம் தென் பட வில்லை. இவள் உயிர் இல்லாத உடல் மட்டும் மெத்தையில் மல்லாக்க கிடந்தது.
அவள் அம்மாவை எழுபிவிடலாம், இது உண்மை இல்லை, கனவாகத் தான் இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டே அவளின் ரூமில் இருந்து மாடிபடி இறங்கினாள். ஹாலில் பிள்ளையார் புகைப் படத்தில் இருந்த லெட் லைட் வெளிச்சத்தில், விறு விறு வென அவளின் பெற்றோரின் அறைக்குள் நுழைந்தாள்.
"அம்மா, அம்மா.... எழுத்துரு அம்மா, டாடி ....டாடி... ரெண்டு பேரும்மே எழுந்திருக்க மாடெங்குறிங்க... யாராச்சும் எழுந்திருங்க... பிளீஸ்... பிளீஸ்... எழுங்க..." என்று உலுக்கிக் கொண்டு இருந்தவளுக்கு கண்களில் இருந்து கண்ணீர் வந்தது தான் மிச்சம், அவளின் குரல் இருவருக்கும் கேட்க வில்லை.
என்ன நடக்கிறது ? அவளுக்கு என்ன ஆனது என்று யோசிக்க முடியாமல்
அரை மணி நேரம் அழுது கொண்டே இருந்தாள் ரதி. அவளுக்கு தெரிந்தது எல்லாம் இப்போ அவள் ஆன்மாவாக இருக்கிறாள் என்பதே.
எப்படி ஏனும் அவளின் உடம்பிற்கு மீண்டும் போக வேண்டும் என்று தீர்மானித்து, அவளின் அறைக்குள் சென்றாள், ரதி. அழுகையைத் தொடைத்த்து விட்டு, கண்களை மூடிக் கொண்டு மனதில் தைரியத்தை வர வளைத்துக் கொண்டு அவளின் அழகிய மேனிக்குள் நுழைந்தாள், எந்த மாற்றமும் ஏற்படவில்லை. மீண்டும் பல்லைக் கடித்துக்கொண்டு கோபத்தின் உச்சியில் மனதை ஒரு முகப் படுத்தி இறுகிக் கொண்டு முயற்சித்தாள்.
ரதியின் தலையில் யாரோ அடித்தது போன்ற வலியை உணர்ந்தாள்.
"என்ன ஆச்சு ?" என்று கண்களை கசக்கியபடி எழுந்து அவள் மெத்தையில் உட்கார்ந்தாள்.
கண்களுக்கு ஒன்றும் சரியாகத் தெரியவில்லை, எல்லாமே மங்கியப் பின் சில நொடிகள் கழித்து தெளிவடைந்தது.
எதோ ஓட்டப்பந்தயத்தில் ஓடிய வாரு உடம்பில் வியர்வை அரும்ப , நா வறண்டு தொண்டை அடைக்க , எச்சிலை மூழுங்கிக் கொண்டு நாக்கை வைத்து உதட்டை ஈரமாக்கியவாரு தலையில் கைகளை வைத்துத் தேய்த்து கொண்டு இருந்தாள், ரதி. பின், அவள் அருவமாக இருந்தது நினைவிற்கு வர, மனதில் பயம் பற்றிக் கொண்டது. புருவத்தை சுருக்கிக் கொண்டு, அவள் உடல் கிடந்த திசையை கண் இமைக்காமல் பார்க்கத் திரும்பினாள்.
ஆதவனின் கதிர்கள் திரைச்சீலைத் தாண்டி உறங்கிக் கொண்டிருந்த ஆதவனின் கண்களில் பாய, போர்வையால் முகத்தை மூடி மீண்டும் எதிர் பக்கம் திரும்பிக் கொண்டு உறங்கினான், அவன்.
"ஆதவன்னு தான் பெயரு, எண்ணிக்காச்சும் காலையில சீக்கிரம் எழுந்திருக்கிரியா.... டேய்... எந்திரிடா... டியூஷன் போகனும்ல...காலையிலேயே என்ன கத்த வைக்காத ஆதவா " என்று காலை ஏழு மணிக்கு வாசல் எல்லாம் தெளித்து முடித்து, தலைக் குளித்த கேசத்தை துவட்டியப்படி ஆதவணை எழுப்பிக் கொண்டு இருந்தாள், தேன்மொழி.
'எவனாச்சும் பன்னிரண்டாவது எக்ஸாம்க்கு இந்த வருஷமே படிப்பானா , இதுல விடிய காலையிலியே வச்சு சாவடிக்கு ராங்கே ' மனதில் கதறினான் ,
"எம்மா ... பிளீஸ் ரெண்டு நிமிஷம் " என்று கூறியவாரு தூங்கிக் கொண்டு இருந்தான் ஆதவன்.
"மணி இப்போவே ஏழு டா... ஏழு மணிக்கு டியூஷன் எட்டு மணிக்கு போவியா டா...ஒழுங்கா எழுந்திரு " என்று அவனின் போர்வையை இழுத்து அவனின் முதுகில் ஒரு அடி அடித்தாள், தேன்மொழி.
"அம்மா...வலிக்குது... போய் ரதியையும் எழுப்பி விடு ... அவ மட்டும் தூங்குறா " என்று கண்களைத் திறந்து சினுங்கியப்படிப் பாத்ரூமிற்குச் சென்றான் ஆதவன்.
"அவ ரூமை மாடி ல வச்சது தப்பா போச்சு, படி ஏறவே கஷ்டமா இருக்குடா.. நீ போய் அவளை எழுப்பி விடேன்.... கால் வலிக்குது டா" என்று ஆதவனிடம் கூறிவிட்டு சமையல் அறைக்குள் சென்றாள், தேன்மொழி.
"ஹார்லிக்ஸ் மமா... ப்ரஷ் பண்ணிட்டேன் " என்று டி ஷர்ட்டை அணிந்துக் கொண்டு சமையல் அறைக்குள் நுழைந்தான் ஆதவன்.
"டேய்..அவளையும் எழுப்பி விடுடா... தனி ....தனியாலாம் ரெண்டு பேருக்கும் போட்டுகிட்டு இருக்க முடியாது " என்று பால் கவரை ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்தவாரு கூறினாள்.
"சரி...இதோ கோயிங்..." என்று ஒரு படி தாண்டித் தாவிக் கொண்டபடியே மாடிப்படி ஏறினான், ஆதவன்.
'ஐயையோ கால் வலினு இவனை போக சொல்லிடோமே... ரெண்டும் சண்டை போட்டு நாருங்களே' என மனதில் எண்ணியவாறு "டேய்...சண்டை போடாம வாங்கடா பிளீஸ் அம்மகாக " என்று தலையில் அடித்துக் கொண்டு கூறினாள், தேன்மொழி.
"அம்மு... அம்மா தான் எழுப்பி விட சொல்லுச்சு ... எழுந்திரு சீக்கிரம் " என்றான் சண்டையை தவிர்க்கவே இந்த அம்மு.
வாய் நல்ல படியா பேசினாலும் , கை சும்மா இருக்குமா, ரதியின் தலையணையை பிடிங்கினான் ஆதவன். அவளின் முகம் மெத்தையில் விழுந்ததே தவிர, அவளிடம் இருந்து எந்த அசைவும் இல்லை.
என்ன இவள் கத்துவானு நினைத்தால், அசராம இருக்கா , எண்ணியவாறு "என்கிட்டையே நடிகிறியா ?" என்று தலையணையைய் எடுத்து அவள் முகத்தில் அடித்தான்.
இப்போது அவன் கதிகளிங்கினான்,
" ரதி... ரதி... " என்று அவளின் கன்னத்தில் தட்டினான், "ரதி.. பிளீஸ் எழுந்திரு... என்ன ஏமாற்றாத .... எழுந்திரு போதும் விளையாட்டு " அவளிடம் இருந்து எந்த பதிலும் வராமல் போக ஆதவனுக்கு பதற்றம் ஏற்பட்டது.
"அம்மா....அக்கா..எழுந்திருக்க மாடேங்குரா... என்னாச்சுனுத் தெரியலைம்மா... வாமா வேகமா " என்று மேலிருந்த படியே உரக்கக் குரல் கொடுத்தான், ஆதவன்.
அவன் கூறிய அடுத்த நொடி, கையில் இருந்த டம்ப்ளரை கீழே போட்டு விட்டு "என்னாச்சு டா?" என்று வேகமாக விரைந்தாள் தேன்மொழி.
"ரதி...ரதி ..எழுந்திருமா...ரதி.." என்று தேன்மொழி பதற்றத்துடன் அவளை உழுக்கிக் கொண்டே கன்னத்தை தட்டினாள்.
அதற்குள் ஆதவன் தண்ணீர் எடுத்து வர, தேன்மொழி அதைத் தெளித்தும் ரதியிடம் இருந்து எந்த அசைவும் இல்லை. கண்ணன் இவர்களின் கூச்சல் கேட்டு விரைந்து வந்தார்.
"நீ ஏதும் அடிச்சியாடா ?" என்று கண்ணன், ஆதவன்னை முறைத்தார்.
"அப்பா... அம்மா சத்தியமா...நான் ஏதும் பண்ண வில்லப்பா " என்று கண்களில் கண்ணீர் துளிகள் தொடுத்து நின்றப்படி கூறினான், ஆதவன்.
ரதியின் உடல் ஐஸ் சில் வைத்தார் போல் ஜில் என்று இருக்க, அனைவரும் சேர்ந்து ரதியை அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர்.
~அவளின் உலகம் தொடரும்!
Hi Amigo's !
How is the update?
Rathi sethutaala...? Ila avaluku enna thaan aachu ?
Stay Tuned....!😉
Paduchutu votes and comments panunga , keep supporting! I'm open to constructive criticism, so do drop me a message!
Kutti update thaan next update koncham lengthy athaan.🤗
Thanks for Reading! Stay Safe and Spread Kindness!
With lots of love,
Lolita! 💙
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top