அத்தியாயம் - 2💫
காரிருள் சூழ்ந்து கொள்ள,
சூரியனும் ஒளிந்துக் கொள்ள, சந்திரன் வருகையால் நக்ஷத்திரங்கள் அனைத்தும் வான் மண்டலத்தில் விழாக் கோலம் கொண்டு இருந்தது. அதைக் காணும் காரிகை கண்களில் மட்டும் பயம் கலந்த கவலை பற்றிக் கொண்டு இருந்தது.
கல்லூரி முடித்து வீடு திரும்பிய ரதிக்கு, படிப்பில் கவனம் செலுத்த முடியாமல், மனம் ராஜேஷின் நினைவில் மூழ்கி இருந்தது.
"அம்மு இங்க வா, தட்டு எல்லாம் எடுத்து வை, மணி எட்டு " என்று அவளின் அம்மா தேன்மொழி, சாப்பாடு மேஜையில் ஹாட் பாக்ஸை எடுத்து வைத்துக் கொண்டே அவளை அழைத்தாள்.
"நீங்க சாப்பிடுங்க எனக்கு வேண்டாம் " என்று உணர்ச்சி அற்ற குரலில் கையில் ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு வந்து சோஃபாவில் அமர்ந்தாள் ரதி.
"அம்மா, அவ இவளோ நேரம் வெளியை நின்னு போன் தான் மா நோண்டிகிட்டு இருந்தா, இப்போ தான் நீ வேலை சொன்னதால் டக்குனுப் புக் எடுத்து நடிக்குறா" என்று அவளின் தம்பி ஆதவன் ரதியைப் பார்த்து கண்களை விரித்து உருட்டி மாட்டி விட்டேனா என்று மொணங்கிக் கொண்டு தலையை ஆட்டினான்.
ஆதவன், ரதியின் தம்பி, பதினொன்றாம் வகுப்பு படிக்கிறான். அவனுக்கும் இவளுக்கும் ஏட்டிக்கு போட்டி தான் எப்பொழுததும். இவ்விருவர்கள் போல் எந்த வீரர்களும் இருந்திருக்க மாட்டார்கள். Pubg வீரர்கள் என்று நினைக்காதீர்கள், அதுக்கும் மேல. இருவர்களுக்குள் சண்டை என்று வந்து விட்டால், அருவாள், கத்தி, கரண்டிச் சண்டைப் போடும் வீரர்கள். பத்து நிமிடம் சண்டை இல்லாமல் அமைதியாக சென்றால், அது ஒரு எட்டாவது அதிசியம் என்று கருதி கல் வெட்டில் செதுக்கிட வேண்டும்.
ரதியின் தந்தை கண்ணன் , மிகவும் கண்டீப்புடன் கூடிய டென்ஷன் பார்ட்டி. ஆறு பலசரக்கு கடைகள் வைத்திருப்பதால், முக்கால் வாசி நேரம் தொழில் பார்த்துக் கொண்டு இருப்பதுளியே, அவருக்கு நாள் ஓடிடும். அவர் வரும்வரை இவர்களிடம் மாட்டிக் கொண்டு தன்னந்தனியாகப் போராடுவது தேன்மொழி மட்டும் தான்.
"ஏ.. அதிங்க பிரசங்கி மாதிரி பேசாத , எனக்கு நாளைக்கு டெஸ்ட் இருக்கு " என்று முகத்தை இறுக்கிக் கொண்டு கூறினாள், ரதி.
"ஆமா பொல்லாத டெஸ்ட் , ச்சீ பே, எப்டியும் பிட்டு தான அடிக்க போற " என்று அவளின் ரகசியங்களை உறக்க கத்தினான், ஆதவன்.
இதைக் கேட்டு கோபமான ரதி, ஸ்டடி டேபிலில் உட்கார்ந்திருந்த ஆதாவனை, "இது சரி பட்டு வாரது, உனக்கெல்லாம் இது தான் சரி பட்டு வரும் " என்று கையில் இருந்த புத்தகத்தைக் கொண்டே ஓங்கி அவனின் தலையில் ஒன்று வைத்தாள்.
"அம்மா... இங்க பாரும்மா.. இவளைப் பாருமா... மண்டையிலையே அடிக்கிறா... வலிக்குது " என்று வலியில் வலது கையால் தலையைத் தேய்த்துக் கொண்டு கூச்சல் போட்டான்.
"ஏண்டி வளருற பையனை இப்படிந்தலையில அடிக்கிற " என்று முந்தானையை இடுப்பில் சொருகி கொண்டு ஹாலிருக்கு வந்தாள், தேன்மொழி.
"மகனுக்கு சப்போட் பன்ன வந்துடுவியேமா .... எங்க அடிக்கணும் லிஸ்டு போட்டு சொல்லு அங்க அடிக்கிறேன்" என்று கோபத்தில் கூறி மீண்டும் சோஃபாவில் அமர்ந்தாள், ரதி.
"உங்க அப்பன மாதிரி திமிருபிடிச்சவ..மூஞ்ச பாரு...அப்படியே உரிச்சு கிட்டு வரா பாரு... ஆதவா , நீ வாடா சாப்ட " என்று அழைத்து விட்டு கிட்சென்னிற்குள் சென்றாள், தேன்மொழி. அது என்னவோ உண்மை தான் , ரதி என்ன செய்தாலும், அதில் அவளின் தந்தையின் அம்சம் இருக்கும். சாப்பிடுவதில் இருந்து பேச்சு வழக்கில் வரை, கண்ணனின் ஜாடை பிரதிபலிக்கும்.
ஆதவன் எழுந்து சாப்பிடும் மேஜைக்கு செல்லும் போது அவளின் தலையில் கொட்டு வைத்து விட்டு ஓடி விட்டான்.
"எருமை மாடு... நாயே .... பண்ணி... என் உயிர வாங்குறது க்குனே இந்த எருமையை பெத்துருபாங்க போல" என்று தலையை தடவிக் கொண்டே கத்தினாள், ரதி.
"என்ன சத்தம்" என்று கதவைத் திறந்து கொண்டு கையில் ஒரு பையுடன் வீட்டில் உள்ளே வந்தார், கண்ணன்.
"அதெல்லாம் ஒன்னும் இல்லங்க, நீங்க போன வேலை என்னாச்சு? " என்று தேன்மொழி இவர்கள் இருவரையும் பார்த்து அமைதியா இருக்கும் படி முக பாவனைகள் செய்து கொண்டு இருந்தாள்.
"எங்க? கோடோன்ல இன்னும் பொருள் வந்து இறங்களை " என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே கைபேசி அழைக்க, மறு புறம் இருக்கும் நபரை கடிந்தவாறே மாஸ்டர் பெட் ரூம்மிர்குள் சென்றார், கண்ணன்.
"அம்மு... சாப்பிட கம்மு " என்று ஆதவன் ரதியை உணவு உண்ண அழைத்தான்.
"இந்தா வரேன் பட்டு " என்று பாசம் கலந்த குரலில் கூறினாள் ரதி.
ஆதவனுக்கும் ரதிக்கும் சண்டை இல்லை என்பதை அவர்களின் தந்தையிடம் காட்டிக் கொள்ள இந்த நாடகம் அரங்கேறியது.
கண்ணன் ஏதோ கோபத்தில் உள்ளார் என்று அறிந்திருந்தால், உணவு அருந்தும் வேளை உண் பதற்கு மட்டும் வாயைத் திறந்தனர். பின் அனைவரும் சாப்பிட்டு முடித்து அவரவர் ரூமிற்கு படுக்கச் சென்றனர்.
தூக்கம் என்றாலே சொர்க்கம் தான். தூக்கம் பிடிக்காதவர்கள் இவ்வுலகில் இருக்க முடியுமா ? ஆனால் ரதியோ தூக்கம் வராமல் இருக்க என்ன பண்ணலாம் என்று கண்களைத் தேய்த்துக் கொண்டு இருந்தாள்.
"தூங்காத...தூங்காத.." என்று தனக்குள் கூறிக் கன்னத்தில் தட்டிக் கொண்டாள், ரதி.
பின் சுடு தண்ணீரை எடுத்து குடித்துக் கொண்டே ஒரு மணி வரைக்கும் தூங்காமல் பொழுதை போக்கினாள்.
ஆனால் நித்திரை தேவன் அவளின் அனுமதி இன்றி அவளை ஆட் கொண்டான்.
கூர்க்கா வின் விசில்லிலும், காற்றில் மரங்கள் அசையவதிலும் , நாய் ஊளையிட்டுக் கொண்டு இரவு பொழுது நிசப்தமாக இருந்தது. அவளின் விரிந்த கிங் சைஸ் மரக் கட்டிலில் கையில் பென்ஸிலைப் பிடித்தவாறே சுருண்டு தூங்கிக் கொண்டிருந்தாள், ரதி.
சில நிமிடங்களில் அவளின் கையை யாரோ இழுப்பது போல் தோன்ற, அவளுக்குள் பயம் சூழ்ந்து கொள்ள , அவளின் தேகம் ஐஸ் கட்டி வைத்தார் போல் கடுங்குளிரில் நடுங்கியது.
"ராஜேஷ் , நான் என்ன பார்க்க வராதனு சொல்லிட்டேன் , கேட்க மாட்டியா ? " என்று அழுகாத குறையில் கேட்டாள் ரதி.
அவனிடம் இருந்து பதில் ஏதும் வர வில்லை.
"இன்னிக்கு நான் ஜஸ்ட் மிஸ் ல தப்பிசேன்... எங்க அம்மா இருக்கப்ப இருகாதனு சொல்லிருகேன்ல ... " என்று அவனிடம் கடிந்தாள் ரதி.
மீண்டும் பதில் ஏதும் சொல்லாமல் அமைதி காத்தான், ராஜேஷ்.
"நீ கேக்குறது என்னால பன்ன முடியாது ராஜேஷ், நீ என் உடம்ப கேக்குற , இதுக்கு முன்னாடி யாரும் என் கிட்ட இப்படி நடந்து கிட்டது இல்ல ... பிளீஸ் புருஞ்சுகோ...இதுக்கு நீ என்ன சொன்னாலும் நான் ஒத்துக்க மாட்டேன். நீ பேசுறதே எனக்கு புரியாது ராஜேஷ், என்னால உணரத்தான் முடியும் , பேசுறது எனக்கு கேட்க கூட செய்யாது. அப்படியும், நீ என்ன விடாமல் டார்ச்சர் பன்னேனா, நான் செத்ததாதான் என் உடம்பு உனக்கு கிடைக்கும் " என்று மூச்சு விடாமல் விம்மிக் கொண்டே கதறினாள், ரதி.
அவள் எப்படி ஏணும் கண்களைத் திறந்து விட்டால் அவன் போய் விடுவான் என்று எண்ணியவள், புருவங்களைச் சுருக்கிக் கொண்டு கண் முழிக்க எத்தனிதாள்.
ரதி மேலும் அவளின் உடம்பில் அழுத்தம் கொடுத்து தலையை திருப்பி அசைத்தவாரே திமிரிக் கொண்டு எழுந்தவள் கண்ட காட்சி, அந்த அழகிய பிங்க் நிற மெத்தையில் அவளின் உடம்பு.
சற்று நேரம் அவளுக்கு என்ன நடந்தது என்று ஒன்றும் புரிய வில்லை.
"நான் செத்துட்டேன்னா ? " என்று ரதி...
~ அவளின் உலகம் தொடரும்!
Hi Guys!
How is the update?
Any Guesses on what happened to Rathi ?🙃
And who is Rajesh?😉
Stay Tuned Amingo's!🤗
Please give your valuable votes and comments!
I'm open ears to all kinds of comments, suggestions and feedback!
With lots of love,
Maya Mohini! 💙
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top