அத்தியாயம் - 11💫
பள்ளி விடுமுறை என்பதால், அடுத்த நாள் அவன் வீட்டிற்குச் சென்று பேசலாம் என்று தீர்மானித்துக் கொண்டு, அன்று இரவு அசந்து தூங்கிவிட்டேன்.
அடுத்த நாள், காலையில் என் பிங்கியைத் துடைத்து விட்டு, அம்மாவிடம் பாரதி வீடு வரைப் போய்ட்டு வருவதாய்க் கூறிவிட்டு, மிதி இயக்கியை (பெடல்) வேகமாக மிதித்துக் கொண்டு கிளம்பினேன்.
அங்கு அவன் வீட்டு வாசல் கூட்டத்தால் நிறைந்திருந்தது. அங்கையே மிதி வண்டியை நிறுத்தி விட்டு, கீழே இறங்கிச் சென்றேன்.
அவனின் உடல் முழுவதும் மாலையால் நிறைந்திருந்தது. எனக்கு அதிர்ச்சியில் கண்களில் இருந்து கண்ணீர் கூட வரவில்லை. என்ன நிகழ்ந்தது என்று அங்கு நின்றுக் கொண்டு இருந்த ஒருவரிடம் கேட்டேன்.
ராஜாக்குப் போன் கேன்சர் இருந்திருக்கு எனவும், அவன் இரண்டு வருடங்களாக கீமோதெரபி எடுத்து அவஸ்தைப் பட்டுக் கொண்டு இருந்திருப்பதாகவும், ஆனால், அவன் தீடிரென்று நேற்று மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இயற்கை எய்தினான் என்று அந்நபர்க் கூறினார்.
ஆனால் அவன் ஏன் என் கனவில் வந்தான் என்பது எனக்கு அப்போதும் புரியவில்லை. இரண்டு நாட்கள் கடந்தும் அவனின் நினைவு மட்டும் தான் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.
பொதுவாக நாங்கள் சதுரங்கம் விளையாடும் போது, நாங்கள் காய்கள் நகர்த்தும் இடங்களை, எங்கள் நோட்டில் குறிப்பு எடுப்பது வழக்கம். அன்று அவன் என் கனவில் வந்தபோதும், நாங்கள் எப்போதும் விளையாடுவது போல் தான் விளையாடிக் கொண்டு இருந்தோம். ஆனால், அவன் கையில் வேற ஒன்றும் இருந்ததைக் கண்டேன்.
அதனால், ஒரு வாரம் கழித்து நான் மீண்டும் என் அம்மாவிடம், எப்போதும் போல பாரதி வீட்டிற்குச் செல்வதாகக் கூறிவிட்டு ராஜாவின் வீட்டிற்குச் சென்றேன். அங்கு அவனின் அம்மாவும் தம்பியும் வெளியில் நின்றுக் கொண்டு இருந்தனர்.
நான் அவர்களிடம் ராஜாவிடம் என் புத்தகம் ஒன்று உள்ளதாய் பொய் கூறிவிட்டு, அவனின் புத்தகப் பையைக் கேட்டு வாங்கினேன். அதில் அவன் நோட்டை எதார்த்த மாக எடுப்பதுப் போல் எடுத்தேன். அதில் இருந்து ஒரு கடிதம் கீழே விழுந்தது." என்று ரதி சொல்லி முடித்தாள்.
"அதுல என்ன எழுதி இருந்துச்சு ரதி " என்று நித்விக் ஆர்வமாகக் கேட்டான்.
"ஹ்ம்ம் டாக்டர்...சொல்லுறேன்...அவன் கீமோதெரபி எடுக்கும் போது இருந்த வலியைக் காட்டிலும் மரணத்தின் வலிப் பெரிதாக இருக்கப் போவதில்லை என்றும், கீமோதெரபி குடுக்க அவனின் பெற்றோர்கள் கடன் வாங்கிக் கஷ்டப்படுறது பிடிக்கவில்லை என்றும். அதனால், இவனுக்கு சில சமயம் வரும் உடல் வலி வருவதைச் சொல்லாமல் மறைத்ததற்கு மணிப்புக் கேட்டு கடிதம் எழுதிருந்தான்.
மேலும், அவனுக்கு உடல் ரொம்ப வலிப்பதையும், அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல், அவதிப் படுவதையும், அவனுக்கு அவன் இறக்கப் போகிறான் என்று தோன்றுகிறது என்றும் கூறியிருந்தான்.
அவன் எழுதி இருந்த முழு கடிதத்தையும் வாசித்த அவனின் அம்மா, கதறி அழுதபடி இருந்தார். அன்று, அவரை அந்நிலையில் பார்த்த பின், என்னை அறியாமல் எனக்கு அழுகை வந்தது.
அதன்பின் ராஜா என் கனவில் வரவே இல்லை. சில நாட்கள் கழித்து, நான் அவன் தம்பியிடம் பொதுவாக விசாரித்ததில் , அவர்கள் அவனுக்கு மருத்துவம் பார்த்த டாக்டர் மீது இவர்கள் உண்மைத் தெரியாமல் கோர்ட்டில் குற்றம் சாட்டியது தெரிய வந்தது. அதனைக் கடிதம் கிடைத்த அன்றே சென்று மருத்துவரிடம் மணிப்புக் கேட்டதாய் கூறினான். "
ரதி சொல்லும் போதே அவளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்துக் கொண்டு இருந்தது.
"ரதி, ஆர் யூ ஓகே? கண்டினு பனலாமா இல்ல நிறுத்திக்கிடலாமா ?" என நித்விக் மென்மையாகக் கேட்டான்.
"கண்டிணு பனலாம் சார்" என்று தீர்க்காமாகச் சொன்னாள் ரதி.
"ஃபீல் பண்ணாதீங்க ரதி, ராஜா உடைய ஆத்மா கண்டிப்பா சாந்தி அடைந்திருக்கும்" என கண்களை மூடித் திறந்தான் நித்விக்.
"ஹ்ம்ம் சார்"
"அதன்பின் வேற யாரும் உங்க கனவில் வரவில்லையா, ரதி ? " என நிதானமாகக் கேட்டான், நித்விக்.
"வந்தாங்க சார்" என்றாள்.
"உங்களுக்கு தெரிந்தவர்கள் மட்டும் தான் வருவாங்களா?"
"முதலில் அப்படித் தான் இருந்தது எனக்கும், ஆனால் ஒரு வருடம் முன் , அதாவது, காலேஜ் இரண்டாம் ஆண்டு படிக்கும் போது தான் முன்பின் தெரியாதவர்கள் என்னிடம் பேச ஆரம்பித்தனர்." என்றாள் ரதி.
"உங்கிட்ட எப்படி அவுங்க அப்ரோச் பன்னுவாங்க, ரதி?"
"தெரியாது சார், நான் நல்லாத்தான் தூங்கிட்டு இருப்பேன், ஆனால் கனவுல வந்திருவாங்க, அதுல அவுங்களோட வாழ்க்கையை என்னால் உணர முடியும். எப்படி சொல்வது, ஹ்ம்ம்..., இப்போ அவுங்க ஒரு ஸ்கூல் டீச்சர்னா , அவுங்க ஸ்கூல் போறது வருவது, அவுங்களைப் பற்றி எனக்கு அதுல இருந்து புரிந்துக் கொள்ள முடியும்"
"சோ... இந்த மாதிரி நீங்க எத்தனைப் பேர் கிட்ட பேசுனது உண்டு ?"
"ஹ்ம்ம்...ஒரு பத்துப் பேர் இருக்கும் , சில பேர் சொல்றது அதாவுது கனவில் தோன்றுவது எனக்குப் புரியாமல் இருந்திடும். சில பேருக்கு ராஜா மாதிரி என்னால் முடிந்த ஹெல்ப் செய்வேன்"
"தெருஞ்சவுங்க உங்க கூட கனவில் வந்து பேசுனது, எத்தனைப் பேர் ரதி? "
"ராஜவைச் சேர்த்து நான்குப் பேர்"
"யாரெல்லாம் ?"
"ராஜா, என் பாட்டி வீட்டுக்கு அருகில் இருந்த மாமா, மணி. என் அப்பா உடைய அம்மா, தனம். எங்க வீட்டுக்கு அருகில் இருந்த பாட்டி, லட்சுமி."
"தெரியாதவர்களும் உங்க கிட்ட ஹெல்ப் கேட்பார்களா?"
"இல்லை சார், இதுவரை தெரியாதவர்கள், என் கிட்டச் சொன்ன எந்த விஷயங்களும் எனக்குப் புரயவில்லை, அவுங்களோட சுற்றுசூழல் எதுவுமே எனக்கு விளங்காத போது, நான் எப்படி அவுங்களுக்கு உதவிச் செய்ய முடியும்"
"அதுவும் வாஸ்தவம் தான், அப்படி ஏதாவது ஒரு நிகழ்வு இருந்தால் சொல்லுங்க ரதி"
"ஒரு முறை இருபத்து ஐந்து வயதுமிக்க ஒரு பெண் என் கனவில் வந்தாள். அவளின் அழகுக்கு இக்காலப் பெண்கள் தோற்று விடுவார்கள்.
அழகு க்கு உருவம் தந்ததுப் போல் இருந்தாள் அவள், மகிழினி. அவளின் சிவப்பு நிற பட்டுப் புடவையில், ஜொலிக்கும் வைரங்கள் நிறைந்த கற்களால் ஆன நெக்லஸ் அதற்கு ஒத்துப் போவதுப் போல் காதணிகள், கழுத்து மாலை, மோதிரம், வளையல்கள், அணிந்திருந்தாள். அவள் அணிந்திருந்த நகைகள் அனைத்தும் , சூரியக் கதிர்கள் பட்டு அவளின் புன்னகை முகத்தை மின்ன வைத்தது. அதில் அந்த அரண்மனையேப் பிரகாசமாக காட்சி அளித்தது. அக்கோட்டையில் இருக்கும் படிக்கட்டுகளில் இருந்து அவள் இறங்கி வரும் போது, கண்களில் நேர்கொண்ட பார்வையும், நடையில் வீரத்தின் திமிரும் மிகுந்து இருந்தது. " என்று மூச்சு விடாமல் கூறி முடித்தாள்.
'அந்தக் கனவிலும் இதெல்லாம் நோட் பன்னியிருக்கியாமா' என நினைத்து மௌனமாக சிரித்தான் நித்விக். அதன் பிறகு அவள் சொல்லப் போவது தெரியாமல். சிறுது நேரம் அமைதியுடன் இருந்தவள், எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தாள்.
"ரதி " என அவளின் அமைதியின் காரணம் புரியாமல் நாற்காலியில் இருந்து எழுந்து அவள் அருகில் சென்றான், நித்விக்.
அவளின் மௌனத்தைக் கலைத்து, ரதி சொல்லத் தொடங்கினாள்,
"அவளின் முகத்தில் இருந்த தேஜஸ் , சிறிது நேரம் கூட நீடிக்க வில்லை. அவளின் சொந்த சகோதரனே , மகிழினியைக் கொன்று விட்டான்" என்றாள்.
"அது எப்படி உனக்குத் தெரியும் ரதி? "
"அவன் மகிழினியை முக்கியாமன சில ரகசியங்கள் பற்றி பேச வேண்டும் என்று அரண்மனையின் மாடிக்கு அழைத்தான்.
அதன்பின், அவன் அவளை 'நீயாகவே முன்வந்து தற்கொலை செய்துக் கொள், இல்லை ஏனில் நான் கொலை செய்ய வேண்டி வரும்' என்று மகிழினியை வாள் முனையில் மிரட்டினான், அவளின் தமயன்.
" உன் கூற்றைக் கேட்டு எனக்குச் சிரிப்புத் தான் வருது, நிரஞ்சனா " என ஆணவச் சிரிப்புடன் சிரித்தாள், மகிழினி.
"என் மனைவியையும் கருவில் இருந்த என் சிசுவையும், அரியணையின் மோகத்திர்க் காகக் கொன்றவள் நீ தான், ஆதாரத்துடன் தெரிந்துக் கொண்டேன். அவள் சென்ற இடத்திற்கே நீயும் செல் " என மகிழினி சுதாரிப்பதற்குள் அவளை கீழேத் தள்ளி விட்டான் நிரஞ்சன்.
"மன்னித்து விடு நிரஞ்சனா, நான் கொல்ல வில்லை என்றால், அவளின் ஜாதகம் படி , அவள் உன்னைக் கொன்று விடுவாள். " என்று கத்திக் கொண்டே கீழே விழுந்து மாய்ந்தாள், மகிழினி.
ரதி, 'நிரஞ்சன்' என்று சொல்லும் போதெல்லாம், அவனின் மனதில் யாரோ கத்தியால் கீரியதுப் போல் உணர்ந்தான் நித்விக். நம் பெயர் வைத்திருப்பவர் எல்லாம் தாமாக நினைத்துக் கொள்வது முட்டாள்தனம் என்று அவனின் மூளை மொழிந்தது.
"ரதி, இதுக்கும் அந்த ஆத்மாக்கும் என்ன சம்பந்தம்?"
"அதே தான் சார், அது ஏன், கனவில் வந்து என் கண்களுக்குக் காட்சித் தந்தது என்று தெரியவில்லை. அவளுக்கு என்னால் எந்த உதவியும் கிடைக்கப் போவதுமில்லை. ஆனால் அவளின் மனம் குற்ற உணர்ச்சியில் துடித்ததுப் போல் இருந்தது" என்றாள்.
"நீங்க எல்லாத்தையும் அருகில் இருந்து பார்த்த மாதிரியே எப்படி சொல்லுறீங்க?"
"இல்ல சார், எனக்கு ஃபீல் ஆகும். அங்க இதெல்லாம் நடந்தது அப்படியே எனக்கு ஒரு உணர்வுடன் படம் பார்ப்பது போல் இருக்கும். அவர்கள் வாய் அசைப்பது கூட எனக்குத் தெரியாது, ஆனால் நடந்ததை மட்டும் என்னால் உணர முடியும்"
"அதன் பின் மகிழினி உங்க கனவில் வரவில்லையா?"
"வரவில்லை"
"உங்களுக்கு உங்க உடல் ரீதியில் ஏதும் வேறுபாடும் வந்து உள்ள்தா ரதி ?"
"வேறுபாடு லாம் இல்லை சார், ஆனால் எனக்கு கை கால் ரொம்ப வலிக்கும். தூங்குன மாதிரியே இருக்காது. கண் எல்லாம் வலிக்கும், ரொம்ப சோம்பேறி தனமா இருக்கும். ஏன்னா நானே சோர்வா தான் இருப்பேன்"
"அதற்கான விளக்கத்தை தான் கண்டிபாகச் சொல்லுறேன் "
அவனின் கடிகாரத்தைப் பார்த்தான், கிட்ட தட்ட இரண்டு மணி நேரம் கடந்திருந்தது.
"ரதி உங்க மூச்சுக் குழாய் மீது கவனம் செலுத்துங்கள், டோண்ட் ஸ்ட்ரெஸ், மெதுவா கண்ணைத் திறந்து பாருங்கள், everything is going to be alright" என நித்விக் கூறிய அறிவுரை படி மெதுவாக அவளின் விழிகளைத் திறந்தாள் ரதி.
சற்று நிமிடம் அவளை ஆசுவாச்படுத்திக் கொண்டு நிமிர்ந்து அமர்ந்தாள்.
"ஆர் யூ ஓகே? " என முன்பு இருந்த அறைக்கே இருவரும் திரும்பினர்.
"எஸ் சார், தண்ணீர் குடிக்க வேண்டும்" என்றாள்.
அவன் கண்ணாடிக் குவளையில் இருந்த தண்ணீரை எடுத்து அவளுக்குக் குடுத்தான். அமுத்ததையே குடிப்பது போல் கண்களை மூடி, மூச்சைப் பிடித்துக் கொண்டு அன்னாந்து பருகினாள் , ரதி. தாகத்தைத் தணிக்கும் தண்ணீரும் அமுதம் தானே!
"நான் இப்போ சொல்ல போற விஷயத்தை நல்லா கவனித்துக் கொள்ளுங்கள் ரதி" என்று அவன் கையில் ஒரு ஸ்கெட்ச் பேனாவை எடுத்து , வெண்பலகையில் ரதி என்று எழுதினான்.
'இவன் எதற்கு என் பெயரை இப்படி எழுதி வைக்கிறான் ' என யோசனையில் இருந்தாள் ரதி.
Hi Guys!
How is the update?
Any doubts? Suggestions? Feedback? Comments?
Here, I'm all ears!!!
Chess Notations epdi edupangana with the help of alphabetes in english and numbers side la irukathu vachu. Photo mela iruku refer panikonga. Ithu game analysis kaga players edupanga.
Ex: White - Knight - 'N' oda steps nagatromnah ::- Nf3.
Do share your thoughts!
Thanks for reading!
If you like this chapter, please consider to give your votes!
Lots of love,
Maayaval! 💙
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top