அத்தியாயம் - 10 💫
ரதி ஏதும் பேசாமல் அமைதியாகப் பதில் தந்து கொண்டு இருப்பது, நித்விக்கிற்கு வருத்தமாக இருந்தாலும். இனி ரதியிடம் மருத்துவராக மட்டுமே பேச வேண்டும் என்று, நேற்று அவன் ராத்திரி எடுத்த முடிவு இது. அவனின் தாத்தா ஷ்யாம் தான் திட்டம் தீட்டி ரதியை இங்கு அனுப்பி வைத்திருக்க வேண்டும் என்று அவனின் உள் மனம் கூறியதின் விளைவு தான் இவனின் மாற்றத்திற்கு காரணம் ஆனது.
"ஹிப்னாஸிஸ் ஆரம்பிக்கலாம் ரதி , முதலில் நீங்க ட்ரான்ஸ் ஸ்டேட்க்கு மெதுவா போவீங்க , உங்க மைண்ட் ரொம்ப relax ஆன ஸ்டேட்ல இருக்கும் அண்ட் உங்க கான்சண்ட்ரஷன் இப்போ இருக்கக் காட்டிலும் இந்த ஸ்டேட்ல கூட இருக்கும்.
இது ஒன்னும் நீங்க புதுசா பன்ன போறது இல்ல, இந்த மாதிரி ஒரு நாளைக்கு உங்களை அறியாமலேயே இரண்டு மூன்று முறை நீங்க இந்த ஸ்டேட்க்குப் போறது உண்டு.
எப்படினு கேக்குறீங்களா? பகல் கனவு காண்பது போல் தான். அதேப் போல,
நம்ம ஒரு படம் பாகுறப்ப எப்படி எல்லாத்தையும் மறந்துட்டு அதுல கான்சண்ட்ரஷன் பன்றோம்ல அந்த மாதிரி தான். சுற்றி என்ன நடக்குதுனு உங்களை அறியாமலேயே தன்னிலை மறந்து உங்களுக்குப் பிடிச்ச படம் பார்குறப்பையோ இல்லப் புத்தகம் படிக்கும் போதோ , நீங்க இந்த trance statela தான் இருப்பீங்க.
நீங்க என்னப் பேசுறீங்க உங்களைச் சுற்றி என்ன நடக்குதுன்னு எல்லாமே உங்களுக்குத் தெரிஞ்சு தான் நடக்கும், ஏதாவது நான் கேக்குற கேள்விக்கு பதில் சொல்ல விருப்பம் இல்லனா, யூ கேன் டெல் மீ. நீங்க எதுக்கும் பயப்டமா இருக்கலாம், இதுக்கும் ஸ்பிரிட்ஸ் க்கும் எந்த சமந்தமும் இல்லை. யு கேன் லீவு தி ஹைப்னோடிச ஸ்டேட் வென் நெவர் யு வாண்ட். இட்ஸ் மை டுடி டு டெல் ஆல் திஸ். (You can leave the hypnotic state whenever you want. This is my duty to tell all this)" என நித்விக், ரதிக்கு புரியும் வகையில் அனைத்தையும் அவளுக்கு எடுத்துக் கூறி விளக்கினான்.
"நீங்க லைசென்ஸ்யிட் ஸ்பேசில்ட் தானா ?(Are you licensed specialist?) " என நித்விக்கை நம்பாதவளாய் மேலும் கீழும் பார்த்துக் கேட்டாள், ரதி.
"எஸ்...ஒரு வருஷமா பிராக்டீஸ் பண்ணிட்டு இருக்கேன் " என பேசிக் கொண்டே அவனும் ரதியும் எழுந்து அருகில் இருந்த இன்னொரு அறைக்குச் சென்றனர்.
"ஹ்ம்ம் " மனத் தவிப்புகளை அவள் துப்பட்டா வின் நுனி முடிச்சுகள்ளோடு சேர்த்து முடிந்து வைத்து கொண்டு சிலை என நின்றாள், ரதி.
"யூ ஹாவ் டிரஸ்ட் இஸ்யூஸ், அம் ஐ ரைட்?(You have trust issues, Am I right?)" என அவன் கேட்டது, ரதிக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனால், அதை வெளிக் காட்டாமல் பதில் ஏதும் சொல்லாமல், அவனையேப் பார்த்துக் கொண்டு இருந்தாள் ரதி.
"ஹலோ...என்ன யோசனை?" என ரதியின் முகத்திற்கு அருகில் கைகளை அசைத்துச் சுய நினைவிற்கு அழைத்து வந்தான் நித்விக்.
"அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை சார், இப்போ ஹிப்னாஸிஸ் எதுக்குப் பன்றிங்கனு தெருஞ்சிகிடலாமா ? " என இடுப்பில் கையை வைத்துக் கொண்டு, அவனை நேர் எதிரில் பார்த்துக் கேட்டாள்.
"ஓஹ்... கண்டிப்பாகச் சொல்லலாமே... இந்தப் பிரச்சினை யோட வேர் எங்கனு கண்டுபிடிக்க ஹெல்ப் செய்யும், இது முடுஞ்சபிறகு நீங்க ரொம்ப பாஸிட்டிவ் வா ஃபீல் பண்ணுவீங்க. இந்த ஸ்டேட்ல நான் சொல்ற விஷயங்கள் உங்க மூளையில் எளிதாக புரியக்கூடய வகையில் இருக்கும். உங்க மூளையில் டிரான்ஸ் ஸ்டேட் ல இருக்கும் போது, எதை பற்றியும் கவலைப்படாமல், நான் சொல்றத மட்டும் நிதானமாகக் கேட்கும். இதுக்கு அறிவியல் பூர்வமாக நிறையப் பெயர் சொல்லுவாங்க. நீங்க இஸ்டப் பட்டால் அதைப் பற்றி நம்ம கடைசியாகப் பேசலாம் " என புருவத்தை உயர்த்தித் தலையை மெதுவாக மேலும் கீழும் அசைத்தான் நித்விக்.
"ஓகே" என சத்தம் இல்லாமல் காற்றுக்கு மட்டும் கேட்கும் படி மெதுவாகக் கூறினாள்.
"இன்னும் நல்லா சாய்ந்து படுத்துக் கோங்க , ரதி எதையும் யோசிக்காதீங்க என் கண்ணை மட்டும் பாருங்க அமைதியா மெதுவா மூச்சு விடுங்க , ப்ரீத் இன், ப்ரீத் அவுட், உங்க மூச்சு சுவாசத்தைக் கவனிங்க, மனதை ஓர் நிலைப் படுத்தி எதையும் யோசிக்காதீங்க , நான் கேக்குற சொல்லுற விஷயங்களுக்கு மட்டும் பதில் குடுங்க" நித்விக்கின் அறிவுரைப்படி ரதி அவளின் மனதினை ஓர் நிலைப் படுத்திக் கொண்டு இருந்தாள்.
"நீங்க என்ன படிகுறிங்க ரதி "
"நான் Bsc. Information Technology and Management பைனல் இயர் படிக்குறேன்"
"எந்த காலேஜ் ? "
"ADC காலேஜ்"
"உங்களுக்கு பிடிச்ச கலர் என்ன ரதி"
"வெள்ளை கலர் பிடிக்கும்"
"ஏன் பிடிக்கும் "
" ஏன் பிடிக்கும்லாம் தெரியலை, ஐ லைக் திஸ் கலர் சோ மச்"
"உங்களுக்கு அமைதியா இருகத்து பிடிக்குமா ரதி"
"ஆமா, ரொம்பவே சார்"
" குட், ரதி உங்களுக்கு இரவுனா பயமா?"
"இல்ல சார், எனக்கு இரவுனா ரொம்ப பிடிக்கும், அப்படியே சந்திரன், நக்ஷதிரங்களோடு இருக்கும் போது, பார்க்க அவ்ளோ அழகா இருக்கும். அந்த சந்திரன் கிட்ட , நான் என்னோட சீக்ரெட்ஸ் எல்லாத்தையும் ஒன்னு விடாமல் சொல்லுவேன். அதும், சந்திரன் தான் எனக்கு ரொம்ப இஷ்டம்."
ஒரு நிமிடம் அவனைத் தான் பிடிக்கும் என்று அவள் கூறியது போல் உணர்ந்தான், நித்விக். அவன் நினைத்த விடயங்களை மனதில் ஓர் ஓரத்தில் ஓரம் கட்டி வைத்துவிட்டு அவன் செயலில் கவனத்தைத் திருப்பினான்.
"ஏன் ரதி இரவு ஒழுங்கா தூங்க மாடேங்குறீங்க ?"
"தூக்கம் வரும் சார் , நானும் தூங்குவேன். ஆனால், யாரவுது வந்துட்டா, கனவு வந்துரும் "
"யாரு வந்துட்டா?"
"அதான் சொன்னேனே சார், அவுங்க தான் ஆத்மா " என்றாள்.
"இந்த மாதிரி எப்போ உங்களுக்கு ஸ்டார்ட் ஆச்சு என்னன்னு தெளிவா மீண்டும் சொல்லுங்க ரதி. நீங்க எப்படி ஃபீல் பண்ணுவீங்க? என்ன நடக்கும் உங்களுக்கு ? "
ரதி கூறும் சில விசயங்களைக் காகிதத்தில் எழுதிக் கொண்டு இருந்தான், நித்விக். ரெக்கார்டர் டேபில் அவள் கூறிக் கொண்டு இருந்த அனைத்தும் ரெக்கார்டு செய்யப் பட்டுக் கொண்டு இருந்தது.
"எங்கப் பாட்டி வீட்டில் தான், நான் முதன் முதலில் ஆத்மாக்களை உணர்ந்தேன். அதனை உறுதி செய்யும் பொருட்டு இரண்டு நாட்கள் கழித்து அந்தப் பெண்ணின் வீட்டிற்குச் சென்றேன். ஆனால் , அவர்கள் என் கண்களுக்குத் தென்படவில்லை. அதன் பின்பும் அவர்களை நான் காணவில்லை, அதனால் நான் ஏதும் யோசிக்காமல் இருந்து விட்டேன்.
பின், எனக்குப் பல கேள்விகள் எழுந்தன, ஆனால் அவை அறிவியலின் படிப் பார்த்தால், அக்கேள்விக்கான பதில்கள் எனக்கு கிடைக்கவில்லை. ஒரு வேளை எல்லாமே தற்செயல்லாக நடந்திருக்க வேணடும் என்று நினைத்துச் சில சமயம், நான் எதையும் நம்பாமல் இருப்பதற்கு முயன்றேன்.
ஆனால், நாட்கள் செல்ல செல்ல, எனக்கு அந்தச் சின்ன வயதிலேயே, ஆத்மா பேய்கள் இதனைப் பற்றித் தெரிந்து கொள்ள ரொம்ப ஆசை வந்தது. என் பிரென்ட் பாரதி, அவளோட வீட்டுக்கு நான் அடிக்கடிப் போவேன், அப்போ அவளோட அண்ணன் கம்ப்யூட்டர்ல நான் இதைப் பற்றி எல்லாம் பிரவுஸ் செய்து பார்ப்பேன். அதை அப்படியே நானும் ஃபாலோ பண்ண ஆரம்பித்தேன்.
ஏழாம் வகுப்பு முழு ஆண்டு விடுமுறையில் ஒரு நாள், அப்படிதான் பேய்களிடம் பேச வேண்டும் என்பதற்காக , என் சின்ன வயசு ப்ரெண்ட்ஸ் நாளு பேர் சேர்ந்து ஓஜா போர்டு வாங்கிட்டு எங்கள் வீட்டில் இருந்து மூன்று கிலோமீட்டரில் இருந்த ரேஷன் கடைக்கு அருகில் இருந்த பாழடைந்த குடோன்னிற்குச் சென்றோம்.
நான் அண்ணன் வீட்டில் இருந்து ஓஜா போர்டை எப்படிக் கை ஆள்வது என்பதற்கான, பிரிண்ட் அவுட் எடுத்தப் பேப்பரையும் என் கையில் வைத்துக் கொண்டு அங்கு விரைந்தேன். அங்கு சென்று அரைமணி நேரத்தில் எனக்கு அங்கு யாரோ உண்மையில் இருப்பதுப் போல் இருந்தது.
ஓஜா போர்டில் எதுவும் நாங்கள் எடுத்து வைப்பதற்கு முன்பே. என் மனதில் என்னவென்று விளக்கிட முடியாத ஒரு சலனம் ஏற்பட, பயத்தில் நான் அனைவரையும் அழைத்துக் கொண்டு வந்து விட்டேன். அங்கு அப்படி ஒரு நெகடிவ் வைப்ஸ் தோன்றியது.
ஆனால், அங்கு ஒரு பையன் சித்திக் மட்டும் எப்படி அங்கு மாட்டிக் கொண்டான் என்பது தெரியலை. நான் தான் அவனை அவன் வீட்டில் விட்டுவிட்டு பின் தான், என் வீட்டிற்கு வந்தடைந்தேன்.
அவனைத் தேடி அவனின் பெற்றோர்கள் என் வீட்டிற்கு வந்து சண்டை போட ஆரம்பித்து விட்டனர். மணி பத்தையும் தாண்டியது, அவன் எங்கு இருக்கிறான் என்று தெரியாமல் தேடிக் கொண்டு இருந்தனர்.
இன்னொரு பையன் கூறியதைக் கேட்டு, நான் தான் அவர்களைத் திட்டம் தீட்டி கூட்டிப் போனேன் என்று கூறி என்னை மிகவும் திட்ட ஆரம்பித்து விட்டனர். என் பெற்றோர்களுக்கு என்ன கூறுவது என்ன செய்வது என்று தெரியாமல், சண்டைப் பெரிதாகி, போலீஸ் வரைச் செல்ல நேர்ந்தது.
கடைசியில் அவன் அந்த குடோனில் தான் இருந்தான், இது வரை அவன் எப்படி அங்கு மீண்டும் சென்றான் என்பது எனக்கு தெரியாத புதிர் தான். ஆனால், என்னைச் செல்லம் கொஞ்சிய என் அம்மா, அன்று தான் என்னை எல்லார் முன்னாடியும் திட்டி கன்னத்தில் அடித்து விட்டார். பாரதியைத் தவிர்த்து, எனக்கு பிரெண்டனு யாரும் பெருசா கிடையாது.
என் குடும்பத்துக்கு என்னால் அவப் பெயர் வந்ததை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதன் பிறகு, நான் இதைப் பற்றி யாரிடமும் சொல்வதை நிறுத்திவிட்டேன். சொன்னாலும் எனக்கு குறை இருக்கிறது என்று கூறி விடுவார்கள். இப்படியே மூன்று வருடங்கள் உருண்டு ஓடியது.
நானும் இதைப் பற்றி யோசிக்காமல் இருக்க வேண்டும் என்று எதைப் பற்றியும் ஆராயாமல் காலத்தை ஓட்டினேன். அன்று தான் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கடைசித் தேர்வு.
நல்லா தூங்கிக் கொண்டு இருந்தேன், தீடிருனு என் கிளாஸ் ராஜா என் ரூமில் இருந்தான். அவன் தான் சதுரங்க விளையாட்டில் மாவட்டம் நிலையில் ஃபர்ஸ்ட். அவனும் நானும் ஈவ்னிங் அரைமணி நேரம் தினமும் விளையாடுவோம். அவன் எனக்கு முன்னாடி ரோல் நம்பர். அவ்வளவு தான் எனக்கு அவனைப் பற்றித் தெரியும்.
நான் அவனிடம் நீ எப்படி இங்க வந்தனு கேட்டதற்கு அவன் எந்த பதிலும் சொல்ல வில்லை. அவன் எனக்கு என்ன சொல்கிறான் என்றும் புரிய வில்லை. எனக்கு யாரோ என் கால் மொட்டியில் அடித்ததுப் போல் உணர்ந்து எழுந்தபோது, என் ரூமில் யாரும் இல்லை. கண்களை கசக்கிக் கொண்டு தண்ணீர் குடிக்க கீழே இறங்கி வந்தேன், நடந்தது எல்லாம் கனவு என்று அப்போது தான் எனக்குப் புரிந்தது.
பள்ளி விடுமுறை என்பதால், அடுத்த நாள் அவன் வீட்டிற்குச் சென்று பேசலாம் என்று தீர்மானித்துக் கொண்டு, அன்று இரவு அசந்து தூங்கிவிட்டேன். அடுத்த நாள் காலையில் என் பிங்கியைத் துடைத்து விட்டு, அம்மாவிடம் பாரதி வீடு வரைப் போய்ட்டு வருவதாய்க் கூறிவிட்டு, மிதி இயக்கியை (பெடல்) வேகமாக மிதித்துக் கொண்டு கிளம்பினேன். அங்கு அவன் வீட்டு வாசல் கூட்டத்தால் நிறைந்திருந்தது. அங்கையே மிதி வண்டியை நிறுத்தி விட்டு, கீழே இறங்கிச் சென்றேன், அங்கு...
Hi friends!
If you like this update, please consider to give it by votes!
Story epdi pothu ? Hypnosis pathi koncham theliva therunchirupinganu ninaikiraen. Innum fullah therunchikidalamnu thonuchunahh comment panunga.. atha pathi pesalam.
Comment your views!
Thanks for reading!
With lots of love,
Mayaval! 😉
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top