அத்தியாயம் - 1💫

மழை என நம்மை சிறு வயதில் தோன்ற வைத்திருந்தத் துாவாலைக்குழாய்யில் இருந்து வந்த மிதமான சூட்டில் இருந்த தண்ணீர், அவள் மெல்லிய தேகத்தில் படர்ந்துச் சென்றது. ரோஜாப் பூப் போல் மென்மையாக இருக்கும் அவள் மேனியில், முட்களாக மாறி இருந்தது, அவன் கொடுத்த காயங்கள். அவள் முதுகிலும், கைகளிலும் அவன் கரம் அழுத்திய காயத்தின் வலிகள் தண்ணீரிலும் தலர்ந்தபாடு இல்லை. ஒவ்வொரு முறையும் அவ்விடத்தில் தண்ணீர்ப் படர்ந்துப் போக, அவ்வலியை தாங்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள், அவள். கீழே சரிந்து அவிடத்திலியே விழுந்தவள், இருக் கைகளால் இரு புறமும் ஈரக் கூந்தலோடு தலையைப் பிடித்துக் கொண்டு யோசித்தாள். கண்களில் கண்ணீர் மட்டும்மே கசிந்தது, அவளாகத் தேடிய வாழ்க்கை தானே இது என்று கண்களை மூடி, முன் தினம் இரவில் நடந்தவற்றை நினைத்துப் பார்த்தாள்.

"ராஜேஷ், பிளீஸ் அடிக்காதிங்க வலிக்குது" என்று அவன் கைகளால் அவள் முதுகில் அடித்தது, பிரம்பால் அடித்தது போல் இருந்தது அவளுக்கு.

அவன் பதில் ஏதும் சொல்லாமல் அவளை கண்களால் முறைத்தான். அவனைத் தள்ளி விட முயச்சி செய்தும், அவனின் திடமான உடலை சிறிது கூட அசைக்க முடியவில்லை, அவளால். அவள் படுக்கையில் இருந்து எழுவதற்கு முயற்சி செய்ய, அவள் கையை பின்னாடி மடித்து அவனின் தடியான கைகளால் அழுத்திப் பிடித்து அவளைத் தடுத்தான்.

"நான் உங்க கிட்ட பேசுனது தான், நான் பன்னத் தப்பு" என்று அவனிடம் கத்தி விற்று அவள் கைகளை அவனிடம் இருந்து விடுவித்தாள். அவன் அவள் கைகளைப் பிடித்திருந்த இடம், காட்சிய கம்பினால் சூடு வாய்தார் போல் வலித்தது, அவன் கரங்கள் அவ்வளவு வலிமையுடன் தெரிந்தது அவளுக்கு.

"நான் மெதுவாகத் தான் அடித்தேன், வலித்திருந்தால் ரொம்ப சாரி" என்று ஒன்றும் அறியாத குழந்தைப் போல் கூறினான் ராஜேஷ்.

அவன் கூறிய எதுவும் இவளுக்கு புரிந்தார் போல் இல்லை. சிறிது நேரம் இவர்கள் இடத்து, வாக்குவாதம் இன்றி அமைதி நிலவியது. அவளின் மொத்த ஆற்றலையும் இழந்துவிட, யாரோ இவள் முதுகை தட்டிக் கொடுத்தார் போல் இருந்ததால் அப்படியே மெத்தையில் தூங்கி விட்டாள். அவனும் அவ்விடத்தை விட்டு மெதுவாக நகர்ந்தான்.

"ரதி, என்னடி பன்ற இன்னமும், பார்துரூமில் தூங்குறியா? " என்று ரதியின் தாய் தேன்மொழி கதவில் தட்டினாள்.

"இதோ குளிச்சுட்டேன்.... வரேன்மா... " என்று கண்களை துடைத்துக் கொண்டு, மீண்டும் முகத்தை மட்டும் கழுவி விட்டு, துண்டை அவளின் உடம்பில் சுற்றிக் கொண்டு பாத்ரூமிலிருந்து வெளியே வந்தாள் ரதி.

"கிளம்பு சீக்கிரம், காலேஜுக்கு லேட் ஆகுது, கீழே பாரதி உனக்காக வந்து நிக்கிறாள்...நீ இன்னும் எதுமே எடுத்து வைக்கல" என்று திட்டிவிட்டு அவளின் மேஜையில் சலவை செய்து வைத்திருந்த சுடிதார் ஒன்றை வைத்து விட்டு நகர்ந்தாள், தேன்மொழி.

வேகமாக ஹீட்ட்டரில் தலையை காய வைத்தவள், மெத்தையில் கிடந்த எல்லாப் புத்தகத்தையும் பையில் திணித்தாள். பிங்க் அண்ட் வெள்ளை நிறம் கலந்த காட்டன் சுடிதாரில், மிகவும் ஒப்பனைகள் ஏதும் இன்றி, ஃப்ரீ ஹேரில், காலேஜ் பேக்கை ஒரு பக்கத் தோள்பட்டையில் தாங்கிக் கொண்டு, பேபி லிப்ஸ் பாமை உதட்டில் தடவிக் கொண்டே படியில் இருந்து இறங்கி வந்தாள், ரதி. அவள் பயன் படுத்தும் ஒரே ஒரு காஸ்மெட்டிக் அது தான்.

அவளைப் பார்த்ததும் , தேன்மொழி தட்டில் இட்லியை வேகமாக வைத்தாள். அங்கு அவளுக்கு முன்பாகவே பாரதி இட்லியை முளுங்கிக் கொண்டு இருந்தாள்.

"வா பேபி, வந்து வேகமா இட்லி சாப்பிடு, ஆன்டி, கறிக்கொலம்பு சூப்பர், எம்மி" என்று தட்டில் எத்தன்னை இட்லி இருக்கு என்பதை எண்ணுவதற்கு முன்பே அவற்றை வயிற்றில் போட்டுக் கொண்டு இருந்தாள், ரதியின் சிறு வயதில் இருந்தே தோழியாக இருக்கும், பாரதி.

"பார்துடி விக்கிக்கப் போது, அம்மா ஆதவன் சாப்பிட்டானா? " என்று அவனின் தம்பியை விசாரித்து விட்டு, ரதியும் அவளுடன் சேர்ந்து உணவு உண்ண ஆரம்பித்தாள்.

"அதெல்லாம் அவன் சாப்டுட்டு ஸ்கூல் போயிட்டான், உன் கிட்ட ஒரு விஷயம் கேட்கணும், ஆமா, ராஜேஷ் யார் ? " என்று கேட்டுக் கொண்டே அவளின் தட்டில் சட்னியை வைத்தாள் தேன்மொழி.

எப்படி தான் இந்த அம்மா மார்களுக்கு மூக்கு வேர்க்குமோ என்று தெரியவில்லை, எவற்றை எல்லாம் நம்மிடம் இருந்து கரக்க நினைக்கிறார்களோ அவற்றை எல்லாம் சாப்பிடும் பொழுது தான் சரியாக கேட்பார்கள்.

"அப்படி யாரையும் எங்களுக்கு தெரியாதே ஆன்டி" என்று ரதி பதில் அளிப்பதற்கு முன் , முந்திரிக் கொட்டை போல் பதில் கூறினாள், பாரதி.

"ஹ்ம்ம்...ஆமாமா " என்று கண்களின் முன் வளைந்து நெளிந்து வந்தக் கூந்தலை காதோரம் கைகளால் தள்ளியவாரே கூறினாள், ரதி.

அத்துடன் புலன் விசாரணையை நிறுத்தவில்லை தேன்மொழி. அவள் எப்படி நிறுத்துவாள், பெற்ற தாய் ஆயிற்றே, தன் மகள் ஒரு ஆணின் பெயரை தூக்கத்தில் சொன்னாள், தூக்கிவாரிப் போட்டத்தானே செய்யும்.

"இல்லையே, நேத்து தண்ணி குடிக்க வந்தேன் , பார்த்தா இந்த மேடம் என்னகெண்ணனு லைட்ட போட்டுட்டு தூங்கிடாங்க, இதுல பாரதி, ஏதோ, ' ராஜேஷ் அடிக்காத, பேசுனது தப்புன்னு' தூக்கத்துல பின்னாதிக்கிட்டு கிடன்துச்சு, அப்புறம் நான் தான் தட்டிக் கொடுத்து தூங்க வைத்தேன் " என்று நடந்த எல்லாவற்றையும் முக பாவனைகளுடன் முழுவதுமாக கூறி முடித்தாள், தேன்மொழி.

இவள் முடிக்க, இங்கு ரதியும் சாப்பிட்டு முடித்து இருந்தாள். பதில் என்னக் கூறுவது என்றுத் தெரியாமல் ஆந்தைப் போல் முழித்துக் கொண்டு அவன் அழுத்திய மணிக்கட்டைப் பார்த்தாள் ரதி.

"இது எதாவுது படத்தை பார்த்திட்டு தூக்கத்துல பொலம்பியிருக்கும் ஆன்டி" என்று இப்பொழுதும் பாரதியே அக் கேள்விக்கும் பதில் அளித்தாள்.

'இந்த ஜென்மத்தில் நீ பன்ன ஒரே நல்ல விசயம் இதுவாகத்தான் இருக்கும் , அதும் என் பிரெண்ட்டா ' என்று ரதி அவளின் மனதில் பாரதியின் பதிலைச் சற்றும் எதிர் பாராத ரதி எண்ணிக் கொண்டாள்.

"என்னடி அப்படியா? " என்று குறு குறு வென்று கண்களை உருட்டி கொண்டேக் கேட்டாள், தேன்மொழி.

"ஆமா ம்மா , ஏதோ கெட்ட கனவு எனக்கு. நல்லா பயந்துடேன் போல" என்று நடந்த எதையும் சொல்லாமல் முடித்துவிட்டு வேகமாக கையைக் கழுவினாள் ரதி.

"இதுக்குத் தான் கண்டதையும் பார்க்க கூடாது தூங்கப் போரதுக்கு முன்னாடி" என்று வாட்டர் பாட்டிலில் தண்ணீரை ஊற்றினாள், தேன்மொழி.

'நல்ல வேலை, பாரதி எப்படியோ என்னைக் காப்பாற்றினாள் , இல்லை என்றால் அவ்வளவு தான். நான் அவன் கூட பேசினது அம்மாக்கு எப்படியோ கேட்டிருக்கு ' என்று நினைத்தவாறே தேன்மொழியைய் ஓரக் கண்களால் பார்த்துக் கொண்டே இடுப்புக்கும் கீழ் வளர்ந்திருந்த கூந்தலை அள்ளி ஒற்றைச் ஜடையாகப் பின்னினாள். மூன்றே நிமிடத்தில் நெற்றியில் வெள்ளை கள் பொட்டை வைத்தப் பின், விறு விறு வென காலணியை அணிந்துக் கொண்டு வீட்டை விட்டு சூறாவளி போல் வெளியேறினாள், ரதி.

"சரிங்க ஆன்டி நாங்க போய்ட்டு வரோம் " என்று கார் பார்க்கிங்கில் இருந்த நாற்காலியில் வைத்திருந்த பையை கையில் எடுத்துக்கொண்டு நகர்ந்தாள் பாரதி.

"பார்த்துப் போய்ட்டு வாங்க, இன்னும் நேரம் இருக்குத் தானே " என்று கேட்டை உட் புறமாக தாழிட்டாள், தேன்மொழி.

"பை அம்மா" என்று கைப்பேசியை கையில் எடுத்துக்கொண்டு நகர்ந்தாள் ரதி.

"அடியே , இதுக்கு லிப் பாமையும் இப்போவே போற்றுக்க வேண்டியது தானே " என்று பஸ் வருகிறதா என்று எட்டிப் பார்த்துக் கொண்டே கேட்டாள், பாரதி.

"இப்போ போட்ட ரொம்ப லிப்ஸ்டிக் மாதிரி தெரியும், சும்மாவே காலேஜ் பஸ்ல களாய்ப்பாங்க , எதுக்கு ?" என்று கையை காற்றில் அசைத்து பதில் கூறினாள், ரதி.

"கேடி, டெக்னிக்கா" என்று புன்முறுவல் செய்தாள், பாரதி.

~அவளின் உலகம் தொடரும்!

Hi Guys!

How is the update?
Any Guesses?

Let me know what you think about it!
Please don't forget to give your valuable votes and comments.
I am open ears to all kind of suggestions. And please bear with my spelling mistakes.

Thanks for reading!

With lots of love,
Lolita! 💙

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top