9. செடி
சரியாக 11.45க்கு Taileen Green Parkஇன் carpark C இல் கார் நுழைந்தது. கார் AC on பண்ணி இருந்தாலும் கழுத்தின் பின் பகுதி வேர்த்துக்கொட்டியது. காரை கார்பார்க்கிங்கின் வாசல் கிட்டயே இடம் பார்த்து நிறுத்தினேன் காரணம் அவள் வருவதை கண்காணிக்க வசதியாய் இருக்கும். சரியாக 5 நிமிடங்களில் அவளின் வெள்ளை Toyota கார்பாக் நுழைவில் திரும்பியது. அவளின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் horn அடித்தேன் ஆனால் சூரியனின் glareஇல் அவளைப் பார்க்க முடியவில்லை.
அவளின் கார் வந்ததும் வாங்கி வைத்திருந்த chocolatesஐ எடுத்தேன் ஆனால் அதைப் பார்க்கும்போதே சின்ன குழந்தைக்கா கொடுக்கிறோம் என முன் தோன்றாத சிந்தனை இப்போது தோன்றியது. என்ன செய்வதென தெரியாமல் ஒரு நிமிடம் உறைந்துவிட்டேன் பிறகு அதான் நம்ம கார் இருக்கே என்று பின் சீட்டில் எட்டிப் பார்த்தேன். ஆண்களுக்கு கார் என்பது தங்கள் வீட்டின் ஒரு extension, எல்லாவற்றையும் குமித்து வைத்திருப்பர். கண்கள் அரக்க பரக்க ஏதாவது கிட்டுமா என தேடியபோது இனாபா கொடுத்த Andalusia செடி தன் crown of flowersஐ இழந்து வெளியே தென்பட்ட இயற்கை வெளிச்சத்தை பார்வையிட்டுக்கொண்டிருந்ததது. உடனே அதைக் கையில் ஏந்திக்கொண்டு அவளின் காரை நோக்கி நடந்தேன். அவள் காரிலிருந்து இறங்கி பின் சீட்டிலிருந்து என்னமோ எடுத்துக்கொண்டிருந்தாள்.
பூப் போட்ட ஒரு cotton maxi dress முழங்கால் வரை நீள பாத விரல்கள் dressஇலிருந்து எட்டிப்பார்த்தன. ஒரு pashmina shawl உம் அவளின் தோளை சுற்றியிருந்தது.
பின்னாளில் இருந்து, "Hi, I'm Raj!" என்றேன். திடுக்கிட்டவள் உடனே திரும்ப அவளின் தலை கார் சட்டத்தைத் தட்டியது.
ஆஆஆ என வலியில் தலையை தன் கரத்தால் தேய்த்துக்கொண்டே என்னை நோக்கினாள்.
"நீங்ஹள் ராஜ் எண்டு எனக்கும் தெரியும்," அவள் புன்னகைத்தாள்.
"Sorry for the shock and இந்தாங்க சின்ன கிப்ட்," என chocolatesஐயும் செடியையும் நீட்டினேன். பரவாயில்லை என்று courtesyகு சொல்லாமல் சிரித்துக்கொண்டே அவற்றை வாங்கியது பிடித்திருந்தத்து. சாக்லெட்டை காரில் வைத்துவிட்டு செடியை கேள்வி குறியோடு நோக்கினாள்.
"This is the Andalusia flower that blooms every 6 months. நான் உங்கள மீட் பண்ண அந்த வாரம் என் கைக்கு வந்தது அந்த வாரமும் தான் இந்த செடி பூத்தது," என சமாளித்தேன். நமக்கு தான் சமாளிப்பு கை ஐ மீன் வாய் வந்த கலையாகிட்டே. பேசும்போது தான் அவள் முகத்தைக் கவனிக்க முடிந்தது. பாதி இருட்டிலும் ஓரிரு நொடியிலும் மறைந்த முகத்தை இப்போது கதிரவன் தன் வெண்ணிற ஒளியில் சுடர வைத்தான். அவளின் கண்ணைப் பார்த்து பேசுகையில் அவளின் தேன் நிற கண்கள் ஒருவித light feeling ஐ தந்தன. A pair of shadesகூந்தலை ஒதுக்கிய வண்ணம் crownபோல அமர்ந்திருந்தன.
என் கையை நீட்டினேன் handshake செய்யும் பாவனையில், "Hi, I'm Raj."
புரிந்துக்கொண்டவளாய் அவள் கையைக் குலுக்கினாள், "Hi Raj, I'm Janani,"
பிறகு அவள் பூச்செடியை காரில் வைத்துவிட்டு ஒரு tote bagஐ எடுத்துக்கொண்டு என்னோடு நடக்க ஆரம்பித்தாள். அங்கு நான் ஓரிரு முறை ஏற்கனவே வந்திருந்ததால் அவளை அங்கிருந்த ஏரியைப் பார்வையிட அழைத்துச் சென்றேன். பை பார்க்க கனமாக இருந்ததால் தாங்க bagஐ நான் துக்கிட்டு வர்ரேன் என்று வாங்கிக்கொண்டேன் . அதைத் தவிர எங்களுக்குள் எவ்வித உரையாடலும் நிகழவில்லை. ். நடந்துபோகையில் அவளிடம் பேச எத்தணித்தபொழுதெல்லாம் அவள் வேறு திசையில் மரங்களையும் செடிகளையும் ஆராய்ச்சி செய்துக்கொண்டிருந்தாள்.
Handbagல கல்ல வச்சிர்காளோ, பொண்ணுங்க handbagநா இப்டி தானா என்று சலித்துக்கொண்டே நடந்தேன. பூச்செடியை சரியான ஆளுக்குத் தான் கொடுத்திருக்கிறோம். ஏரி Higher groundயிலிருந்து கீழே தவழ்ந்து வருவதால் higher groundஇல் நீரின் ஓட்டத்தையும் scenery யும் காண இன்னும் சிறப்பாக இருக்குமென அழைத்துச்சென்றேன். ஒரு வழியாக மேலே ஏறி சென்றதும் அங்கு இருந்த wooden benchஇல் அமர்ந்துவிட்டோம்.
"பசிக்குதுல்ல ராஜ்?"
"நூறு வயசு, இப்ப தான் எனக்கும் தோனுச்சு. கீழ போனா 10 நிமிஷத்துல ஒரு restaurant வந்துரும்," என எழுந்தேன்.
ஆனால் ஜனனி என்னைப்போல் ஆரவாரம் இன்றி நிதானமாய் கொண்டு வந்திருந்த tote bagஇலிருந்து இரு ப்ளாஸ்டிக் தட்டையை எடுத்தாள். அதைக் கண்டவுடன் எழுந்தவன் உடனே மீண்டும் உட்கார்ந்துக்கொண்டேன். ஒரு தட்டையை என்னிடம் நீட்டிவிட்டு பிறகு பையிலிருந்து சில டப்பாக்களை எடுக்க ஆரம்பித்தாள்.
"நீங்க வெஜிடேரியன் இல்லையே," அவள் கேட்டுக்கொண்டே ஒரு டப்பாவை திறந்தாள்.
"ச்சே ச்சே... அந்த கெட்ட பழக்கம்லாம் இல்ல," என ஆவலுடன் தட்டையை நீட்டினேன். ஒரு கரண்டி வழிய சாதத்தை அள்ளி தட்டில் வைத்தாள் ஜனனி.
"தேங்காய் சோறும் இறால் sambal பிரட்டலும் செஞ்சி எடுத்து வந்துர்கேன். Bachelors' lifeஐ கொஞ்சம் யூகிக்க முடிந்தது,"
உணவு ஆறிபோயிருந்தாலும் சுவை தேனாமிர்தமாய் இருந்தது. Self cooking கொடுமையிலிருந்து கிடைத்த விடுதலையை விட அயல்நாட்டில் தனியாய் வாழ்பவனின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு எனக்காக அவள் மெனெக்கெடுத்து சமைத்தது நெகிழ வைத்தது.
மூச்சிரைக்க ஏறி வந்ததால் பேச முடியாதவற்றை இப்போது சாப்பிடும்போது கேட்டேன். உத்தியோகம், ஜப்பானுக்கு வந்த முடிவு, குடும்பம் என விசாரித்தேன்.
தான் ஒரு physiotherapist என்றும் ஜப்பானுக்கு வந்து 3 மாதங்கள் கூட ஆகவில்லை என்றும் தெரிவித்தாள் ஜனனி.
"ஏங்க...நான் இங்க வந்து ஒரு தமிழனைப் பார்க்க 6 மாசம் எடுத்துச்சுங்க அதுவும் ரோட்ல அந்த பக்கம் நின்னுட்டு ."
ஜனனி சிரித்துவிட்டு தொடர்ந்தாள், "வா போன்னே கூப்டலாம் ராஜ். Actually, கூட அப்பா வந்திருக்காரு to help me settle down here. தம்பி ஒரு interior designer. Skype மூலமா என் வீட்ட அங்கேந்து decorate பண்ணிர்கான். அவனும் லீவ் கிடைக்கும்போது வர்ரேன் எண்டு சொன்னான்,"
"அப்பாவையும் பார்த்திருக்கலாம்ல,"
"அவரு Monday திரும்ப Michiganகு கிளம்பி போறாரு எண்டு இன்று நண்பரை பார்க்க போயிண்டு இருக்கார். அம்மா அங்க இருக்காங்க அதான் கிளம்புறார்."
இனாபா கூறிய மாதிரி இவள் ஊரில் வளர்ந்தவள் அல்ல, அமெரிக்காவில் வளர்ந்தவள்.
"எப்போலேர்ந்து அமெரிக்கால இருக்கீங்க சாரி, இருக்க?"
"பிறந்ததுலேர்ந்து தான்."
"இவ்ளோ விஷயம் சொன்னியே வயச சொல்லல பார்த்தியா?"
"Women are always sweet sixteen. பொண்ணுங்க வயசை சொல்ல டைம் எடுக்கும்," ஜனனி குறும்பாய் ரகசியத்தை மறைப்பது போல் சிரித்தாள். ஆனால் வெகு பக்குவமாகத் தோற்றமளித்தவள் வயதைக் கூற மறுத்தது எங்கேயோ இடித்தது.
[An update after exactly a month..Lol!
I wrote this some time ago but Wattpad didn't save it and my writing got erased which made me reluctant to write again.
ஜனனிக்கு ஒரு வித்தியாசமான, அதிர்ச்சியான flashback உண்டு. She isn't anything you'll expect but next chapter is on வினோதினி and Raj. Will reveal things soon after exams;)
Comments are welcome! முன்னாடி ஒரு flowஇல் கிறுக்கிட்டு இருந்தேன் but now I have planned out the entire story and can't wait to make you fall in love with Raj and Janani;) So excited! ]
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top