6. மூன்றாம் முறை

--------------------------------------------------------------
மழையில் கூட்டைத் தேடி பறக்கும் பறவையைக் கண்டால் தோனுவதுண்டு,
இந்த மழை சுமந்து அதன் இறக்கை வலித்திடுமோ?
--------------------------------------------------------------

வார நாட்களில் ஆபஸில் பூட்டிவைக்கப்பட்டு பின் வாரியிறுதி நாட்களில் தனித்துவிடப்பட்ட பறவையாய் ஊரை சுற்றி திரிந்தேன். காலையில் சமையலை முடித்துவிட்டு கேமராவுடன் வெளியில் கிளம்பிவிடுவேன். ஜப்பானுக்கு வந்த புதிதில் வெளியில் செல்ல சற்று தயக்கமாகவே இருந்தது. 94% ஜப்பானியர்களும் வெறும் 6% வெளிநாட்டவர்களும் வாழும் இந்த நாட்டில் தமிழன் நான் தனித்து நின்றேன். ஜப்பான் மொழி தொண்டைக் குழியில் சிக்கிக்கொண்டதும் ஒரு காரணம்.

ஆனால் ரூமில் நான்கு சுவர்களை வெறித்து பார்ப்பது என் தனிமையின் வலியை அதிகப்படுத்தியது. Social media, internet, YouTube எல்லாம் வந்தும் நேரடியாக மனித உரையாடல்களோ interactionஓ இல்லை என்றால் பித்து பிடிக்கும் நிலைக்கு நம்மைக் கொண்டுச் செல்லும். எனவே தான் எல்லா புது தொழில்நுட்பமும் இருந்தும் human interactionஐ ஈடு கட்ட முடிவதில்லை.

மக்களிடம் பேசாவிட்டாலும் முன் பின் அறியாதவரோடு பகிரும் ஒரு நொடி புன்னகை, கூட்டத்தில் ஒருவனாக பஸ்ஸில் நின்று பயணிப்பது என இந்த சின்ன interactionsஇல் மனிதம் வாழ்ந்துக்கொண்டிருந்தது.

கறு வானம் தெரு விளக்குகளின் மஞ்சளைப் பூசிக்கொண்ட தருணம். மாலை 7 மணியை தாண்டியிருந்தது என்பதை வயிறு முழக்கத்தோடு சொல்லியது. கேமராவில் எடுத்திருந்த புகைப்படங்களை ஒரு முறை அலசிவிட்டு பின் கிளம்பினேன். காரை ஸ்டார்ட் செய்த ஐந்து நிமிடங்களில் மழை சோ வென கொட்டியது. டிராபிக் ஒன்றின் பின் ஒன்றாக எறும்பு போல் ஊர்ந்து சென்றது. ஒவ்வொரு டிராபிக் லைட் இலும் நின்று நிதானமாய் மூச்சு வாங்கி வாகனங்கள் பயணித்துக்கொண்டிருந்தன. எதிரே வந்த வாகனம் லைட் அடிக்க பக்கத்தில் இருந்த கார் பிரகாசமாய் தெரிந்தது. ஆம், இரு முறை நிகழ்வது இன்று மூன்றாம் முறையாய் நடந்தது.

அவள் அங்கு காரின் steering wheelஐ பற்றியப்படி உட்கார்ந்திருந்தாள். யோசிக்காமல் குதூகலத்தில் கார் ஜன்னலை இறக்கியபோது மழைச் சாரல் என்னை நனைக்க உடனே மீண்டும் மூடி விட்டேன். அவளின் கவனத்தை எப்படி என் பக்கம் திசைத் திருப்புவது என்று யோசிக்க காரை தேடினேன். பின் சீட்டில் சில ஆபீஸ் பேப்பர்கள் குமிந்து இருக்க உடனே ஒன்றை எடுத்து dashboard இலிருந்து ஒரு பேனாவை எடுத்து கிறுக்கினேன். எனக்கே அவ்வார்த்தைகள் சின்னதாய் தெரிய என்றோ காரில் தூக்கி வீசிய markerஐ இன்று திட்டிக்கொண்டே தேடினேன். சீட் கீழே கடந்தது.

"Hi, I'm Raj. I hav seen u at AIA insurance" client என்று சொல்லி விவரம் கொடுக்க மறுத்த அந்த கம்பெனி பெயரை எழுதினேன். பேப்பரைக் கையில் பிடித்து ஜன்னலின் அருகில் வைத்தபோது அவள்
கவனிக்கவில்லை. இரு கார்கள், இரு ஜன்னல்கள், என் ஜன்னலிருந்து அவள் ஜன்னலிக்கு மழைத்துளிகள் துள்ளிக்குதித்தன தூதுவாய் ஆனால் அவள் கண்கள் டிராபிக் லைட்டை ஆராய்ச்சி செய்துக்கொண்டிருந்தன.

உடனே என் phone flashlight on செய்து அவள் கார் ஜன்னலில் அடித்தேன். Flash அடிக்க அவள் விழிகள் என் விழிகளில் மோதின. உதட்டின் ஓரம் எரிச்ச்சலில் சுருங்கியிருந்தது. நான் எழுதிப் பிடித்த கார்ட்டை பார்த்துவிட்டு புன்முறுவல் செய்தாள். புதிதாய் நம்பிக்கை பிறக்க உடனே இன்னொரு பேப்பரைக் எடுத்து கிறுக்கினேன்.

"நீங்க தமிழா?"
இதைப் பார்த்துவிட்டு அவள் சிரிப்புடன் தலையசைத்தாள். அவளின் புன்னகை எனக்கும் தொற்றிக்கொண்டது.

"உங்க கிட்ட பேசனும். My no. 88935123" என்று எழுதி காட்டினேன். போர்ட் காட்டியதும் அவளிடத்தில் எவ்வித reactionஉம் இல்லாதபோது மரமண்டைக்கு உரைத்து. போன் நம்பர் எழுதிக்கொடுப்பதற்கு இவள் ஜப்பான்காரி அல்லவே, தமிழச்சி. போன் நம்பருக்கு பதிலாக Google hangout இல் போன் செய்ய என் ஈமெயிலை எழுதிக்காட்டினேன். ஈமெயில் என்றால் பிடிக்காவிட்டால் எளிதில் ஒருவரை நீக்கிவிடலாம் அதுவும் google Hangout போன் நம்பர் தரும் வசதிகள் அனைத்தையும் ஈமெயிலுக்கும் தருகிறது.

போர்ட்டை பிடித்துக் காட்டியபோது அவள் அங்கு இல்லை. பின்னால் கார் horn சத்தம் எச்சரிக்கையாய் ஒலிக்க க்ரீன் சிக்னலில் வாகனம் முன்னாள் சென்றது நெரிசல் குறைந்த சாலையில். கண்ணைக் கட்டி காட்டில் விட்டதுபோல் இந்த இருண்ட சாலையில் மரங்களுக்கு பதிலாக கார்களின் நடுவில் அவளின் முகத்தைத் தேடினேன். இரண்டு சிக்னல் தாண்டி மீண்டும் எங்களிருவரின் கார்களும் சந்தித்துக்கொண்டன. இப்போது ஈமெயிலைக் காட்டினேன். அவள் முகம் எந்தவொரு சஞ்சலத்தையும் பிரதிபலிக்கவில்லை. வெகு சீக்கிரமாய் மனக்கோட்டைக் கட்டிவிட்டு அதைவிட வேகமாய் அது சரிய துவங்கியது. திடீரென dashboardஇல் இருந்த போன் பிரகாசிக்க போன் அடித்தது. போனை எடுத்தபோது மறுமுனையில் ஒரு குரல் பாடியது, "ஹலோ..? ராஜ்?"

[ரொம்ப ரொம்ப ஸ்லோவா அப்டேட் பண்ணிட்டு இருக்கேன். I'm so sorry:( ஆனால் என்னால முடிஞ்ச அளவுக்கு எழுத try பண்றேன். பேனாவைக் கொடுத்ததும் எழுத இது தினச்செய்திகள் அல்ல. ஆழ்மனதிலிருந்து எழும் கிறுக்கல்கள், கொஞ்சம் கால அவகாசம் எடுக்கும் விஷயம்)

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top