5. இரண்டாம் கணம்

--------------------------------------------------------------------------------------------------------------------------------"எப்போதெல்லாம் நான் சாகவில்லை என்பதற்கு சாட்சி கேட்கப்படுகிறதோ,

அப்போதெல்லாம் எழுதத் தோன்றும்."

- வைரமுத்து

--------------------------------------------------------------------------------------------------------------------------------

உள்ளூர ஒரு பரபரப்பு. இன்று திங்கட்கிழமை, வாரத்தின் முதல் நாள். என் Mitsubishi car சாலையில் ஊர்ந்து ஆபீஸை நெருங்கியது. வானொலி தொகுப்பாளரைவிட சென்ற வாரம் கேட்ட சிங்களத் தமிழ் தான் காதில் ரீங்காரமாய் ஒலித்தது. ஆபீஸ் வந்ததும் வேண்டுமென்றே பக்கத்து பில்டிங்கில் பார்க் செய்துவிட்டு என் ஆபீஸ்கு நடந்தேன்.

ஒரு முறை நடந்தது மீண்டும் நிகழாது ஆனால் இரு முறை நிகழ்வது கண்டிப்பாக மூன்றாவது முறை நிகழும். அவ்வாரத்தின் நாட்கள் கடக்க மனதின் உற்சாகம் உறைந்தது. முதல் முறை நிகழ்ந்தது மீண்டும் நடக்காது போல. கார் மீண்டும் என்னுடைய பழைய பார்க்கிங் இடத்துக்கே வந்து சேர்ந்தது.

மதிய உணவுக்காக ஆபீஸ் வளாகத்தில் உள்ள கான்டீன் இல் வந்து நின்றேன். உப்பும் உரைப்பும் குறைந்த ஜப்பான் உணவுக்கு நாக்கு பழக்கப்பட வேண்டிய கட்டாயம். வாரயிறுதி நாட்களில் மட்டுமே ஒழுங்காக சமைப்பதற்கு நேரம் கிட்டும். இன்று ஒரு சூப் கடையின் முன்னாள் கியூவில் ஒருவனாக நானும் நின்றேன். அப்போது எங்கோ கேட்ட குரல் காற்றில் மிதந்து என் மனத்தைக் குளிர வைத்தது. மென்மையும் பெண்மையும் கசிந்தன அக்குரலில். சுற்று முற்றும் கண்கள் தேடியபோது கருங்கூந்தல் திரும்பியது. பெரிய கண்களும் ஆம், இலங்கை தமிழச்சி தான் ஆனால் இப்போது தன் சக ஊழியர்களுடன் அமெரிக்க ஆங்கிலத்தில் உரையாடிக்கொண்டிருந்தாள். உள்ளே ஒரு பரபரப்பு. தமிழ் பெண்கள் வெளிநாட்டில் பணிபுரிய வந்தால் தனியாக வரமாட்டார்கள். தங்கள் குடும்பத்தோடு தான் இருப்பர் எனவே இவள் ஒருவளின் தொடர்பு கிடைத்தால் அம்மா, அப்பா, சகோதரன், புது நட்பு என என் வட்டமே அகலமாய் விடும்.

கண்கள் அவளையே வைத்த கண் நகராமல் பார்த்தன. சிறிது நேரத்தில் அவள் உணவை வாங்கிக்கொண்டு நான்கு ஐந்து ஜப்பானிய ஊழியர்களுடன் ஒரு டேபிள் இல் அமர்ந்தாள். சில மேசைகள் தள்ளி அவள் முதுகைப் பார்த்த வண்ணம் நான் அமர்ந்தேன். அவள் உணவை முடித்தபின் தட்டையை clean-up ஏரியாவில் வைக்க நானும் அவளை பின்தொடர்ந்தேன். இன்னும் என்னை அவள் திரும்பி பார்க்கவில்லை, ஏன் பார்க்க போகிறாள், என்னைப் போல் அவளுக்கு ஆவல் இருக்க வேண்டிய அவசியம் இல்லையே. சாப்பிட்டு முடித்தபின் clean up ஏரியாவில் தட்டையை எடுத்து வைப்பது ஜப்பானியர்களின் பழக்கம், சுத்தம் சுகம் தரும் என்று நம் முன்னோர்கள் சொல்லியிருந்தாலும் அதை பின்பற்றுவது இவர்கள் மட்டும் தான்.

அவள் தன் colleagues உடன் பேசிக்கொண்டே லிப்ட் ஐ நோக்கி நடந்தாள். சற்று பின்னால் திருடன் ஒளிந்து வருவது போல் நான் 5 அடி பின்னால் வர, நான் அவளை அடைவதற்குள் லிப்ட் விதியை மாற்றியது. அவள் லிப்ட் இனுள் நுழைய லிப்ட் கதவுகள் என் நம்பிக்கை மேல் கதவை மூடின. என்னை நானே கடித்துக்கொண்டு லிப்ட் நின்ற மாடியை நோட் பண்ணிவிட்டு அடுத்த லிப்ட் இல் விரைந்தேன். பத்தாவது மாடியில் அவள் இறங்கிய அதே மாடியில் லிப்ட் கதவுகள் திறந்தன. வெட்கம், மானம், ரோஷம் எல்லாம் பார்க்காம இருக்குற பன்னிரண்டு கம்பெனி கதவுகளையும் தட்டிவிடுவோம் என முடிவெடுத்துவிட்டு ஒவ்வொரு கம்பெனியின் receptionஇலும் விசாரித்தேன். மூன்றாம் கம்பெனியில் வெற்றி கிட்டியது.

"Do you have an Indian lady working here?"

"What is Indian?" உலகம் தெரியாமல் ஜப்பானுக்குள்ளே முடங்கிக்கிடக்கும் சாதாரண மக்களில் ஒருவர் இந்த receptionist என அறிந்தேன்.

"Long dark hair, brownish complexion, big eyes," நம் ஊரில் உள்ள 90 சதவித பெண்களை இப்படி வர்ணிக்கலாம் ஆனால் ஜப்பானில் இவள் ஒருவள் தான்.

"Oh, she's not our employee. She's a client." நல்ல பதில் வந்தது.

"Can I get her address or contact number?"

"Sorry sir, we do not reveal details of our clients." இதற்கு மேல் ஒன்றும் கேட்கமுடியாமல் , "Ok, if you see her, can you give her my contact number. My name is Raj," என் கார்ட் ஐ நீட்டினேன்.

ஆனால் உள்ளூர இருந்த உற்சாகம் குறையவில்லை. இரு முறை நடந்தது கண்டிப்பாக மூன்றாம் முறை நிகழும், இது வரலாற்றின் கூற்று. நிகழும்.

Fz3

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top