23. ராவணா - 2

"இது என்னோட முதல் மாச சம்பளத்துல வாங்குனது," வினோதினியின் வார்த்தைகள் ராஜின் காதில் ரீங்காரமிட்டன.

"பிடிச்சிருக்கா ராஜ்? ஏற்கனவே இது உள்ளக ஒரு காஸெட்ல பாட்டு ரிக்கார்ட் பண்ணி வச்சிருக்கேன். ரயில்ல சென்னைக்கு போகும்போது இத கேட்டுட்டே போ," வினோதினி கடகடவென மூச்சுவிட நேரமின்றி பேசினாள். ராஜுக்கு இன்னும் 'முதல் மாச சம்பளம்' தான் காதில் ஒலித்துக்கொண்டிருந்தது.

"என்ன டா ஒன்னும் சொல்ல மாட்டேங்குற?" சிலைபோல் நாற்காலியில் அமர்ந்திருந்த ராஜ் இடம் வினோ வினவினாள். தான் ஆசையாய் தெரிவு செய்து பாட்டு ரிக்கார்ட் செய்து அவனுக்காக அவளின் உழைப்பில் அவனுக்கு அளிக்கும் முதல் அன்பளிப்பு. வினோதினி எதிர்பார்த்த எந்த ஒரு புன்னகையும் பூரிப்பும் ராஜ் முகத்தில் தென்படவில்லை.

"வேலைக்கு போறேன்னு சொல்லவே இல்லை. அதுவும் ஒரு மாசமா போற! என் கிட்ட வேலைய பத்தி ஒரு மூச்சு விடல."

"வேலைக்கு போறேன்னு முன்கூட்டியே சொல்லிட்டா இந்த கிப்ட் எப்படி சப்பிரைஸ் ஆ இருக்கும்? அதான் ஒரு மாசத்துக்கு பிறகு சொல்லலாம் நு இருந்தேன்."

தனக்கு வேலைக் கிடைக்கும் முன்னரே வினோதினிக்கு வேலைக் கிட்டிவிட்டது எனும் எண்ணம் காயத்தில் உப்பு வைத்தது போல் சுல்லென உறைத்தது. வினோதினி பெரிய இடத்து பெண். அவளின் அப்பா, பெரியாப்பா, மாமா எல்லோரும் கோவையில் பெரிய புள்ளிகள். அவர்களின் மூலம் இவளுக்கு வேலைக் கிடைத்திருக்கலாம், ஏன், இவளுக்காகவே ஒரு தொழிற்சாலையை நிறுவி இருப்பர். ஆனாலும் அவள் என்ன வேலைப் பார்க்கிறான் என்பதை அறிந்துக்கொள்ள ஒரு ஆர்வம் இருந்தது. கையெழுத்து போடும் ஒரு மேனேஜர் வேலையை அப்பாவின் சிபாரிசு மூலம் பெற்றிருப்பாள்.

"என்ன வேலை?"

"அதுவா, அது ஒரு கார் பேக்டரில குவாலிட்டி எஞ்சினியர் வேலை. பரபரப்பா..."

அவள் முழுமையாய் சொல்லி முடிப்பதற்குள் ராஜ் குறுக்கிட்டான், "உங்க அப்பா சொல்லி வேலைக் கிடைச்சதா? ஒரு டேபிள்ள உட்கார வச்சு முதலாளி மாதிரி நடத்துங்கன்னு உங்க அப்பா சொல்லிருப்பாரே."

வினோதினியின் முகத்தில் இருந்த ஆர்வம் இப்போது அருவெருப்பாய் மாறியது. ராஜ் இப்படி பேசுவான் என அவள் எதிர்பார்க்கவில்லை.

"ஆமாம், அப்பா மூலமா இண்டர்வியூ வந்துச்சு. போதுமா?" என சொல்லிவிட்டு விறுட்டென நாற்காலியிருந்து எழுந்து வெளியேர எத்தணித்தாள். எதுவோ நினைத்தவள் கதவருகே நின்றாள், "ஆனா நீ நினைக்கிற மாதிரி நான் அங்க சும்மா இல்ல. எனக்கும் திறமை இருக்கு ராஜ். உன்ன விட காலேஜில் நல்லா படிச்சவ நான். அங்க நான் பார்க்குற வேலைக்கும் என்னோட டேலண்ட் கும் மற்ற வொர்கர்ஸ் மரியாதை தர்ராங்க. I am respected for my brains not for my money there. Mind it." வினோதினி தன் நியாயமான கோபத்தைக் கொட்டிவிட்டு திரும்பி பார்க்காமல் நடந்தாள். ராஜ் தன்னை பின்தொடர்கிறானா என்பதை யோசிக்காமல் அவள் கடகடவென மண்டபத்திலிருந்து வெளியேறினாள். அங்கே விருந்தினர்களின் சவாரியை எதிர்பார்த்து காத்திருந்த ஆட்டோக்களில் ஒன்றில் ஏறி தன் வீட்டுக்கு வழி சொன்னாள் வினோதினி. அவளின் இருதயம் இரு மடங்கு வேகமாய் துடித்துக்கொண்டிருந்தது. கண்ணீர் விழிகளின் ஓரத்தில் கசிந்தது. கோபப்பட வேண்டியவள் எதற்கு அழுகிறாள் என தெரியாமலே சப்தமின்றி அழுதாள். பெண் மனம் அப்படி. தன் மேல் குற்றம் இல்லாவிடினும் அழும்.

----

prithviraj from Raavanan- passive aggressive male. Sudden infatuation over Aishwarya Rai GIFs.

See you soon in another chapter:)

Say Hi to me on Twitter at


Bạn đang đọc truyện trên: AzTruyen.Top