21. பணம்

நானோ
பயணத்தில் விலகிப் போகும்
ஒற்றை மரத்தின் நிழலையும்
என்னோடு அழைத்துப் போக நினைக்கிறேன்

- எழுத்தாளர் சல்மா

----------

வீட்டை பூட்டிவிட்டு தெருவில் வந்து நின்றான் ராஜ். அவனுடைய சென்னை வாழ்க்கை தேடலில் துவங்கும் என அறிவான் ஆனால் பாதம் பதிந்த ஒரு மணி நேரத்தில் ஆரம்பிக்கும் என அவன் அறியவில்லை. வெயில் தனது உக்கிரமான முகத்தைக் காட்ட துவங்கியது. பஸ் ஸ்டாண்ட இலிருந்து வந்த பாதையில் திரும்பி செல்ல அங்கே மார்கெட் வெளியே சில தள்ளுவண்டி கடைகள் அவனை தோசையுடன் வரவேற்றன. அடுக்கியிருந்த ஸ்டூலில் ஒன்றை எடுத்துப் போட்டு கையில் தட்டையை ஏந்தியவாரு காலை உணவை முடித்தான் ராஜ். இந்த தள்ளுவண்டி கடைகளின் கார சட்டினிக்கு ஈடு இணையேதுமில்லை.

புது ஏரியாவை அறிந்துக்கொள்ள மார்கெட், கடை, ஏன் கோயிலைக் கூட விட்டுவைக்காமல் சுற்றி பார்த்தான் ராஜ். கடவுளிடம் மனிதனின் அற்ப ஆசைகளான பணம், வேலை, வேலையினால் சொந்தகளிடையே கிடைக்கும் கௌரவம், அதன் மூலம் பெற்றோரின் மரியாதை மீட்பதும் ஆகியவற்றை அருளுமாறு கடவுளின் காதில் போட்டு வைத்தான். சாவகாசமாக மதிய உணவு முடிந்து ரூமுக்கு திரும்பியபோது மணி ஐந்து. குருவிகள் தங்களின் கூடுகளுக்கு திரும்பும் முன் ராஜ் தனது அறைக்கு திரும்பி தனது தோழனுக்காக காத்திருந்தான். 2003 வருடத்தில் செல்போன் ஏது? விளையாட கேமோ, பார்த்து சிரிக்க வீடியோவோ, வெட்டியாய் பேச பேஸ்புக்கோ, சண்டை போட ட்விட்டரோ இருக்க?

"டேய் ராஜ், எப்டிடா இருக்க?" மதன் ராஜைத் தழுவி வரவேற்றான். பல மணி நேரம் சும்மா இருந்த ராஜுக்கு மதனின் வரவு புத்துணர்ச்சியை அளித்தது. இருவரும் ஊர் கதைகளை பேசினர். அதோடு வேலை தேடுவது, பயணம் செய்வது என சென்னையைப் பற்றி மதனும் தனது மூன்று வருட சென்னை வாழ்க்கைப் பாடங்களை சுறுக்கி அறிவுரைகளைப் பொழிந்தான். மலை ஏறும் போது முன்னாள் சென்றவர்களின் கால்தடத்தால் புல் ஓர் இடத்தில் மட்டும் முளைக்காமல் இருக்கும். அப்பாதையை ஒருவர் பின் ஒருவராக பின் தொடர்வது போல் ராஜும் மதன் கடந்து வந்த பாதையை தொடர்ந்தான்.

இரவு நேரமானதும் ரூமில் தங்கிய மற்ற இருவர் ரூமுக்கு திரும்ப நால்வரான அவ்விடம் இப்போது குடும்பமாய் சேர நால்வரும் ஒன்றாக இரவுணவு சாப்பிட்டனர். காலையில் இருந்த தனிமை இப்போது இடம் தெரியாமல் ஓடிய சூரியன் போல் மறைந்தது. இம்மூவரின் உதவியோடு ராஜ் பல இண்டர்வியூகளுக்கு சென்றான். ஏமாந்து திரும்பியபோது இவர்களின் அன்பான ஆறுதல் வார்த்தைகளோடு மீண்டும் முயற்சித்தான். கையில் இருந்த காசு பானையில் இருந்த ஓட்டை வழியே தண்ணீர் ஒழுகுவதுபோல் கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்தது. நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் ஆனால் கைவிட மாட்டான் என ரஜினியின் மந்திரத்தை சொல்லிக்கொண்டு ஒவ்வொரு கம்பனி படியாய் ஏறி இறங்கினான். சொந்த காலில் நிற்பதற்கு அத்தனை படிகளும் ஏறியாக வேண்டும்.

கிட்ட தட்ட சென்னை வந்து இரண்டு மாதமாகிய பின் வினோவை பார்க்க ஒரு சந்தர்பம் கிட்டியது. அவர்களோடு ஒன்றாக படித்த ஒரு கிளாஸ்மேட்டுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட அந்த திருமண வைபோகத்துக்கு வினோ வருவேன் என சொல்ல ராஜ் உற்சாகமானான். வினோ சொன்னது உண்மை தான் சென்னை வந்ததால் அவளைப் பார்க்க சந்தர்ப்பம் உருவாகியது. சென்னையில் இருப்பதால் அம்மா அப்பா விடம் அனுமதி கெத்கவொ தனது absence கு விளக்கம் தெரிவிக்கவோ அவசியம் இல்லை. தஞ்சாவோரில் இருந்ததை விட இப்போது சுதந்திரம் அதிகமாக இருந்தது. ரயில் டிக்கட் வாஙிக்கொண்டு தான் படித்து முடித்த கோவைக்கு 4.5 மாதங்கள் கழித்து மீண்டும் திரும்பினான் ராஜ்.

கூடப் படித்தவனின் திருமணத்துக்காக மீண்டும் கோவைக்கு செல்வது மிக சந்தோஷமான நிகழ்வு என சொல்லிவிட முடியாது. வெறுங்கையுடன் கல்யாண மண்டபத்துக்குள் நுழையும்போது கொஞ்சம் கூச்சமாக இருந்தது ராஜ் கு. மற்ற நண்பர்களைப் பார்த்த பின் தன் சாதாரண பேச்சு நிலைக்கு வந்தான் ராஜ். நண்பர்களோடு கூட்டமாக மேடையேறி மாப்பிள்ளையிடம் ஹாய் மச்சான் என நலம் விசாரித்துவிட்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்க போட்டோகிராபரைப் பார்க்க திரும்பியபோது அவள் வந்தாள்.

-----

என் அன்பு மக்களே, உங்களோட பொறுமை 2019 இலிருந்து இப்போ 2020 கு தொடரும் என்ற நம்பிக்கையில் அதாவது நான் இவ்ளோ மெதுவா எழுதுவதை பொறுமையா எதிர்பார்த்து படிப்பீங்க என்ற நம்பிக்கையில் அப்டேட் போட்டிருக்கேன்.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்! 2019 எப்டி இருந்தது? ராஜ் கு வேலை கிடைக்கிறதுக்கு முன்னாடி எனக்கு வேலை கிடைச்சிட்டு இந்த 2019 இல்! கடவுள் இருக்கான்:D

Have also linked my Twitter account to my Wattpad profile! Say Hi there!

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top