20. சென்னை


ஒரு வாரத்தில் அப்பா பத்தாயிரம் ரூபாய் பணத்தை புரட்டிவிட்டார். பணம் வந்ததும் புறப்பட தயாராகிய ராஜ் இறுதியாய் STD பூத்திற்கு வந்து வினோதினிக்கு phone செய்தான்.

"நாளை நைட் சென்னை கிளம்புறேன் வினோ."

"பத்திரமா போயிட்டு வா. All the best! I pray for more good things to come your way on your new journey!" வினோ உற்சாகமாய் வாழ்த்தினாள்.

"ஏன் இவ்ளோ சந்தோஷமா இருக்க? இனிமே அவ்ளோவா பேச முடியாது தெரியும்ல?"

"தெரியும். ஆனா தஞ்சாவூரை விட சென்னை கோவை கிட்ட. நீ என்னை நெருங்கி தான வந்துருக்க. இது நல்ல விஷயம் தான ? " அவள் கொஞ்சினாள்.

"ஆமாம். அப்படியே வேலை சீக்கிரம் கிடைச்சா இன்னும் நல்லா இருக்கும்."

"கண்டிப்பா கிடைக்கும். நம்பிக்கையோட இரு."

பின் காலேஜ் கு எடுத்துச் செல்லும்அதே bag இல் நாலைந்து முழுக் கை சட்டைகளையும் இரண்டு கருப்பு pant ஐயும் அடுக்கினான் ராஜ். இரண்டு பனியன், நான்கு ஜட்டி நான்கு கைலி என bag இனுள் அடைத்தான். டிகிரி certificate, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ரேஷன் கார்டு copy மூன்றையும் ஒரு கவரினுள் மடித்து வைத்தான். பணத்தையும் அதே கவரினுள் வைத்து துணிகளின் நடுவே பத்திரமாய் ஒளித்தான்.

பஸ் ஸ்டான்ட் கு அவனின் குடும்பமும் நான்கு நண்பர்களும் நடந்தே வந்தனர். இரவு பத்து மணி இருக்கும். தன் மகன் அடிக்கடி ஊருக்கும் கோயம்புத்தூரில் இருக்கும் காலேஜுக்கும் பஸ்ஸில் போய் வந்தாலும் இன்று அவன் முதன் முறை சென்னை செல்வதும் வேலை நிமித்தமாய் செல்வதும் மகாவுக்கு என்றுமில்லாத சோகத்தையும் கவலையையும் அளித்தது. மகனுக்காக ருசியாய் சமைத்து அவனை நன்றாய் கவனித்து இப்போது பஸ் ஸ்டான்ட் இல் அவனுடன் நின்றாள் மகா. இரவு பேருந்து காலையில் புது உலகத்தில் தன் மகனை கொண்டு நிறுத்திவிடும் ஆனால் அங்கே அவனை வரவேற்க ஒரு நாதி இல்லை. மைக்கலின் அண்ணன் , மதன் , பைக் workshop இலிருந்து விடுமுறை போட்டுவிட்டு வரமுடியாததால் அவன் தங்கியிருந்த ரூமின் அட்ரஸ் மற்றும் வழியையும் விலாவரியாய் கூறியிருந்தான்.

சென்னை செல்லும் பிரைவேட் பஸ் வந்து நின்றது. பஸ் மேலே சரக்கு ஏற்றப்பட, கையில் இருந்த ஒரு bag ஐ கெட்டியாய் பிடித்துக்கொண்டான் ராஜ். தன் நண்பர்களை தழுவிக்கொண்டு விடைப்பெற்றவன் சுதர்சன் தோளில் கை வைத்து பார்த்துக்கோடா என சொல்லிவிட்டு சண்முகத்தையும் மகாவையும் பார்த்து போய்ட்டு வர்றேன் என சொல்லி பஸ் ஏறினான்.சண்முகம் முகத்தில் எந்த உணர்ச்சியும் புலப்படவில்லை. மகன் தஞ்சாவூரில் சும்மா இல்லாமல் சென்னையிலாவது வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக்கொள்ளட்டும் என எண்ணினார் போலும். மகாவின் கண்கள் மட்டும் ஈரமாய் இருந்தன.

இரவு நேர பேருந்தைப் பற்றி சொல்லவா வேண்டும்.ஏழு மணி நேரத்தில் விடியும் முன்பே 5 மணிக்கு சென்னை மாநகரத்தில் பயணிகளை இறக்கிவிட்டு அடுத்த வேலைக்கு சென்று விட்டது. நல்ல தூக்கத்திற்கு பின் பஸ்சிலிருந்து இறங்கிய ராஜின் உடலும் மனமும் புத்துணர்ச்சியுடன் இருந்தன.

சூரிய ஒளியுடன் சாலை விளக்குகள் போட்டி போட்டுக்கொண்டிருந்த அதிகாலை நேரம் . பனி மூட்டம் சென்னையின் தூசியையும் மாசுவையும் மறைத்து ஓர் அழகான மாயை உருவாக்கியது. மக்கள் நடமாட்டம் துவங்கியிருந்தது. பஸ் ஸ்டான்ட் இல் ஒரு டீ யை வாங்கி குடித்துவிட்டு (நமக்கு டீ இல்லன்னா ஒன்னும் ஓடாது ) மைக்களின் அண்ணன் சொன்னதுபோல் பஸ் எடுத்தான். ஆட்டோவுக்கு பணம் அதிகமாகும் என மதன் எச்சரித்ததால் இருக்கிற பணத்தை எத்தனை நாட்களுக்கு தாக்குபிடிக்கும் என அறியாது மிகுந்த கவனத்துடன் ராஜ் இருந்தான். பஸ் கண்டக்டரிடம் அட்ரசை சொல்ல நாக்கு குழறியது. புது இடம், புது பெயர், சரியாக தான் உச்ச்சரிக்கிரோமா , கண்டக்டர் நம்மை பார்த்து சிரிப்பாரா என்ற பல எண்ணங்கள் ஓட மெண்டு முழுங்கி ஸௌழிங்கநல்லூர் என சொல்லிவிட்டான். கண்டக்டர் டிக்கட்டை கிழித்து தர அவர் அருகில் ஓர் இருக்கையில் உட்கார்ந்தான்(இடம் கேட்கனும்ல).

கண்டக்டர் இவன் முகத்தை பார்த்ததும் இவனின் பின்னணியை கணித்தவர், சிரித்தார். இள ரத்தம் பல கற்பனைகளுடனும் கனவுகளுடனும் பேருந்து சன்னல் வழியே தனக்கான இடத்தை இந்த சென்னையில் தேடிக்கொண்டிருந்தது. இவனுக்காவது இந்த ஊர் ஒரு நல்ல எதிர்காலத்தைக் காட்டட்டும் என முனுமுனுத்தார். இறங்கும் இடம் வந்தததும் ராஜைப் பார்த்து சைகை செய்தார். பஸ் ஸ்டான்ட் இலிருந்து மைக்கலின் அண்ணன் சொன்னதுபோல் இரண்டு தெருவும் ஒரு வலது turnஉம் ஒரு மார்கெட்டும் ஒரு சர்ச் உம் தாண்டி ஒரு நான்கு மாடி கட்டடத்தின் முன்னாள் வந்து நின்றான் ராஜ்.

வெள்ளை பெயின்ட் கறை படிந்து பழுப்பு நிறமாய் இருந்தது. கட்டடத்தின் வெளியே குப்பை ஓர் ஓரமாய் குமிக்கப்பட்டு இருந்தது. படி ஏறி நான்காவது மாடியை எட்டியதும் நேராக நடந்து கடைசியில் இருந்த பூட்டிய கதவின் முன் வந்து நின்றான் ராஜ். இது தான் அவனது அடுத்த வீடு, அடைக்கலம், எல்லாமும் . மதன் சொன்னதுபோல் பக்கத்து வீட்டின் கதவைத் தட்டினான் ராஜ்.

"யாரது?"

"மதனோட friend. உங்க கிட்ட சாவி கேட்க சொன்னான். வீட்ல யாருமில்ல."

பல நிமிடங்களுக்குப் பிறகு காற்று வரும் அளவுக்கு கதவு கொஞ்சம் திறந்தது. ஒரு கை மட்டும் சாவியை நீட்டியது. ஏதோ திருடனிடம் சாவியைக் கொடுப்பது போல் அல்லவா அந்த நபர் நடந்துக்கொண்டார்! சாவியை ஒன்றும் சொல்லாமல் வாங்கிக்கொண்ட ராஜ் வீட்டைத் திறந்தான். வீடு என்பதை விட ரூமை திறந்தான் என்பதே பொருந்தும். அந்த அகல அறை இரு வாரியாக ஒரு துணி தொங்கும் கயிறினால் பிரிக்கப்பட்டு இருந்தது. துணிகளின் ஒரு பக்கம் சமையலறையாகவும் மறு பக்கம் தூங்கும் இடமாகவும் வரையறுக்கப்பட்டன. bag ஐ எங்கே வைப்பதென்று அவனுக்கு தெரியவில்லை, பையினுள் பணம் அல்லவா இருந்தது. சமையல் இடத்தில் இருந்து ஒரு சின்ன பானையை எடுத்து அதில் பணத்தை வைத்துவிட்டு ஒரு தட்டு போட்டு மூடி அதன் மேல் ஒரு டம்ப்ளரையும் வைத்து தண்ணி பானை போல் செட் அப் செய்தான் ராஜ். பானையைப் பார்த்ததும் தன் அறிவை மெச்சினான் அவன். இதற்குள் யாரும் பணம் இருக்குமென்று சந்தேகிக்க மாட்டர். மதன் வந்ததும் உடனே பீரோலில் பூட்டி வைக்க வேண்டும் என நினைத்துக்கொண்டான் ராஜ்.

ஆமாம், மதன் எப்போது வருவது இவன் எப்போது சாபிடுவது குளிப்பது? பக்கத்து வீட்டு கையிடம் கேட்டால் குளிக்குமிடத்தைக் காட்டுமா? பசி தலைக்காட்டியது. மணி எட்டு. சமையலறையில் பாத்திரங்கள் பாச்சைகளுக்கு கூட மிச்சம் மீதி இல்லாமல் சுத்தமாய் இருந்தன. வீட்டில் இருப்பது வேலைக்கு ஆகாதென ராஜ் வீட்டு சாவியை எடுத்துக்கொண்டு தன் பின்னால் கதவைப் பூட்டினான். அப்படி என்ன தான் இருக்கிறதாம் இந்த சென்னையில். பார்த்துடலாம்.

[ ரொம்ப நாள் கழித்து ஒரு அப்டேட். சற்று boring ஆ இருந்தால் மன்னிக்கவும். அப்புறம் என்ன காமெடின்னா நானும் ராஜ் ஓட நிலைமைல தான் இருக்கேன், graduate பண்ணிட்டு வேலை தேடிட்டு இருக்கேன். Freshers are accepted நு சொல்லுவாங்க ஆனா டிகிரி படிக்கும்போதே industryல என்ன நடக்குது, என்ன டெக்னாலஜி யூஸ் பண்றாங்கன்னு அத எப்படி யூஸ் பண்றதுன்னு தெரிஞ்சிருக்கனும். இங்க வெளிநாட்ல எவனும் சொல்லி தரமாட்டான். வேலைய கொடுத்து நம்மள முடிக்க சொல்லுவாங்க, we have to produce output/results. சொல்லிகொடுக்க train பண்ண யாரும் சம்பளம் தர மாட்டாங்க. ]

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top