18. வேலை

"உனக்கு சிகரெட் பிடிக்க வக்கில்ல அதுக்கு நான் என்ன பண்றது," என தெனாவட்டாக முகத்தைத் திருப்பிக்கொண்டு வினோத் பதில் சொல்ல ராஜுக்கு கோபம் தலைக்கேறியது. ஸ்கூல் படிக்கும் வினோத் காலேஜ் படித்த தன்னை மரியாதையின்றி பேசுவதைக் கேட்ட ராஜின் கை ஓங்கியது. யாரும் நடப்பதை சுதாரிக்கும் முன் வினோத் கன்னத்தில் ராஜின் கைரேகை வெடி சத்தத்துடன் பதிந்தது. சுதர்சன் உடனே சுவரிலிருந்து இறங்கி குதித்து மீண்டும் ஓங்கிய அண்ணனின் கையை தடுத்துப் பிடித்தான். சீரிய வினோத்தை மற்ற பசங்களும் பின் தள்ளி தடுத்தனர். சுதர்சன் ராஜை தர தர வென கையைப் பிடித்து கொல்லையிலிருந்து வீட்டுக்குள் இழுத்துச் சென்றான்.

"டேய் விடுடா, அவனுக்கு என்ன திமிரு. டேய் விடு டா!" ராஜ் சுதர்சனின் பிடியிலிருந்து விலக உடனே சுற்றி இருந்த நான்கைந்து பசங்கள் ராஜை மீண்டும் பிடித்தனர். அவனை வலுக்கட்டாயமாக வீட்டினுள் இழுத்து செல்ல வீட்டில் வெற்றிலை பாக்கை மென்றுக் கொண்டிருந்த பெருசுகள் விழித்தனர். சுதர்சனும் மற்ற பசங்களும் ராஜை இழுத்துக்கொண்டு வீட்டிலிருந்து வெளியேறினர். தெருவுக்கு வந்த பின் தான் ராஜை அவர்கள் விடுவித்தனர்.

"அண்ணே விடுன்னே, அதான் ஒரு அடிய போட்டுட்டியல்ல. போதும் விட்டுருன்னே இந்த பிரச்சனைய."

"அவன் பேசுற பேச்சை பார்த்தியல்ல. சிகரெட் புடிக்க வைக்கில்லையாம். ச்சே. அந்த கருமத்த பிடிக்க காரி துப்பனும். படத்த பார்த்துட்டு பெரிய ஆள் மாதிரி காட்டிக்க இந்த கருமத்தை எடுக்குறான். இன்னும் முளைக்கவே இல்ல. "

சுதர்சன் நாசூக்காக அண்ணனை வீட்டை விட்டு தூரமாக அழைத்து சென்றான். மீண்டும் பெரியப்பா வீட்டு கேட் (gate) ஐ கண்டதும் ராஜ் சுதர்சனிடம், "நா இங்கயே நிக்குறே. நீ உள்ள என்ன நடக்குதுன்னு பார்த்துட்டு வா," என தம்பியை வேவு பார்க்க அனுப்பினான். சுதர்சன் வீட்டினுள் அடியெடுத்து வைக்கும் முன்னே சண்முகமும் மகாலட்சுமியும் வீட்டிலிருந்து வெளியே வந்தனர்.

வீட்டில் நடந்த சிறு சண்டையை அறிந்துக்கொண்ட சண்முகம் மகாலட்சுமியும் நிலைமையையும் பெரியப்பா குடும்பத்துடனான உறவையும் குலைக்காது உடனே மீண்டும் தங்கள் வீட்டுக்கு கிளம்ப ஆயுத்தமாய் இருந்தனர். பெரியப்பாவும் அவர்களை வழியனுப்ப வெளியில் வந்ததார். ராஜ் கேட் கிட்டே நிற்பதைக் கண்டு gate வரைக்கும் வந்து புன்முறுவலுடன் "அடிக்கடி வந்துட்டு போங்க " என வழியனுப்பினார்.

பஸ் ஸ்டான்ட் இல் பஸ் வர பத்து நிமிடமும் அதில் ஏறியபின் பஸ் புறப்பட இன்னும் பத்து நிமிடங்களும் ஆகின. இரவு 9 மணி பஸ் எடுக்கலாம் என்ற கணிப்பு இப்போது பொய்யாகி 6 மணி பஸ்ஸில் சண்முகம் குடும்பத்தார் அமர்ந்திருந்தனர். பேருந்து நகர ஆரம்பிக்க காற்று பேருந்தில் உள்ள சண்முகம் குடும்பத்தாரின் கோபத்தை சற்று குளிர வைத்தது. ராஜும் சுதர்சனும் ஒரு சீட்டில் அமர்ந்திருக்க சண்முகமும் மகாவும் அவர்களுக்கு முன்னாள் அமர்ந்திருந்தனர்.

திரும்பி பார்க்காமல் சண்முகம் மகனை கூப்பிட்டார்.

"என்ன பா?" ராஜ் கேட்டான்.

"இனிமே மெடிக்கல் கடைல நிக்காத. பாண்டி பய பத்தாவது படிச்சான் , அங்க வேலைக்கு நிக்குறான். நீ அங்கல்லாம் போகாத. உன்ன எதுக்கு engineering படிக்க வச்சேன். ஸ்கூல் பசங்க கூட சண்ட போடுறான், இதுக்கு தான் வேலைக்கு போகணும்னு என் காத்து பட பேசுனாங்க உங்க பெரியப்பா வீட்டுல."

உடனே மகாலட்சுமி சேர்ந்துக் கொண்டு அவளின் குமுறலைக் கொட்டினாள், "டிகிரி படிச்சவன் ங்குற மரியாதையோட அவங்க வீட்டுக்குள்ள படி எடுத்து வச்ச இப்ப வெளிய போகும்போது வேலையில்லாதவன், வெட்டிப்பய நு பேசுராளுங்க. என் மானம் போச்சு, அதுவும் உங்க அப்பா குடும்பத்துக்கு முன்னாடி."

வினோத் தான் எடுப்பாய் பதில் சொன்னான் என ராஜ்காக சுதர்சன் பதில் சொல்ல , "சும்மா இரு. உங்க அப்பா எதுவுமே பேச முடியாம வந்தாரு, பார்த்தியல்ல?" மகாலட்சுமி தன் கணவனின் மரியாதை குறைந்ததை சுட்டிக் காட்டினாள்.

"பேசியாச்சு, இதோடு விட்டுரு மகா. ராஜ், நீ வேலைய தேடு," அப்பா முடிவாய் சொன்னார்.

aviation engineering கு வேலையை எங்கு தேடுவது. இது என்ன மெடிக்கல் கடையில் நிற்கும் வேலையா, ஊருக்கு ஒரு மெடிக்கல் கடை இருப்பது போல் airfield ஓ manufacturing workshop ஓ இருப்பதற்கு? அவனும் ஊருக்கு வந்ததிலிருந்து யோசித்துக்கொண்டு தான் இருந்தான். வீட்டுக்கும், கிரிக்கெட்கும், STD பூத் கும் என்று லாத்துவதில் மாச்சல் வந்துவிட்டது. ஆனால் வேலையை எப்படி தேடுவது? தன் குடும்பம் இருப்பதோ தஞ்சாவூர். தன் தகப்பனோ கொத்தனார். அவர் ஆசைக்கு படிக்க வைத்துவிட்டார். அவர் ஆசைக்கு இணங்கி படித்தும்விட்டான். ஆனால் இது தான் படிக்கணும் என்று சொன்ன அப்பா நீயே வேலையைப் பார்த்துக்கொள் என்று கூறிவிட்டார். கொத்தனாருக்கு கார்பெண்டர் தெரியும் ஆனால் engineer தெரியுமா? யார்கிட்ட போய் வேலை வாங்குவது?

engineer என்று இன்னும் ஒரு மாதம் சொல்லிக்கொள்ளலாம் பின் ஊரே வேலையில்லா engineer என்று கேலி செய்ய ஆரம்பித்துவிடும். வேலைக்கு எங்கு போவது? யாரைப் பார்ப்பது? என்ன செய்வது? ராஜ் குழம்பினான்.

(கொல்லை= வீட்டின் பின்னால் இருக்கும் backyard.

ஒரு பெண்ணுக்கு குழந்தை இல்லாததும் ஓர் ஆணுக்கு வேலையில்லாத்தும் ஒன்று. சமூகம் கேள்வி கேட்க ஆரம்பித்துவிடும், நமது value கூட பார்க்குற வேலையோ பெற்ற குழந்தையையோ வைத்து தான் தீர்மானிக்கப்படுது.

middle income வர்க்கம் எவ்வளவு தான் நன்றாக படித்தாலும் அவர்களின் வாழ்க்கை கடினம் தான் காரணம் lack of connections and networking with those in power. புது பணக்காரன் மாதிரி, பணம் இருந்தாலும் யாரும் மதிக்க மாட்டாங்க ஏன்னா பரம்பரை பணக்காரன் கிட்ட பணம் மட்டும் இல்ல, நாலைந்து பேரை தெரிந்து வைச்சிருப்பான், நெட்வொர்கிங் இருக்கும். Education is sometimes a lie.)

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top