13. உலக நியதி
அன்று சனிக்கிழமை சாயங்கலாம். வெளியே விண்டர் காலத்தில் உறைந்திருந்த ஆற்றில் ice skating செய்து விட்டு பின் அருகில் இருந்த காபி கடையில் காபியும் dessert உடனும் இருவரும் உட்கார்ந்து இருந்தோம். ஜனனியின் பார்வை கடையின் கண்ணாடி ஜன்னலின் வழியே தெரியும் சிறு குழந்தைகளின் மேல் இருந்தது. உரையாடிக்கொண்டிருக்கும் எனக்கு முதுகை திரும்பி உட்கார்ந்து கொண்டு தான் பதில் அளித்தாள் ஆனால் நான் அதை பொருட்படுத்த வில்லை.
"கடல் தாண்டி காற்றாய் வா
புயலை தாண்டி பறவையாய் வா
மலை தாண்டி மழையாய் வா
கல் தாண்டி வேராய் வா
என் கூட வந்துடு ஜனனி," கையில் இருந்த tissue பேப்பரை ஒரு பூ போல் மடக்கி கொடுத்தேன்.
இப்போது தான் திரும்பி என்னை நோக்கினான், சிரித்தவள், "இந்த பூ கொடுத்தால் நாங்கள் உங்கள் கூட வந்திடும்? சரி, எங்க வரணும்?"
"நீ வருவேண்டு எனக்கு தெரியும்." அவளின் தமிழை நக்கல் செய்தேன், "கூட வந்துடு ஜனனி," இப்போது என் குரல் மெதுவாய் ஒலித்தது.
"என் கூடவே இரு. என்னை கல்யாணம் பண்ணிக்கோ."பல வாரமாக கேட்க பயந்த நான், பதில் எதுவாகினாலும் பரவாயில்லை, மனதிலுள்ளதை கொட்டிவிட்டால் போதுமென கொட்டிவிட்டேன் என் உணர்வுகளை.
ஜனனி தன் கையில் இருந்த காபி கப்பை டேபிளில் வைத்தாள். எங்களிருவரின் நடுவில் இருந்த சின்ன காபி டேபிளில் பாதியை கடந்து என் பக்கம் இருந்த அவளின் கைகள் இப்போது அவளின் எல்லைக்கு பின்வாங்கின. தன் உடலோடு தன் கைகளை கட்டிக்கொள்ள பெருங்கடல் நீண்டது எங்களிடையில். எதற்கும் சலனமடையாத முகம் என் கேள்விக்கு என் கண்களைப் பார்க்க இயலாமல் காபி கப்பை நோக்கின. ஜனனியைப் பற்றி நன்கு அறிந்த நான் அவளின் மௌனத்தைக் கண்டு அச்சம் கொள்ளாமல் நிதானமாய் காத்திருந்தேன்.
"என்ன திடீர்னு?" பெரு மௌனத்தின் பின் அவள் பேச துவங்குகையில் சின்னதாய் ஒரு புன்னகை ஜனனியின் முகத்தில்.
"திடீர்னு இல்ல. கொஞ்ச காலமா தான். உன் மேல இருக்குறது நட்பு மட்டும் தான்னு பொய் சொல்ல விருப்பம் இல்ல."
"அதுக்கென்று உங்களை கல்யாணம் செய்துக்கொள்லனும் என்று கேட்கிறீங்க?" புருவத்தை தூக்கி தெனாவட்டாய் கேட்டாள்.
"அப்போ என் girlfriend ஆ இருந்துக்கோ. I'm ok!" கைகளை விரித்தேன்.
"நமக்கு என்ன சின்ன வயசா? girlfriend boy friend எண்டு இருக்க,"
"அப்போ கல்யாணம் பண்ணிக்கோ." அவளின் கைகளைப் பற்றவேண்டும் என மனம் துடித்தாலும் இத்தருணத்தில் அது சரியில்லை என தோன்ற I simply leaned across the table until I was mere centimeters from her face. "எனக்கு உன்ன பிடிச்சிருக்கு. என்னை கல்யாணம் பண்ணிக்கோ ஜனனி." என் கண்களில் தெரிந்த திடமான முடிவை கண்டு ஜனனியின் முகம் மீண்டும் சலனமடைந்தது.
"ஊர் உலகம் என்ன சொல்லும் ராஜ்?" ஜனனி துக்கம் கலந்த புன்னகையோடு கேட்டாள்.
ஆனால் எனக்கோ அவளின் கேள்வி தேனாய் ஒலித்தது. ஊர் என்ன சொல்லும் என்று கேட்டபோதே அவளுக்கும் என் மேல் இஷ்டம் என்பதை உறுதி செய்துக்கொண்டேன். ஏற்கனவே தெரியும் ஆனாலும் ஒரு confirmation நல்லது தானே;)
"ஊர் உலகம் இங்க நம்ம கூட இல்ல. நீ, நான், ஜப்பான். அவ்வளவு தான். 6 வருஷமா வினோதினிய காதலிக்கும்போது எப்போதும் மனசு நெருடலா இருந்திருக்கு. ஆனா இந்த 6 மாசத்துல உன்கூட பழகியதுல மனசு முழுக்க ஒரு இனம் புரியாத சந்தோசம்."
"But I just got out of a marriage. I can't do this again, at least not so soon." ஜனனிக்கு உண்மையை மட்டுமே கூறி பழக்கம்.
"அப்போ நமக்குள்ள இருக்குற புரிதல் is not special நு சொல்றியா?"
"இல்ல. I have felt that we do have something special but I'm scared to take any new steps now and வீட்டுல இதுக்கு என்ன சொல்லுவாங்கன்னு தெரியல. விவாகரத்து ஆனதால இவ இப்படி திடீர் முடிவு எடுத்திருக்கான்னு தான் பேசுவாங்க"
"நாகரிகம், கூச்சம், உலக நியதி என எல்லாத்தையும் தூக்கி வீசிடு. பயந்துகிட்டெ இருந்தா நம்ம வாழ்க்கை நம்ம சந்தோஷத்த தான் இழக்குறோம். திரும்ப கேட்குறேன், என் கூட வந்துரு ஜனனி."
ஜனனியின் கண்கள் சற்று கலங்கின. எழுந்து அவளின் அருகில் சென்று I was on my knee, looking into her eyes. "வந்துடு,"
ஜனனியின் கைகள் என் கழுத்தை இறுக கட்டியனைத்தன. அவளின் முகத்தை என்னுள் புதைத்துக்கொள்ள சப்தமில்லாமல் கண்ணீர் மட்டும் என் கன்னத்தை நனைத்தது.
And therein started our live-in relationship. அவள் சம்மம்திக்கும் வரை அனுதினமும் கல்யாணம் பண்ணிக்கிறியான்னு கேட்கலாம். ஒரு நித்த்யமே இருக்கிறது அவள் மனதை மாற்ற.
[கவனித்தீர்களா? இது போன்ற சமூகத்தில் ஏற்று கொள்ளப் படாதவை அயல் நாட்டில் தான் நடக்க சுதந்திரம் கிடைக்கிறது. Like how Kangana got to do what she wanted NOT in India but overseas in the movie, Queen, how Sri Devi defied norms in US in English Vinglish. Read more on Sociology and Psychology and you'll know:)
An update after months! I tried writing about Vino and Raj but I didn't like it. Possessiveness என்ற ஒற்றை வார்த்தையில் 6 வருட காதலை ஒத்திவைத்துவிட முடியாது. There is a complexity which I want to show subtly and right now, I don't have the mood or heart to do so. So here's to a happy chapter! There's more to Raj and Janani, they will meet each others' parents etc so wait for more.
Comments are needed:) ]
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top