10. சரிவு
மோனத் திருக்கு தடீ! இந்த வையகம்
மூழ்கித் துயிலினிலே,
நானொருவன் மட்டிலும் - பிரி வென்பதோர்
நகரத் துழலுவதோ?
-பாரதி
--------------------------------------------------------------
ஜனனியுடனான லஞ்ச் மூலமாக அந்த வாரயிறுதியை கழித்துவிட்டேன். இந்த வாரயிறுதிக்கு என்ன செய்வதென யோசித்தபோது தான் இனாபா mountain trekkingகு கூப்பிட்டான். முதன்முறையாக பனி மூடியிருந்த மலையை ஏறுவதில் உள்ளூர ஒரு உற்சாகம், ஒரு நடுக்கம் வெள்ளை வானமும் வெள்ளை நிலமும் ஒன்றோடு ஒன்று கலந்து photographs வேறு விதமாய் காட்சியளிக்கும் ஆனால் ஆபத்துகளும் உண்டு. வெள்ளிக்கிழமை half day leave சொல்லிவிட்டு climbing gearஉடன் இனாபாவும் நானும் ரயில் எடுத்து மலைப் பகுதியை வந்தடைந்தோம். அங்கு ஒரு லாட்ஜில் ஓய்வெடுத்துவிட்டு அடுத்த நாள் சூரியன் உதிக்கும் முன் புறப்பட்டோம்.
பனியில் வழுக்காமல் இருக்க சிறப்பு காலணிகள் இலிருந்து எதிர்த்து வீசும் பனி கண்ணைக் குத்தாமல் இருக்க கண்ணாடியென எல்லாம் அணிந்துக்கொண்டு நானும் இனாபாவும் மலை ஏறினோம். இருவருக்கும் மூச்சு இறைத்தது தவிர வார்த்தை சிக்கனமாய் இறைக்கப்பட்டது. நான் என்னுடைய சிந்தனைகளில் மூழ்கியிருந்தேன். கால் மட்டும் வேலை புரிய மனம் வேண்டாதவற்றை அதுவும் யோசிக்க வேண்டாம் என்று வேண்டியவற்றை நோக்கியே பயணிக்கும்.
வாழ்க்கையில் snowவை ஜப்பான் வந்து தான் முதன்முறை பார்த்தேன். கோயம்புத்தூர் வெயிலில் கருகியவனுக்கு ஒரு முறை ஊட்டி அழைத்தது, அதுவே குளிரின் உச்சம் எனக்கு . பணிக்காற்றுக்கே அவ்வளவு ஆவல். கல்லூரியின் இரண்டாம் ஆண்டு. முதல் ஆண்டில் ஆட்டு மந்தையிலிருந்து வழி தவறிய ஆடுகள் போல் திண்டாட்டம் ஆனால் இரண்டாம் ஆண்டில் gang வகையறாக ஜாலியாய் நேரத்தை கழித்தோம். இரண்டாம் ஆண்டின் எக்ஸாம் களுக்குப் பின் aviation engineering இல் தான் குறைந்த மாணவர்கள் இருக்கிறார்கள் என எங்கள் வகுப்பை மட்டும் ஊட்டிக்கு சுற்றுலா அழைத்து சென்றனர். வினோதினியும் கூட வந்தாள்.
முதலில் ரயிலில் தான் பயணித்தோம். பிறகு, ஊட்டி மலையை ஏற பஸ்ஸில் ஏறினோம். ரயிலில் coachஇல்அனைவரும் சுற்றியிருந்ததால் கிடைக்காத தனிமை பஸ்ஸில் கிட்டியது எனக்கும் விநோதிநிக்கும். முன்னாள் இருந்த சீட்டுகள் எங்களை மறைக்க, professorsஐ நாங்க பார்த்துக்குறோம் என நண்பர்கள் ஆதரவு தர, இருவரும் பக்கத்து பக்கத்து சீட்டில் அமர்ந்தோம். முதல் அரை மணி நேரம் நன்றாக தான் போனது. கொஞ்சம் வெட்கமும், கொஞ்சம் தயக்கமும் அவற்றை மறைக்க மொக்கை ஜோக் உம் என பஸ் மலை ஏறியது. ஆனால் அரை மணி நேரத்துக்குப் பிறகு வினோதினியின் முகம் மாறியது.
"வாந்தி வர்ற மாதிரி இருக்கு ராஜ்," அவள் தயக்கத்துடன் கூறினாள்.
hairpin loopஇல் பஸ் வளைவது அவளுக்கு ஒத்துக்கொள்ளவில்லை என புரிந்தாலும் பஸ்ஸிலிருந்து இறங்கவா முடியும்? ஊட்டியின் உச்சிக்கு நடந்தா போகமுடியும்? காலேஜ் பையனுக்கு என்ன தெரியும் வாந்தியை பற்றி? உடனே பின்னாடி உட்கார்ந்து இருந்த பெண் கிட்ட விஷயத்தை சொன்னேன். அவளும் பேக்கு மாதிரி முழித்தாள்.
"ராஜ், ஒரு மாதிரி குமட்டுது," வினோதினி கையால் வாயைப் பொத்தினாள்.
உடனே, என் bagஇல் snacks வாங்கிய பையை எடுத்தேன். அவசரத்தில் பிளாஸ்டிக் பையிளிருந்தவற்றை கீழே கொட்டிவிட்டு பையை அவளிடம் கொடுத்தேன். கொடுத்த நேரம் வினோதினி வாந்தியெடுத்து விட்டாள். கையில் இருந்த கர்சிப்பால் வாயைத் துடைத்தாள். வாட்டர் பாட்டிலையும் அவளிடம் கொடுத்தேன். சில நிமிடங்கள் கழித்து, "வேணும்னா என் தோள்ள சாய்ஞ்சி படுத்துக்கோ, vomiting sensation குறையும்," என சொல்ல அவள் அவ்வாறே சாய்ந்துக்கொண்டாள்.
"முதல் தடவ நம்ம வெளிய டூர் போறது இப்டி ஆகிடுச்சுல்ல,"
"என் தோள்ள நீ தலை சாய்ச்சு இருக்குறது எனக்கு லக் தான?"
தலையை நிமிர்த்தி போலி கோபத்துடன் முறைத்தாள்.
"திரும்ப படுத்துக்கோ, இல்லைன்னா ஓமட்டும்,"
நான் சொல்வதை நம்பி அவளும் உடனே என் தோள் மீது தலையை மீண்டும் சாய்த்துக்கொண்டாள். அவளின் கூந்தல் கன்னத்தை இனிமையாய் வருடியது. ஏதோ ஒரு வழியா சமாளிச்சாச்சு என நினைத்துக்கொண்டு ஊட்டியின் பனிக்காற்றை பெருமூச்சுடன் உள்வாங்கினேன்.
கதிரவன் மறைந்த பிறகு தான் பஸ் நாங்கள் தங்கவேண்டிய ஹோட்டலில் வந்து நின்றது. பெண்களுக்காக நான்கு ரூம்கள் புக் பண்ணிவைக்கப்பட்டிருந்தன. பசங்களுக்கு ஆறு ரூம்.
எல்லோரும் டின்னர் போவதற்காக fresh up ஆகிவிட்டு ஹோட்டலின் வளாகத்தில் கூடினர். ஆனால் விநோதினியை மட்டும் காணவில்லை. டிராவல் அசதியில் ரெஸ்ட் எடுக்கிறேன் என்று சொன்னவள் அதோடு தூங்கிவிட்டாள். இது அவளின் தோழி சொல்லி தான் தெரிந்தது. நண்பர்களோடு சேர்ந்து செல்வதால் அவளின் இல்லாமை அவ்வளவு புலப்படவில்லை என்பதே உண்மை.
ஊட்டி பனியில் ஐஸ் கிரீம் சாப்பிடுவது பெண்களுக்கே உரிதான முட்டாள்தனமான ஆசை போல. டின்னர் முடிந்ததும் ஹோட்டலுக்கு நடந்து வருகையில் அங்கு நின்ற ஐஸ் கிரீம் வண்டியை பார்த்துவிட்டு முன்னாள் நடந்து வந்த பெண்கள் நின்றுவிட்டனர். பாதுகாப்புக்காகவும் சைட் அடிப்பதற்காகவும் பின்னால் நடந்து வந்த நாங்களும் ஐஸ் கிரீம் வண்டியருகே attendance போட்டோம்.
ஐஸ் கிரீம் ஐ ஒரு கையில்வாங்கிவிட்டு ஒவ்வொருவரும் அதற்கு காசு கொடுக்க walletஐ மறு கையால் சிரமப்பட்டு திறக்க முயற்சித்தனர். உடனே, "இருங்க. எல்லாருக்கும் நானே கொடுக்குறேன்." என பசங்களுக்கும் பெண்களுக்கும் சேர்த்து நானே காசை கொடுத்துவிட்டேன். சின்ன ஐஸ் கிரீம் ஆனால் அவ்வளவு சந்தோசம். ஐஸ் கிரீம் கு பணம் கொடுப்பது பெரிய விஷயமாய் எனக்கு தெரியவில்லை. ஆனால் இதற்கு எல்லாம் சேர்த்து வைத்து பூகம்பம் வெடித்தது காலையில்.
காலையில் வெளியே கிளம்புவதற்காக எல்லோரும் ஹோட்டல் வளாகத்தில் கூடினர். அப்போது தான் விநோதினியைக் காண முடிந்தது.
"நைட் உன் friend கிட்ட பரோட்டா பார்சல் பண்ணி அனுப்புனேனே. சாப்டியா?" அக்கறையுடன் வினவினேன்.
வினோதினி பதில் அளிக்கவில்லை. முகம் கொடுத்து பேசுவதை விட முகத்தைக் கூட அவள் காட்டவில்லை. தள்ளி நின்று மற்ற பெண்கள் கூடியிருந்த கூட்டத்தின் நடுவில் போய் நின்ருக்கொண்டாள். நான் விடவில்லை. excuse me சொல்லி கூட்டத்தின் நடுவில் அவளருகில் வந்து நின்றேன்.
"சாப்டியா இல்லையா?"
"இப்ப என்ன தெரியனும்? நான் சாப்டனான்னு தெரியனும். அதான? சாப்டேன்."
"ஏன் இப்டி எரிஞ்சி விழுற?"
"ஆமா. நான் எரிஞ்சி தான் விழுறேன். என்னாலமத்த பொண்ணுங்க மாதிரி வழிஞ்சு விழலாம் முடியாது ."
நான் பேசுவதற்குள் வினோதினி திரும்பி பார்க்காமல் நகர்ந்து விட்டாள். பக்கத்தில் நின்று எங்களை கவனித்த அவளின் தோழி தான் காரணத்தை கூறினாள். நேற்று எல்லா பெண்களுக்கும் ஐஸ் கிரீம் வாங்கி கொடுத்தது தான் பிரச்சனையாம்.
ஊட்டி மலையில் இருந்த viewing towerகு செல்ல எல்லோரும் பஸ்ஸில் ஏறினர். நான் வினோதினியின் சீட் கு வந்து பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்தவளிடம், "நிர்மலா, வேற சீட்ல..."
நிர்மலா சிரித்தாள், "புரியுது புரியுது."
வினோவின் பார்வை ஜன்னலையே நோக்கியது. ஒரு முறை கூட பஸ் உள்ளே பார்கவில்லை. இது சரிபட்டு வராது என தெரிந்து நானே துவங்கினேன்.
"ஐஸ் கிரீம் கு காசு கொடுத்தது ஒரு குத்தமா?"
"இல்ல. நான் அங்க இல்லாத போது நீ காசு கொடுத்தது தான் பிரச்சனை."
"வினோ..."
" நீ girls கு pay பண்ணி நல்லவன்னு பெயர் எடுக்க தேவை இல்ல. ஏற்கனவே உன் கிட்ட எல்லாரும் நல்லா தான் பேசிட்டு இருக்காளுங்க, நல்லா தான் பார்க்குறாங்க."
"ஆனா நா உன்ன மட்டும் தான பார்க்குறேன்"
"Stop it Raj. நீ எல்லார் கிட்டயும் சிரிச்சு பேசுறது எனக்கு பிடிக்கல. நீ அவளுங்க யார்கிட்டயாவது உட்கார்ந்துக்கோ. என் கிட்ட உட்காராத. நீ pay பண்ண girls யார் கூடயாவது கொஞ்சி பேசிக்கோ. என் கிட்ட பேசாத."
"Raj!" இனாபா மூன்று அடி தூரத்திலிருந்து குரல் கொடுத்தான். மனம் இறந்த காலத்தை புதைத்து விட்டு அவனை நோக்கியது. இனாபா ஏதோ சொல்ல ஆனால் அடித்த பனி காற்றில் அவனுடைய சொற்கள் காற்றில் கரைந்து என் செவிகளுக்கு எட்டவில்லை. ஒன்னும் கேட்கல என்று செய்கையில் சொன்ன அத்தருணம் திடீரென கால் சறுக்கியது. அந்தரத்தில் பறப்பது போல் ஒரு உணர்வு. புவி ஈர்ப்பு விசை என்னை இழுக்க பனிபோல் மலையிலிருந்து சரிந்துக்கொண்டிருந்தேன் நான். கைகள் fall ஐ தடுத்து நிறுத்த நிலத்தைப் பிடித்தன ஆனால் பனி விரல்களில் இருந்து நழுவியது. என காதலும் இப்படி தான் நான் அறிவதற்குள் என் control இன்றி சரிந்ததோ?
[ ஓடி விளையாடு பாப்பா மட்டும் தான் எனக்கு ஸ்கூல் இல் சொல்லிக்கொடுத்தாங்க பாரதியார பத்தி ஹாஹா! வெளிநாட்டு ஸ்கூல் means அவ்ளோ தான். சமீப காலமா ஒரு interestனால I have been reading English translations of his poems. http://asparkoffire.blogspot.sg , where an enthusiastic writer has been putting up translations which has been a big help. I'm sure you guys know more about bharathiyaar than I ever will:D ]
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top