மழைச்சாரல்
குடை என்றதும் நினைவுக்கு வருவது மழை..!மழை என்றதும் நினைவுக்கு வருவது நீ...!
ஒருவரின் உண்மையான அன்பை உணரும் தருணங்களில் உள்ளத்தின்மகிழ்ச்சி கண்களில் நீராய் கலங்கி நிற்கிறது..!
தன்மீது விழும் பனித்துளிகளைபூக்கள் ஒருபோதும் பாரமென நினைப்பதில்லை..!
மார்கழி மாதத்தின் விடிகாலைப் பொழுதில் மலரும் மலர்போல..உன் அன்பு அத்தனை புதுசு..அத்தனை அழகு..!
யாரைக்கேட்டும் மலர்கள் மலர்வதில்லைநேசம் பிறப்பதும் பூக்களைப் போலவே..யாருக்கும் தெரியாமல் சட்டென மலர்ந்து விடுகிறது...!
சின்ன வயதில் என்னவென்றே புரியாமல் மனப்பாடம் பண்ணிய திருக்குறள்கள் சில இன்னும் ஞாபகத்தில் இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது...!
எறும்புக்கூட்டம் ஒரே வரிசையில் அங்கே இங்கே நகராமல் போவதுபோலஎன் நினைவுகளும் உன் பின்னோடு ஒரே கோட்டில் செல்கிறதே..!
கல்லும் கனியாகும்புல்லும் பூவாகும்என்னோடு நீ இருந்தால்..!
மனதில்கொண்ட எண்ணங்களை பாசாங்கு இல்லாமல் நேர்மையாகவும் நாகரீகமாகவும் வெளிப்படுத்தும்போது,மாற்றுக்கருத்து கொண்டவரும் ஈர்த்துவிடுகிறார்.....!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top