கனவு


ஒருவேளை உணவும், குடிக்க தண்ணீரும் போதும், அண்ணா நூலகத்தில் படித்தபடியே சில வருடங்கள் வாழவேண்டும் என்ற பெரும் கனவு எனக்கு உண்டு....! 

இழைக்கப்பட்ட துரோகத்தைக் கூட வன்மமில்லாமல், சிறு புன்னகை துணைகொண்டு கடந்து விட்டீர்களைனில், உங்களை விட வலிமையானவர் என யாருமில்லை....!

கற்றுக்கொள்ள வேண்டுமெனில் இயல்பாய் இருப்பவர்களை தேர்ந்தெடுங்கள்., திட்டமிட்டு வாழ்பவர்களை வேண்டாம், அவர்கள் கடிகாரம்போல, சுவாரஸ்யமற்றவர்கள்...!

எனக்கு கிடைக்காதவை எல்லாம் என் மகன்/மகளுக்கு கிடைக்க வேண்டும் என்று போராடும் சாதாரணன்....!

சந்தோசமான மனிதன், புத்திசாலியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை...!

திறமை உள்ளவனோடு மோதுகையில் இருக்கும் திறமையே போதுமானதாகிறது, இந்த கிறுக்கன்களுடன் மோதும்போதோ பெரும்கிறுக்கனாக மாற வேண்டி இருக்கிறது...!

 

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #romance