36 தேனிலவு
36 தேனிலவு
மிகவும் சோகமாக, வரவேற்பறையில் அமர்ந்திருந்தான் வசீகரன். கோயிலுக்கு செல்ல தயாராகி வந்த ரத்னா,
"நான் கோயிலுக்கு போய்ட்டு வரேன்" என கூறி, அவன் சோகமாக அமர்ந்திருப்பதை பார்த்து அருகில் வந்தார். அவரை ஒரு வேதனை பார்வை பார்த்தான் வசீகரன். ரத்னாவால் புரிந்துகொள்ள முடிந்தது, அவன் எதோ மனவேதனையில் இருக்கிறான் என்பதை.
"என்ன ஆச்சு? எதுக்காக நீ எவ்வளவு சோகமா இருக்க?"
"என்னை மன்னிச்சிடுங்கம்மா. என்னால, உங்க மருமகளுக்கு எதிரா எதுவுமே செய்ய முடியல"
"நீ எதுக்கு அவளுக்கு எதிரா எதுவும் செய்யணும்?"
"ஏன்னா, அவ இந்த வீட்டைவிட்டுப் போகணும்னு விரும்புறா. அவளுக்கு இங்க இருக்கிறதுல விருப்பம் இல்லயாம்"
அவனையே பார்த்துக் கொண்டிருந்த ரத்னாவின் முகம் மாறிப் போனது. அவர் முகம் சலனமற்று காணப்பட்டது. அவரைப் பார்த்து வசீகரன் குழம்பிப் போனான். ஒரு உள்ளுணர்வு உணர்த்த, அவன் திரும்பிப் பார்த்தான். தன் கைகளை கட்டிக் கொண்டு, ஐஸ்வர்யா நிற்பதைப் பார்த்த உடன், அவனுக்கு திடுக்கென்று போனது.
"இப்ப, நான் சொன்னதை நீங்க நம்புறீங்களா, ஆன்ட்டி? எங்க ரெண்டு பேரையும் இந்த வீட்டைவிட்டு நீங்க போக சொன்னதா, என்கிட்ட சொன்னாரு. நான் இங்க இருந்து போக விரும்புறதா, உங்ககிட்ட சொல்றாரு."
"ஆனா, இவன் ஏன் இதெல்லாம் செய்றான்னு எனக்கு ஒண்ணுமே புரியல" என்றார் ரத்னா.
தன் தலையை வெறுப்போடு கோதிவிட்டான், அவனுடைய திட்டம் பலிக்காமல் போனதால். மாமியாரும், மருமகளும் அவனையே உற்று பார்த்துக் கொண்டிருந்தார்கள், பதிலை எதிர்பார்த்து.
"நீங்க ரெண்டு பேரும், இதைப் பத்தி, ஏற்கனவே பேசிட்டிங்களா?" என்றான்.
இருவரும் *ஆமாம்* என்று தலையசைத்தார்கள்.
"எதுக்குடா இந்த வேலை செஞ்சுகிட்டு இருக்க? எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல பிரச்சினையை ஏற்படுத்த பாக்குறியா?"
"ஆமாம்.... அப்படியே நீங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுட்டாலும்... எனக்கு வாழ்க்கையே வெறுத்துப் போச்சு. என் பொண்டாட்டி தான் என்கிட்ட சண்டை போட மாட்டேங்குறான்னு பார்த்தா, நீங்க ரெண்டு பேரும் மாமியார்-மருமகள் இலக்கணத்தையே மாத்திட்டீங்க. ஒரு சண்டை இல்லை, சச்சரவு இல்லை, பொறாமை இல்லை, இதெல்லாம் ஒரு குடும்பமா? சந்தோஷமா இருந்து இருந்து எனக்கு போரடிச்சுப் போச்சு. கொஞ்சமாவது, அப்பப்ப, ஏதாவது சண்டை போட்டீங்கன்னா தானே, எனக்கும் கொஞ்சம் சுவாரசியமா இருக்கும்.?"
ரத்னாவும், ஐஸ்வர்யாவும், *இவனுக்கு என்ன பைத்தியம் பிடித்து விட்டதா?* என்பது போல ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
"உங்களுக்கு பிரச்சனை தானே வேணும்? இருங்க, உங்களுக்கு பிரச்சனைனா என்னன்னு நான் காட்டுறேன்" என்று கூறிவிட்டு, அவன் கழுத்தை நெரிக்க போனாள் ஐஸ்வர்யா. அவள் கையை தட்டி விட்டு அங்கிருந்து ஓட ஆரம்பித்தான் வசீகரன்.
"ஆன்ட்டி, இவரை பெத்திங்களா, இல்ல டிசைன் பண்ணிங்களா? இப்படி ஒரு ஆளை நான் பார்த்ததே இல்ல" என்றபடி அவனை துரத்த ஆரம்பித்தாள் ஐஸ்வர்யா.
அந்தக் கேள்வியைக் கேட்டு, சிரித்தபடி கோவிலுக்கு கிளம்பிச் சென்றார் ரத்னா. ஐஸ்வர்யா துரத்த, அவன் அறைக்குள் சென்றான் வசீகரன். அவள் உள்ளே நுழைந்ததும், கதவை தாளிட்டு, அவள் ஓடாத வண்ணம், இருபுறமும் கையை வைத்து மடக்கி கொண்டான்.
"உங்களோட சேட்டை, அளவுக்கு மீறி போயிகிட்டு இருக்கு"
"அதனால தான் இப்ப நீ இங்க என் கூட இருக்க"
அவன் வார்த்தைகளை புரிந்து கொண்டு, அவனை பிடித்து தள்ளுவதற்கு முன், அவளை இறுக்கமாக பற்றிக்கொண்டான் வசீகரன்.
"என்ன இது? ஆன்ட்டி என்ன நினைப்பாங்க?"
"அம்மா தான் வீட்ல இல்லயே" என்று கண்ணடித்தான்.
"ஓ... நோ... "
"ஓ... எஸ்"
"என்னைப் போக விடுங்க, வசி"
"ஏன்?" என்றான் மெல்ல அவள் அருகில் வந்து.
"ஏன்னா, நான்...."
அவன் சட்டையை பற்றியிருந்த அவள் பிடி இறுகியது.
"ஏன்னா... நீ?"
"நான் போகணும்" என்றாள் அவன் கழுத்தை கட்டிகொண்டு.
"போகணுமா?"
"வசி... "
"ம்ம்ம்"
அவள் கண்களை மெதுவாக மூடினாள்.
"என்னை பாரு"
அரைமயக்கத்தில் இருப்பவள் போல, கண்களை திறந்து அவனை பார்த்தாள். அன்பாய் இதழ் பற்றி, அழகிய முத்தம் பரிமாறிக் கொள்ளப்பட்டது. இப்பொழுது, ஐஸ்வர்யா இந்தக் கலையில் தேறிவிட்டாள்.
தாம்பத்திய மழையில் இருவரும் நணைந்த பிறகு, அவளை கண்ணெடுக்காமல் ரசித்துக் கொண்டிருந்தான் வசீகரன் சிரித்தபடி.
"எதுக்காக என் பின்னாடியே சுத்திகிட்டு இருக்கீங்க?" என்றாள் ஐஸ்வர்யா.
"என் பொண்டாட்டி இவ்வளவு அழகா இருந்தா, நான் என்ன செய்ய முடியும்? என்னை என்னால கட்டுப்படுத்தவே முடியல. ஆனா, என்னை நான் ஏன் கட்டுபடுத்தணும்? வாழ்க்கை வாழத் தானே?"
"தத்துவமா?"
"ஆமாம். ஆனா, நீ ஏன் என்னை தடுக்கல?" அவள் நெற்றியை, தன் நெற்றியால், செல்லமாய் முட்டியபடி கேட்டான்.
"ஏன் தடுக்கணும்? வாழ்க்கை வாழத் தானே?" என்றாள் பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு.
அவள் கூறிய பதிலைக் கேட்டு, வாயைப் பிளந்தவன்,
"இது உண்மையிலேயே நீ தானா, மஹாகாளி?"
"ஆமாம், மகா காளியோட புருஷா"
இருவரும் மனம் விட்டு சிரித்தார்கள்.
ஏஆர்வி கம்பெனி
தனது அறையில், இங்கும் அங்கும் தவிப்போடு உலவி கொண்டிருந்தாள் ஐஸ்வர்யா. அவளுடைய பிரசன்டேஷனால் கவரப்பட்ட பிரென்ச் கம்பெனி, அவர்களுக்கு அந்த டீலை வழங்கியிருந்தது. அந்த டீலின் படி, வசீகரன் ஃப்ரான்ஸ் செல்ல வேண்டும். அவனை விட்டுப் பிரிந்து இவள் எப்படி இருக்க முடியும்? வசீகரன் மகிழ்ச்சியோடு ஓடி வருவதைப் பார்த்தாள்.
"ஐஷு, உன்னால தான் நமக்கு இந்த பெரிய டீல் கிடைச்சிருக்கு" என்றான் சந்தோஷமாக.
தனது சோகத்தை மறைத்துக் கொண்டு, சிரித்தாள் ஐஸ்வர்யா.
"இன்னும் மூனு நாளில், ஃபிரான்சில் ஃபைனல் செட்டில்மெண்ட்..." அவளுடைய சோகமான முகத்தை பார்த்து, சொல்ல வந்ததை சொல்லாமல் நிறுத்தினான்.
"எனக்கு தெரியும்... நீங்க பிரான்சுக்கு போகணும்."
"ஆனா, ஐஷு..."
"பரவாயில்ல வசி, என்னால புரிஞ்சுக்க முடியுது"
அவள் கையை பிடித்து இழுத்து, அணைத்துக் கொண்டு,
"நீ ரொம்ப ஸ்வீட்" என்றான்.
தன் உணர்வுகளை வெளியில் காட்டிக் கொள்ளாமல், அவள் அவனை அணைத்துக் கொண்டாள்.
"இந்த சந்தோசமான விஷயத்தை அம்மாகிட்ட சொல்லி கொண்டாடலாம்"
சரி, என்று ஐஸ்வர்யா தலையசைக்க, அவர்கள் பார்க்கிங் லாட்டை நோக்கி சென்றார்கள். அடுத்த நாற்பதாவது நிமிடம், அவர்கள் அன்பு இல்லத்திற்குள் நுழைந்தார்கள்.
தனது மருமகளை, சந்தோஷமாய் அணைத்துக் கொண்டார் ரத்னா. அவரிடமிருந்து ஆசீர்வாதத்தை பெற, குனிந்த ஐஸ்வர்யாவை தடுத்து நிறுத்தினார் ரத்னா.
"உன்னை நெனச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு. உன்னால தான் நம்ம கம்பெனிக்கு இவ்வளவு பெரிய டீல் கிடைச்சிருக்கு"
"தேங்க்யூ, ஆன்ட்டி"
"நாளைக்கு நம்ம ஷாப்பிங் போய், உனக்கு தேவையானதை எல்லாம் வாங்கிட்டு வரலாம்"
"அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் ஆன்ட்டி. நான் என் கடமையைத் தானே செஞ்சேன்...?"
"ஃபிரான்சுக்கு எடுத்துட்டு போக, எதுவும் வேண்டாம்மா உனக்கு?"
"ஃபிரான்ஸுக்கா?" என்று கேட்ட ஐஸ்வர்யாவை, குழப்பத்துடன் பார்த்தார் ரத்னா. அதே குழப்பத்துடன், அவள் வசீகரனை பார்க்க, அவன் சிரித்துக் கொண்டு நின்றிருந்தான்.
"அவ தான் ஃபிரான்சில் பிரசன்டேஷன் கொடுக்க போறான்னு நீ ஐஸ்வர்யா கிட்ட சொல்லலயா?"
"அவ எங்க என்னை சொல்ல விட்டா? என்னை ஃபிரான்சுக்கு தனியா அனுப்பி வைக்கிறதுல, ரொம்ப மும்முரமா இல்ல இருந்தா? நானில்லாம அவ தனியா இங்க என்ஜாய் பண்ண நினைக்கிறான்னு நினைக்கிறேன்"
"என்ன சொன்னீங்க?" என்றாள் ஐஸ்வர்யா பல்லை கடித்துக்கொண்டு.
"பின்ன என்ன? நான் சொல்லி முடிக்கிறதுக்கு முன்னாடி, நீயாவே ஒரு முடிவுக்கு வந்துட்டு, என்னமோ சீரியல் ஹீரோயின் மாதிரி ஓவர் ஆக்டிங் பண்ற"
"உங்களுக்கு எல்லாமே புரிஞ்சு இருந்தும், என்னை சமாதானப்படுத்தாம, டீஸ் பண்ணிங்களா?"
"அப்படி செய்யறது தான் எனக்கு பிடிக்குமே..."
"ஆன்ட்டி, அவருக்கு ஏற்படப் போற டேமேஜூக்கு நான் பொறுப்பில்ல"
"அப்படியே டேமேஜ் ஆனாலும், நீ தான் அவனுக்கும் மருந்து போட போறே" என்றார் ரத்னா சிரித்துக்கொண்டே.
ஐஸ்வர்யா, ஏதோ சொல்ல வர, அவளை தடுத்து நிறுத்தி,
"கொஞ்சம் இரு... நான் கிளம்பறேன். அதுக்கு அப்பறம், நீ என்ன செய்யணுமோ செஞ்சுக்கோ. நான் உனக்கு காபி அனுப்புறேன்...." சற்றே நிறுத்தியவர்
"இப்ப இல்ல, கொஞ்ச நேரம் கழிச்சி" என்று கண்ணடித்துவிட்டு சென்றார்.
வசீகரனை முறைத்துக்கொண்டு ஐஸ்வர்யா நிற்க, அவள் கையைப் பற்ற அவன் எத்தனித்த போது, தன் கையை உதறினாள் ஐஸ்வர்யா. அவள் கையை கெட்டியாக பிடித்து இழுத்துக் கொண்டு, தன் அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தான் வசீகரன்.
"என் கையை விடுங்க"
"எனக்கு ஆர்டர் பண்றத நிறுத்து"
அறைக்கு வந்ததும் அவனை பார்க்காமல் எங்கோ பார்த்துக்கொண்டு, கையை கட்டிக்கொண்டு கோபமாய் நின்றாள், ஐஸ்வர்யா.
"கோவமா இருக்கியா?"
ஆமாம் என்று தலையசைத்தாள்.
"அப்போ என்னை கட்டிப்பிடிக்க மாட்ட?"
மாட்டேன் என்று தலையசைத்தாள்.
"அப்புறம்?"
"நான் கோபமா இருக்கும் போது, கேள்வி கேட்காம, என்னை சமாதானப் படுத்தணும்"
"நான் சமாதானப்படுத்த ஆரம்பிச்சா, நீ இந்த ரூமைலேயே நாள் முழுக்க இருக்க வேண்டியது தான்"
"என்கிட்ட வந்தீங்க, எனக்கு கெட்ட கோவம் வரும். பிரான்ஸ் போய் சேர்ற வரைக்கும், இப்படியே தான் நீங்க இருக்கணும்"
"என்னது?" என்று அதிர்ந்தான் வசீகரன்.
"இது தான் உங்களுக்கு பனிஷ்மென்ட், என்னை டீஸ் பண்ணதுக்கு..."
"இது சீட்டிங். நாற்பது நிமிஷத்துக்காக, மூனு நாளா?"
"ஆமாம்"
"பாக்கலாம்"
"அப்படின்னா?"
"ரெண்டு நாள், நீ என் கூட இந்த ரூம்ல தானே இருந்தாகணும்?"
"அதனால?"
"உனக்கு தெரியாதா, என்ன நடக்கும்னு?"
தன் சிரிப்பை மறைத்த ஐஸ்வர்யாவால், வெட்கத்தை மறைக்க முடியவில்லை.
"நான் கெஸ்ட் ரூமில் தங்க போறேன்"
"இதுல இருந்தே தெரியுது, உன்னால என் முன்னாடி நிக்க முடியாதுன்னு"
"போதும் நிறுத்துங்க"
"நீ தான ஆரம்பிச்ச? அது இருக்கட்டும், நான் உன்னை விட்டுட்டு தனியா போவேன்னு நீ எப்படி நெனைச்ச? போன தடவை, உன்னை தனியா விட்டுட்டு போனப்ப, நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன்னு உங்ககிட்ட நான் சொன்னேனே... "
"அத நெனச்சு தான் நானும் அப்செட் ஆயிட்டேன். என்னால உங்களை விட்டுட்டு இருக்க முடியாது"
"அது நடக்க போறதும் இல்ல. நான் எங்க போனாலும், உன்னை கூட்டிகிட்டு தான் போவேன்"
அவளை அழகாய் அணைத்துக்கொண்டான் வசீகரன்.
"நம்ம திரும்பி வர, ரெண்டு மாசம் ஆகும்"
"ஆனா, அது ஐம்பது நாள் காண்ட்ராக்ட்னு கேள்விப்பட்டேனே?"
"கடைசி பத்து நாள், நம்மளோட ஹனிமூன். நம்ம சுவிசர்லாந்து போறோம்"
"இத எப்ப பிளான் பண்ணிங்க?"
"உன்னோட சோகமான முகத்தை பார்த்தப்போ"
அதைக் கேட்டு களுக்கென்று சிரித்தாள் ஐஸ்வர்யா.
அடுத்த இரண்டு மாதங்கள், அவர்கள் வாழ்வில் மறக்க முடியாத நாட்களாக மாறின. ஒருவர் உதவியுடன், மற்றொருவர், அந்த ஃப்ரான்ஸ் டீலை வெற்றிகரமாக முடித்துவிட்டு, சுவிட்சர்லாந்து சென்றார்கள். மிகவும் பரபரப்பான நாட்களை கூட, அனுபவித்து கொண்டாடுவான் வசீகரன். அப்படியிருக்கும் போது, அவனுடைய தேனிலவை பற்றி கேட்கவா வேண்டும்? அலுவலகம் இல்லை, கோப்புக்கள் இல்லை, வியாபார ரீதியான சந்திப்புகள் இல்லை, அவனுடைய அழகான மனைவியும், சந்தோஷமும் மட்டும் தான் அவனுடன் இருந்தது.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top