35 நன்றியறிதல்

35 நன்றியறிதல்

அன்பு நிலையம்

ஐஸ்வர்யா, சமையலறையில் ரத்னாவிற்கு உதவி செய்து கொண்டிருந்தாள். வசீகரன் உள்ளே நுழைவதை பார்த்து அவள் பெருமூச்சுவிட்டாள். ரத்னா களுக் என்று சிரித்தார். அவன் ஐஸ்வர்யாவை நோக்கி வர, ஐஸ்வர்யாவோ, ஓடிச்சென்று ரத்னாவின் பக்கத்தில் நின்று கொண்டாள்.

"நான் இப்ப வரேன்" என்று கூறிவிட்டு, ரத்னா அங்கிருந்து கிளம்ப நினைக்க,

"ஆன்ட்டி, இந்த மாதிரி செய்யாதீங்க. முதல்ல, அவர இங்கிருந்து போக சொல்லுங்க" என்றாள்.

"நான் ஏற்கனவே சொல்லிட்டேன். உங்க விஷயத்துல நான் வரமாட்டேன். நீயாச்சு உன் புருஷன் ஆச்சி."

சிரித்தபடியே அங்கிருந்து சென்றார் ரத்னா. ஐஸ்வர்யா, இடுப்பில் கையை வைத்துக் கொண்டு, கோபப்பார்வை பார்க்க, அவளைப் பார்த்து வெற்றிச் சிரிப்பு சிரித்தான் வசீகரன்.

"என்ன வேலை இது? ஏன் எப்ப பார்த்தாலும் என் பின்னாடியே சுத்திகிட்டு இருக்கீங்க? கொஞ்ச நேரம் முன்னாடி வரைக்கும், நான் உங்க கூட தானே இருந்தேன்?" என்றாள் அலுப்புடன்.

"என்ன பண்றது? நான் இந்த மாதிரி ஏதாவது செய்யும் போது. தான், என்னோட பழைய கோவக்கார ஐஸ்வர்யாவை பாக்க முடியுது"

"அப்படின்னா?"

"நான் அந்த பழைய ஐஸ்வர்யாவை ரொம்ப மிஸ் பண்றேன்... பல்லை கடிச்சுக்கிட்டு, என்னை கோவமா பார்க்கிற, அந்த அழகை நான் ரொம்ப மிஸ் பண்றேன்" என்றான் சோகமாக.

களுக் என்று சிரித்தபடி கண்களை சுழற்றினாள் ஐஸ்வர்யா.

"உனக்கு தெரியுமா *நல்ல பொண்ணு அவதாரம்* உனக்கு சுத்தமா பொருந்தவே இல்ல. ரொம்ப போரடிக்குது"

"ஓ.. அப்படியா? அப்படின்னா, முதல்ல நான் ப்ளான் பண்ணி வச்சிருந்தா மாதிரி, எங்க அம்மா வீட்டுக்கு கிளம்பி போறேன்" என்றாள் ஐஸ்வர்யா.

"என்னது?" அதிர்ந்தான் அவன்.

"கொஞ்ச நாள் தனியாய் இருந்தீங்கன்னா, இந்த ஐஸ்வர்யாவே போதும்னு நினைப்பீங்க"

"யார் உன்னை போக விட போறா?"

"என்ன செய்வீங்க?"

"நான் என்ன செய்வேன்னு உனக்கு தெரியாது?"

குழைவாய் கேட்டான், மெல்ல அவளின் அருகில் வந்து. அடுத்து என்ன நடக்கும் என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும். இப்பொழுதெல்லாம், வசீகரன் அவள் அருகில் வந்தாலே, நெருப்பால் சூழப்பட்ட பனிக்கட்டி உருகுவது போல உருகி தான் போகிறாள் ஐஸ்வர்யா.

"என்னை விட்டுட்டு உன்னால ஒரு நாள் கூட இருக்க முடியாது" என்றான் பெருமையாக.

"அப்ப நீங்க இருப்பீங்களா?"

"என்னால ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது. அதனால தானே, நான் உன் பின்னாடியே சுத்திகிட்டு இருக்கேன்"

"உண்மையிலேயே, உங்களுக்கு என்னை பழைய மாதிரி பார்க்கணுமா?"

"பழைய மாதிரி, உன்னால ஆக முடியும்னு நீ நினைக்கிறாயா?"

உணர்வுகளில் ஆட்பட்டு *இல்லை* என்று தலையசைத்தாள் ஐஸ்வர்யா.

"அந்த பழைய ஐஸ்வர்யாவா இருந்து, என்னோட சந்தோஷத்தை இழக்க நான் விரும்பல. முக்கியமா உங்க கூட. என்னோட வேண்டாத பிடிவாதத்தால, நிறைய அழகான நாட்களை நம்ம இழந்துட்டோம்." உறுத்தலுடன் கூறினாள்.

"யார் சொன்னது? நான் உன்னை மாதிரி இல்ல

ப்பா... அப்பவும் நான் உன்னோட சந்தோஷமா தான் இருந்தேன்"

"நான் அப்படியெல்லாம் செஞ்சிருக்க கூடாது" என்றாள்.

"போனதைப் பத்தி கவலைப்பட வேண்டிய அவசியமில்ல. போனது போயிடுச்சு. அத பத்தி நினைக்காதே"

ஐஸ்வர்யாவை, தன் தோளில் ஆதரவாய் சாய்த்துக் கொண்டு, சமாதானப்படுத்தினான் வசீகரன்.

ஏஆர்வி கம்பெனி

ஐஸ்வர்யா தன் குழுவைச் சேர்ந்தவர்களுக்கு, செய்ய வேண்டிய வேலைகளை பிரித்து கொடுத்துக் கொண்டிருந்தாள். அப்போது அவளுக்கு வசீகரனிடமிருந்து ஃபோன் வந்தது. சற்றே விலகி வந்து, அதற்கு அவள் பதிலளித்தாள்.

"இங்க பாருங்க வசி, நீங்க காலையில இருந்து என்னை பாக்கல, ஆனா அதுக்காக, இப்ப என்னால் அங்க வர முடியாது. நான் ஒரு முக்கியமான டிஸ்கஷன்ல இருக்கேன்."

"நான் உன்ன பாக்கணும்னா, ஃபோன் பண்றதை விட்டுட்டு, நானே நேர்ல வருவேன்" என்று சிரித்தான் வசீகரன்.

"சரி, என்ன விஷயம்?"

"நம்மள பாக்க, விருந்தாளிங்க வந்திருக்காங்க. உடனே என்னோட கேபினுக்கு வா"

வசீகரன் ஃபோனை துண்டித்தான்.

"விருந்தாளியா? யாராயிருக்கும்?" என்று எண்ணியபடியே, ஸ்கெட்ச் ரூமிலிருந்து அவசரமாக வசீகரனின் கேபினை நோக்கி நடந்தாள் ஐஸ்வர்யா. வசீகரனின் அறையில், நிலாவையும், கதிரவனையும் பார்த்து ஆச்சரியமடைந்த அவள், ஓடிச்சென்று நிலாவை கட்டிக்கொண்டாள்.

"நீங்க இங்க? ஏதாவது முக்கியமான விஷயமா அண்ணி?" என்றாள் ஆர்வமாக.

நிலா பதில் சொல்வதற்கு முன், அவசரமாய் முந்திக்கொண்டு பதிலளித்தான் வசீகரன்.

"ஆமாம், அவங்க ஒரு முக்கியமான விஷயத்தை சொல்ல தான் இங்க வந்திருக்காங்க" என்றான் பொடி வைத்து.

அவனை புருவத்தை உயர்த்திப் பார்த்தாள் ஐஸ்வர்யா "என்ன அது?" என்பது போல. அவன் ஆமாம் என்று தலையசைத்துவிட்டு நிலாவைப் பார்த்து அர்த்தமுள்ள புன்னகை புரிந்தான். ஐஸ்வர்யாவிடம், சற்றே விளையாட வசீகரன் எண்ணி இருக்கிறான் என்பதை புரிந்து கொண்டுவிட்டாள் நிலா.

"வசீகரனே உனக்கு அதை சொல்லுவார்" என்றாள் நிலா.

"கிட்டத்தட்ட, உனக்கு ஈக்குவலா அவங்க மேல அன்பு கட்டக்கூடிய ஒருத்தர், உங்க அம்மா வீட்டுக்கு வர போறாங்களாம்" என்றான் வசீகரன்.

"என்னது... எனக்கு ஈக்குவலாவா?" என்று முகம் சுளித்தாள் ஐஸ்வர்யா.

"ஆமாம், அவங்களுக்கும் யாராவது ஒருத்தர் துணையா வேணும் இல்ல? அதனால, உன்னோட இடத்துக்கு, அவங்க வேற ஒருத்தரை கொண்டு வரலாம்னு முடிவு பண்ணி இருக்காங்க"

வசிகரனுக்கு தெரியாதா, அவள் எவ்வளவு கோபக்காரி என்று? அவன் பொங்கி வந்த சிரிப்பை அடக்க அரும்பாடு பட்டுக் கொண்டிருந்தான். நிலாவும், அவனைப் புரிந்து கொண்டு, தொடர்ந்தாள்.

"ஆமா, ஐஸ்வர்யா. நீ என்ன நினைக்கிற?" என்றாள்.

"வேற யாரோ ஒருத்தர், என்னுடைய இடத்தை நிரப்ப முடியும்னு, நீங்க நினைக்கிறீர்களா அண்ணி?" என்றாள் சோகமாக.

தன் தங்கையின் சோகத்தை உணர்ந்து கொண்டான் கதிரவன். இந்த சந்தோஷமான தருணத்தை அவன் பாழாக்க விரும்பவில்லை. மேலும் நிலாவும், வசீகரனும், ஐஸ்வர்யாவை வம்பு செய்யும் முன்,

"அவளோட இடத்துக்கு நம்ம வீட்டுக்கு வர போறவங்களுக்கு வைக்க வேண்டிய பேரை, ஒரு அத்தையா, அவளையே தேர்ந்தெடுக்க சொல்லு, நிலா" என்றான் கதிரவன்.

கதிரவனின் பேச்சை துண்டிக்க நினைத்து, ஏதோ சொல்ல வாயெடுத்த ஐஸ்வர்யா, அவன் சொன்னதன் பொருளுணர்ந்து, விழி விரிய நிலாவைப் பார்த்து "நிஜமாகவா?" என்பது போல் தலையசைத்தாள்.

சந்தோஷமாக அவளை அணைத்துக் கொண்ட நிலா,

"எங்க குழந்தையை தவிர வேற யாரால உன்னுடைய இடத்தை நிரப்ப முடியும்?" என்றாள்.

அவள் கூறியதைக் கேட்டு, ஐஸ்வர்யாவின் கண்கள் குளமாயின.

"பொறுப்புள்ள அத்தையா, நல்ல தமிழ் பெயரா தேர்ந்தெடு" என்றாள் நிலா.

"அந்த மரியாதை, எனக்கெல்லாம் கிடைக்காதா?" என்றான் வசீகரன்.

"அந்த பொறுப்பை, உங்க மனைவி உங்களோட பகிர்ந்துகிட்டா, எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்ல" என்றாள் நிலா.

வசீகரன் மனதில் எதையோ நினைத்துக் கொண்டு தான் இதை சொல்கிறான் என்று புரிந்து கொண்ட ஐஸ்வர்யா, "நடக்கட்டும்" என்று அவனுக்கு சமிக்ஞை தந்தாள்.

"நிஜமாவா?" நம்ப முடியாமல் கேட்டான் வசீகரன்.

"உங்க சாய்ஸ் எனக்கு பிடிக்கலன்னா நான் மாத்திடுவேன்" என்றாள் காராராக.

"என்னோட சாய்ஸ் எப்பவுமே பெஸ்ட்டா தான் இருக்கும்"

"ஓ அப்படியா?"

"ஆமாம். அதுக்கு பெஸ்ட் எக்ஸாம்பிள், என்னுடைய எதிரிலேயே நிக்குது. நீ என்னோட சாய்ஸ் என்கிறத மறந்துடாத"

"உங்களுடைய சாய்ஸ் எவ்வளவு பெஸ்ட்ன்னு, என்னை வச்சே எனக்கு புரிய வைக்கிறீங்களா? பெரிய ஆளு தான் நீங்க"

"நம்மளுடைய சிறந்த சாதனையை தானே, நாம எப்பவுமே முன் நிறுத்துவோம்?"

தன் உதட்டை கடித்து, *ஆமாம்* என்று தலையசைத்தாள் ஐஸ்வர்யா. கதிரவனுக்கும், நிலாவுக்கும், அவர்களைப் பார்க்கவே பூரிப்பாக இருந்தது. வசீகரனுக்கும், ஐஸ்வர்யாவிற்கும் இடையில் இருந்த புரிதலை அவர்களால் புரிந்துகொள்ள முடிந்தது.

"சரி, நீங்க செலக்ட் பண்ண பேர சொல்லுங்க" என்றாள் ஐஸ்வர்யா.

"பெண் குழந்தையா இருந்தா நித்திலா, ஆண் குழந்தையா இருந்தா நீரவன்"

நிலாவிற்கு இணையாக நித்திலாவையும், கதிரவனுக்கு இணையாக நீரவனையும் தேர்ந்தெடுத்து இருந்தான் வசீகரன்.

"தேங்க்யூ வசீகரன்" என்று உணர்ச்சிவசப்பட்டான் கதிரவன்.

"ஏய், ரிலாக்ஸ்... நான் சும்மா... "

"இல்ல... இதெல்லாம் வெறும் *சும்மா* இல்லை. இதெல்லாம் உங்களால தான் சாத்தியமாச்சு. வாழ்க்கையோட அழகான பக்கத்த எனக்கு காட்டி, என்னோட வாழ்க்கையையும், குடும்பத்தையும் எனக்கு திருப்பி கொடுத்தீங்க. நீங்க மட்டும் இல்லனா, வறண்டு போயிருந்த என்னோட வாழ்க்கை வளமா மாறியிருக்க வாய்ப்பே இல்ல" அவன் குரல் தழுதழுத்தது.

அவன் தோளில் மென்மையாக கை வைத்து, அவனுக்கு ஆறுதல் அளித்தாள் நிலா. தன்னுடைய உணர்வுகளை கட்டுப்படுத்த, வசீகரனும் பெரும்பாடுபட்டான். அந்த சூழ்நிலையை லேசாக மாற்ற அவன் முயன்றான்.

"உங்க சாதனைக்கு முன்னாடி, நான் செஞ்சது ஒண்ணுமே இல்ல. இன்னும் எட்டு மாசத்துலே நீங்க அப்பாவாக போறீங்கல்ல?"
என்று அவன் கிண்டலாய் கூற, அனைவரும் சிரித்தார்கள்.

"நாங்க கிளம்பறோம். அம்மா வீட்ல காத்திருப்பாங்க. விஷயத்தை உங்ககிட்ட தான் முதல்ல சொல்லணும்னு, நாங்க ஹாஸ்பிடலில் இருந்து நேரா இங்க வந்தோம்" என்ற கதிரவனை,

சரி என்று தலையசைத்து, ஆரத்தழுவிக் கொண்டான் வசீகரன், ஐஸ்வர்யாவை பார்த்தபடி. அவள் தன் கண்ணில் தோன்றிய கண்ணீரை மறைக்க, சிரமப்பட்டுக் கொண்டிருந்தாள். அவனால், ஐஸ்வர்யாவின் மனோ நிலையைப் புரிந்து கொள்ள முடிந்தது. அவள், தீர்மானமாக ஒரு மனிதனை பற்றி தெரிந்து கொள்ளாமல், அவ்வளவு எளிதில் யாரையும் மன்னிக்கவும் மாட்டாள், ஏற்றுக்கொள்ளவும் மாட்டாள்.

கதிரவனும், நிலாவும் அவர்களிடம் விடைபெற்று, அலுவலகத்தை விட்டு சென்றார்கள்.

வசீகரன் ஐஸ்வர்யாவிடம் சென்று அவள் முகத்தை உயர்த்திப் பிடித்தான்.

"என்னால உன்னை புரிஞ்சுக்க முடியுது" என்றான்.

"ஏன், என்னால மட்டும் யாரையுமே அவ்வளவு சீக்கிரம் ஏத்துக்க முடிய மாட்டேங்குது?" என்றாள் வருத்ததுடன்.

"அது தான் நீ. அதுல தப்பு எதுவும் இல்ல. அதுக்காக நீ உன்னை ஸ்ட்ரெஸ் பண்ணிக்க வேண்டிய அவசியமில்ல."

"நான் ஏன் என்னை ஸ்டிரெஸ் பண்ணிக்க போறேன்? நீங்க தான் இருக்கீங்களே"

"உனக்கு ஞாபகம் இருக்கா, ஒரு பொண்ணு, என்னை நம்ப மாட்டேன்னு பிடிவாதமா இருந்தா." என்று சிரித்தான்.

"நேர்மையானவங்களை ஏத்துக்க, நான் என்னைக்குமே பிடிவாதம் பிடிச்சது இல்ல. அது உங்களுக்கே தெரியும்"

"ஆமாம். என்னைவிட அதைப் பத்தி யாருக்கு தெரிஞ்சிட போகுது..."

அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டு,

"ஐ லவ் யூ" என்றாள்.

"ஐ நோ" என்றான், அவள் தலையில் அன்பாய் முத்தமிட்டபடி.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top