Part 11
உன்னோடு நான் பேசாமல் இருந்தால்
நான் செத்து விட்டேன் என்று அர்த்தம் அம்மா.
நிலவுக்குச் சோறூட்டி நித்திரைக்கு தாலாட்டி
மலருக்கு மணந்தந்து மதிமகளும் கொண்டாட பலரின் கண்கள் பரவசமாய்க் காணுதலை உலவுகின்ற வேளையிலே கனாக் கண்டேன்.
குணத்திலே சிறந்து குலமகளும் இருந்திடவே பணத்தாலே ஒன்றுமில்லை பாரம்தான் பாரிலே உணவுதனை அன்னையுமே ஊட்டும் திருக்கோலம்
கணப்பொழுதும் மறவாது கனாக் கண்டேன்.
இல்லத்தின் அரசியவள் இன்முகத்தால் அமுதூட்ட நல்லவளாய் வளர்ந்திடவே நன்னெறிகள் பலசொல்ல
வில்லுடனே அம்பும் வியன்கூந்தல் மிளிர்ந்திடவே கல்விதனை பயிற்றுவிக்க கனாக் கண்டேன்.
இதமாக இன்சொல்லால் இன்பத்தைத் தந்திடுவாள் பதமாக எனையுந்தான் பாசத்துடன் அணைத்திடுவாள்
விதவிதமாய் கதைபலவும் வித்தகியும் சொல்லிடுவாள். உதவுகின்ற முழுமதியைக் கனாக் கண்டேன்.
அம்மாவே தெய்வமன்றோ அன்பொன்றே அவளறிவாள் சும்மாவே இருந்தாலும் சுகத்தையுமே பேணிடுவாள். அம்மாபோல் அரவணைக்க ஆண்டவனால் முடிந்திடுமா
தம்மின்நோய் பொறுத்திடுவாள் தாங்கிடுவாள் என்றனையே.
மென்பாதம் வருடிடுவாள் மெதுவாக நடைபயில. என்றனையும் ஆளாக்கி ஏற்றத்தைத் தந்தவளாம். நன்றிதனைச் சொல்லுகின்றேன் நற்றாயே நானுந்தான்
உன்னைத் தெய்வமெனப் போற்றிடுவேன் என் தாயே...!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top