பாகம் 24

உலகத்தில பொண்ணா பொறந்தா அவங்களோட ஆசை ஒன்னு எதையாச்சும் சாதிக்கணும் ரெண்டு நல்ல வாழ்க்கை துணை வேண்டும். நல்ல நண்பன் வாழ்க்கை துணையா அமைஞ்சுட்டா ரெண்டையும் ஒரு பொண்ணு சாதிச்சுடுவா. ஆனா எல்லாருக்கும் எல்லாம் கெடச்சுடறதில்ல. அதுக்காக எந்த பொண்ணும் சோர்ந்து போன்றதும் இல்ல. அடுத்து அடுத்துன்னு கீழ விழுந்தாலும் பீனிக்ஸ் பறவையாட்டம் பறக்க தயாரா ஆயிட்றா. அது பெண்களிடம் உள்ள பிரத்யேகமான ஒரு விஷயம். ஆனாலும் திரும்ப எப்படி கீழ விழணும்னு திட்டம் போட்டு பறக்கறாப்ல தான் ஆய்டும் சில நேரங்களில்.

இப்போ எதுக்கு இத்தனை பீடிகை யோசிக்கறீங்க எல்லோரும் தெரியறது. சொல்றேன். இப்போ நிலா காத்திருக்கற லதாவால தான் தன்னோட வாழ்க்கை திசை மாறி இருக்கிறது, இன்னும் மாறப்போகிறது என்பது தெரியாமலேயே அவளுக்காக வருத்தப்படும் ஒரு ஜீவன இப்போ என்ன சொல்றது.

நிலா லதாவிற்க்காக காத்திருக்கிறாள். லதா வரல, சரி போன் பண்ணலாம்னு போனை எடுக்கறா போன் நம்பரை டயல் பண்ணிட்டா. அப்போ லிப்ட் இவளோட தளத்துக்கு வந்து நிக்கறது. லதா வெளில வரா, அலுவலகத்துக்குள்ளையும் வந்துட்டா. ஆனா முகத்தில் பொலிவில்லை. லதா உள்ள நொழஞ்ச அடுத்த நிமிடம் நிலா அவளிடம் சென்று, ஏண்டீ நேத்து என்ன வர சொல்லிட்டு நீ வரல, எங்க போன எல்லாரும் உன்ன பத்தி என்னென்னமோ சொல்றாங்க கேள்விகள் பல, ஆனால் ஒன்றிக்கு கூட லதாவிடம் இருந்து பதில் வரவில்லை. லதாவும் துணை மேலாளரும் மொபைல் sms வழியாக ஏதோ பேசுவது தெரிந்தது. இப்போ லதா நீ எதையாச்சும் சொல்ல போறியா இல்லையா? அழ ஆரம்பித்து விட்டாள் லதா. எதுக்குடி அழற சொல்லு என்ன ஆச்சு. இல்லடீ நம்ப துணை மேலாளர் இருக்கார்ல அவர் என்ன காதலிக்கறதா சொன்னார். சரி மேற்கொண்டு எதுவும் இங்க பேச வேண்டாம் வா நாம கீழ போய் coffee shop ல பேசிக்கலாம். கவியை பின்னடியே வர சொல்லி சைகை காண்பித்து விட்டு சென்றாள். கவி அண்ணனுக்கு போன் போட்டு கீழே வர சொல்லிவிட்டு அவனும் அவர்களுடன் சென்றான். அவர்கள் இருவரும் ஒரு இருக்கையிலும் கவி அண்ணனுடன் அவர்கள் பின்னால் இருந்த இருக்கையிலும் அமர்ந்தனர். லதா கூற ஆரம்பித்தாள். 6 மாதங்களுக்கு முன். அந்த துணை மேலாளர் அன்று தான் புதிதாக அலுவலகத்திற்கு வந்திருந்தார். எல்லோருக்கும் அறிமுகம் செய்து வைத்தார் மேலாளர். துணை மேலாளர் பாலாஜி. இவர் தான் பாலாஜி, பெங்களூரை சேர்ந்தவர். நம்முடைய முதன்மை அலுவலகத்தில் இருந்து இங்க அனுப்பியிருக்கிறார்கள். இப்போது நிலா இவரிடம் தான் இனி ரிப்போர்டிங். நிலா நீ இவருக்கு தேவையான எல்லா தகவல்களையும் தர வேண்டும். இனி நீ இவரிடம் Reports submit பண்ணிடு. இவர் பெரிய அதிகாரிகளுக்கு அனுப்பி விடுவார். உனக்கு இனி கொஞ்சம் வேலை குறையும். வேறு வேலைகள் புதுசா allocate பண்றேன் என்றுவிட்டு சென்றுவிட்டார். அவன் புதிதாக depute செய்யப்பட்டவர் ஊருக்கும் புதிது என்பதால் எல்லாவற்றிலும் நிலா கூடவே இருக்க வேண்டிய கட்டாயம். நிலா எல்லாவற்றிலும் எல்லாரிடமும் ஒரு கொடு வரைந்து தன்னுடைய நிலையில் நிற்பவள். அதனால் அவரை ஹோட்டல் க்கு சாப்பிட அழைத்து சென்றாலும் தான் இங்கேயே தன்னுடைய உணவை உண்டு விட்டு வெறும் பழரசம். காபி அல்லது மோருடன் நிறுத்திக்கொள்வாள். அதிகம் அவருடன் பேச மாட்டாள். இருசக்கர வாகனத்தில் செல்ல நேர்ந்தால் தவிர்த்து விடுவாள். அவருக்கும் இவளுக்கும் நிறைய வயது வித்யாசம். பாலாஜி பார்க்க கட்டுமஸ்தான உடல் வாகு. வெளியில் அதிகம் சத்தம் வராமல் பேசும் திறமைசாலி. கோவம் வந்தாலும் அதிகம் காட்டிக்கொள்ள மாட்டான். நல்ல நிறம். யாருக்கும் பிடிக்கும் தன்மையுடையவன். பார்த்தால் நல்ல செல்வ செழிப்பில் வளர்ந்தது தெரியும். அவனை பற்றி அவள் அதிகம் விசாரிக்க வில்லை அது நிலாவிற்கு தேவை இல்லாத ஒன்று என்று விட்டு விட்டாள். இப்படி சென்று கொண்டிருக்க, அவன் வேலைக்கு சேர்ந்து 1 மாதம் முடிவில் இருந்தது. அன்று நிலா கவியுடன் வெளியில் தகவல் சேகரிக்க சென்று விட்டாள். இதுபோல் மாதத்தில் ஒரு நாள் நடக்கும் நிகழ்வுதான். பாலாஜியும் ஊரை கொஞ்சம் பழகி இருந்தான் என சொல்லி விட்டு சென்று விட்டாள். அன்று லதா உணவு கொண்டு வராததால் அவளும் வெளியில் சென்று சாப்பிட வேண்டிய கட்டாயம். லதாவுக்கு பாலாஜி மேல் ஒரு கண். பாலாஜி லதாவுடன் அதிகம் தொடர்புடைய வேலைகள் இல்லையாதலால் ஆவளுடன் அதிகம் பேச வேண்டிய கட்டாயம் இல்லை. பாலாஜி வெளியில் உணவருந்த செல்ல முற்பட லதா நானும் உங்களுடன் வரலாமா சார், ஹ்ம் வாங்க மிஸ் லதா போலாம் என்று இருவரும் நட்புடன் ஆரம்பித்தனர். அன்றில் இருந்து நிலா அவனுடன் வெளியில் செல்வதில்லை. கேட்டாலும் நான் பாத்துக்கறேன் நிலா You may please carry on your job என்று சொல்லிவிட்டு சென்று விடுவான். சரி இவனுக்கு பழகி விட்டது போல் என்று நிலாவும் பேசாமல் இருந்து விட்டிருந்தாள். லதா மற்றும் பாலாஜியின் அன்று ஆரம்பித்த பழக்கம் இருவரும் ஒன்றாக சாப்பிடுவது ஒன்றாக சாயந்திரம் வீட்டுக்கு கிளம்புவது என்று செல்ல ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாக சார் பாலாஜி ஆகிவிட்டார். மிஸ் லதா வா போ என்று ஆகிற்று. இது நிலாவிற்கு பெரிய வித்யாசத்தை தர வில்லை. ஆனால் சுற்றி இருந்தவர்களுக்கு கொஞ்சம் வித்யாசப்பட்டது. எந்த அளவிற்கு போகிறேன்று பார்க்கலாம் என்று எல்லோரும் இருந்தனர். பலாஜீனுடனான நட்பு வளர்ந்து காதலாக 3 மாதங்கள் ஆகி இருந்தது. அடிக்கடி வெளியில் சந்தித்தவர்கள் அவ்வப்போது பாலாஜி தங்கி இருந்த ஹோட்டல் ரூமில் சந்திக்க ஆரம்பித்து இருந்தனர். அதற்க்கு காரணம் இவர்கள் வெளியில் சுற்றுவது எல்லோருக்கும் தெரிந்து விட கூடாது என்பதே அது. மொக்க reason. லதா வயது 23 பாலாஜி வயது 29 சரியான வயது. வேறு வேறு மதத்தினர். நிலா குறுக்கிட்டாள் ஏண்டீ அவர் தான் காதலிக்கறேன்னு சொன்னா உனக்கு எங்கடீ போச்சு அறிவு. அவர் வேற மதம் இல்லையா உங்க வீட்ல எப்படிடீ ஒத்துப்பாங்க. அவர் முன்ன காதலிக்கறேன்னு சொன்னது உண்மை தாண்டீ ஆனா போன மாசம் நாங்க ரெண்டு பெரும் சேர்ந்து ஹோட்டல் ரூம் ல பேசிட்டு இருக்கும் போது தப்பு பண்ணிட்டோம் டீ. அப்பறம் நெறைய நேரம் அப்படி இருக்க வேண்டியதா போச்சு. போன மாசம் ஊருக்கு போயிட்டு வேலை மாற்றல் கேட்டுட்டு வந்திருக்காரு டீ. எங்கிட்டக சொல்லவே இல்ல. ஏன் இப்படி என்ன கல்யாணம் பண்ணிட்டு போங்கன்னு சொன்னேன் அப்போ தான் தனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆனதாகவும், இப்போ கோர்ட் ல டைவோர்ஸ் கேஸ் போயிட்டு இருக்கறதாகவும், இப்போதைக்கு தன்னால் என்னை கல்யாணம் செய்து கொள்ள முடியாதுன்னும் சொன்னாரு சரி கேஸ் முடிஞ்ச உடனே என்ன உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போய் கல்யாணம் பண்ணிக்கரீங்களா கேட்டதுக்கு வீட்ல அம்மாகிட்ட பேசறேன்னு சொல்லிட்டு இப்போ நாளையோட ஊருக்கு போறேன்னு வந்து நிக்கறாருடீ. நிலாக்கு ஒண்ணுமே புரியவில்லை. இது கவிக்கும் அவனது அண்ணனுக்கும் நன்றாக புரியும். சரி இருடீ நான் போய் என்னனு கேக்கறேன் காதலிச்சுட்டு கல்யாணம் பண்ணாம இருக்கறது தப்புன்னு மட்டும் நிலாக்கு தெரிந்தது. இருவரும் தப்பு பண்ணிட்டாங்க என்றதும் காதல் பண்ணி தப்பு பண்ணிட்டாங்கன்னு நெனச்சுட்டா. ஆனா அவர்கள் செய்த தவறே வேற பாவம் அப்பாவி பெண்ணிற்கு தெரியவில்லை. நிலா சண்டையிட கிளம்பி விட்டாள். அவள் செல்லட்டும் என்று லதாவும் அமைதியாக இருந்தாள். ஆனால் கவி அவனுடைய அண்ணன் இருவரும் இந்த இடைவெளிக்காக அவளை அனுப்பி வைத்தனர். ஆனால் நிலவிடம். நிலாம்மா நான் வர வரைக்கும் யார் கிட்டையும் ஒன்னும் பேச கூடாதுடா. அண்ணா வந்து அப்பறம் பேசலாம். சரியா இப்போ நீ மாடிக்கு போ கண்ணு. நான் லதா கிட்ட கொஞ்சம் பேசிட்டு வரேன். ஏன் அண்ணா திட்ட போறீங்களா லதாவை. பாவம் அண்ணா அவ. பாவமா அவளா. எல்லாரையும் வித்து சாப்ட்ருவா. நினைத்துக்கொண்டனர். சரிம்மா திட்டலை. நீ போ அனுப்பி வைத்தனர். அப்போது தான் லதாவின் உண்மை ரூபம் தெரிந்தது இருவருக்கும்.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top