பாகம் 23
நிலா வண்டியில் ஏறிக்கொண்டாள் அவளுக்கு இந்த மேலே திறந்தார் போல் இருக்கும் ஜீப் மிகவும் பிடிக்கும். ஆதலால் எப்போதுமே கவி அவளை இந்த ஜீப்பில் தான் கூட்டிச்செல்வான். கவி நான் கேட்டதுக்கு இன்னும் நீ பதில் சொல்லலைடா. என்ன கேள்வி என்ன பதில் வேணும். ஓ உனக்கு நான் கேட்ட கேள்வி நெனப்பில இல்ல. எப்போதுமே பெண்களுக்கு தன்னை காதலிப்பவன் மீது அதிக உரிமை இருக்கும் அவர்கள் அவனை காதலிக்காவிடிலும் எல்லா உரிமையும் எடுத்துக்கொள்வார்கள். அவர்கள் மீது அப்படி ஒரு நம்பிக்கை வரும். நிலாவும் அப்படித்தான். கவி காதலித்ததின் காரணம் அவனுக்கு நிலா போல ஒரு பெண்ணின் துணை வேண்டும் அவ்வளவே. அதனால் அவர்களின் நட்பில் எந்த விரிசலையும் இந்த காதல் உருவாக்கவில்லை. நினைவில்லை திரும்பவும் கேளு சரியா பதில் சொல்லிடறேன். அவனுக்கு நினைவிருந்தால் அவள் வாயிலிருந்து திரும்ப கேட்க வேண்டும். உனக்கு என் மேல கோவம் இல்லையா கேட்டேன். எதுக்கு கோவ போடணும்னு சொல்லு. எதுக்கா என்னடா நீ காதலிக்கறன்ன நான் உன்ன வேண்டாம்னு சொல்லிட்டேனே டா அதுக்காக. நீ எங்க என்ன வேண்டாம்னு சொன்ன என் காதல தான் வேண்டாம்னு சொன்ன. நம்ப கல்யாணம் பண்ணிண்டா சரியாய் வராது சொன்ன. ஆனாலும் என்ன எங்கையும் உட்டு கொடுக்கல இப்போ வரைக்கும் என் கூட தான் சுத்தற. சிரித்தான். அவளுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது ஆனாலும் அவன் சிரித்தது கோவம் வந்து விட்டது. பொய்க்கோவம் தான் என்றாலும் காண்பிக்க வேண்டுமே. போடா என்று மூஞ்சியை தூக்கி வைத்துக்கொண்டு உக்கார்ந்து விட்டாள். அவன் சமாதானம் செய்ய முயற்ச்சி செய்வதற்குள் அலுவலகத்திற்கு வந்திருந்தனர். எல்லா நிவாகிகளும் இருந்தனர். எம்மா நிலா நீ ஏன் இவ்ளோ நேரம் தவறி வர. கவி கூட உனக்கு என்ன வேலை. என அடுக்கடுக்காய் கேள்விகள். எதற்கும் பதில் கூறவில்லை நிலா. இப்போது பேச ஆரம்பித்தாள் பிரச்சனை வந்து விடும் என்று அவளுக்கு தெரியும். அமைத்து காத்தாள். சில நேரங்களில் நாம் அமைதியாக இருப்பதே நல்லது. நம்மிடம் நியாயம் இருந்தாலும் யாரும் நம்ப போவது இல்லை. இது விவகாரமான விஷயம் வேற என்பது நன்றாக புரிந்து வைத்துஇருந்தாள் நிலா. பேச வேண்டிய இடத்தில் பேசுவதும் வேண்டாத இடங்களில் அமைதியும் மிகவும் முக்கியம். சில உறவுகள் அதனால் சங்கடம் கொள்ளாமல் தவிர்க்க அது தேவைப்படுகின்றது. கவி வீட்டில் இருந்தேன் என்று கூறினால் என்ன நடக்கும் என்று தெரியாது. வேறு இடத்திற்கு சென்றேன் என்றால் ஊர் சுத்திட்டு வர இது என்ன உங்க அப்பன் வீட்டு ஆபீஸ் ஆ என்று கூட கேட்பார்கள். இப்போது அமைதியே முக்கியம். அவர்களே ஆரம்பித்தார்கள். நாளைக்கு நீ ஆபீஸ் கொஞ்சம் சீக்கரம் வந்துரும்மா. இங்க லதா அப்பறம் அந்த துணை மேலாளர் கிட்ட பொறுப்புகள் என்னன்னு பாக்க வேண்டி இருக்கு என்று மேலாளர் கூறிவிட்டு எல்லோரையும் வீட்டிற்கு செல்லும்படி கூறி சென்று விட்டார். எல்லோரும் கலைந்து சென்றனர். நிலாவிற்கு லதாவிடம் பேசியே ஆக வேண்டும் ஆனால் இது சரியான சமயம் அல்ல என்று அவளும் கவியிடம் சொல்லிவிட்டு கிளம்பி விட்டாள். எல்லோரும் அவரவர் பணிகளை பாதியிலேயே விட்டு கிளம்பிவிட்டனர். யாருக்கும் வேலை செய்யும் எண்ணம் இல்லை. நிலா வீட்டிற்கு செல்ல பஸ்ஸில் ஏறினாள். அவளது கல்லூரி தோழனை பஸ் விட்டு இறங்கி வீட்டிற்கு செல்லும் வழியில் சந்திக்க நேர்ந்தது. என்னடா இப்போ வந்திருக்க நாளைக்கு தான் என்ன பாக்க வருவான்னு சொன்ன. இல்லப்பா சீக்கிரம் வந்துட்டோம் அம்மா அப்பா அண்ணனோட பேசிட்டு இருக்காங்க. என்ன வெளில போக சொல்லிட்டாங்க. சோ உன்ன பாக்கலாம்னு வந்துட்டேன். சரிடா என்ன ஆச்சு பொண்ணு உங்க அண்ணனுக்கு ஓகே வா. அததாம்ப்பா பேசிட்டு இருக்காங்க இப்போ. என்ன பிரச்சனைன்னு தெரில அண்ணா கல்யாணம் வேண்டாம்னு சொல்றான். அவன் பண்ணிண்டா என் வழி சரியா போயிடும்னு பாத்தேன் என்றான். என்னடா யாரையாச்சும் லவ் பண்றயா. ஆமாம்ப்பா இன்னும் சொல்லல. சீக்கிரம் சொல்லிடுடா. அவ உன்ன விட்டுட்டு போய்ட போறா. ஹே அப்படிலாம் சொல்லதப்பா. அவ என்னைக்குனாலும் எனக்கு தான். யாருடா அந்த பொண்ணு. முதல்ல அவ கிட்ட என்னோட லவ் சொல்லணும் அப்பறம் யாருன்னு உனக்கு சொல்றேன். உனக்கு சொல்லாம வேற யார்கிட்டக போய் சொல்ல போகிறேன் என்றான் குமார். சரிடா வீடு வந்திருச்சு நான் போறேன். அப்பறம் பாக்கலாம் பை. என்றுவிட்டு வீட்டுக்குள் நுழைந்து விட்டாள். அம்மா எனக்கு சாதம் வேண்டாம்மா நான் சாப்பிட்டேன் பொய் சொன்னாள். பாதி நாட்கள் நடப்பது தான். அவளுக்கு எப்பவுமே சரியான உணவு கிடைக்காது. ஏதோ கவி வீட்டில் அவ்வப்போது சாப்பிடுவதும் கவியுடன் ஹோட்டலில் சாப்பிடுவதும் என்று சில நாட்களாக உணவு உண்டு கொண்டிருக்கின்றாள். அவளது அம்மா எப்போதும் இரவு எல்லாரும் சாப்பிட்டதும் மீதம் இருப்பதை சாப்பிடுவார்கள். அவர்களுக்கு வேண்டும் என்று இவள் பட்டினி இருப்பாள். இப்படி உணவு உண்ணாமல் வயறு புண்ணாகி இப்போது மருந்து சாப்பிட்டு கொண்டு இருக்கிறாள் கவியின் உதவியுடன். உடை மாற்றி படுத்துக்கொண்டாள். இன்று நடந்த அனைத்தையும் அசை போட ஆரம்பித்தாள். இப்போது அவளுக்கு அவள் பிரச்சனை பெரிதாக தெரியவில்லை. லதா தான் இப்போது முக்கியமாக பட்டது. எதற்கு அவள் துணை மேலாளருடன் ஹோட்டல் அறைக்கு சென்றாள். ஒரு பெண் தனியாக இருக்கும் ஆடவனின் அறைக்கு செல்வது தவறல்லவா. இது லதா க்கு தெரியுமே. அவள் என்னைவிட பெரியவள் தானே. படிச்சுருக்கா வேற. நல்ல உத்யோகம் ஏன் எல்லாத்தையும் இப்படி கெடுத்துக்கறா. அவங்க அம்மா ஏன் அவளை எதுவுமே சொல்றதில்ல. அவள் என்ன பண்ணினாள் அந்த ரூம்ல எல்லாம் யோசித்தாள். சரி காலம்பற அவகிட்டயே கேப்போம் என்று உறங்கிவிட்டாள். காலை எப்பவும் போல் அல்லாமல் கொஞ்சம் சீக்கிரமாக எழுந்து விட்டாள். லதாவை பார்த்து என்ன பிரச்சனை என்று கேட்டு அவளை பாதுகாக்க வேண்டும் என்ற அவசரம். சாப்பிடவில்லை. கையில் எதையும் எடுத்துக்கொள்ளவும் இல்லை. அம்மா நான் சீக்கிரம் போணும்மா. இன்னைக்கு முக்கியமான வேல இருக்கு ஆபீஸ்ல வந்து சாப்டுக்கறேன். எனக்கு எடுத்து வை. போயிட்டு வரேன்.சொல்லிவிட்டு பறந்து விட்டாள். சீக்கிரம் வந்ததால் குமாரை பார்க்கவில்லை. அவளுக்கு எதுவும் இப்போது தேவையில்லை. லதா மட்டுமே. பஸ்ஸும் சீக்கிரம் கிடைத்து விட்டது. அலுவலகத்திற்கு சென்று விட்டாள். கவி வந்து விட்டிருந்தான். ஹே இவ்ளோ சீக்கரம் வந்துட்ட. எதுவும் பேசவில்லை யாரிடமும் பேசவில்லை. துணை மேலாளர் இருந்தார் ஆனால் லதாவை காணவில்லை. காத்திருந்தாள் அவள் வருகைக்காக. காத்திருந்தால் காலங்கள் போகும் வரவேண்டியவர்கள் சோதிப்பார்கள். இது உலக நியதி. எப்போதும் சீக்கிரம் வரும் லதா, அவள் தான் அந்த அலுவலகத்தின் வரவேற்ப்பாளினி. எல்லோருக்கு முன்னும் அவள் உள்ளே இருக்க வேண்டும். ஆனால் இன்று காணவில்லை. வருவாளா மாட்டாளா தெரியாது. அவளின் எண்ணிற்கு அழைக்க முற்படும்போது............
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top