பாகம் 22

இது நிலாவிற்கு 2 வது வேலை. டைப்பிஸ்ட் ஆக வேலைக்கு சேர்ந்து இப்போது நல்ல நிலைமைக்கு உயர்ந்திருக்கின்றாள் இதனை வருட உழைப்பு அவளுக்கு பெரும் கௌரவத்தை அந்த அலுவலகத்தில் சேர்ந்திருந்தது. முதல் வேலையில் அத்தனை சம்பளம் மற்றும் வேலையில் முன்னேற்றம் எதுவும் கிடைக்கவில்லை என மாறிவிட்டாள். ஆனால் இப்போது அடுக்கடுக்காக வந்திருக்கும் பிரச்சனைகள் அவளை வேலை மாற்றம் செய்ய தூண்டிவிட்டது. கவி என் மேல கோவம் இல்லையா. இந்த கேள்வி கவியை கொஞ்சம் ஆட்டித்தான் பார்த்தது. அந்த கேள்விக்கு பதில் சொல்லும் முன் அவனது அண்ணன் மற்றும் நண்பர்கள் படை வந்திருந்தது. அண்ணா என்று ஆரம்பிக்கும் முன்னரே. அவர் கவியை அடித்து இருந்தார். ஏண்டா உன்ன அவளுக்கு துணையா உள்ள போய் லதாவை பார்வையிட சொன்னா நீ அவளை உள்ள தனியா உட்டுட்டு வெளில போயிட்ட உள்ள எவ்ளோ பிரச்சனைன்னு தெரியுமா ? கவிக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. இதுவரை அண்ணன் எத்தனையோ சூழலில் கூட அடித்தது இல்லை. ஏன் உருப்படாமல் ஊர் சுத்தும்போது கூட இப்படி நடந்து கொண்டது இல்லை. ஏன் கோபமாக பார்த்தது கூட இல்லை. எப்போதும் இருக்கும் அதே கரிசனம் இருந்து கொண்டே இருந்தது. அண்ணா அப்போ வந்த போன் என்னோட நண்பன் கிட்டேந்து தான். லதா மற்றும் அந்த மேலாளர் பத்தி தான் சொல்லிட்டு இருந்தான். அத இப்போ உங்கள்ட பேசணும்னு தான் எல்லாரையும் வர சொன்னேன். நீ என்ன விளக்கம் சொன்னாலும் நீ நடந்துக்கிட்டது தப்பு தான் கவி. சாரி அண்ணா முடிக்கும் முன் அண்ணா அவன் வராதது நல்லது தான்னு நினைக்கறேன் அண்ணா. உள்ள நம்ப ஆபீஸ்லேந்து வந்தவங்க எல்லாரும் என்ன தனியா இருந்ததால தான் விட்டாங்க. இல்லேனா நாங்க ரெண்டு பெரும் அவங்க பார்வைல வேற மாதிரி தெரிஞ்சுருப்போம். அதனால கவி செஞ்சது எந்த தப்பும் இல்லண்ணா. உடனே அண்ணா கவலை பட்டு அவனிடம் மன்னிப்பு வேண்டினார். சாரி டா கவி இத்தனை நாள்ல நான் ஒரு நாள் கூட இப்படி அடிச்சதில்ல ஒரு பெண் மானம் போய்ட நீ காரணமா இருந்த்ர கூடாதுன்னு தாண்டா அடிச்சுட்டேன். மன்னிச்சுருடா. பரவால்ல அண்ணா நிலாக்காக தானே அடிசீங்க பரவால்ல. எல்லோரும் சிரித்தார்கள். சரி சொல்லு என்ன தான் இப்போ பிரச்சனை கேட்டது நிலா. நிலா இப்போ நாங்க சொல்றத கவனமா கேளு. அந்த துணை மேலாளர் ஒழுங்கு சரி இல்ல. அவர் லதா கிட்டக்க தப்பா நடந்துக்க பாதருன்னு அவர் மேல ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தான் நிர்வாகம் பாத்திருந்தது. ஆனால் நடந்ததே வேறு. இருவரும் மனம் ஒத்து தான் இந்த காரியத்தை பண்ணிருக்காங்க. ரெண்டுபேரும் ஆபீஸ் நிர்வாக பணத்தை எடுத்து ரூம் போட்டு சே சொல்லவே எனக்கு வாய் கூசுது. அண்ணா நீங்களே சொல்லுங்க. நிலா அதிர்ந்திருந்தாள். அவளுக்கு இதெல்லாம் புதிது. இந்த மாதிரி அவள் கேள்வி கூட பட்டதில்லை. ஒரு ஆடவன் ஜீப்பில் கொண்டு வந்து வீட்டில் இறக்கி விட்டதுக்கே அவளுக்கு முதுகு தோல் உரிந்து போயிருந்தது. இப்படி எல்லாம் கேள்விபட்டாலில்லை. காதல் என்று அப்படி என்றால் என்ன என்ற ரகம் அவள். அவளை காதலிக்கிறேன் என்று சொன்னவனே அவளுக்கு புரிய வெக்க தெரியாமல் சுத்திக்கொண்டு இருக்கும் இந்த நிலையில் லதா கொஞ்சம் அவளுக்கு புரிபடவே நேரம் எடுத்துக்கொண்டது. என்ன சொல்ற கவி. லதா தப்பானவளா. இல்ல நான் இன்னைக்கு அதை உனக்கு நிரூபிகிக்கறேன் என்று எல்லாரையும் எதிர்த்து நின்றாள். நான் ஆபீஸ் போனும் இப்போவே என்று எழுந்துவிட்டாள். அவளுக்கு அவளுடைய தோழி மீது அத்துணை நம்பிக்கை. இல்ல நிலா கவி சொல்றது உண்மை தான். எல்லோரும் கூறினார்கள். உனக்கு புரியவெக்க தான் வந்தோம். ஏன்னா நீ தான் அவ கூட எப்பவுமே சுத்திட்டு இருக்க அவளால உனக்கு ஏதும் பிரச்னை வந்த்ர கூடாதுன்னு பாக்கறோம் என்றார்கள். அவள் யார் சொல்லியும் கேட்க வில்லை. இது விஷயமாக யார் சொல்வதையும் கேட்க கூடாது என்று முடிவே எடுத்து விட்டாள். எந்த பெண்ணை பற்றியும் அவதூறாக பேச கூடாது அவளது பாட்டி அவளுக்கு சொல்லி கொடுத்த விஷயம். எந்த பெண் என்பதை விட யாரை பற்றியும் பேச கூடாது. அவள் அவளின் பாட்டி கற்றுக்கொடுத்த எதையும் மறக்காமல் தர்மத்திற்கு கட்டுப்பட்டு மனிதனை மனிதனாக மதிக்க வேண்டும் என்பதில் கருத்தாக இருப்பாள். யாரையும் புண் படுத்த மாட்டாள். நிலா என்று கவி அழைத்த உடன். கவி விடு அவளை அவளே ஒரு முடிவுக்கு வரட்டும். நம்மால் முடிந்த உதவிகளை செய்யலாம். ரொம்ப அவளை கஷ்டப்படுத்தாத. விட்டுட்டு அவளை அவ இஷ்டத்துக்கு. எல்லோரும் போய் அவங்க அவங்க வேலைய பாருங்க. நிலா நீ கீழ போம்மா, நான் இவங்கள்ட பேசிட்டு வரேன். சரி அண்ணா என்று கீழே சென்று விட்டாள். கவி நீயும் உன்னோட நண்பர்களும் அவளுக்கு பின்னாடி ஹெல்ப் பண்ணுங்க டைரக்ட் ஆ எதுவும் பண்ண வேண்டாம். அவள் போற போக்கில் போகட்டும் அப்பறம் பாத்துக்கலாம். சரி அண்ணா. இப்போ எல்லாரும் கிளம்பலாம் என்றுவிட்டு எல்லோரும் அந்த இடத்தை காலி செய்தார்கள். லூசுங்க என்ன ஊஞ்சல் ஆட விடாம பண்ணிருச்சுங்க. எல்லாம் வானர படைங்க பக்கிங்க பிசாசுங்க. என்று புலம்பி கொண்டே இருந்தால் நிலா. அங்கும் இங்கும் இருந்தது அவளது நடை. அண்ணி ஒரு நிமிடம் நின்று என்ன ஆச்சு இவளுக்கு ஏன் இப்படி பொலம்பறா. என்னடா கவி இவளுக்கு என்ன ஆச்சு யாரை திட்டிட்டு இருக்கா. எங்களை தான் அண்ணி என்று எல்லோரும் கோரஸ் ஆக சொல்லினர். எல்லோரையும் பார்த்து முறைத்தாள் நிலா. எல்லோரும் சேர்ந்து சிரிக்க ஆரம்பித்தனர். அண்ணன் அண்ணி அம்மா எல்லோரும் சிரித்தார்கள். சரி அண்ணி அம்மா நான் கிளம்பறேன் என்று வேகமாக வீட்டை விட்டு வெளியே வந்தாள் நிலா. அவள் பின்னாடியே கவி ஓடி வந்தான். வாடீ கூப்பிட்டுட்டு போறேன். ரொம்ப பண்ணாதடா. சரி வாடீ. இனிமே வரப்போகும் பெரிய சவால்களை எப்படி நிலா எதிர் கொள்கின்றாள் என்று பார்க்கலாம்.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top