பாகம் 20
லதா சாதாரணமாக எல்லோருடனும் அப்படி தான் பழகுவாள். அவளுடைய சுபாவமே அப்படித்தான். அவர்கள் நல்லவர்களா கெட்டவர்களா என்ற யோசையல்லாம் செய்ய கூடிய வயதிலும் அனுபவத்திலும் அவள் இல்லை. அவள் தந்தை அவள் சிறுவயதில் இருக்கும் போதே இறந்து விட்டார். அதனால் அவளுக்கு இப்படி நல்லது கேட்டது சொல்லி வளர்க்க அவளது தாய்க்கு தெரியவில்லை. நிலாவிற்கு அவள் மீது ஒரு அக்கறை எப்போதுமே உண்டு. இதான் நிலா. அவளுக்கு தந்தை இல்லை என்ற காரணத்தினால் தோன்றிய அக்கறை. முடிந்தவரை அவளுடனேயே கிளம்புவாள் லதாவை பஸ் ஏற்றிவிட்டு தான், தன்னுடைய பஸ்ஸில் ஏறுவாள். ஆனால் இப்போது கொஞ்ச நாளாக இருந்த சின்ன சின்ன பிரச்சனைகளில் நிலா லதாவை கவனிப்பதை குறைத்திருந்தாள். லதாவும் நிலாவை கொஞ்சம் avoid செய்திருந்தாள். இதற்க்கு காரணம் அந்த துணை மேலாளர். நிலாவிற்கும் தவிக்கும் இப்போது நேரம் இல்லை. கவி அந்த துணை மேலாளர் எண்ணிற்கு முயற்சி செய்தான் அது கிடைக்கவில்லை. உடனே இருவரும் கிளம்பி அந்த ஹோட்டல் அறைக்கு செல்ல கீழே வந்தனர். அண்ணி அம்மாவிடம் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டனர். மேலாளரும் மற்ற அலுவலக நிர்வாகிகளும் நிலா இன்று பெர்மிசன் சொன்னதற்கு காரணம் அவளும் இவர்கள் உறவில் தொடர்பு இருப்பதாக நம்பி விட்டிடுந்தனர்.
அவளும் இதற்க்கு உடந்தையாக இருந்தால் நிலாவையும் வேலையை விட்டு நீக்க வேண்டும் என்பதே அது. அவளுக்கும் கவிக்கும் நல்ல நட்பு இருப்பது எல்லோருக்கும் ஒரு பொறாமை தரக்கூடிய விஷயமாக இருந்ததால் அவர்கள் இருவரையும் காலி செய்ய போட்ட பிளான் தான் இது. இதனை அறியாத கவியின் அண்ணன் அவர்கள் இருவரையும் அங்கே அனுப்பி வைத்தார் லதாவை காப்பற்றுவதற்க்காக. இருவரும் வந்துவிட்டார்கள் ஹோட்டல் வரவேற்பறைக்கு. அப்போது கவிக்கு ஒரு போன் கால் வந்ததது. உடனே அவன் நிலா நீ உள்ள போகாத வெளில இருந்து போன் extension ல விஷயத்தை சொல்லி லதாவ வெளில வர சொல்லிடுன்னு சொல்லிட்டு வெளில போன் பேச போய்ட்டான். அவள் அங்கே வரவேற்பறையில் காத்திருக்கும் நேரம் அவளது அலுவலகத்தில் இருந்து எல்லோரும் ஹோட்டல்க்குள் வந்திருந்தார்கள். ஆனால் யாரும் கவியை பார்க்கவில்லை. உடனே அலுவலக நிர்வாகியில் ஒருவர் என்ன நிலா பெர்மிசன் சொல்லிட்டு இங்க நிக்கறீங்க என்ன பிரச்னை என்றார். அவளுக்கு கொஞ்சம் பொய் சொல்ல வராத காரணத்தினால், இல்ல சார் லதா இங்க இருக்கறதா சொன்னா என்னையும் வர சொன்னா ரெண்டுபேரும் இங்க மதியம் சாப்பிட பிளான் பண்ணோம் அதான்னு இழுத்தாள் நிலா. மேலாளர். நிலா உங்கள நான் ஏற்கனவே எச்சரித்து இருக்கின்றேன் லதா விஷயத்தில் லதாவை காப்பாற்ற முயற்சி செய்யாதீங்கன்னு. இல்ல சார் நெஜமாவே லதா சாப்பிட தான் வரேன்னு சொன்னா அதான் காத்திருக்கின்றேன். சரி நாங்க போய் துணை மேலாளரை போய் பாத்துட்டு வரோம். என்ன சார் நம்ப துணை மேலாளர் இங்க தான் தங்கிருக்கிறாரா ? நிலா கேட்டாள். என்ன நிலா தெரியாத போல கேக்கறீங்க. சரி நீங்க ஆபீஸ் போங்க, மத்ததெல்லாம் அப்பறம் பேசிக்கலாம். ஏன் சார் அந்த பொண்ண அனுப்பறீங்க, ஒருவர் கேட்டார் அது நிலா காதிலும் விழுந்தது. நீங்க போங்க நிலா. சரி சார். கொஞ்சம் நகரும் சமயம் அந்த நிர்வாகி, அந்த பொண்ணு ரொம்ப சின்ன பொண்ணுடா, இதுங்க ரெண்டும் இவளை use பண்ணுதுங்க அது கூட இவளுக்கு தெரில, விடு போகட்டும் என்ற உடனேயே நிலாக்கு தூக்கி வாரி போட்டது. பிரச்சனை என்ன ஆயிருக்கும் என்று அவளால் யூகிக்க முடியவில்லை.
கவி வெளியில் அவன் நண்பனுடன் போன் பேசிக்கொண்டு இருந்தான். ரொம்ப விசித்திரமாக இருந்தது எல்லோருடைய நடவடிக்கைகளும். நிலாவிற்கு 19 வயது தான். எதை பற்றியும் அதிகம் தெரியாத வயது. இன்னும் குழந்தைதனமான முகம், செயல்களும் அப்படியே தான் இருக்கும். யாருக்கும் பயப்பட மாட்டாள். ஆனால் யாரேனும் ஏதேனும் சொல்லிவிட்டாள். உடனே அழுதுவிடுவாள். அதற்காகவே யாரும் அவளை எதுவும் சொல்ல மாட்டார்கள். பாதி நாள் அவள் என்ன சாப்பிடுவாள் தூங்குவாளா மாட்டாளா, என்ன எப்படி யாருக்கும் தெரியாது. எப்போதும் ஏதேனும் ஒரு ஓட்டத்தினுடனேயே இருப்பாள். வேலையும் அவளுக்கு அப்படியே அமைந்து விட்டது. அவள் ஓடாவிட்டாள் யாரும் ஓடமுடியாத வேலை. அலுவலகத்தின் ஆணிவேர். இப்போது அவளை ஆட்ட ஆரம்பித்து விட்டிருந்தனர். இன்னும் எவ்வளவு நாள் இதில் அவள் தாக்கு பிடிப்பாள் யாருக்கு தெரியும்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top