பாகம் 19
கவி கொஞ்சம் அலுவலகத்திற்கு போன் பண்ணேன். பெர்மிஷன் சொல்லணும். நீ ஒன்னும் சொல்லாதே நான் மட்டும் சொல்றேன் அப்போ தான் சந்தேகம் வராது. ரிங் போகுது இந்தா. சார் நான் கொஞ்சம் லேட்டா வருவேன் பெர்மிஷன் என்றாள். ஃபோன் வைத்து விட்டாள். சொல்லு நிலா என்ன பேசணும். அண்ணன் பேசணும் சொன்னாரு ஆனா போய்ட்டார் என்ன பிரச்சினை. ஒண்ணுமில்ல கவி நான் சொல்றத கேளு. உனக்கு இந்த விஷயத்தல என்ன தெரியுமோ சொல்லு. லதாவும் நம்ப துணை மேலாளர் அடிக்கடி வெளியில சந்திக்கறதா இன்பர்மேஷன் வந்திற்கு போல, ரெண்டு பேரும் காதலிக்கர்தா தான் மொதல்ல சொல்லிருக்கங்க, ஆனா விஷயம் வேற என்னவோ தப்பாருக்குண்ணு அன்னைக்கு மேலாளர் கூப்பிட்டு சொன்னார். எனக்கு எதவும் தெரியுமா என்று கேட்க. எனக்கு தான் ஒன்னும் தெரியாதே. அவங்க ரெண்டு பேரும் சுத்தர்தே தெரியாது இதுல லவ் அது இதுன்ன எனக்கு எப்படி. உனக்கு எதனாச்சும் தெரியுமா? நிலா அவங்க காதலிக்கலாம் இல்லப்பா. பின்ன !! சும்மா time pass. அதான் அவங்க ஒன்ன சுத்துறாங்க. எனக்கும் காதுல விழிந்துது. லதா உன்கிட்ட என்ன லவ் விஷயத்த சொன்னதுக்கு காரணம் நீ அவ விஷயத்ல தலயிட கூடாதுன்னு தான் என்றான். ஆனால் அவனுக்கு சில விஷயங்கள் புல பட வில்லை. ஏன் இப்போது வரை லதா எப்படி நிலாவிற்கு சிநேகிதம் ஆனால் என்று கூட கவிக்கு தெரியாது. நிலா எல்லோரிடமும் பழகிவிடும் தன்மை கொண்டவள் ஆனால் எல்லோரையும் ஒரு இடத்தில் சரியாக நிறுத்திவிடுவாள். அவளுடைய இந்த maturity ஆனா attitude தான் எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று. அதே அவளை எல்லோருக்கும் சரியான கோணத்தில் பார்க்கவும் வைத்திருந்தது. நிலா ஆனா எனக்கு ஒன்னு மட்டும் தெரியும் அந்த துணை மேலாளருக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி ஏதோ டிவோர்ஸ் கேஸ் போயிட்டு இருக்குன்னது நம்ப வட்டாரத்தில் பேசிக்கறாங்கப்பா. என்னடா புதுசு புதுசா என்னென்னமோ சொல்ற. ஆமாம் நிலா. உடனே அவசர அவசரமாக கவியின் அண்ணன் நிலா கவி என்று கத்திக்கொண்டே மேலே வந்தார். இருவரும் பயந்து போய் எண்ணண்ணான என் இப்படி காத்திட்டே வரீங்க. நிலா கவி நீங்க ரெண்டு பெரும் அந்த மேலாளர் தங்கி இருக்கற ஹோட்டல் ளுக்கு போங்க அங்க லதாவும் அவரும் ஹோட்டல் அறையில் இருப்பதாக கேள்விப்பட்டு நம்ப மேலாளரும் அவர் டீம் மும் போய் அவங்கள கையும் களவுமாக புடிக்க திட்டம் போட்ருக்காங்க. அண்ணா இது அவங்க பெர்சனல் விஷயம் நாம தலையிடறது அநாகரீகம். அது தப்பு தாண்டா கவி அவர் ஆபீஸ் காசுல ரூம் போட்டு இங்க தங்கி இருக்கிறார் இப்படிலாம் பண்ண ரூல்ஸ் அனுமதிக்காது. so reporting is very important at now. hope you understand what am telling என்று அண்ணன் சொன்னார். நாங்க போய் என்ன அண்ணா பண்ண முடியும். இல்லம்மா நீ போய் அவங்க ரெண்டுபேரையும் alert பண்ணிடு at least அசிங்க படாமையாச்சும் மாடிக்கட்டும். இல்லேன்னா லதா மானம் கப்பல்ல போய்டும். அவன் ஆம்பளை எக்கேடோ கேட்டு போகட்டும் என்று சொன்னார். லதா மீது எப்போதுமே கவி அண்ணனுக்கு ஒரு பச்சாதாபம் இருந்தது. அதற்காகவே அவர் அவளின் வாழ்க்கையில் எந்த தவறும் நடந்து விட கூடாது என்பதில் கவனம் கொண்டார். சாதாரண நாட்களில் இதெல்லாம் கிடையாது தான். ஆனால் இப்போது இது மிகவும் முக்கியமான சமயம் என்பது எல்லோருக்கும் பட்டது.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top