நிலாக்கு தெரியும் கவி வீட்டு மாடில ஒரு தனி அறை இருக்கு அங்க ஒரு ஊஞ்சல் கட்டி போட்டு இருக்கும் அதில் உக்கார நிலாவிற்கு ரொம்ப பிடிக்கும். மாலை வேளையில் அலுவலக வேலை சீக்கிரம் முடிந்து விட்டால் இங்கு வந்து தான் நிலா நேரம் கழிப்பாள். நில்லா இன்று காலை வேளை கொஞ்சமா வெயில் தாக்கம் அங்கு இருக்கும் இருந்தாலும் பரவாயில்லை என்று அங்கு செல்ல முடிவெடுத்தாள். வீட்டிற்கு வந்து விட்டார்கள். அண்ணி வா நிலா, அத்தை நிலா வந்திருக்கா வாங்க ரெண்டு பேரும் சாப்பிட்டு ஆபீஸ் கெளம்பிட போறாங்க சீக்கரம் பூரிய போடுங்க அடுப்பில் என்றாள். இல்ல அண்ணி இன்னைக்கு மதியம் ஆபீஸ் போய்க்கறோம் எனக்கு கவிக்கிட்டக சில ஆபீஸ் மேட்டர் பேச வேண்டிருக்கு சாப்பிட்டு மாடிக்கு போறோம் என்றாள். சரிம்மா இப்போ சாப்பிடு என்றார் அன்னை. கவிக்கு தூக்கி வாரி போட்டது என்ன நாம ஏதோ பேசணும்னு நெனச்சோம் இவை ஏதோ சொல்றா. கவி கனவு கண்டது போரும் நீயும் வந்து சாப்பிடுடா. ஹேய் என்ன நீ நான் கனவெல்லாம் காணல. நீ ஏதோ பேசணும்னு சொன்ன அதான் என்னனு யோசனை பண்ணி பாத்தேன். உன்னால கண்டு புடிக்கவே முடியாதுடா வா வந்து சாப்பிடு. அதற்குள் கவியின் அண்ணனும் வந்துவிட மூவரும் சாப்பிட ஆரம்பித்தனர். நிலா நான் உன்கிட்ட கொஞ்சம் பேசனும்மா சாப்பிட்டோன்ன கெளம்பிடாத. கவி நீயும் மாடிக்கு வந்திரு. அண்ணியிடம் நீ மாடிக்கு டீயை குடுத்தனுப்பும்மா என்று விட்டு மாடிக்கு சென்று விட்டிருந்தார். என்னது இது நிலா என்னவோ பேசணும்னு சொன்ன இப்போ அண்ணன். ஐயோ எல்லோரும் குழப்பறாங்க. என்று விட்டு சாப்பிட ஆரம்பித்தான் கவி. இதான் கவி இவ்வளவு தான் அவன் மூளை.
அண்ணி கவியின் அம்மாவிடம், என்னத்தை ரெண்டு பெரும் பீடிகை போடறாங்க என்றாள். அண்ணி ரொம்ப யோசிக்காதீங்க. ஆபீஸ் ல ஒரு பிரச்னை அத தான் நான் கவிகிட்ட பேசணும்னு வந்தேன் இப்போ அண்ணா அத தான் பேச போறாங்க என்றாள் நிலா. சரி நீ போம்மா நான் டீ கொண்டு வரேன் எல்லாருக்கும் என்று அண்ணி சென்று விட்டார்கள். கவி இன்னும் உணவருந்தியே முடிக்கவில்லை. கவி நீ சாப்பிட்டு வா நான் மாடிக்கு போய் ஊஞ்சல் ஆடறேன். நிலா சாப்பிட்டு ஊஞ்சல் ஆடக்கூடாதும்மா ஜாக்கரதை. என்று அம்மா அனுப்பி வைத்தார்கள். அவளும் சரிம்மா என்று சென்று விட்டாள். என்னடா கவி என்னென்னமோ நடக்குது நீ என்னடான்னா அவளோட பேசப்போறன்னு நெனச்சேன். இப்போ வேற நடக்குது என்றார் கவியின் அண்ணி. தெரியலை அண்ணி. அண்ணா சம்பந்த பட்டிருக்கிறார் அதனால் விஷயம் பெருசுன்னு மட்டும் தோணுது. சரி நான் போறேன் இல்லேன்னா ரெண்டு பெரும் டீச்சர் ஆய்டுவாங்க. டீச்சர் ஆ எதுக்குடா. அதான் அண்ணி அட்வைஸ் பண்ண ரெடி ஆய்டுவாங்க என்று ஓடி வந்தான் மாடிக்கு. அதற்குள் அண்ணா மற்றும் நிலா பேசுவது தெளிவாக கேட்டது. இதை பேச தாண்ணா இப்போ நான் வந்தேன். ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் எனக்கே தெரியும் லதா இப்படிலாம் பண்ணிருக்கான்னு. அன்னைக்கு ராத்திரி மேலாளர் கூப்பிட்டு சொல்லும் வரை தெரியாதுண்ணா. இல்லம்மா இப்போ என்னை உன்னிடம் விசாரிக்க சொல்லி தான் அனுப்பினார்கள். மேலாண்மைக்கு ஒரு அவப்பெயர் வந்து விட போகிறதென்பது அவர்களது கவலை. இதெல்லாம் கவிக்கு சொல்லி புரிய வெச்சுடும்மா. என்னோட உதவி தேவை பட்டால் சொல் நான் செய்யறேன் என்னால முடிஞ்ச மட்டும் சரியா. சரிண்ணா. நிலா எனக்கு தெரிஞ்சு உன்ன வெச்சு தான் பிளான் போட்ருக்காங்கன்னு நினைக்கறேன். பாத்து நடந்துக்கம்மா என்னாலையும் ரொம்ப உள்ள வந்து உதவி பண்ண முடியாது. நான் பாதுக்கறேண்ணா நீங்க கவலை படாதீங்க என்று முடிக்கவும் அண்ணியும் கவியும் வர சரியாக இருந்தது. அண்ணி எல்லோருக்கும் டீயை கொடுத்துவிட்டு கீழே இறங்கி விட்டார். பின்னாடியே அண்ணனும் சென்று விட்டார். கவி ஊஞ்சலில் உக்கார்ந்தாள். ரொம்பவும் வெயில் இல்லை. கவி அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டான். டீயை குடித்துக்கொண்டே இருவரும் பேச ஆரம்பித்தனர்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top