பாகம் 13
நிலா அனைவரிடம் பை டா அப்பறம் பாக்கலாம் என்று கூறிவிட்டு வாடா கவி போலாம் என்று வண்டியில் ஏறிக்கொண்டாள்.
அங்கே உணவு விடுதியில் நிலாவின் நண்பனை அனைவரும் கிண்டல் செய்ய தொடங்கி இருந்தனர். ஏண்டா அவ உன்ன காதலிக்கறதா சொன்ன அவ என்னடான்னா அவனை உனக்கு அறிமுகம் செய்து விட்டு போறா, என்னடா நடக்குது இங்க என்று கேட்டார்கள்.
அவன் பெயர் குமார். அவனுக்கு 3 நண்பர்கள் எங்கு சென்றால் நால்வர் படை ஒன்றாகத்தான் செல்வார்கள் ஒன்றாகவே தான் வருவார்கள். நால்வரில் எல்லோரும் சுமாராக படிக்கும் ரகம். குமாருக்கு 2 பள்ளி நண்பர்கள் வேறு இருந்தனர். அவர்களுடன் அவனுக்கு அவ்வளவு பழக்கம் இல்லை என்றாலும் நிலாவை எல்லோருக்கும் அறிமுகம் செய்து வைத்திருந்தான். குமார் நிலாவை காதலிப்பது நிலாவிற்கு தெரியாது. அவனது பள்ளி நண்பர்களுக்கும் தெரியாது. அவன் பள்ளி நண்பர்களில் ஒருவன் ஒரு நாள் நிலாவினிடம் காதலிக்கிறேன் என்று வந்து நின்றான். நீ இல்லேனா செத்துருவேன் நிலா என்றான். நிலா டாய் உன்ன நல்ல நண்பனா நெனச்சுதான் குமார் உன்னோட என்ன பழக விட்ருக்கான். அவனுக்கு தெரிஞ்சுது நீ அவ்வளவுதான். என்றாள். இல்ல நிலா என்ன வேண்டாம்னு சொல்லாத நான் செத்துருவேன்னு திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே இருந்தான். அவளுக்கு கோவம் வந்தது அவர்கள் நின்ற இடம் வேறு நிலா வீட்டின் அருகில். நிலா அவனை செத்துப்போடா என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்று விட்டாள். அவன் அன்று சென்றவன் தான் அதுக்கு பிறகு நிலா கண்ணில் படவில்லை. குமாரின் இன்னொரு பள்ளி நண்பன் நிலாவிற்கு நல்ல நண்பனாக இருந்தான். அண்ணா என்றே அவனை அழைப்பாள். அவனது உண்மை நிறம் பாவம் நிலாவிற்கு அப்போது தெரியவில்லை. பாதியிலேயே அவர்களது நட்பு பிரிந்தது. காரணம் நிலாவின் இப்போது இருக்கும் வேலை.
குமார் தாய் தந்தையருக்கு இரண்டாவது மகன். அவன் அப்பா மற்றும் அண்ணன் இருவரும் சேர்ந்து கட்டுமான தொழில் செய்து வருகின்றனர். நிலாவுடன் பட்ட படிப்பு ஒன்றாக படித்தவன். தங்கை என்று சொல்லிக்கொண்டு அவள் பின்னாடியே சுற்றி வருபவன். ஆனால் அவளை காதலிக்கிறான்.
கோவம் வந்து விட்டது குமாருக்கு. இருடா என்னைக்கு இருந்தாலும் நான் அவளை தாண்டா கல்யாணம் பண்ணிப்பேன். டேய் உன் உயரம் என்ன அவள் உயரம் என்ன கண்டிப்பா அவள் உன்ன கல்யாணம் செய்துக்க மாட்டாள் என்று வம்பிழுத்தனர் அவனது நண்பர்கள். குமார் கொஞ்சம் உயரம் குறைவானவன்.
நமது நிலா வயதுக்கேத்த உயரம், அழகு பார்ப்பவர் ஒரு முறையேனும் திரும்ப பார்ப்பார். அடுத்தவர் கொடுக்கும் பழைய உடைகளை அணிந்தாலும் அது அவளுக்கு ஒரு அழகை கொடுக்கும்.
இவனால் பின்னாளில் நிலாவிற்கு எவ்வளவு பிரச்சனைகள் வர போகிறதென்பதை பிறகு பார்க்கலாம். இப்போது கவி பிரச்சனைக்கு வருவோம்.
கவி நீ இப்போ பேச போறது இல்லையா. அப்படிலாம் இல்லப்பா. இல்லையே உன் மூட் இங்கயே இல்லடா அதான் கேக்கறேன். எப்பவும் வண்டி ஓட்டினா நீ பாட்டு பாடுவ இன்னைக்கு நீ பாடலையே. என்னதான் உன்னோட பிரச்னை சொல்லு நானும் கேக்கறேன். பிரச்னைளெல்லாம் ஒன்னும் இல்லப்பா காலம்பர்லேந்து நடந்த எதுவுமே சரி இல்ல அதான் யோசனையா இருக்கு. உடனே நிலா முகம் வாடி விட்டது.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top