பாகம் 11
மிதமான காற்று அருமையான நேரம் சாலையில் மக்கள் நடமாட்டம் குறைந்திருந்ததது. எல்லா கடைகளும் மூடப்படும் நிலையில் இருந்தன. கையேந்தி பாவன்கள் சிறிது சிறிதாக உணவுகளை தயார் செய்து கொண்டு இருந்தன, பரோட்டா கடைகளும் அங்கே நிறைய இருந்தது. ஆங்காங்கே சாலையோர நடைபாதை விளக்குகள் மட்டுமே விளிச்சம் பரப்பிக்கொண்டு இருந்தன.
கவிக்கு ஒரு பழக்கம் ஜீப் ஓட்டும் போது ஏதேனும் பாட்டை முணுமுணுத்துக்கொண்டே வருவது தான் அது. அன்று காலையில் இருந்து நடந்தது எதுவுமே சரி இல்லாததால் அவன் இதுவரை நார்மலாக இல்லை என்பதற்கு அதுவே சாட்சி அவன் எந்த பாட்டையும் பாடவில்லை. நிலாவின் வீடு அலுவலகத்தில் இருந்து 12 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது.
கவியின் மனநிலை இப்போது கொஞ்சம் எல்லா உணர்வுகளும் மிஞ்சிய நிலையில் மிகவும் கனமாக இருந்தது. நிலாவிற்கு இப்போது அம்மாவை எப்படி சமாளிப்பது என்பது மட்டுமே, கூடவே கொஞ்சம் பசி வயிற்றை கிள்ளியது. அம்மா எப்படியும் மோர் சாதம் தான் வைத்திருப்பாள் என்பது அவள் அறிந்ததே. அதனால், கவியையும் நார்மல் நிலைக்கு கொண்டு வர நினைத்த அவள், கவி எங்கயாச்சும் சாப்பிட்டுட்டு போலாம்டா, வீட்டுக்கு போன மோர் சாதம் தாண்டா கிடைக்கும் என்றாள். அவனுக்கும் சாப்பிட்டால் பரவாயில்லை என்றே தோன்றியது. வீட்டிற்கு அவன் போன் செய்து அம்மா நான் நிலாவை வீட்டில் விட்டுவிட்டு சாப்பிட்டு வந்திடறேன் யாரும் எனக்காக காத்திருக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டான்.
அருகில் இருந்த சரவணபவன் ஹோட்டல் கண்ணில் பட்டது. அந்த ஏரியாவில் அது தான் கொஞ்சம் பிரசித்தி பெற்றது. நிலாவிற்கும் அங்கே சாப்பிட மட்டுமே பிடிக்கும் என்பதால் ஜீப்பை அங்கே நிறுத்தினான். உள்ளே சென்று இடம் பிடித்து அமர்ந்தனர். நிலா நீ எதையாச்சும் ஆர்டர் பண்ணிடு நான் ரெஸ்ட் ரூம் போயிட்டு வந்திடரேன்னு சொல்லிட்டு போய்விட்டான்.
நிலா அந்த உணவுகள் அடங்கிய பெரிய புத்தகத்தை திருப்பி கொண்டே இருந்தாலே ஒழிய ஒரு உணவையே கூற வில்லை. அவளுக்கு எதை ஆர்டர் செய்வது என்று ஒரே குழப்பமாகவே இருந்தது. எல்லாவற்றையும் படித்து விட்டாள் ஆனாலும் ஒன்றும் புரிபட வில்லை. கவிக்காகவே காத்திருந்தாள். கவி வந்தே விட்டான். என்னம்மா எதையும் சொல்லவில்லையா இன்னும் இப்படியே போன வீட்டுக்கு போக 11 ஆய்டும் அப்பறம் உன் நெலமை அம்போ தான் என்று கூறி சிரித்தான். நிலவிற்கு கோவம் வந்து விட்டது, அவள் ஒன்றும் பேசாமல் நீயே ஆர்டர் பண்ணிடு நான் போய் கை அலம்பிட்டு வந்துடறேன்னு போய்ட்டா.
தனக்கு தெரிந்த உணவுகளை ஆர்டர் செய்தான் கவி. ஆனால் எல்லாவற்றையும் காரம் கம்மியாக இருக்கும்படியும் பார்த்துக்கொண்டான். நிலாவிற்கு காரம் என்றால் ஆகாது. அவளுக்கு வயற்றில் புண் இருந்தது.
அந்த நாளில் நிலைத்திருந்தான் கவி. அன்று நிலா ஒரு பிங்க் நிற சுடிதார் ஒன்று அணிந்து இருந்தாள், சாதாரணமாக எப்பவும் போல் இல்லாமல், தலைக்கு குளித்து, லூசாக விட்ட தலைமுடியில் ஒற்றை கிளிப்பில் அடக்கி கொஞ்சமாக மல்லிகை பூ வைத்து இருந்தாள். அந்த பிங்க் நிற சுடிதார் அவளுக்கு கச்சிதமாக இருந்தது, இன்னும் தேவதையாக தெரிந்தாள். காலை மணி 11 நெருங்கி இருந்தது, எல்லோரும் பரபரப்பாக வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். கவிக்கு அன்று வெளியில் வேலை ஆதலால் அவன் அன்று அலுவலகம் வர வில்லை. நிலா இங்கும் அங்கும் சுற்றிக் கொண்டிருந்தாள். என்ன ஆனது என்று தெரியவில்லை, ஒரு நிமிடத்தில் மயங்கி விழுது விட்டாள் அலுவலகத்தின் மையப்பகுதியிலேயே. யாருக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை. லதா உடனே கவிக்கு போன் பண்ணி விஷயத்தை தெரியப்படுத்தினாள். அந்த அலுவலகத்தில் 2 பிரிவாக வேலை நடந்து கொண்டு இருந்தது. அன்று இவள் பிரிவில் கொஞ்சம் மக்கள் குறைவாகவே வந்திருந்தனர், அதனால் அடுத்த பிரிவில் இருந்த ஒரு பெண்ணும் அவளுடைய தலைமை அதிகாரியும் அவளுக்கு முதலுதவிகள் செய்து கொண்டு இருந்தனர். அலுவலகத்தில் இருந்த பணியாள் உடனே சென்று ஒரு பழரசத்தை வாங்கி கொண்டு வந்து அவளுக்கு குடிக்க கொடுத்தார். அவள் சற்று கண் விழித்தாள். என்னம்மா என்ன ஆச்சுன்னு எல்லாரும் வினவ ஆரம்பித்தனர். சாப்பிடல அண்ணா அதனால கூட இருக்கும்னு சொல்லிட்டு போய் வேலையை தொடர்ந்தாள். அவளுக்கு வயிற்றில் வலி இருந்தது. அதனை சமாளித்துக்கொண்டு இருந்தாள். வீட்டில் அம்மாக்கு தெரிந்தால் கண்டிப்பாக அடி விழும் என்று அவளுக்கு நன்றாக தெரியும். எதனை நாள்கள் உணவின்றி உறங்கி இருப்பாளோ அவளுக்கே வெளிச்சம். சிறிது நேரத்தில்...............
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top