பாகம் 1
இது தான் என்னோட முதல் கதை. எதவும் தப்பு இருந்தா மன்னிசுறுங்க.
அன்று அவள் வாழ்வின் முதல் காதல் அநுபவம். காலை வேளை அவசர அவசரமாக குளித்து விட்டு சாப்பிட்டு அலுவலகம் கிளம்பி கொண்டிருந்தாள். அம்மா lunch box எங்கம்மா. இந்தாடி, என்னம்மா வெச்சுருக்க மோர் சாதம் தாண்டி இன்னும் சமைக்கல. சாயந்திரம் வந்து சாப்புடி. இந்தா இந்த பால குடிச்சிட்டு போ. வேண்டாமா நாழி ஆய்டுது கிளம்பறேன். சொல்லிவிட்டு பஸ் ஸ்டாண்டுக்கு நடக்க ஆரம்பித்தாள்.
இடையில் அவளுடைய காலேஜ் நண்பன். என்ன நிலா ஆபீஸ் நேரம் ஆச்சா. கேட்டுக்கொண்டே பின் தொடர்ந்தான். அவளும் அவனுடன் பேசிக்கொண்டே பஸ் ஸ்டாண்டுக்கு வந்து விட்டாள்.
நிலா இந்தா பூ வாங்கினேன் உனக்கு தான் வெச்சுக்க. ஏண்டா எனக்கென்ன இவளோ தல முடியா இருக்கு இவளோ பூ வாங்கின. பரவால்ல வெச்சுக்க. இந்தா பிஸ்கட்ஸ் வாங்கினேன் அத சாப்புடுண்ணு குடுதுட்டு பை சொல்லிவிட்டு போய்ட்டான். அவனை அவள் தன்னுடைய நல்ல நண்பனாக பார்த்தாள். பசி அறிந்து உணவு கொடுக்கிறனல்லவா. விளைவுகள் பின்னே.
பஸ் வர வரைக்கும் நிலா பத்தி கொஞ்சம் பாக்கலாம். நிலா 19 வயது நிரம்பிய பருவ மங்கை. ஒல்லியான தேகம் மாநிறம். சுறுசுறுப்பான நடுத்தர வர்க்க பெண். தங்கை தம்பி என கொஞ்சம் சாதாரண குடும்பம். 12 வகுப்பு முடித்து டைபிஸ்ட் வேலைக்கு போய் கொண்டிருக்கிறாள். மாலை நேர கல்லூரி படிப்பு. அப்பா வேலையில் இப்போது இல்லை. குடும்ப பொறுப்பு இப்போது நிலா தலையில். வாயடி யாருக்கும் அஞ்சாதவள். துணிவு மனோதைரியம் கொண்ட பெண். எல்லாரையும் போல சின்ன சின்ன ஆசைகள் உள்ள பெண்.
பஸ் வந்திருத்து ஏறி விட்டாள். முதலில் ஏறினால் கொஞ்சம் உக்காரலாம். நண்பன் கொடுத்த பிஸ்கெட் எடுத்து சாப்பிட ஆரம்பித்தாள். மனம் என்னவோ அன்று தன் பள்ளி வாழ்க்கை நினைத்தது. அன்று டியூஷன் சென்டர் இருந்து வரும் போது அவனை பார்த்தாள். டியூஷன் மாஸ்டர் class எடுத்து கொண்டிருந்தார் நான் கொஞ்சம் அடுத்த batch. அவனோட கொஞ்சம் பேச முடிந்தது.
டேய் அபி தானே நீ, ஏன் நீ க்ளாஸ்கு வர்றதில்ல கேட்டேன். அவன் அவனோட அப்பா அம்மாவுக்கு எங்கயோ டிரான்ஸ்ஃபர் அய்ட்டதால அவன் வெற இடம் மாறிட்டதாகவும் அவனுக்கு எதோத சந்தேகம் அதனால வந்ததாகவும் சொன்னான். மாஸ்டர் வந்திட்டர் அப்பறம் பேசலாம் சொல்லிட்டு போய்ட்டேன். அப்பறம் அந்த மாஸ்டர் அதை என்னோட அம்மாகிட்ட போட்டு குடுத்துது அடி வாங்கி குடுதுட்டான் அது வேற கத. ஓடம்பு புன்னாகள மனது தான் ரொம்ப வலிச்சது. அன்னைக்கு போனவன் தான் இன்னைக்கு வர லைஃப் ல வர்ல. நல்ல உயரம் மாநிறம் யாற்குடையும் பேச மாட்டேன். ரொம்ப அமைதியான பையன். என்னோட அப்படியே எதிர் அதனாலேயே அவன ரொம்ப புடிச்சு போச்சு.
பஸ்ல ஏறி அலுவலக ஸ்டாப் வந்தோன்ன கண்டக்டர் விசில் சத்தம் கேட்டு நினைவுக்கு வந்தாள் நம் நிலா. சாயந்திரம் பாக்கலாம் அக்கா பக்கத்தில் உக்காந்து இருந்த சக பயணியிடம் விடை பெற்று அலுவலகம் நடக்கலானாள்.
அலுலகத்தில் யாரும் இல்லை. அவளுக்கு தினம் சீக்கிரம் வர வேண்டும் இரவு வரை பணி. இடையில் எந்த தளர்வும் கிடையாது. பசி வயற்றை குடைய ஆரம்பித்தது. ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர்.
தினேஷ் கார்த்திக் பாலா சார் எல்லாரும் வந்திருந்தனர். ஒவ்வொருத்தருக்கும் காலை வணக்கம் அண்ணா என்றாள். கவி வந்தான். ஹாய் டா கவி என்ன இன்னைக்கு சீக்கரம் வந்துட்ட எனக்கு பசிக்குது டா நான் என்னோட லஞ்ச் இப்போ சாப்டிரேன் நீ மதியம் வெளில வாங்கி தரயா கேட்டாள். அவனும் சரி என்றான். உடனே வேளை பளு தொத்திக்கொண்டது. எல்லோரும் ஓடினார்கள். மதியம் சாப்பிட்டு வர வெளியில் செல்ல வேண்டும்
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top