❤️அஆ 4 ❤️
அன்பிலே விளைந்த ராகம் ஒன்று...
கண்ணிமைக்கும் நேரத்தில் என் மனதைப் பறித்துச் சென்றது...
என்னென்று தெரியாத பல மாற்றங்களை என்னுள்
விதைத்து சென்றது...
ஜனனமும் மரணமும் காதலின் முதல்படியெனில் நித்தமும் உன் காதலில் நான் புதிதாய் ஜனிக்கிறேன்...
அன்பே ஆருயிரே...❤❤
தர்ஷனா....
கௌதமின் மாமன் மகள்...
தன் தாயின் தமையன் என்ற போர்வையில் இவனிடம் அடாவடியாக நடந்து கொள்ளும் சந்திரசேகரின் குடும்பம் மீது அவனுக்கு எப்பொழுதும் ஒரு பிடித்தம் இருந்ததில்லை...
உறவினர்கள் கூட்டத்தில் இவன் மட்டும் தனியே ஒதுங்கி நிற்பான்... துன்பத்தில் தோள் கொடுக்காத உறவுகள் இருந்தென்ன இறந்தென்ன என்பதே அவனது வாதமாக அமையும்...
உறவினனாய் வந்து நண்பனாய் மாறியவன் எனில் அது விஜய் மட்டும் தான்... சிறு வயதில் தாய் தந்தையை விபத்தில் பலி கொடுத்தப்பின் அவனது பொருப்புகளைப் பார்வதி ஏற்று கொண்டார்... அவனுக்கும் இன்னோர் தாயாய் விளங்கினார்...
என்னதான் அன்பை பொழிந்து வளர்த்தாலும் தன் தாயின் இடத்தில் பிறரை வைத்து பார்கக முடியவில்லை விஜயால்... நம் தாய்க்கு நிகர் அவர் மட்டும் தானே...
விஜய் அவன் பள்ளிபருவத்தை விடுதியிலே கழித்தான்... அதன் பின் அவனது கல்லூரி வாசமும் அவ்வாறே நகர்ந்தது...
தர்ஷனா கௌதமின் வாழ்க்கை துணைவியாக அமைவதில் விஜய்க்கு முதலில் இருந்தே சற்று நெருடலாக இருந்தது... என்னென்று வகை பிரிக்க முடியா ஒன்று அவனை வாட்டியது...
அழகு பதுமையாக மௌனமே மொழியாய் சுற்றி திரிந்த தர்ஷனாவை நேருக்கு நேர் சந்திக்கும் பொழுதெல்லாம் அவனுக்கு பாம்பின் நினைவுதான் வரும்... அமைதியாய் இருக்கும் அவள் எப்போது விஷத்தைக் கக்குவாள் என காத்திருந்தான்...
கௌதமிற்கு இந்த திருமணத்தின் மீது பெரிதாய் எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லை... தெரியாத பேய்க்கு தெரிந்த பிசாசே உசிதம் என நினைத்தான்... வீட்டிற்கு மருமகளாய் வருபவள் தன் தாயோடு ஒத்து போனாள் சரி என்றுதான் எண்ணினான்...
இப்படி திருமண நாளும் பல வஞ்சத்தை தன்னுள் அடக்கியபடி விடிந்தது...
அந்த புகழ் பெற்ற திருமண மண்டபமே விழா கோலம் பூண்டிருந்தது...
உற்றார் உறவினர் ஒன்று கூட கௌதமின் நெருங்கின நட்பு வட்டாரம், தொழில்துறை நண்பர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து கௌதமின் திருமணத்தை வரவேற்றனர்...
கௌதம் பட்டுவேட்டி சட்டையில் ஐயர் கூறும் மந்திரங்களை உச்சரித்து கொண்டிருந்தான்...
மணப்பெண் அறையில் தர்ஷனா முழு அலங்காரத்தோடு குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தாள்... முகம் பதட்டத்தில் வெம்பி போயிருந்தது...
மணமேடையைப் பார்ப்பதும் நேரத்தை பார்ப்பதும் வாசலலப் பார்ப்பதுமாக விசித்திரமாக நடந்து கொண்டாள்... அவளின் செயலில் குழம்பிய அவளின் தாய் மரகதம்...
"ஏய் என்னாச்சிடி... இப்ப எதுக்கு குட்டி போட்ட பூனை மாதிரி நடந்துட்டு இருக்க... கல்யாண பெண்ணு மாதிரியா இருக்கா...", என்று கடிந்து கொண்டார் அவர்...
"ஹாங் ஒன்னும் இல்லமா... கொஞ்சம் பயமா இருக்கு அவ்வளோதான்..." அவரின் முகத்தை காண அஞ்சியவளாய் தரையில் பார்வையை பதித்த படி பதில் கூறினாள்...
ஆனால் தாய் அறியாத சூதும் உண்டோ... அவள் தன்னிடம் எதையே மறைக்கிறாள் என தெளிந்தவராக அவள் கையை இறுக பற்றி முறுக்கியவர்
"ஏய் நல்லா கேட்டுக்கோ இந்த கல்யாணம் நடந்தே ஆகனும்... எதாவது பண்ணி இந்த கல்யாணத்த நிறுத்தனும்னு நினைச்ச கொன்னு புதைச்சிடுவன் பார்த்துக்கோ...", என்று அவளை மிரட்டியவர் பக்கத்திலிருந்த படுக்கையில் தர்ஷனாவை தள்ளிவிட்டு சென்றார்...
தர்ஷனாவிற்கு வாழ்வே சூன்யமானது போலிருந்தது... பணத்திற்காக பெற்ற பெண்ணை அடகு வைக்கும் பெற்றோரும் இருப்பரா... இதோ குத்துக்கல்லாட்டம் தன் கண் முன்னே நடமாடிக் கொண்டிருக்கிறார்களே...
தன் விதியை எண்ணி நொந்தவளாய் அவள் எய்த கடைசி அஷ்திரமாவது இலக்கை அடைந்து தன்னை இந்த இக்கட்டிலிருந்து மீட்டெடுக்க வேண்டுமென்று இறைவனை பிராத்தித்தார்...
தன் எண்ண சுழலில் மூழ்கியிருந்தவளை "பொண்ண அழைச்சிண்டு வாங்கோ...", என்ற ஐயரின் குரல் கலவரபடுத்தியது... முகமெல்லாம் வேர்த்து... அவளது தளிருடல் நடுங்க தொடங்கியது... கடைசியில் கடவுளும் தன்னைட கைவிட்டு விட்டாரா...
தற்கொலை செய்து கொள்ளலாம் என்றாலும் தன்னுள் ஜனித்திருக்கும் இன்னொரு உயிரை அழிக்க அவள் மனம் உடன்படவில்லை...
வேரொருவனின் கருவைச் சுமந்து கொண்டு மணமேடையில் தலைகுனிந்து கௌதமின் கையால் தாலியை கட்டிக் கொள்ளவும் முடியாது...
தான் ஏன் இவ்வளவு கோழையாக இருக்கிறோம்... பெற்றோரிடம் காதலை எதிர்த்து போராட நெஞ்சில் துணிச்சலில்லை... காதலித்தவனை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை... கௌதமிடம் உண்மையையும் சொல்லும் தைரியமில்லை...
உயிரை மாய்த்து கொள்ளவும் வழியில்லை...
இந்த பூமி இரண்டாக பிளந்து தன்னை விழுங்கிவிட கூடாதா என கண்ணீரோடு நின்றிருந்தவளை அந்த குரல் ஆபத்பாந்தவனாக காத்தது...
"இந்த கல்யாணத்த நிறுத்துங்க..." கம்பீரமாய் வெளிவந்த அந்த குரலில் அந்த திருமண மண்டபமே அமைதி காத்தது... மணக்கோலத்திலிருந்த கௌதம் மாலையை கலட்டிவிட்டு அந்த உருவத்தை நெருங்கினான்... விஜயும் அவனைப் பின் தொடர்ந்தான்...
"என்ன பிரோப்ளேம் சார்... யான் இந்த கல்யாணத்த நிறுத்தனும்...", விஜய் குழப்பமாக வினவினான்...
"நாங்க மிஸ்டர் கௌதம கைது செய்ய வந்துருக்கோம்... அவர் மேல வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தனதா ஒரு கம்ப்ளைன் பதிவாகிருக்கு...", சத்தமில்லாம் அவர்களின் தலையில் இடியை இறக்கி வைத்தார் ஏசிபி. ராம்குமார்...
"என்ன சார் சொல்றிங்க... இங்க அப்படி எந்தவிதமான சம்பவமும் நடக்கல... உங்களுக்கு யாரோ தப்பான தகவல் கொடுத்துருக்காங்க..." விஜய் அவரிடம் எடுத்து கூற...
"எல்லாம் விசாரிசிட்டு தான் வந்துருக்கோம்... அன்ட் இந்த கம்ப்ளைன் கொடுத்தது கல்யாண பொண்ணு தர்ஷனா தான்... அதனால் ப்லிஸ் கோப்ரேட் பண்ணுங்க மிஸ்டர் கௌதம்..." என்றவர் அவனின் கையில் விலங்கிட்டார்...
மண்டபத்தை விட்டு வெளியேறும் முன் தர்ஷனாவை ஒரு பார்வை பார்த்தான்...
அவன் முகம் காண அஞ்சியவளாய் தலை குனிந்து கொண்டவளின் மீது மலையளவு எழுந்த கோபத்தோடு அடிப்பட்ட புலியாய் அந்த திருமண மண்டபத்தை விட்டு காவல்துறை அதிகாரிகளோடு வெளியேறினான் கௌதம்...
❤️💜💜💜💜💜💜💜💜💜💜💜💜❤️
இணையுமா இருதயம்???
❤️💜💜💜💜💜💜💜💜💜💜💜💜❤️
தொடருமா ஒரு காதல் பயணம்???
❤️💜💜💜💜💜💜💜💜💜💜💜💜❤️
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top