8

பௌர்ணமி நிலவு வானவீதியில் தன் நட்சத்திரப் பட்டாளங்களுடன் ஊர்வலம் நிகழ்த்திக்கொண்டிருக்கும் சுகந்தமான இரவு நேரத்தில் விஷ்ணு மொட்டை மாடியில் நின்று  ஆகாயத்தையே வெறித்துக்கொண்டிருந்தான். 

 தன்னைச் சுற்றி நிகழும் அதிசயங்களின் வீரியத்தால் எதிலும் மனம் லயிக்காமல் இருநீதவனை கலைத்தது வேதாவின் குரல்.

    "என்ன விஷ்ணு சார் இங்க நிக்கறீங்க … தூங்கலையா இன்னும்" என்றபடி அவனருகில் வந்து நின்றாள் வேதா. 

"இல்ல வேதா தூக்கம் வரல… அதான் கொஞ்சம் காத்தாற நிக்கலாம்னு இங்க வந்தேன். நீங்க என்ன இன்னும் தூங்காம இருக்கீங்க? " என எதிர்கேள்வி கேட்டான் விஷ்ணு"

"இல்ல அதுவந்து … அது இருக்கட்டும்  நீங்க எங்க போனீங்க மார்னிங்க்ல இருந்து ஆளையே காணலை  … ராம் எவ்வளவு பயந்துட்டான் தெரியுமா? லன்ச் சாப்பிட கூட நீங்க  வரலை … அத்தை நீங்க எங்க எங்கன்னு கேட்டு ராமை நச்சரிச்சிட்டாங்க … ஒரு ஃபோன் கூட எடுத்து பேசமாட்டீங்களா "என கேட்டுக்கொண்டே சென்றவளையே ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான் விஷ்ணு . 

"என்ன விஷ்ணு நான் பாட்டுக்கு கேட்டுட்டு இருக்கேன் நீங்க பாட்டுக்கு அமைதியா இருக்கீங்க … நான் என்ன கதையா சொல்லிட்டு இருக்கேன்"என்று கடுப்புடன் கூறினாள் வேதா.

"கௌரி அம்மாவும் , ராமும் மட்டும்தான் என்னை காணாமல் கஷ்டப்பட்டாங்களா?" என்று அவளையே வைத்த கண் வாங்காமல் கேட்டான். 

அவனின் கேள்வியின் அர்த்தம் புரிந்துவிட்டது ஆனால்  புரியாதது போல் " இல்ல … அப்படியில்ல எல்லாருமேதான் பயந்துட்டோம்… ஏன் நம்ம கெஸ்ட் ராஜீவ் கூட நீங்க மொபைல் அட்டென்ட் பண்ணலன்ன உடனே வண்டி எடுத்துட்டு தேடலாம்னு சொன்னாரு"  எனக் கூறினாள்.

ராஜீவின் பெயர் கேட்ட நொடி அவனின் முகம் விஷ்ணுவின் மனக்கண்ணின் முன் வந்து நின்று ஆயிரம் சம்மட்டிகளால் தலையை அடிப்பது போல் இருந்தது. தலையைப் பிடித்துக்கொண்டவன் நின்றிருந்த இடத்திலேயே அப்படியே முட்டி போட்டு அமர்ந்துவிட்டான்.

திடீரென விஷ்ணுவிற்கு இப்படி ஆனதனால் பதறிய வேதா " விஷ்ணு … விஷ்ணு… என்ன ஆச்சு… தண்ணி கொண்டு வரட்டுமா ... " என நடுங்கும் குரலில் கேட்டுக்கொண்டிருந்தாள் . சற்று சுயநிலைக்கு திரும்பிய விஷ்ணு " யூ .. யூ .. டோன்ட் வொர்ரி… ஆம் … ஆம் ஆல்ரைட் " என்றபடி எழுந்துகொண்டான்.

"என்ன ஆச்சு விஷ்ணு … நான் வேணும்னா ராமை கூட்டிக்கிட்டு வரவா … " என விஷ்ணுவைப் பார்த்துக் கேட்டாள் வேதா … 

" இல்லை வேதா …லேசான தலை சுத்தல்தான் .. சரி ஆகிடும் … நீங்க ராம்கிட்ட இதைப்பத்தி எல்லாம் சொல்லாதீங்க …நீங்களும் இதை ஃபீரியா விடுங்க… டைம் ஆகிடுச்சு … வாங்க கீழ போகலாம்"  என்றவனை பின்தொடர்ந்து சென்றாள் வேதா.மனத்திற்குள் விஷ்ணுவிற்கு எந்த பிரச்சனையும் இருக்கக் கூடாது என்ற பிரார்த்தனையையும் கடவுளுக்கு வைத்தாள். தானும் அவனுக்கு ஒரு பிரச்சனையாய் மாறிவிடுவாள் என்று .

           தனதறைக்கு  வந்தவனுக்கு  தன்னைச் சுற்றிலும் நிகழும் மர்மங்களை நினைத்து அயர்ச்சியானது. இதற்கெல்லாம் அந்த சந்நியாசியால் தான் தீர்வு சொல்ல முடியும் என எண்ணியவன் ஒரு தீர்மானத்துடன் உறங்கச் சென்றான்.

மறுநாள் காலை விடிந்தவுடன் சீக்கிரம் குளித்து முடித்து தயாரானான் . ராமிடம் கூட சொல்லாமல் தன் காரை எடுத்துக்கொண்டு கிளம்பினான் . அந்த கிராமத்தின் அழகிய காலை நேரக் காட்சிகளும் அவன் மேனியில் தீண்டிய காற்றின் மென்மையான ஸ்பரிசத்தையும் சாதாரண நாளாக இருந்திருந்தால் அனுபவித்து கிளர்ச்சி அடைந்திருப்பான் . பாவம் இப்பொழுது அவனுக்கு அதையெல்லாம் கவனிக்க கூட தோன்றவில்லை . 

இதற்க்குள் ராமிடம் இருந்து அவனின் அலைபேசிக்கு அழைப்பு வந்துவிட்டது . " ஓ காட் , இவன் வேற இப்போ கால் பன்றானே , கேள்வி மேல கேள்வி கேட்டு நச்சரிப்பான் . கால் அட்டன் பண்ணாம விட்டுடலாம் என நினைத்து அந்த அழைப்பை ஏற்க்கவில்லை . மீண்டும் மீண்டும் அவனிடமிருந்து அழைப்பு வரவே மனதில் சிறிது குற்ற உணர்வுடன் அழைப்பை ஏற்றான் விஷ்ணு . 

அலைபேசியை காதில் வைத்தவுடன் " ஏய் விஷ்ணு , எங்கடா இருக்க . வீடு முழுக்க தேடியாச்சு . எத்தனை முறை கால் பண்றது ? எங்க போய் தொலைஞ்ச ? " என கேட்டுக்கொண்டே சென்றான் ராம் . 

" இல்லைடா தூக்கம் வரல . அதான் கொஞ்சம் வெளிய வந்தேன் . நான் சீக்கிரம் வந்துட்றேன் ச்சும்மா கால் பண்ணிட்டு இருக்காதே என்று கூறி ராமின் பதிலுக்கு கூட காத்திராமல் அழைப்பைத் துண்டித்தான் விஷ்ணு . 

பிறகு " இவன் விட்டால் அடிக்கடி ஃபோன் பண்ணி தொல்லை பண்ணுவான் . நம்ம மொபைல பேசாமல் ஏரோப்ளேன் மோட்ல போட்டுடலாம் என நினைத்து அதன் படியே செய்தான் விஷ்ணு . 

முதல் நாள் டயர் பஞ்சர் ஆன இடத்தில் வண்டியை நிறுத்தினான் . இருள் நேரத்தில் பார்ப்பதற்க்கும் பகல் நேரம் பார்ப்பதற்க்கும் சற்று வித்தியாசமாக இருந்தது . வண்டியிலிருந்து இறங்கி நேற்று பார்த்த அந்த புதரின் பக்கம் சென்று அந்த குகையை நோக்கி நடக்கலானான் . 

அந்த குகையை நெருங்கிய பிறகுதான் அதன் வாயில் பெரிய பாறையால் மூடப்பட்டிருப்பதை உணர்ந்தான் . அப்பொழுதுதான் நேற்று அந்த பாறை தானாக திறந்ததும் மூடிக்கொண்டதும் மனக்கண் முன் வந்து சென்றது . இந்த அலிபாபா குகைக்குள்ள எப்படி போகறதுன்னு தெரியலையே என கையை பிசைந்து கொண்டிருந்த வேளையில்தான் அக்கதவு மறுபடியும் திறந்தது . 

" அப்பாடா நல்ல வேளை நாம ஏதும் செய்யறதுக்கு முன் இதுவே திறந்துடுச்சு . முதல்ல அவரைப்பார்த்து நல்லா நாளு வார்த்தை கேக்கனும் " என மனதினுள் நினைத்தவன் அந்த குகையினுள் செல்ல ஆரம்பித்தான் . 

முதல்நாள் உணர்ந்த அதே வாசம் அந்த குகையினுள் வீசியது . சற்று தூரம் நடந்து சென்ற பிறகு " விஷ்ணுவர்மா வந்துவிட்டாயா ? உன்னைத்தான் எதிர்பார்த்து காத்திருந்தேன் . உன் வருகையைத்தான் எதிர்பார்த்திருந்தேன் என்ற குரலைக்கேட்டு திரும்பினான் . அவன் எதிர்பார்ப்பு வீணாகாமல் ஷாட்சாத் அந்த சந்நியாசிதான் நின்றிருந்தார் . 

"எதுக்கு மறுபடியும் என் நிம்மதியை குலைக்கவா… இந்த ஊருக்கு எப்ப வந்தேனோ அப்பவே என்னோட சந்தோஷம் காணாம போயிடுச்சு… அந்த குன்று , நீங்க, கனவு, கனவுல வந்தவன் நேர்ல வந்ததுன்னு என்னைச் சுத்தி சுத்தி மர்மமா நடந்துட்டு இருக்கு "

"உங்களாலதான் என் கேள்விக்கு பதில் சொல்ல முடியும் . இனிமேலும் என்னால இந்த பிரச்சனையில் உழன்டுட்டிருக்க முடியாது . தயவு செய்து இதுக்கு தீர்வு சொல்லுங்க"என்று அமைதியாயும் அதே சமயம் தீர்க்கமாயும் கூறினான் விஷ்ணு.

அவன் கூறுவதைக்கேட்ட அவர் அந்த புன்னகை மாறாமலேயே தன் இடுப்புக்கச்சையில் இருந்து ஒரு வட்டவடிவ சிறிய பெட்டியை எடுத்தார் . அதில் இருந்து கருப்பு நிறத்தில் மை போன்ற ஒரு வஸ்த்துவை அவரின் கையில் எடுத்துக்கொண்டார் . அவனை அருகில் வரச்சொல்லி தனக்கு எதிரில் அமர வைத்தவர் அவன் கண்ணை மூட சொன்னார் . அவனின் நெற்றியில் அந்த வஸ்த்துவைத் விபூதி வைப்பது போல் வைத்துவிட்டார் . 

விஷ்ணுவிற்க்கு ஒரு நொடி தன் உடம்பில் மின்சாரம் பாய்ச்சியது போல் ஒரு உணர்வு தோன்ற ஆரம்பித்தது . காட்சிகள் யாவும் இடம்மாறின . அவன் முன்பு கனவில் கண்டது போல அதே ஊர் , அதே அரண்மனை , அதே சிவாலயம் என எல்லா காட்சிகளும் பிசகின்றி அப்படியே இச்சமயமும் அவன் காட்சிகளில் தோன்றியது . ஆனால் இம்முறை மிக வித்தியாசமான ஒரு உணர்ச்சி அவனுக்கு ஏற்பட்டது . இத்தனை முறை ஒரு மூன்றாவது ஆளாக ஒரு திரைப்படம் பார்ப்பதைப் போன்று அந்த காட்சிகளைக் கண்டவனுக்கு இம்முறை தானே அங்கு இருப்பது போன்ற உணர்வு எழுந்தது . தானே அந்தக் காட்சிகளில் செயல்படுவது போன்ற எண்ணம் அவனுக்குள் எழுந்தது . 

அவன் இதுவரை கண்ட எல்லா சம்பவங்களும் அவனின் கண்முன் வந்து சென்றன . அவன் எந்த காட்சியை காணும்போது ராமும் வேதாவும் அவனின் மயக்கத்தை தெளிவித்தார்களோ அந்த காட்சியும் அவனின் கண்முன் விரிந்தது. அங்கே..... 

****** 

இயலாமையுடன் தன் அறையில் குறுக்கும் நெடுக்குமாக அலைந்து கொண்டிருந்தான் "அவன் " . அவனின் ஆடை அணிகலன்களை காணும் பொழுதே தெரிந்தது அவனும் அந்தஸ்த்தில் சளைத்தவன் அல்ல என்பது . பொறாமைத் தீ கொளுந்து விட்டு எரியும் கண்களும் , யாரையும் அலட்சியப்படுத்தும் பார்வையும் என அவனின் தோற்றமே அவனின் இயல்பைச் சொல்லிவிடும் . 

" வளவா என்ன நேர்ந்தது? ஏன் இப்படி நடந்து கொண்டிருக்கிறாய் ? பதட்டத்துடன் காணப்படுகிறாயே ? " . என்ற கேள்வியுடன் அந்த இடத்திற்க்கு வந்தான் அவனின் தோழன் . 

" என்ன நேர்ந்ததா ? இன்று கைக்கெட்டிய கனி வாய்க்கு கிட்டாமல் போய்விட்டதடா . பல நாட்களாக வகுத்து வைத்த திட்டத்தை செயல்படுத்த அற்புதமான வாய்ப்பு கிட்டியது . ஆனால் அந்த விஷ்ணுவர்மனால் அந்த திட்டம் தவிடு பொடி ஆகிவிட்டது . எப்பொழுது அவன் இந்த அரண்மனையில் கால் பதித்தானோ அப்பொழுதிலிருந்தே இந்த அரண்மனையில் என் மதிப்பு குறைந்து விட்டது . இந்த நாட்டு மக்களிடமும் அவனுக்கு செல்வாக்கு அதிகரித்துக் கொண்டே செல்கிறது . இந்த நாட்டின் சிங்காதனத்தில் நான் அமர்வதற்க்கு என் அண்ணனை விட அவன்தான் எனக்கு இடையூறாக இருக்கிறானடா . அவனைப் பார்த்தாலே கோபம் கொப்பளிக்கிறதடா " என குரோதத்துடன் கூறினான் அந்த வளவன். 

நீ இந்த நாட்டின் சிங்காதனத்தின் மீது கொண்ட மோகமும் , விஷ்ணுவர்மனின் மேல் கொண்ட கோபமும் நான் அறிந்த ஒன்றுதானே வளவா . ஆனால் இன்று நீ கொண்ட கோபம் சற்று அதிகமாக உள்ளது போல் தெரிகிறதே ! என்ன ஆயிற்று இன்று என கேட்டான் . 

இன்று என் அண்ணனும் அந்த விஷ்ணுவர்மனும் வீரர்கள் புடைசூழ காட்டிற்க்குள் வேட்டையாட சென்றனர் . அவர்களை பின் தொடர்ந்து நானும் சென்றேன் . ஒரு கட்டத்தில் வீரர்கள் பின்தங்கவிட்டனர் . நான் குறுக்கு வழியாக அவர்களுக்கு தெரியாவண்ணம் ஓர் இடத்தில் மறைந்து கொண்டு என் தமயனை கொல்வதற்க்கு ஆயத்தமாகி அம்பை அவனை நோக்கி எய்தேன் . ஆனால் அந்த விஷ்ணுவர்மன் அதைத் தடுத்து விட்டான் " என ஏதோ சாதாரண விஷயத்தை கூறுவதுபோல் கூறினான். 

இதைக்கேட்ட அவன் நண்பனோ " வளவா , இந்த அரியனையின் மீது உள்ள வெறி உன் தமயனின் மேல் உள்ள பாசத்தை விட உனக்கு அதிகமாகி விட்டது . இந்த அரியனைக்காக தமயனைக் கொள்ள உனக்கு எப்படி மனம் வந்தது " என ஆச்சரியத்துடன் கேட்டான் . 

அரியனையின் முன் அண்ணன் என்ன ? தம்பி என்ன ?. அவன் என் உடன் பிறந்த தமையன் என்றாலே நான் அவனைக் கொல்லத்தான் துணிந்திருப்பேன் . இவனோ என் மாற்றாந்தாய் பிள்ளை தானே . பிறகு ஏன் நான் கவலைப்படவேண்டும் . என சர்வசாதாரணமாக கூறினான் வளவன் . 

இருந்தாலும் நீ செய்வது தவறுதான் என்று என் உள் மனம் கூறுகிறது வளவா , அவர் உன்னை என்றுமே மாற்றாந்தாய் பிள்ளையாக இருந்தாலும் தன் உடன்பிறந்த சகோதரனைப் போலல்லவா பாவித்துக் கொண்டிருக்கிறார் என்று சொன்ன நண்பனின் கழுத்தில் வேகமாக தன் உடைவாளை உருவி வைத்தான் வளவன். " நான் செய்வது சரியா தவறா என முடிவெடுக்கும் அதிகாரம் உனக்கில்லை . நான் எது செய்கிறோனோ என்னைப்பொருத்தவரை அதுதான் சரி . அதை மீறி ஒரு வார்த்தை பேசினாலும் உன் சிரம் உன் சரீரத்தில் இருக்காது . அதை நினைவில் வைத்துக்கொண்டு பேசு ". என கூறியவனை பயத்துடன் உடல் நடுங்கப்பார்த்தவன் " மன்னித்து விடு , மன்னித்துவிடு வளவா, நான் இ இ இ இனிமேல் இப்படி கூறமாட்டேன் என உரைத்தான் அவன் தோழன் . 

அவன் கழுத்திலிருந்து வாளை எடுத்தவன் " ஜாக்கிரதை இனி இதைப்பற்றி பேசினால் உன் உயிர் உனக்கு சொந்தமாய் இராது " என கோபம் குறையாமல் கூறினான் 

அதே சமயம் ராஜசிம்மனின் அறையில் விஷ்ணுவர்மனும் ராஜசிம்மனும் அன்று நடந்ததைப்பற்றி ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர் . 

" விஷ்ணுவர்மா அந்த அம்பை எய்தவன் எங்கு சென்றிருப்பான் இப்படி மின்னல் வேகத்தில் மாயமாய் மறைந்துவிட்டானே . அவனை யார் அனுப்பி வைத்திருப்பார்கள் " என சிந்தனையுடனே கேட்டான் ராஜசிம்மன் . 

" அதுதான் அரசே எனக்கும் விளங்கவில்லை . ஆனால் அவனை சாதாரணமானவனாக எண்ணிவிட முடியாது . அந்த காட்டைப்பற்றி நன்றாக தெரிந்தவனாகத்தான் இருக்க முடியும் . இல்லையென்றால் நொடியில் அந்த கானகத்திலிருந்து மறைந்து விட முடியாது . அதனால் நாம் சற்று எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் . எதிரி நம் நாட்டில் உள்ள கானகத்திற்கே வந்துவிட்டான் . அவன் மட்டும் என் கைகளில் மாட்டியிருந்தால் அத்தொடு அவன் நேராக மேல்லோகத்திற்க்கு சென்றிருப்பான் . " என கோபத்துடன் கூறினான் விஷ்ணு . 

" ம்ம் அது அவனின் நல்ல நேரமாக போய்விட்டது . அவனைப்பற்றி விசாரிக்க ஆட்களைத்தான் அனுப்பிவிட்டாகிற்றே இன்னமும் அவனைப்பற்றி பேசிக்கொண்டிருக்க வேண்டாம் சென்று உறங்கு என ராஜசிம்மன் கூறவும் அரைமனதாக அவ்அவ்விடத்திலிருந்து சென்றான் விஷ்ணுவர்மன் . 

மறுநாள் பொழுது இனிமையாக புலர ஆரம்பித்தது . ராஜசிம்மனை சந்தித்த விஷ்ணுவர்மன் " அரசே அந்த கயவனைப்பற்றி யாருக்கும் எதுவும் தெரியவில்லை . மிகவும் சாமர்த்தியமாக காயை நகர்திதியுள்ளான்" என கூறினான் .அவன் பேசிக்கொண்டிருக்கும்போதே அங்கு வந்த வளவன் என்ன ஆயிற்று விஷ்ணுவர்மரே மிகவும் முக்கியமான விஷயம் போலிருக்கிறதே முகத்தில் கவலையின் சாயல் தெரிகிறதே " என வன்மத்தை மனதில் வைத்துக்கொண்டு கேட்டான் . 

மனத்தில் " என்னைப்பற்றி என்னிடமே கூறுகிறாயடா மூடா . எப்பொழுதும் உங்களால் என்னைப் பிடிக்கமுடியாது " என நினைத்தவன் " என் தமயனைக்கொள்ள வந்தவனை எப்படித்தப்பிக்க விட்டீர்கள் . நீங்கள் உடன் இருந்துமா இப்படி ஆகியது " என கூறினான் . 

" அவனைக் கண்டுபிடிக்கும் முயற்ச்சியில்தான் இறங்கியுள்ளோம் . கூடியவிரைவில் கண்டுபிடித்துவிடுவோம் " என கூறினான் விஷ்ணு . " அது உன்னால் எப்பொழுதும் இயலாத காரியம் விஷ்ணுவர்மா " என கூற துடித்த மனத்தினை கட்டுப்படுத்திக் கொண்டான் வளவன். 

***** 

அரியனைக்காக எதையும் செய்யும் துணிந்த அந்த கயவனின் மனத்தினில் ஒரு குரூரமான திட்டம் உதித்தது . அந்த திட்டத்தினை செயல்படுத்த தக்க தருணத்தை நோக்கி காத்துக்கொண்டிருந்த அவனுக்கு அதற்க்கான நாளும் மிகச் சமீபத்தில் நெருங்கியது .

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top