5

மன்னனுக்கு அருகில்  நெற்றியில் பிறைநிலா திலகம் தரித்து   முறுக்கிய மீசையுடனும்  தோள்வரை வளர்ந்த கருமையான கார்குழலுடனும் பட்டாடை உடுத்தி இடுப்புக்கச்சையில் வாளுடன் கம்பீரமாகவும் மிடுக்குடனும்  நின்றிருந்தான் விஷ்ணு.  

அப்போது அரசவையில் மாமன்னர் ராஜசிம்மன் வாழ்க !வாழ்க ! சேனாதிபதி விஷ்ணுவர்மர் வாழ்க வாழ்க என்ற வாழ்த்தொலிகள் எழுந்து விண்ணை எட்டின. 

அப்போது சிங்காதனத்தில் அமர்ந்திருந்த ராஜசிம்மன் அவையோரினைப்பார்த்து புன்னகையுடன் கையமர்த்தினார். தன் அருகில் கம்பீரத்துடன் நின்றிருந்த விஷ்ணுவைப் பார்த்து " விஷ்ணுவர்மா..... நாம் அடைந்த இந்த மாபெரும் வெற்றிக்கு காரணகர்த்தாவே நீதான். படைத்தளபதியாக பொறுப்பேற்ற மிகக் குறுகிய நாளிலேயே உன்னுடைய வீரத்தால் என் கருத்தைக் கவர்ந்து விட்டாய். இப்பொழுதோ நம்மை விட பல மடங்கு படைகளையும் படைவீரர்களையும் கொண்ட எதிரி நாட்டு படையை உன் வீரத்தாலும் புத்திகூர்மையினாலும் சிதறடித்து ஓடவிட்டு என் மனதில் உனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கி விட்டாய்." என தன் ஆண்மை ததும்பும் குரலில் ராஜ மிடுக்கு சற்றும் குறையாமல் கூறினார். 

இப்பொழுதுதான் நம் நிகழ்கால விஷ்ணுவிற்க்கு சிங்காதனத்தில் அமர்ந்திருந்தவரின் முகம் மங்களான காட்சியிலிருந்து சிறிது சிறிதாக தெளிவான காட்சியாக மாறிக்கொண்டே வந்தது. 

ராஜசிம்மன் .....பெயருக்கு தகுந்தார் போலவே கம்பீரமாக ராஜகளையுடனும் காட்சியளித்தார். கிட்டதட்ட அவருக்கு 30 அகவைக்கு மேல் இருக்காது. 

ராஜசிம்மன் பேசியதை கேட்ட அக்கால விஷ்ணுவர்மன் புன்னகை புரிந்தவாறே இல்லை அரசே இந்த வெற்றிக்கு நான் மட்டுமே காரணம் இல்லை. என் தனி ஒருவனால் இந்த வெற்றியை நிகழ்த்தியிருக்க முடியாது. இந்த வெற்றிக்கு காரணம் நம் படை வீர்களும் ,அவர்களை மனதைரியத்துடன் போர்க்களத்திற்க்கு அனுப்பிய அவர்களின் குடும்பத்தினரும் , எல்லாம் வல்ல அந்த இறைவனும் தான் காரணம் " என தன்னை மட்டுமே அரசர் புகழ்வதை கேட்க விரும்பாமல் தன் வெற்றிக்கு காரணமானவர்களையும் சபையின் முன்னே வைத்தான் விஷ்ணுவர்மன். 

அதைக்கேட்டு நகைத்த ராஜசிம்மன் "இந்த குணம்தான் நான் உன்னிடம் கவர காரணமான குணம். உன்னை என் நாட்டு படைத்தளபதி மட்டுமல்ல என் உற்ற நண்பன் என கூறுவதிலும் பெறும் மகிழ்ச்சி அடைகிறேன்." என கூறினான் ராஜசிம்மன். 

"விஷ்ணுவர்மா ... நாம் அடைந்த இந்த வெற்றியை கொண்டாட வேண்டும் என நான் நினைக்கிறேன். அதற்க்கு முன்னர் நம் சிவாலயத்தில் ஒருமுறை எம்பெருமானை தரிசிக்க வேண்டும்" என ராஜசிம்மன் விஷ்ணுவர்மனிடம் கூறினான். 

"உத்தரவு அரசே ......அதற்க்கான ஏற்பாடுகளை நான் செய்ய ஆரம்பித்து விடுகிறேன்." என விஷ்ணு ராஜசிம்மனிடம் தெரிவித்தான். 

அதைக்கேட்ட ராஜசிம்மன் நாளை காலை சூரிய உதயத்திற்க்குப் பிறகு ஆலயத்துக்கு செல்ல வேண்டும் . அதற்க்கான ஆயத்தங்களை செய்ய சொல்லுங்கள் என அங்கிருந்த பண்டிதரிடம் கட்டளையிட்டுவிட்டு அவையிலிருந்து சென்றான். செல்லும்போது தன் நண்பனும் படைத்தளபதியுமான விஷ்ணுவர்மனையும் அழைத்துச் சென்றான். 

விஷ்ணுவர்மனை ராஜசிம்மன் புகழ்வதையும் அவனை நண்பன் என்று சொன்னதையும் இரு விழிகள் கண்களில் குரோதத்துடனும் நெஞ்சில் வன்மத்துடனும் நோக்கிக் கொண்டிருந்தன. 

விஷ்ணுவை மக்கள் புகழ்வதையும் , அரசர் புகழ்வதையும் அவ்விழியின் சொந்தக்காரனால் எள்ளளவும் ஜீரணிக்க முடியவில்லை. ஆனால் தன்னால் நேரடியாக ஒன்றும் செய்யமுடியவில்லையே என்ற ஏக்கமும் எண்ணமும் அந்த கண்களில் ஒளிர்ந்தன. 

******* 

நம் நிகழ்கால விஷ்ணுவின் காட்சியில் இப்போது தெரிவது ஓர் சிவாலயம். அங்கே ராஜசிம்மனும் விஷ்ணுவர்மனும் எம்பெருமான் சந்நிதானத்தில் நின்று கொண்டிருந்தனர். 

அங்கே தேவார திருவாசகப்பதிகங்களை மனமுருகப்பாடி அங்கு எழுந்தருளிய எம்பெருமானை தொழுதனர். 

பின்னர் பிராகாரத்தை வலம் வரும் பொழுது விஷ்ணுவர்மா இந்த கோவிலில் உள்ள சிவபெருமானின் லிங்கத் திருமேனி மரகதத்தால் ஆனது . அது இந்த கோவிலுக்கு மட்டுமல்ல நம் தேசத்திற்க்கே கிடைத்த அரிய பொக்கிஷம் . அதை நம்மிடமிருந்து பறிக்கத்தான் அந்த வரகுணன் நம்மீது போர்த்தொடுத்து வந்தான். அவனை வீழ்த்தி நம் நாட்டின் அரிய பொக்கிஷத்தை பாதுகாத்து என்னை மகிழ்ச்சிக்கடலில் தத்தளிக்க விட்டுவிட்டாயடா என் நண்பா.!!!! என மகிழ்ச்ச்சிடன் கூறினாரன். 

"எல்லாம் நம் இறைவனின் கிருபையினால் நடந்தேரியது அரசே .....வஞ்சகர்களின் இடத்திற்க்கு நம் இறைவன் எப்படி செல்வார்? ." என கேட்டான் விஷ்ணுவர்மன். 

"அரசே காட்டுக்குள் உள்ள கொடிய மிருகங்கள் நம் வயல்களை பாழ்படுத்துகின்றன என்ற குற்றச்சாட்டை விவசாயிகள் வைக்கின்றனர்." நாம் வேட்டையாட சென்றும் பல நாட்கள் ஆகிறது எனவே நாம் வேட்டையாட கானகத்திற்க்கு செல்ல வேண்டும் என தாங்கள் கூறினீர்கள் அரசே " என்றான் விஷ்ணுவர்மன். 

ஆமாம் விஷ்ணுவர்மா நாம் இப்பொழுதே புறப்படலாம் என கூறினான் ராஜசிம்மன். 

உடனே விஷ்ணுவர்மன் அருகில் உள்ள சேவகனை அழைத்து வேட்டைக்குத் தேவையான அனைத்து ஆயுதங்கள் மற்றும் உடைகளையும் வரவழைத்தான். 

கானகத்திற்க்குச் சென்றவர்கள் பல மிருகங்களை வேட்டையாடினர். ஆனால் விவசாயிகள் குறிப்பிட்ட அந்த கொடிய காட்டுப்பன்றியானது அவர்களின் கண்ணில் அகப்படவே இல்லை . அதைத் தேடி தேடி ராஜசிம்மனும் விஷ்ணுவர்மனும் காட்டினுள்ளே வெகுதூரம் சென்றுவிட்டனர். அவர்களுடன் வந்த வீரர்கள் தங்களுடைய அரசர் மற்றும் சேனாதிபதியின் வேகத்திற்க்கு ஈடுகொடுக்க முடியாமல் பின்தங்கிவிட்டனர். 

அப்போது விஷ்ணுவர்மனின் கண்களுக்கு அவர்கள் எதிர்ப்பார்த்து வந்த காட்டுப்பன்றி சிக்கியது . உடனே வில்லை எடுத்தவன் அதில் அம்பை பொருத்தி எய்து அதைக் கொன்றான். இன்னொரு காட்டுப்பன்றி அரசனின் கண்ணில் அகப்படவே அதைக்கொல்ல அம்மனபை எய்ய சென்றவனை எதிர்பாரதவிதமாய் விஷ்ணுவர்தன் தள்ளிவிட்டான். 

கண்களில் சினத்துடன் விஷ்ணுவை ஏறிட்ட ராஜசிம்மன் அப்பொழுதுதான் தன் தலையின் மேலே பறந்து சென்ற அம்பை கவனித்தான். அதை கவனித்தவுடன் தன்னை இந்த அம்பிலிருந்து காக்கத்தான் விஷ்ணுவர்மன் தன்னை தள்ளிவிட்டான் என்பது தெளிவாக புரிந்தது. 

சட்டென அம்பு வந்த திசையை அவர்களிருவரும் நோக்க அங்கை கருப்பு போர்வை அணிந்த ஒரு உருவம் புரவியின் மேலே அமர்ந்திருந்தது. இவர்களிருவரும் தன்னைத்தான் நோக்ககுகிறார்கள் என்பதை ஊகித்த அது சட்டென தன் குதிரையை புழுதியை பறக்கவிட்டுக்கொண்டு கிளம்பியது. 

அந்த உருவத்தை கண்டதும் கண்களில் ரௌத்ரம் பொங்க  தொடர்ந்தான் விஷ்ணுவர்மன். 

அந்த உருவத்தை  தொடர்ந்து  இருவரும் சென்றனர்.  ஆனால் அந்த உருவம்  சென்ற வேகத்திற்க்கு அவர்களால்  அதை தொடரமுடியவில்லை. கடைசியில் அந்த உருவத்தை   அவர்களால் பிடிக்க முடியாமல் போய் விடவே  மிகுந்த  கோபத்துடன் காணப்பட்டனர் இருவரும். 

             இதற்க்கிடையில்  பின்தங்கி வந்துகொண்டிருந்த  அரண்மனை வீரர்களும்  இருவருடனும்  வந்து சேர்ந்தனர்.  வேட்டையை அதனுடன் முடித்துக்கொண்டு அனைவரும் அரண்மனைக்கு  வந்தனர். 

              அரண்மனையில்  ஒரு தனியறையில் நாம் முன்னர் பார்த்த அதே விழிகளின் உரிமையாளன்   இயலாமையுடன்  குறுக்கும் நெடுக்குமாக அலைந்து கொண்டிருந்தான் 

            திடீரென்று காட்சிகள்  பழைய தொலைக்காட்சிப்பெட்டியில் வரும் காட்சிகளைப்போல மெல்ல மெல்ல மங்களாகி பின் விஷ்ணு விஷ்ணு என்ற சப்தம் கேட்க ஆரம்பித்தது.  பின்  ஈரப்பதமாக இருப்பதை மெல்ல மெல்ல உணர்ந்த நம் நிகழ்கால விஷ்ணு சடாரென எழுந்து அமர்ந்தான். அவன் அருகில் ராம்  விஷ்ணு விஷ்ணு என அழைத்து அவனை உலுக்கிக் கொண்டிருந்தான். அருகில் கையில் தண்ணீர் பாத்திரத்துடன் வேதா நின்றுகொண்டிருந்தாள்.

சற்று   நேரத்திற்க்கு   முன்னர் .........

               ராம்,   வேதாவிடம்   “  வேதா   நானும்   விஷ்ணுவும்   ஃபால்ஸ்க்கு   போக  ப்ளான்   பண்ணிருக்கோம்   நீயும்   வரியா ?   உனக்கும்   வீட்டிலேயே இருக்க  போர்  அடிக்கும் .  லெட் ஜாய்ன் வித் அஸ் “   என   கூறினான். 

            விஷ்ணுவும் உடன் வருகிறான் என தெரிந்தவுடன்  "இல்லை ராம் நான் வரலை எனக்கு ஃபீவர் வர மாதிரி இருக்கு நான் ரெஸ்ட் எடுக்கபோறேன் ... நீங்க மட்டும் போய்ட்டு வாங்க ... " எனக்கூறினாள்.

         " உன்ன பார்த்தா ஃபீவர் வந்த ஆள் மாதிரி  தெரியலையே .டாக்டர்கிட்டயே  பொய் சொல்றியா .... உனக்குதான் இந்த மாதிரி இடம்லாம் ரொம்ப பிடிக்குமே ஏன் வரமாட்டேங்குற " எனக் கேட்டான் ராம் .

       " இப்ப ஃபீவர் இல்ல .... ஆனா உன் ஃப்ரெண்ட்ட பார்த்த உடனே வந்துடும் ... ஆள விடு சாமி ...அவனை பார்த்தாலே  பயமா இருக்கு" எனக் கூறினாள் வேதா ...

"ஏய் நீ பண்ண தப்புக்குத் தானே அவன் உன்னை திட்டினான் .தப்புன்னு தெரிஞ்சா அவன் உடனே கேட்டுடுவான் மத்தபடி அதை மனசிலயே வச்சிக்கிட்டு பொய்யா பழகமாட்டான்... ஹீ ஈஸ் சச் எ ஜெள் யூ நோ... நீ அவனை மாதிரி ஒரு ஸ்வீட் பர்சன பார்க்கவே முடியாது . ரொம்ப கேரிங் ... "என பேசிக்கொண்டே சென்றவனை இடைமறித்த வேதா ....  " போதும்  போதும் ... நேத்து அத்தையும் இதேதான் சொன்னாங்க .... நீயும் அதை அப்படியே வழிமொழியிற .... நான் நம்பிட்டேன் .... போதும் உங்க விஷ்ணுபுராணம் இப்ப என்ன நான் கிளம்பனும் அவ்வளவு தானே ... இதோ கிளம்பறேன் இரு " என சலிப்புடன் கூறி கிளம்ப ஆயத்தமானாள்.

வேதா சீக்கிரமே தயாராகி ராமின் அறைக்கு வந்தாள் வேதா. அவன் ஃபோனில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தான் . வேதாவைக் கண்டவன் ஃபோன் பேசுவதை நிறுத்திவிட்டு " வேதா கொஞ்சம் இம்பார்ட்டன்ட் கால் நான் பேசிட்டு வந்துட்றேன்... நீ போய் விஷ்ணு ரெடியான்னு பார்த்துட்டு வா " எனக் கூறி அனுப்பினான்.  

            



              ராம்  சொன்னவுடன் அவனை முறைத்துக்கொண்டே  விஷ்ணுவின்  அறையை  நோக்கி   வந்து  கொண்டிருந்தவள்   அவனின்  அறையை   நெருங்க  நெருங்க   வயிற்றுக்குள்  இனம்புரியா பட்டாம்பூச்சி  பறக்க  ஆரம்பித்தது.  ஒருவாறு  தன்னை  சமாளித்துக்கொண்டு  விஷ்ணுவின்  அறைக்கதவைத்  தட்டியவள்   பதில்   ஏதும்   வராததால்   தானே   கதவைத்  திறந்தாள். 

             

             கதவைத்  திறந்தவளுக்கு   அதிர்ச்சியே   மிஞ்சியது .  அங்கு  விஷ்ணு   கட்டிலில்   மயக்கமான   நிலையில்   விழுந்திருந்தான். அவன்  கட்டிலில்  கிடந்த  விதமே   அவன்   மயக்கமாகத்தான்   இருக்கிறான்  என  ஊர்ஜிதமானது.   அவனை  அந்த  நிலையில்  பார்த்தவுடன்   ஒரு  நிமிடம்    ஸ்தம்பித்தவள்   பின்    வேகமாக   அவனருகில்   சென்று   அவன்   பெயரைச்   சொல்லி    உலுக்கினாள் .  

                அதற்க்குள்    ராம்    வந்து விடவே    அவனுக்கு   கையும்  ஓடவில்லை  காலும்  ஓடவில்லை .  என்னதான்  டாக்டராக   இருந்தாலும்    மயக்கமுற்றிருப்பது   தன்   ஆருயிர்   நண்பனாதலால்   அவனால்   அதை    எளிதாக   எடுத்துக்கொள்ள  முடியவில்லை. 

                  அவனை   சரியாக   படுக்க   வைத்தவன்   விஷ்ணுவின்   சட்டைப்  பொத்தான்களை   தளர்த்தினான் . வேதாவும்  அருகிலிருந்த   டேபிளில்   இருந்து   தண்ணீரை   எடுத்து    அவன்   முகத்தில்  தெளித்தாள். 

              

               முகத்தில்  தண்ணீர்  தெளித்தவுடன்  மயக்கத்தில்  இருந்து  விழித்த  விஷ்ணு  தன்  அருகில்  கவலையுடன்  நின்று  கொண்டிருக்கும்  தன் நண்பன்  ராமினையும்  வேதாவினையும்  கண்டான். 

            “ விஷ்ணு  என்னடா  ஆச்சு  உனக்கு ?.  ஏன்  இப்படி மயக்கம்  போட்டு  விழுந்த ?. உடம்பு சரியில்லையா  மச்சி “  என  பதட்டத்துடன்  கவலை  தோய்ந்த  குரலில் வினவினான் .  

                உடனை  வேதாவும்  தான்  வைத்துள்ள  தண்ணீரை  ஒரு  டம்ப்ளரில்  ஊற்றி  “ இந்த  தண்ணியை  குடிங்க  விஷ்ணு .  கொஞ்சம்  ரிலாக்ஸ்டா  இருக்கும் “  என  கூறி  அதைக் குடிக்க கொடுத்தாள் அவள். 

                 ஆனால்  விஷ்ணுவால்  சட்டென  தன்  இயல்பு  நிலைக்கு  திரும்ப  முடியவில்லை . அந்த  மயக்கத்தின்  ஊடே வந்த கனவின்  தாக்கம்  இன்னும்  அவன்  நினைவிலிருந்து  முழுவதுமாக  விலகவிவ்லை.  அவன் , பக்கதில்  இருந்த  ராம்  மற்றும்  வேதாவினையும்  கவனிக்கவில்லை.  வேதா  கொடுத்த  தண்ணீரைக்  கூட  வாங்காமல்  அப்படியே பிரமை பிடித்தது  போல்  அமர்ந்திருந்தான்  விஷ்ணு. வேதாவோ “ எவ்வளவு நேரம் தான்  இப்படியே  தண்ணீரை   வைத்துக்கொண்டு  நிற்பது”  என  நினைத்தவள்  அவளே  தண்ணீரை  புகட்டிவிட்டாள். 

               அப்போதுதான்  அச்சச்சோ   ராம்  பக்கத்துல  இருக்கானே!  நாம  ஊட்டி  விட்டதைப்  பற்றி  ஏதாவது  நினைச்சிருப்பானா ?  சரி சரி ஏதாவது கேட்டாள்  பாவம் விஷ்ணு  ரொம்ப  டயர்டா  இருக்காரு  இல்லையா !  அதான்   நானே  கொடுத்துட்டேன்னு  என  கூறி  சமாளிச்சிடலாம் என நினைத்து  ராமிடம்  திரும்பினாள். 

                ஆனால்  ராமோ  அப்போது  விஷ்ணு   இருந்த  நிலைமையில்  இதை  எல்லாம். கவனிக்கவில்லை.   அவனுக்கு  விஷ்ணுவை   கவனிக்கவே   சரியாக   இருந்தது.  “அப்பாடா!  தப்பித்தோம்  இவன்  கவனிக்கலை”.  என  நிம்மதியடைந்தாள்  வேதா. 

                  ராம் “விஷ்ணு  விஷ்ணு  பதில்  சொல்லுடா ”  என   அழைத்துக்  கொண்டே  விஷ்ணுவை உலுக்கினான். படிப்படியாக  தன்  சுயநினைவிற்க்கு  வந்தான்   விஷ்ணு .  அப்பொழுதுதான்  தான்  கண்ட. காட்சிகள்   யாவும்  கனவில் கண்டவை  என  அவனுக்கு  உரைத்தது. 

                பின்   தான்  கண்ணாடி  முன்  நின்றுக்கொண்டு  இருக்கும் போது  கண்ட  காட்சிகள்  , பின்  தான்  தலையைப்   பிடித்துக் கொண்டு  கட்டிலில்  விழுந்தது   யாவும்  ஒன்றன்  பின்  ஒன்றாக  அவனின்  நினைவிற்கு   வந்தது.  தன்  அருகில்  அமர்ந்திருக்கும் நண்பனின்  கவலை   படர்ந்த  முகத்தைப்  பார்த்தவனால்  அங்கு   என்ன  நடந்திருக்கும் என்பதை  ஊகிக்க  முடிந்தது .  

               விஷ்ணு  , ராமைப்  பார்த்த  பார்வையிலேயே  அவனின்  மயக்கம் முழுமையாக   தெளிந்து  விட்டது   என்பதே  கண்டுகொண்டான்  ராம். ராம் விஷ்ணுவைப் பார்த்து  

              “ டேய்  என்னடா  ஆச்சு!  ஏன்  இப்படி  மயங்கி  கிடந்த ?  நாங்க  எவ்வளவு  பயந்துட்டோம்  தெரியுமா ?  நீ   இங்க  வந்ததில  இருந்து  சரியாவே  இல்லை.  உடம்பு   எதுவும்  சரியில்லையா ?  எதுவா  இருந்தாலும் ப்ளீஸ் சொல்லுடா . என  பாசத்துடன்  கேட்டான்  ராம். 

               விஷ்ணுவிற்க்கோ  “ ஏன்  இப்படி   ஆச்சுன்னு எனக்கே  தெரியலை. நானே கன்ஃப்யூஸ்டு  ஸ்டேட்ல  இருக்கேன்  இதுல  உன்னையும்  குழப்ப நான் விரும்பலைடா . சாரி  மச்சி “  என  மனதினுள்  நினைத்தவன்  ராமிடம்   மானசீகமாக  மன்னிப்பும்  கேட்டுக்கொண்டான். 

                   "என்ன  ஆச்சுன்னே  தெரியலைடா.   அதிகமா  ஸ்வெட்  ஆக  ஆரம்பிச்சது .... தாகம்  வேற  அதிகமா எடுத்தது. ஜன்னல்  வேற  மூடி  இருந்தது .  வெண்டிலேஷன்   ரொம்ப   கம்மியா  இருந்தது.அப்புறம்  தண்ணிகுடிக்கலாம்னு  நினைச்சு  பெட்  பக்கத்துல உள்ள டேபிள்  கிட்ட  போனேன்.  அப்படியே  பெட்ல  விழுந்துட்டேன்   போல..... இது   டிஹைட்ரேஷனால  வந்த  மயக்கம்  தான்டா இது.  வேற  ஒன்னும்  இல்ல .  ஐ அம் ஆல்ரைட் மச்சி ,  பீ  கூல் "  என  கூறி  சமாளித்தான். 

                   அவனை  நம்பாதது  போல்   பார்த்த   ராம்   “  ஏதோ  சொல்ற  நானும்   நம்பித்தொலையறேன் .  ஆனா  நீ  ஏதோ  மறைக்கிறன்னு   என்   ஏழாம்   அறிவு   சொல்லுது.  நீ  மட்டும்   என்கிட்ட   பொய்   சொன்னேன்னு   தெரிஞ்சது   மகனே  நீ  கைமா  தான்டா  அன்னைக்கு “ என  ராம்  கூறியதைக்   கேட்டு   களுக்கென்று   சிரித்தாள்  வேதா . 

               அப்போதுதான்   அவள்   இருப்பதே  இருவருக்கும்  ஞாபகம்  வந்தது.  “இப்போ  எதுக்கு  சிரிக்கிற  நீ “ என  ராம்  வேதாவிடம்  கேட்டான் .  அதற்க்கு  வேதாவோ “ இல்ல..... இவர்   மயக்கமாகி   விழுந்தப்போவே   நீ   பயந்து   உன்   முகம்   வெளிரிப்போச்சு .... இந்த   அழகுல   நீ   இவரை   கைமா   பண்ண   போறேன்னு   சொன்னியா அதான்   உன்னோட  ட்ரான்ஃபர்மேஷன்   பார்த்து   சிரிப்பு   வந்துடுச்சு “. என  வேதா  கூறினாள். 

               அதைக்கேட்டு   விஷ்ணு   சிரித்துக்கொண்டிருந்தான்   என்றால்    ராமோ  முறைத்துக்கொண்டிருந்தான் .  “ சரி  சரி  சிரிச்சது  போதும்.  அவன்   ரெஸ்ட்   எடுக்கட்டும்   நாம  இன்னொரு   நாள்  ஃபால்ஸ்க்கு   போகலாம்  என  வேதாவிடம்   ராம்  சொன்னான். 

              விஷ்ணுவிற்க்கும்  அந்த   ஓய்வு  தேவைப்படுவதால்  அவன்  மறுப்பேதும்  சொல்லவில்லை .  “ ராம் , இங்க  பாரு  நான்  மயக்கமாகிட்டேன்னு  அம்மாகிட்ட  சொல்லாத ...வருத்தப்படுவாங்க  ....புரியுதா ? வேதா , நீங்களும்  யார்கிட்டயும்  சொல்லாதிங்க  ப்ளீஸ் “. என  கெஞ்சும்  தொனியில்  கூறினான் . அதற்க்கு  ஒப்புக்கொண்டு  இருவரும்   வெளியே  சென்ற  பிறகு   தன்   முகத்தில்   செயற்கையாக   ஒட்ட  வைத்திருந்த  புன்னகையை   கழட்டினான்   விஷ்ணு . 

              இரண்டு   நாட்களாக   அவன்   கண்ட  கனவுகளும்  காட்சிகளும்  அவனை  ஒரு  வழியாக்கிவிட்டிருந்தன .  அவனே  அவனை  ஒரு  வித்தியாசமான   உடையில்  கண்டது , அவனின்  பெயர் , மரகத லிங்கம் , ராஜசிம்மனின்  முகம் ,  அந்த  குதிரையில்  இருந்த   உருவம்   என  அவனின்  மனதில்  கனவில்  கண்ட  காட்சிகள்   ஓடிக்கொண்டிருந்தன . 

             “ இதெல்லாம்  நமக்கு   ஏன்  கனவா  வருது  ....இதுவரை  நாம  கனவைப்பற்றி   கேள்விப்பட்ட  விஷயத்தில   நாம  நம்மோட   வாழ்க்கையில   தினமும்  பார்க்கிற   ஏதோ  ஒரு  விஷயம்   நம்ம  ஆழ்மனதில   போய்   தங்கி   அதுதான்   கனவா   ரெஃப்லேக்ட்   ஆகும்னு   படிச்சிருக்கோம் .  ஆனா  அந்த  கனவுளை  பார்த்த   யாரையும்   நான்   ஒரு  முறை  கூட  நேர்ல  பார்த்ததில்லை .   நான்தான்  ஃபேன்ஸி   ட்ரஸ் காம்படீஷன்ல  கூட  இப்படி  ஒரு  கெட்டப்   போடலயே .நான் ஹிஸ்டாரிக்கல்  நாவலும்  படிச்சதில்லை , பாஹுபலி  தவிர  வேற  ஒரு  படமும்  பார்த்ததில்லை “. 

               “ ஒருவேளை   நாம  அந்த  படத்த ஓவரா  இன்வால்வ்  ஆகி  பார்த்தோமா ? ஈஸ்வரா....... என்னை  ஏன்  இப்படி  சோதிக்கிற “ . என புலம்பிக்கொண்டு  இருந்தான் . 

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top