19
அந்த மோதிரத்தைப்பற்றி ராம் கூறக் கூற வெளிச்சக்கீற்று பளீரென சிந்தையில் உதயமாக ஆரம்பித்தது நம் விஷ்ணுவிற்கு . அப்பொழுது தான் ராமின் அன்னை கௌரி நேரமாகும் பொருட்டு அவனை அழைக்க வந்தார் . " தம்பி ... இன்னும் நேரமாகிறது தெரியலையா ? நல்ல நேரத்துக்குள்ள போனாதான் பூஜை பண்ண முடியும் . அப்பா எப்பவோ ரெடியாகி கீழ வெய்ட் பண்ணிட்டு இருக்காரு . இங்க வந்து பார்த்தா ரெண்டு பேரும் சாவகாசமா பேசிட்டு இருக்கீங்க ... எல்லா கதையும் வந்து பேசிக்கலாம் கிளம்புங்க தம்பிங்களா". என அவசர அவசரளாக அங்கு பேசிக்கொண்டிருந்த ராமையும் விஷ்ணுவையும் துரிதப்படுத்தினார் .
" இதோ கிளம்பிட்டோம்மா... அப்பா ரெடியாகிட்டாருன்னு முதல்லயே சொல்லிருக்க கூடாதா ... ஜீவா , பாலா , வேதா எல்லாரும் கிளம்பிட்டாங்களா ?"
" உங்களைத் தவிர எல்லாரும் ரெடிடா... இப்ப வர மாதிரி ஐடியா இருக்கா ... இல்ல இப்படியே கேள்வி கேட்டுட்டு இருக்கறதா உத்தேசமா ? " சற்று சலித்தபடி கௌரி கூறவும் " உடனே கோபம் வந்துடும் என் ராஜமாதாவுக்கு " என அவரின் கன்னத்தைக் கிள்ளி கொஞ்சியபடி அவனது அறையிலிருந்து புறப்பட்டான் ராம் . ராமினைத் தொடர்ந்து விஷ்ணுவும் ராம் கொடுத்த வேட்டி சட்டையை அணிந்துக்கொண்டு அவ்விடமிருந்து அகன்றான்.
கூடத்திலே கௌரி கூறியபடியே அனைவரும் கோவிலுக்கு செல்வதற்கு தயாராக இருந்தனர் . மாடிப்படியிலிருந்து இறங்கும் போதே விஷ்ணுவின் முகத்தில் ஏதோ ஒன்றைக் கண்டுபிடித்த ஜீவா அவன் அருகில் விஷ்ணு வரவும் "என்ன விஷ்ணு இன்னைக்கு முகம் ஏதோ பளிச்சுன்னு பிரகாசமா இருக்குற மாதிரி இருக்கு… ராமோட ரூம்ல இருந்து வரியே ஏதாவது கண்டுபிடிச்சியாடா?" என ஆர்வம் மேலிட வினவினான் ஜீவா.
"ஹ்ம்ம்… ஆமா ஜீவா… ரொம்பப் பெரிய விஷயம் தான். முதல்ல கோவிலுக்கு போகலாம் டைம் ஆகிடுச்சு கோவிலுக்கு போய்க்கிட்டே இதைப் பத்தி பேசலாம் எனக் கூறியபடி அவனை அங்கிருந்து கூட்டிச்சென்றான் விஷ்ணு
ஈஷ்வரபாண்டியனின் காரில் அவரும் கௌரி மற்றும் வேதாவும் அமர்ந்துகொண்டனர்.விஷ்ணு ,ராம் , பாலா ,ஜீவா மற்றும் ராஜீவ் விஷ்ணுவின் காரில் புறப்பட்டனர்.
அனைவரும் சரியாக பதினைந்து நிமிடத்தில் அவர்களின் குலதெய்வக் கோவிலை அடைந்தனர்.
மிக மிகப் பழமையான கோவில் என்பது பார்த்த மட்டிலேயே அங்கு புதிதாக வந்திருக்கும் அனைவருக்கும் விளங்கியது. இவர்களைக் கண்டவுடன் அக்கோவில் பூசாரி ஓடி வந்தார். காரின் டிக்கியிலிருந்து பூஜைக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் ராம் எடுத்து அவரிடம் கொடுத்தான்.
அதை வாங்கிய பூசாரி"அய்யா நான் சாமிக்கு அலங்காரம் எல்லாம் பண்ணிமுடிச்சிட்டு உங்களைக் கூப்பிட்றேன். நீங்க நல்ல நேரம்ஸ முடியறதுக்குள்ள பொங்கல் வச்சிடுங்க" என்றபடி அப்பூஜைப் பொருட்களை எடுத்துச் சென்றார்.
கௌரியும் வேதாவும் பொங்கல் சாமான்களை எடுத்துக்கொண்டு பொங்கல் வைக்கச் சென்றனர். அப்போது கௌரி வேதாவிடம் "டேய் வேதாம்மா… இந்த குடத்தை எடுத்துட்டுப் போய் குளத்துல இருந்து தண்ணி எடுத்துட்டு வாடா… அந்த தண்ணில தான் இங்க பொங்கல் வைக்கனும்டா"எனக் கூறினார்.
வேதாவும் குடத்தை எடுத்துக்கொண்டு குளக்கரைக்குச் சென்றவள் தண்ணீரைக் குடத்தில் நிரப்பி எடுத்து வந்துகொண்டிருந்தாள்.முதல் முறை புடவை கட்டியிருந்ததால் குடத்துடன் நடந்துகொண்டிருக்கும் போது திடீரென புடவை சிக்கி விழப்போனவளை கீழே விழாதவாறு தாங்கிப் பிடித்தான் விஷ்ணு.
பொங்கல் வைக்க விறகுக்கட்டையை எடுக்க வந்தவனின் கண்களில் வேதா தட்டுத்தடுமாறி நடந்து வருவது தெரிந்தவுடன் ஓடி வந்தவன் அவளை கீழே விழாதவாறு பிடித்துக்கொண்டிருந்தான்.
அப்பொழுதான் வேதாவைக் கவனித்தான் விஷ்ணு. மெல்லிய அலங்காரத்திலும் கூட தேவதையைப் போல் மிளிர்ந்தவளை ஒரு நொடி இமைக்கவும் மறந்து பார்த்தான்.
அவன் பார்ப்பதை கவனித்த வேதா அவசர அவசரமாக அவனின் பிடியிலிருந்து விலகி கோபத்துடன் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்."இவ எதுக்கு இப்படி கோபமா இருக்கா… நம்மளைப் பார்த்த உடனே அழகா இருந்த முகத்தை இப்படி அஷ்டகோணலுக்கு திருப்பிக்கிறா… " என நினைத்தவன் அவளிடம் அவள் காதருகே குனிந்து . " யூ ஆர் லுக்கிங் ஸ்டன்னிங் ஹனி. ஜஸ்ட் கார்ஜியஸ். புடவைல ரொம்ப க்யூட்டா இருக்கு உன்னைப் பார்க்க " என அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறினான்.
"ஏன் சார்… உங்க கண்ணுக்கு இப்பதான் நான் தெரியறேனா… இப்பதான் ஃபர்ஸ்ட் டைம் புடவை கட்டிருக்கேன். புடவை கட்டின உடனே உங்க கிட்ட காட்ட ஆசையா வந்தா ஒரு காம்ப்ளிமென்ட் பண்ணிங்களா என்னை… அப்படியே ஸ்ட்ரெய்ட்டா உங்க ஃப்ரெண்ட் ரூம்க்கு போய்ட்டீங்க… இப்ப மட்டும் என்ன வந்துச்சு …போங்க உங்க ஃப்ரெண்ட்ஸ் வெய்ட் பண்றாங்க பாருங்க அங்க போங்க… என விறு விறுவென்று நடந்துகொண்டே கோபத்துடன் கேட்டாள்.
"ஹே… என்னம்மா நீ… இதுக்கெல்லாம் கோபப்படுவாங்களா… ஏதோ யோசனைல இருந்துட்டேன்டா...நீ கூடத்தான் நான் வேட்டி சட்டை போட்டுறக்கிறதைப் பார்த்து எதுவும் சொல்லலை… நான் ஏதாவது கேட்டேனா"என்றபடி அவளைப் பார்த்துக் கூறினான் விஷ்ணு.
"ஹ்ம்ம்… எல்லாத்தும் கரெக்டா ஒரு பதிலை வச்சிக்கோங்க சார்….நீங்க டாக்டருக்கே பதிலா வக்கீலுக்கு படிச்சிருக்கனும் சார்… உங்க பேச்சுத் திறமைக்கு பொருத்தமான வேலையா இருந்துருக்கும்… இப்பவே இப்படி … கல்யாணத்துக்கு அப்புறம் எப்படியோ... ஈஷ்வரா… காப்பாத்துப்பா… என்றபடி கையெடுத்துக் கும்பிட்டு கடவுளை துணைக்கு அழைத்தாள்.
அதற்கு தன் சிரிப்பையே பதிலாக அளித்து விஷ்ணு"சரி சரி நீ குடத்தை தூக்க வேண்டாம் நானே தூக்கிட்டு வரேன். மறுபடியும் கால் தடுக்கிடப்போகுது" எனக் கூறி மீதம் உள்ள தூரத்திற்கு அவனே தூக்கி வந்தான்.சிறிது தூரத்திற்கு வந்த பிறகு
" அவனின் அக்கறையில் அகம் மகிழ்ந்தவள் ….ஹ்ம்ம் போதும் போதும் விஷ்ணு… இனிமேல் நானே தூக்கிட்டு போயிட்றேன் அங்க எல்லாரும் இருக்காங்க பார்த்த ஏதாவது நினைச்சிப்பாங்க… இனிமேல் நான் பார்த்துக்குறேன்" எனக் கூறியபடி குடத்தை அவனிடம் இருந்து வாங்கியவள்"அப்புறம் ஒன்னு சொல்ல மறந்துட்டேன் விஷ்ணு…" என்றபடி அவனருகில் வந்தவள் " நீ ஒரு பர்ஃபக்ட் ஹஸ்பன்ட் மெட்டீரியல்தான்…" என்று கூறியபடி சந்தோஷமாக சென்றாள் வேதா…
பிறகு தன் நண்பர்கள் பட்டாளத்துடன் இணைந்துக் கொண்டான் விஷ்ணு.
" டேய் ... என்னடா இது இடுப்புல நிக்கவே மாட்டேங்குது ... ஒழுங்கா நான் என்னோட பேன்ட் ஷர்ட்டே போட்டுட்டு வந்துருப்பேன்ல...வேஷ்டி சட்டையோடதான் வரனும்னு ஒரு பெட்டிங் வேற மண்ணாங்கட்டி " என்ற பாலாவின் கதறலில் சுற்றுப்புறத்தை உணர்ந்த விஷ்ணு அப்பொழுதுதான் தன்னருகில் வேஷ்டியை கட்டத்தெரியாமல் கட்டிக்கொண்டிருந்த பாலாவினைக் கண்ணுற்றான் . அவன் ஒரு பக்கம் வேஷ்டி அவிழ்ந்துவிடாமல் இருக்க அதனைப் பிடித்துக் கொண்டிருந்த விதமே அவனுக்கு சிரிப்பை வரவழைத்துக் கொண்டிருந்தது .
" என்ன மச்சி ... வேஷ்டி சட்டையெல்லாம் பலமா எவ்வளவு ஆசையா ராம் எடுத்துக்கொடுத்துருக்கான்… நீ என்னவோ இப்படி சலிச்சகக்குற ... அப்படியே இந்த ஜிலேபி கலர் சட்டைக்கும் வேஷ்டிக்கும் அப்படியே அம்சமா ராமராஜன் மாதிரியே இருக்கடா... என் கண்ணே பட்டுடும் போல அம்புட்டு லட்சணமா இருக்க மச்சி " என்ற ஜீவாவின் கிண்டலில் கோபத்தின் உச்சியில் சென்ற பாலா ...
" நீ வாய மூடு... எல்லாம் உன்னாலதான் குரங்கு.... வேஷ்டி சட்டை கட்டிட்டு வர சொல்லி என்கிட்ட பெட் கட்டினதே நீதானே " என ஜீவாவின் மீது பாய போனவனைத் தடுத்து " மச்சி விடுறா ... நிஜமாவே இந்த ட்ரெடீஷனல் அவுட்ஃபிட் ரொம்ப நல்லா இருக்கு... ஆக்ட்சுவலி யூ சுட் தேங்க் ஹிம் ... ஹேன்ட்ஸமா இருக்கடா... வா நான் இன்னும் கொஞ்சம் கரெக்டா கட்டி விட்றேன் எனக் கூறி மற்றவர்களை கிளம்ப சொல்லிவிட்டு பாலாவை மட்டும் சற்று மறைவான இடத்திற்கு கூட்டிச் சென்றான் விஷ்ணு .
வேட்டியை நன்றாக கச்சிதமாக கட்டினான் விஷ்ணு. திடீரென ஈஷ்வரபாண்டியனின் பேச்சுக் குரல் கேட்டது.
வேட்டியை கச்சிதமாக பாலாவிற்கு கட்டினான் விஷ்ணு. அந்த அறைக்கு அடுத்த அறையே ராமின் தந்தை ஈஸ்வரபாண்டியனுடையது . பாலாவும் விஷ்ணுவும் அந்த அறையிலிருந்து வெளிவரும்போது அந்த அறையிலிருந்து ஈஸ்வரபாண்டியனின் சன்னமான பேச்சுக்குரலைக் கேட்க நேர்ந்தது ...
" என்கிட்ட கேக்காம இன்னைக்கு ஏன் வரசொன்ன"
............
" எல்லாரும் குடும்பத்தோட குலதெய்வ கோவில்ல இருக்கோம் . நான் இப்ப அங்க வரமுடியாத நிலையில இருக்கேன்… புரிஞ்சிக்கோ
.........
அந்த குரலில் பதட்டத்தையும் அவசரத்தையும் உணர்ந்த விஷ்ணு அப்பேச்சினை உன்னிப்பாக கேட்க ஆரம்பித்தான் .
தன் அருகிலிருந்த பாலாவை " மச்சி மறந்தே போய்ட்டேன்டா .... எனக்கு முக்கியமா ஒரு மெய்ல் சென்ட் பண்ணனும் என் கசின் ஒரு விஷயமா என்கிட்ட ஹெல்ப் கேட்டான் . . அதை அவனுக்கு சென்ட் பண்ணிட்டு நான் உங்க கூட ஜாய்ன் ஆகிக்கிறேன். நீ இப்போ கிளம்பு ... நான் சீக்கிரம் வந்துட்றேன் ... " எனக்கூறி பாலாவை அங்கிருந்து அகற்றினான் விஷ்ணு .
அவனை அனுப்பியவுடன் மீண்டும் கவனமாக அப்பேச்சின் திசையில் காதுகொடுத்தான் .
" வேண்டாம் வேண்டாம்.... உன்ன முழுசா என்னால நம்ப முடியாது ... நானே வந்து பார்ட்டி கிட்ட பேசுறேன் "
......
"நீ மட்டும் ரிஸ்க் எடுக்கல… எனக்கும்தான் இதால பெரிய பிரச்சனை வரும்"
…..
" சரி சரி ... இன்னைக்கு நைட் அங்க வந்துடுவேன்... நீ எனக்கு அடிக்கடி போன் பண்ணிட்டு இருக்காத… புரியுதா?"எனக் கேட்டபடி அலைபேசியை அணைத்து தன் சட்டைப்பையில் போட்டுக்கொண்டார் ஈஷ்வரபாண்டியன்.
அதற்குள் பேச்சுவார்த்தை முடிவுக்கு வரவே ஈஷ்வரபாண்டியன் அங்கிருந்து சென்றார். அவர் தன்னைக் கவனியா வண்ணம் விஷ்ணு அருகிலிருந்த பெரிய மரத்திற்கு பின்னால் தன்னை மறைத்துக்கொண்டான் .
அங்கிருந்து ஈஷ்வரபாண்டியன் சென்றவுடன் அவரின் ஒவ்வொரு அசைவையும் உன்னிப்பாக கண்காணித்துக்கொண்டிருந்தான் விஷ்ணு.
சுவாமிக்கு பொங்கல் வைத்து முடித்தவுடன் அபிஷேக ஆராதனையும் தொடர்ந்து நடைபெற்றது. அனைவரும் பக்தியுடன் சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு வீட்டிற்குத் திரும்பினர்.
வீட்டிற்கு வந்து முதல் வேலையாக விஷ்ணுவைத் தனியே தள்ளிக்கொண்டு சென்ற ஜீவா "டேய்… என்னடா ஏதோ ரொம்ப பெரிய விஷயத்தைக் கண்டுபிடிச்சேன்… அதை கோவில்ல சொல்றேன்னு சொன்ன… அப்புறம் அதைப்பத்தி பேசவே இல்லையே… என்னடா விஷயம்"என ஆர்வம் மேலிட கேட்டான் ஜீவா.
"இல்ல ஜீவா… கோவில்ல இதைப் பத்திப் பேச நாம எங்க தனியா இருந்தோம்?… யாராவது நம்ம கூடவே இருந்துட்டு இருந்தாங்களே…." என்றவன் ஜீவாவிடம் குகையில் கிடைத்த மோதிரத்தைப் பற்றி ராம் சொன்ன விஷயங்களையும் தொடர்ந்து ஈஷ்வரபாண்டியன் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்த உரையாடல்களைப் பற்றியும் முழுவதும் கூறி முடித்தான்.
"என்னடா விஷ்ணு சொல்ற…. அப்போ இந்த மோதிரம் ராமோடது இல்லையா...ஈஷ்வரபாண்டியன் அங்கிளோடதா!.. அவரைப் பார்த்தா அந்த மாதிரி ஆள் மாதிரி தெரியலையேடா...ஷாக்கிங்கா இருக்கு விஷ்ணு" என அதிர்ச்சி பொங்க விஷ்ணுவிடம் கூறினான் ஜீவா.
"ஆமா ஜீவா… எனக்கும்தான் அதே ஷாக்கடிச்ச ஃபீலிங்டா… யாரைத்தான் நம்புறதுன்னு தெரியலை… சமயத்துல என் கண்ணையே என்னால நம்ப முடிய மாட்டேங்குது ஜீவா" என வருத்தமாக கூறினான் விஷ்ணு.
"சரி விடு விஷ்ணு… அடுத்து இப்ப என்ன பண்றதுனு யோசிச்சியா… " என வினவிய ஜீவாவிடம் "இல்ல ஜீவா… எதைப் பத்தியும் இப்ப என்னால யோசிக்க முடியலை.... இப்போதைக்கு அங்கிளோய ஒவ்வொரு அசைவையும் நோட் பண்றதுதான் முக்கியமான வேலை ...நைட் வரையும் பொறுத்திருந்து அவர் அப்படி எங்கதான் போறார்னு பார்க்கனும்"என யோசனையுடன் கூறினான் விஷ்ணு.
விஷ்ணு எதிர்பார்த்திருந்த அந்த இரவு நேரமும் நெருங்கியது . அனைவரும் நித்திராதேவியின் வசம் சிக்கியிருந்த அந்த அர்த்தசாம நேரத்தில் அவன் அவனது அறையிலிருந்து வெளியே வந்தன். அவன் எண்ணியபடியே ஈஷ்வரபாண்டியன் தூங்காமல் ஹாலில் அமர்ந்து புத்தகம் படித்துக்கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென்று அவரின் மொபைலில் அழைப்பு வரவும் அந்த அழைப்பை ஏற்றவர் " உன் காலுக்கு தான் வெய்ட் பண்ணிட்டு இருந்தேன் ... இதோ கிளம்பிட்டேன் ... இன்னும் அரைமணி நேரத்துல அங்க இருப்பேன் ...மீதிய நேர்ல பேசலாம் " எனக்கூறி அழைப்பை அணைத்தார்.
உடனே ஈஷ்வரபாண்டியன் அவசர அவசரமாக தன் கார் நின்றிருக்கும் போர்டிகோவை நோக்கி சென்று தன்னை அந்த வண்டியின் ஓட்டுநர் இருக்கையில் திணித்துக்கொண்டார் .
அவரின் இந்த அலைபேசி உரையாடலையும் அதனைத்தொடர்ந்து அவரின் அவசர நடவடிக்கைகளையும் கவனித்த விஷ்ணுவிற்கு அவரைப் பின்தொடர்ந்து செல்ல உள்மனம் உந்தித்தள்ளியது .
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top