15

             அறையையே   நோட்டம்  விட்டுக்கொண்டிருந்த  விஷ்ணு   அந்த இடத்தைப்   பார்த்தவுடன்   ஒரு   நிமிடம்    அதிர்ச்சியில்    அப்படியே   நின்றான் .    

               அவன்   பக்கத்தில்   நின்றிருந்த   வேதாவும்   அவன் பார்வை   சென்ற   திக்கை   நோக்கினாள் .அந்த   இடத்தில்   உள்ளங்கை   அகலத்தில்  கரிய    நிறத்தில்  ஏதோ   ஒன்று   அசைந்தபடி   இருந்தது   . அதைக்கண்டவுடன்   பயத்தில்    விஷ்ணுவின்   கையை    கெட்டியாகப்பிடித்துக்கொண்டாள் . 

              “ விஷ்ணு.... ப்ளீஸ்  விஷ்ணு   .... எனக்கு   ரொம்ப   பயமா   இருக்கு...   வாங்க   போய்டலாம் ...  அதைப்பார்த்தா  ஏதோ   விஷ  ஜந்து  போல    இருக்கு  ...  இந்த   காட்டுல   அதுவும்    இந்த   இடத்துல   விஷப்பூச்சி   இருக்க   அதிக   வாய்ப்பு   இருக்கு ...  இது   அதுல   ஒன்னா கூட   இருக்கலாம்  ... உங்களை   கெஞ்சி   கேட்டுக்கிறேன்   வாங்க   கிளம்பலாம்...  இன்னும்  இங்க   என்னென்ன   இருக்கோ ?" என்று   அழமாட்டாத   குறையாக    கெஞ்சியவளுக்கு     அங்குள்ள    ஆக்ஸிஜனின்    பற்றாக்குறை    வேறு     மூச்சுத்திணறலை    ஏற்படுத்தியது . 

              வேதாவின்     நிலையைக்கண்டு   பதட்டமுற்றவன்      அவளை   அங்கிருந்து    அழைத்துக்கொண்டு   அக்குகையிலிருந்து   வெளியேறினான் . 

                 அந்த குகையிலிருந்து வெளியே வந்தவனின் மனமோ லிங்கத்தை தேட முடியவில்லையே என்ற சலனத்துடன் இருந்தது .   ஆனால்   வேதாவின்    நிலையோ   அவனை   ஏதும்    யோசிக்கவிடாமல்    செய்து   தடைப்போட்டது  .   அவளை    அங்கிருந்து   வெளியே   கூட்டிவந்தவன்    சற்று    காற்றோட்டமாக    உள்ள   இடத்தில்   அமரவைத்து   தானும்   அவள்   அருகில்    அமர்ந்தான்  .  வேதாவின்   தலையை   ஆதுரமாகத்   தடவினான் .  



             “ சாரிடா   வேதா ... என்னாலதானே   உனக்கு   இவ்வளவு 

   கஷ்டம் ... நான்  உன்ன  அங்க   கூட்டிட்டே   போய்ருக்க  கூடாது . ஆதாரம்   காமிக்கிறேன்   அதிரசம்   காமிக்கிறேன்னு  உன்ன  வேற   இப்படி   கஷ்டப்படுத்திட்டேன்  ச்ச..எல்லாம்  என்னை  சொல்லனும்". என்று  தன்   தலையில்   அடித்துக்கொண்டான்  விஷ்ணு  . 

                 அதற்க்குள்   வேதாவும்  அங்கு  கிடைத்த   புத்துணர்ச்சியான   காற்றோட்டத்தின்  காரணமாக  சமநிலைக்கு   வந்தாள் .  “  ச்சோ   விஷ்ணு ...விடுங்க ... இப்போ   நான்   பர்ஃபெக்ட்லி   ஆல்ரைட் .   கொஞ்சம்   ஆக்ஸிஜன்   கம்மியா   இருந்ததால   அப்படி   ஆகிருக்கும் .  

                 இந்த   விஷயத்தை   இதோட   விட்டுடுங்க  ...  லிங்கத்தை  எடுக்கனும்   ... சபதத்தை   நிறைவேத்தனும்னு   சொல்லி   இந்த   பக்கம்   இனிமே   வந்தீங்கன்னா  நான்  கொலைகாரி   ஆகிடுவேன் …இந்த இடத்தில எல்லாம் ஆள் நடமாட்டமே இருக்காதுங்க… இன்னும் என்னென்ன விஷ பூச்சில்லாம் அங்க இருக்கோ தெரியல… நீங்க சொன்ன பூர்வ ஜென்ம கதை இருக்கே அதெல்லாம்  என்னால   இப்போ   கூட  முழுசா    நம்ப   முடியலை   விஷ்ணு  .  இது   உங்க  ஹாலுசினேஷனா   கூட   இருக்கலாம்   இல்லையா  ? என  கேள்வியோடு   நிறுத்தினாள்   வேதா . 

                  அவளிடம்    இனி   எந்த   வாக்குவாதமும்   செய்து    பிரயோஜனமில்லை   என   நினைத்தவன்   “ சரி   வா    கிளம்பலாம்  .  டைம்   ஆகிடுச்சி  “  எனக்கூறி   அழைத்துச்சென்றான் .   

                 காரில்    ஏறி    அமர்ந்து    வீட்டிற்க்கு    வந்து   சேரும்  வரையிலும்   ஒரு   அசாதாரண   அமைதியே   இருவருக்குள்ளும்   நிலவியது .   லிங்கத்தைக்  தேட முடியாதது  ஒருபுறமும்   வேதா    தன்னை   நம்பாதது   மறுபுறமுமாக   இரு    கவலைகள்   அவனை   ஆக்ரமித்துக்   கொண்டிருந்தன . 

                   வேதாவிற்கோ    விஷ்ணுவின்    செய்கைகள்   யாவும்  ஒருவித   பயத்தையே   கொடுத்தன . அவன்   கூறுவதை   அவளின்   மனது  நம்ப  முயற்சித்தாலும்   அவளின்   பகுத்தறிவு   நம்ப   மறுத்தது .  இவர்கள்   இருவரின்   எண்ண   ஓட்டங்களும்    இவ்வாறு   இருக்க   அவர்களின்   கார்   இறுதியாக   அவர்கள்   விட்டு    போர்டிகோவில்   நின்றது . 

                 வீட்டிற்குள்   நுழைந்தவுடன்    விஷ்ணு    சோர்வாக   இருந்ததால்   அப்படியே   சோஃபாவில்   சரிந்தமர்ந்தான் .  வேதா   முகம்   கழுவி   வருவதாகச்  சொல்லி    அவளின்   அறைக்குச்   சென்றுவிட்டாள். 

                 சமையல்    அறையிலிருந்த    வேலைக்காரப்   பெண்மணி   மனோன்மணி   ஹாலிற்குள்   யாரோ  வந்தது   போன்ற    அரவம்   கேட்கவே   வெளியே   வந்து   எட்டிப்பார்த்தாள் .  அங்கு   விஷ்ணு    அமர்ந்திருப்பதைக்   கண்ணுற்றவள்     “ தம்பி    ஜூஸ்   எதுவும்   கொண்டு   வரவா ? “ எனக்   கேட்டாள் .  

               “ இல்லம்மா  ... எதுவும்   வேண்டாம்  ... அம்மா   இல்லையா  ?  அவங்க   எங்க ?  என்று   கேட்டான் .  

                  அவள்    பதில்    கூற  வாயைத்   திறக்கும்   முன்னரே   காலிங்பெல்லின்    சப்தம்    அலற   விஷ்ணு   எழுந்து   சென்று   கதவைத்   திறந்தான் .   

                     கதவைத்  திறந்தவனின்    முகமோ   எதிர்ப்புறத்தில்   நின்றிருந்த   பாலா    மற்றும்    ஜீவாவைக்   கண்டவுடன்   சந்தோஷத்தில்    விரிந்தது.   ஓடிச்சென்று   அவர்கள்    இருவரையும்    அனைத்துக்கொண்டான்    விஷ்ணு . 

                   “  என்ன   மச்சி   நாங்க  இரண்டு   பேரும்   இல்லாம   ரொம்ப   சந்தோஷமா   இருந்த   போல   .... முகத்துல   ப்ரைட்னஸ்   இரண்டு   பர்ஸென்ட்   எக்ஸ்ட்ராவா   இருக்கே ! “ என   வந்ததும்   தன்   கேலிப்பேச்சினை   ஆரம்பித்தான்   விஷ்ணுவின்   நண்பன்   ஜீவா . 

                 “  வந்த   உடனே   மொக்கையை   ஆரம்பிச்சிட்டியா  ? எருமை   உள்ள  வா “  என   ஜீவாவை  அழைத்துக்கொண்டு   உள்ளே   வந்தான்  பாலா  . 

                “ டேய்   என்னை  பேசவே   விடமாட்டிங்களாடா   நீங்க ?    நீங்க   வரப்போறீங்கன்னு   என்கிட்ட   சொல்லவே  இல்ல ? தாத்தாவுக்கு   உடம்பு  எப்படி  இருக்கு   ஜீவா ? “  என   விசாரித்தான்   விஷ்ணு . 

                 “ அவங்களுக்கென்ன    ஜம்முன்னு   இருக்காங்க  .   நான்   அங்க  போய்   சேரும்போதே   அவங்களை   ஹாஸ்பிட்டல்ல  இருந்து   டிஸ்சார்ஜ்  பண்ணிட்டாங்க  . ஹி  ஈஸ்  ஃபைன்   நவ் .   ஒரு   பிரச்சனையும்  இல்ல .  அதான்   கிளம்பிட்டோம்  . ஒரு  சர்ப்ரைஸா   இருக்கட்டும்னு    நாங்க  வரோம்னு   யார்   கிட்டயும்   சொல்லலை .” எனக்  கூறினான்   ஜீவா . 

               வெகுநாட்கள்   கழித்து   தன்   நண்பர்களைப்  பார்த்தவுடன்   துவண்டிருந்த  அவனின்  உள்ளம்   ஏனோ    புதுவித   உற்சாகத்தை   தத்தெடுத்துக்கொண்டது  .  

             அப்போது    பேச்சு   சத்தம்   கேட்டு    வேதாவும்   அவர்களிருந்த   இடத்திற்க்கு   வர  அவளுமே   மிகுந்த   சந்தோஷத்துடன்   அவர்களை   வரவேற்றாள் . பின்   அவர்களுக்கு    சாப்பிட   ஏதாவது   கொடுக்க   சமையலறைக்கு   சென்றாள் .  

            இங்கே    பாலா  விஷ்ணுவிடம்   “  எங்கடா   நம்ம  மனிதர்   குல   மாணிக்கத்தை   பார்க்கவே   முடியலை .   ஸ்னாப்சாட்லயும்   மிஸ்ஸிங், வாட்சப்ல   ஆளே   அப்ஸ்காண்ட்   ஆகிட்டான்  “  என  கேட்டான் . 

          அவன்   ராமைத்தான்   கேட்கிறான்   என்பதை   நொடியில்   புரிந்துக்கொண்டவன்   “  அவன   இப்போ   நாம  நினைச்சாலும்   பிடிக்க  முடியாதுடா  .  அவன்  திருவிழா    வேலையில   பிஸியா  இருக்கான் .  இன்னும்   கொஞ்ச   நாள்ள   கோவில்ல   திருவிழா   ஏற்பாடு   பண்ணிருக்காங்க  .   அதனால அவங்க அப்பா  அவனை    திருவிழா    சம்பந்தமான   வேலையெல்லாம்   செய்ய   சொல்லிருக்காரு .  “ என   சுருக்கமாக   ராமின்   அலுவல்களைப்  பற்றி   விவரித்தான்   விஷ்ணு . 

            வேதாவும்   அதற்க்குள்    ஆப்பிள்   ஜூஸ்   சகிதம்   வரவும்   அனைவரும்   அதை   அருந்தினர் .  பின்   அவர்களிடம்  “ சரி  சரி  எல்லாரும்   போய்   ரெஃப்ரெஸ்  ஆகிட்டு   வாங்க  சாப்பிடலாம்   “ என  வேதா   கூறவும்   அனைவரும்    அவரவர்    அறைக்குச்  சென்றனர் . 

                

                தன்   அறைக்கு   வந்த  விஷ்ணுவின்   நினைவில்    மீண்டும்   அந்த   லிங்கம்  ஆக்ரமித்தது.அது    மனச்சோர்வை   தானாகவே   வரவழைத்தது .


               சற்று    நேரம்   அப்படியே   அமைதியாக   அமர்ந்தவனின்  மனத்தினில்     தான்    அந்த   குகையில் பார்த்த   அனைத்துக்   காட்சிகளும்   ஓடிக்கொண்டிருந்தது . 

கண்டிப்பாக பகல் நேரத்தில் தன்னால் தேடுதல் வேட்டையை நிகழ்த்த முடியாது என்று நினைத்தவன் அனைவரும்  உறங்கிய பின் மீண்டும் அங்கு செல்லலாம் என்று முடிவெடுத்தான்

                 அப்போது    அவனின்   அறையில்   அவனை   சாப்பிட   அழைக்க   வந்த   வேதா   அவன்   அமைதியாக விட்டத்தையே வெறித்துக்கொண்டிருப்பதைப்  பார்த்து  “  ஓய்   விஷ்ணு  இன்னும் அந்த விஷயத்தையே நினச்சிட்டு இருக்கியா நீ  .... முத்திப்போச்சா   உனக்கு ... அய்யோ   நான்   என்ன   செய்வேன்...   நம்ம   கல்யாணம்   ஒரு   மஹால்லயோ    இல்லன்னா     கல்யாண   மண்டபத்திலயோ  நடக்கும்னு   நினைச்சிட்டு   இருந்தேன் .   போற  போக்க   பார்த்தா   ஏர்வாடிலயோ   இல்ல  கீழ்பாக்கத்துலயோ  தான்  நடக்கும்   போல  இருக்கு  ... “ எனக்  கூறி   போலியாக   கண்களைத்   துடைத்துக்   கொண்டாள் . 

                    அவள்   கூறுவதைக்    கேட்டவனுக்கு    அவனையும்   மீறி   சிரிப்பு    பீறிடவே  “  என்னடா   சொன்ன  ... சரியா   கேக்கல  கொஞ்சம்   கிட்ட  வந்து   சொல்லேன்  “ என்றான்  விஷ்ணு  .  அவனின்   பேச்சை   நம்பி   அவன்  அருகில்  வந்தவளை   இழுத்து   அனைத்து   கையை   பின்புறம்   திருப்பி   இருக்கினான்  .   “ என்ன  சொன்ன  ... என்ன  சொன்ன  ... என்னை   பைத்தியம்னு   சிம்பாலிக்கா   சொல்றியா  நீ .  எவ்வளவு   தைரியம்   உனக்கு  .”  என்றவன்  அவன்   பிடியை   மேலும்   இருக்கினான்  .   

                  “  சிம்பாலிக்காவா ... அச்சச்சோ   நீ  என்னை   தப்பா   புரிஞ்சிக்கிட்ட   விஷ்ணு .   நான்   சிம்பாலிக்கா  சொல்லலை  ஸ்டெரெய்ட்டாவே  தான்  சொன்னேன்  “ என்று   அப்பாவியாக   முகத்தை   வைத்துக்கொண்டாள் .    இம்முறை   நிஜமாகவே   அவனால்   புன்னகையை   எழுப்பாமல்   இருக்கமுடியவில்லை .  இப்படியே   போனால்  தன்   இமேஜ்   முழுக்க   டேமேஜ்   ஆகிவிடும்  என  எண்ணியவன்   பேச்சை   திசை   திருப்பும்   பொருட்டு   அவளிடம் 

                  “ என்ன  மேடம்   இதுவரை  பன்மையில   பேசிட்டு  இருந்தீங்க   திடீர்னு   ஒருமைக்கு    தாவிட்டிங்க ?  என  அழகாக   ஒரு   புருவத்தை   உயர்த்திக்  கேட்டான் . 

                     “  இதுல  அப்படி   ஒன்னும்   பெரிய   ரீஸன்லாம்  இல்ல  விஷ்ணு .  ஒருமையில   கூப்பிட்டா   ரொம்ப   க்ளோஸா  இருக்க  மாதிரி  எனக்கு  ஒரு  எண்ணம்   அவ்வளவுதான் .  உனக்கு  பிடிக்கலைன்னா   சொல்லிடு  .   நான்  நீங்க  வாங்கன்னே  கூப்பிட்றேன்  “ என்றவள்  மேல்    தனக்கு   நொடிக்கு   நொடி   காதல்   அதிகரிப்பதை   உணர்ந்தவன் “ அதெல்லாம்   வேண்டாம்  வேதா ... நீ  இப்படியே   கூப்பிடு  .  இன்ஃபாக்ட்  நீ  இப்படி   கூப்பிட்றதுதான்  எனக்கு  பிடிச்சிருக்கு .  அது  ச்சும்மா  உன்னை  சீண்டிப்பார்க்கணும்னு  கேட்டேன்  “  என்றான்  விஷ்ணு . 

                “   நிஜமாவா ? “ எனக்  கண்களை  அகன்று   விழித்தபடி   கேட்டாள்.  “ அட   நிஜமாதான்டி   என   பெங்களூர்   தக்காளி  .  நான்   உன்கிட்ட   பொய்   சொல்லுவேனா .  என்   கண்ணைப்பாரு   உன்னை   எவ்வளவு   காதலிக்கிறேன்னு   தெரியும்   “ என்றான் . 

                    அவன்   கூறுவதைக்   கேட்டு    சிரித்தவள்    “ என்ன  டாக்டரே  !  இந்தியன்   சினிமாஸ்லாம்   பார்த்துட்டு  ரொம்ப   கெட்டுப்போய்ட்டிங்க ... கண்ல   போய்   லவ்   பண்றது   ஏதாவது   தெரியுமா ?  ரப்பிஷா  இல்ல ? “ என்றாள் .  

                  “ இல்ல .... கண்டிப்பா   தெரியும் . “ என்று   கூறி   கண்சிமிட்டினான்   அவன் . 

                     “ தெரியுமா ?  எப்படி   தெரியும்  ?  ஹவ்   ஈஸ்  இட்   பாஸிபில் ?”  என   கேள்வி   மேல்   கேள்வி   கேட்டுக்கொண்டிருந்தாள்   வேதா . 

                   “   ஓகே  ..ஓகே ... லெட்  மீ  எக்ஸ்ப்ளெய்ன் .  நாம   விரும்புறவங்களையும்   நேசிக்கிறவங்களையும்   பார்க்கும்போது   ஆட்டோமேட்டிக்கா   நம்ம   கண்ணுல   உள்ள   pupil  இரண்டு  மடங்கு   பெருசாகும் . அதை   வச்சே   கண்டுபிடிச்சிடலாம்   அவங்க  நம்மை   நேசிக்கிறாங்களா   ?  இல்ல    புரூடா   விடுறாங்களான்னு .  இண்ட்ரஸ்டிங்கா  இருக்கு  இல்ல ? என்று  கேட்டான் . 

                   “ ஹ்ம்ம்   யெஸ்   ரொம்ப  இண்ட்ரஸ்ட்டிங்கா   இருக்கு .  இது  எப்படி   உனக்குத்   தெரியும்  ? “ என்றவளிடம்  “ ஒரு   ஆர்டிக்கிள்ள   படிச்சேன்டா ... நாம   வேணும்ணா   ட்ரை   பண்ணி   பார்க்காலாமா   எனக்கேட்கும்போதே   வாயிலில்   யாரோ   வரும்   அரவம்   கேட்கவே  அருகருகே   நின்றிருந்த   இருவரும்   தள்ளி  தள்ளி   நின்றுக்கொண்டனர். 

                    அவர்கள்   எதிர்பார்த்தது    போலவே   அறைவாயிலில்   வந்து   நின்றாள்    மனோன்மணி   .  “ என்ன   மனோ   என்ன  ஆச்சு “   என   வேதா  விசாரிக்கவும் “ கீழ   எல்லாரும்   உங்க   இரண்டு   பேருக்காகவும்   சாப்பிடாம   வெயிட்   பண்ணிட்டு   இருக்காங்கம்மா   அதான்   உங்களை   அழைச்சிட்டு   போக   வந்தேன்  “ என்றாள்   மனோ . 

                    அப்போதுதான்   விஷ்ணுவை   தாம்   சாப்பிடுவதற்க்கு   அழைக்க   வந்தோம்   என்ற   நிதர்சனம்   உரைக்கவே  தன்   தலையில்   மானசீகமாக   குட்டிக்கொண்ட   வேதா  “ நீ   போ  மனோ   ... நாங்க   இப்ப   வந்துட்றோம்   எனக்கூறி   அவளை  அனுப்பி   வைத்தாள் . 

                   “ விஷ்ணு   யூ   ஆர்   டூ   பேட்  ... உங்க  கிட்ட   பேசினா  நான்  என்னையே   மறந்துட்றேன் .  ஆக்ட்சுவலி   நான்   உங்களை  சாப்பிட  கூப்பிடத்தான்   வந்தேன்.   ஆனா  ஏதேதோ   பேசி   என்னை  டைவர்ட்   பண்ணிட்டீங்க . “ என்றாள் . 

                      “ போச்சுடா  ! இதுக்கும்   நான்தான்  காரணமா  ? ஆத்தா   பரதேவதையே (குல  தெய்வம் )  என்னை   மன்னிச்சிடு   தெரியாம   பேசிட்டேன் .  வா  போகலாம்  .  எனக்கூறி   அவளை  அழைத்துக்கொண்டு   கீழே  சென்றான் .   

                         

                          சாப்பிட்டு   முடித்ததும்   அனைவரும்   அமர்ந்து    கதைப்பேசிக்கொண்டிருக்க   விஷ்ணுவின்   கருத்து   பாதி   அவர்களின்   பேச்சிலும்   பாதி   எப்போதடா   இருட்டப்போகிறது   எனவும்   இருந்தது .  அவனது   காத்திருப்பை   ஆதவனும்  உணர்ந்து   கொண்டானோ   என்னவோ    விஷ்ணுவை   மேலும்    சோதிக்க   விரும்பாமல்    அஸ்தமனமாகிவிட்டான் . 

                      அவன்    காத்திருந்த    அந்த   இரவு   நேரமும்   வந்துவிடவே    அனைவரும்   உறங்கிய   பின்னர்   ஷெட்டில்   இருந்த     தன்   வாகனத்தை    நோக்கி    வந்து    அதைக்   கிளப்பினான்   விஷ்ணு . 

     

              

               

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top