நாள் 1

பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது;

ஆழத்தின்மேல் இருள் இருந்தது;

தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார். 

தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார். வெளிச்சம் உண்டாயிற்று. 

வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்;

வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார்.

தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார்;

சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று.

ஆதியாகமம் 1:2‭-‬5

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top