ரெண்டு நிமிஷம்

[Chapter 3:காமம் 

காமம் என்று தலைப்பு வைத்துவிட்டு அந்த chapter காதலையே அதிகம் விளக்கியதை கவனித்தீர்களா? ஆம், காமம் என்பது அந்தரங்கமாய் கருதப்படுவது ஆதலால் காமத்தை வர்ணிக்க சொன்னால் காமம் அல்லாத காதலை வைத்து தான் விளக்குகிறோம். ]

இந்த தமிழ் wattpad என்று நான் எழுதிக்கொண்டிருப்பது seems like a series of short essays, சின்ன சின்ன கட்டுரைகள் மாதிரி இருக்கு. இது கருத்து என்பதால் எளிதில் எழுதிவிடுகிறேன். ஆனால் என் கதைகள் அப்டேட் பண்ணுறதுக்குள்ள விடிஞ்ச்சிருது. என்னுடைய இரண்டு கதைகள் அவளைக் காதலித்ததில்லை மற்றும் அழகியல் இவற்றை இப்போது படிப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள், ஒரே நாளில் எல்லா chapters உம படிக்கலாம். நான் எழுதும்போது படிச்சவங்க ஒரு chapter அப்டேட் கு ஒரு மாசம் வெயிட் பண்ணாங்க. நான் அடுத்த chapter போடும்போது கதையே அவங்களுக்கு மறந்துட்டு (எனக்கும் தான்).

கதாபாத்திரங்கள் need to have depth, 3 dimensional and have shades of grey. சிறந்த கதாபாத்திரங்கள் வில்லன், ஹீரோ என்ற வரையறைக்குள்அடைக்கப்படாமல் அவர்களுக்கென இருக்கும் நியாயத்தை முன்னிறுத்தி செயல்படுவர். உதாரணத்துக்கு அஞ்சலி படத்தில் தன் மனைவிக்குப் பிறந்த குழந்தையை மறைக்கும் தந்தை: ஒரு தாயிடம்  தன் குழந்தையை  எப்படி மறைக்கலாம் என்று நமக்கு தப்பாக தோன்றும் ஆனால் தன் மனைவியின் மனநலம், தன் குடும்பத்தின் நலம் கருதி அத்தந்தைக்கு தான் செய்தது நியாயமாகத்தான் தெரியும். தான் செய்யும்  ஒவ்வொரு தவறிலும் தனக்கு மட்டும் புரியும் நியாயம் உண்டு. அவளைக் காதளித்தைல்லை கதையிலும் இதை கூறியிருப்பேன். கணவனிடம் இருந்து முன்னாள் காதலை மறைப்பது அதுவும் கணவனும் முன்னாள் காதலனும் நண்பர்களாய் ஆன தருணத்தில் மறைப்பது நம் எல்லோருக்கும் தவறாய் தெரியும். ஆனால் தன் இல்வாழ்க்கையில் சலனம் ஏற்படாமல் இருக்க தான் எடுத்த முடிவு நியாயமானது என்று அவளுக்கு மட்டும் தான் புரியும்.

ஹீரோ, வில்லன், ஹீரோயின் என்ற வட்டத்துக்குள் குறுகாமல் மனிதனாய், நல்லதும் தீயதும் புரியும் மனிதனாய் ஒவ்வொரு கதாபாத்திரமும் இருக்க வேண்டும் என்பதில் நான் சிரத்தை எடுத்துக்கொள்வதுண்டு. 

இந்த bookஇல் (இத book நு கூப்டலாம முதல?) வேறு ஏதாவது topicஇல் நான் எழுத நீங்கள் ஆசைப்பட்டால் கமெண்ட் பண்ணலாம். எனக்கு வேற ஐடியா வரல, சோ வாசகர்கள் கிட்டவே கேட்கலாமே:) 

How to be No.1 in Tamil Romance chart என்ற தலைப்பில் ஒன்னு எழுதலாம்னு இருக்கேன்(நீங்களே தமிழ் romance chartஇல் first இல்லை நீ டிப்ஸ் கொடுக்குறியா அப்டின்னு குறுக்கு விசாரணை பண்ண கூடாது). நம்பர் ஒன் ஆகுறதுக்கு முதல் படி, அப்டேட் frequently. குறைந்த பட்சம் வாரத்துக்கு ரெண்டு நாலாவது அப்டேட் பண்ணனும். என்னை மாதிரி மாசத்துக்கு ஒரு தடவ இல்ல :) எல்லா கதையும் பாதியில் இல்ல கால்வாசியில் நிக்குது, சோர் வச்சிட்டு குழம்பு நம்ம பக்கம் வராததால சாப்டாம சோத்தை பார்த்துட்டு இருப்போமே அப்டி இருக்கு என் profile)

ஆனால் அந்த chart எழுத துவங்கியிருப்பவர்களுக்கு உதவும், numbers do have power. புதுசா wattpad வர்றவங்க அல்லது புதிதா ஒரு புக் தேடுபவர்கள் இந்த chart கு வந்து அலசுவதுண்டு. இதை advantage எடுத்துக்கலாம். தமிழ் wattpad இல் அதிகம் யாரிடமும் பேசாவிட்டாலும்  அமைதியா, உன்னிப்பா சில விஷயம்  கவனிச்சிருக்கேன். By the way, I love all my book covers:)

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top