நிராகரிப்பு - தமிழ் குடும்பம்


தமிழ் குடும்பம் நடத்திய போட்டியிலிருந்து நான் என் கதை, அவளைக் காதலித்ததில்லை ஐ விலக்கிக்கொள்கிறேன். இந்த வாரம் தான் அவர்களின் பக்கத்தின் கீழ் உள்ள comments, அவர்கள் மற்றவர்களிடம் பேசிய வண்ணம், கொடுத்த விளக்கங்கள் ஆகியவற்றை படிக்க முடிந்தது.

சீவன்கன் விருதுக்கு 19 கதைபாத்திரங்கள் நியமனம் செய்யப்பட்டு 5 கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. எதன் அடிப்படையில் செலக்ட் ஆனது என்பதற்கு அவர்களே விளக்கம் கொடுத்தனர்.

// 1. கதாநாயகன் கதையின் மிக முக்கிய பாத்திரமாக திகழ வேண்டும்

2. அவனுக்கென்று சில குறிக்கோள்கள் பொறுப்புணர்வு இருக்கவேண்டும்

3. எந்த ஒரு சூழ்நிலையிலும் மனம் தளராமல் தெளிவான முடிவுகளை எடுக்கும் திறனும் தைரியமும் இருத்தல்.//

இதை போலவே கண்ணகி விருது என்று வைத்து 16 இல் 3 டாப் 3 சென்றது. டாப் 3 சென்ற கதைகளுக்கு மட்டும் தான் மக்கள் வாக்களிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

நான் உங்களிடம் ஒரே ஒரு கேள்வி. மிச்சம் 14/13 கதைகள் ஏன் தேர்ந்தெடுக்கப்படவில்லை என உங்களால் விளக்கம் கூற முடியுமா? நீங்கள் தேர்வு செய்த கதை ஒன்றில் பெண் கதாபாத்திரம் முக்கிய கதாபாத்திரம் கூட இல்லை, இதை அந்த எழுத்தாளரிடம் கேட்டாலே ஆமாம் என்று சொல்வார்.

இக்கேள்விகளை கேட்டவர்களுக்கு இவர்கள் பதில் அளிக்கும் வண்ணம் ஒரு chapter அதிஅற்புதமாக எழுதியிருந்தனர்.

//உங்களால் தேர்வு செய்யப்படாத கதைகளெல்லாம் தகுதி அற்றவையா?//

என்று அவர்களே அவர்களுக்கு கேள்வி கேட்டனர். நான் அந்த கேள்வி கேட்கல, மிச்ச கதைகள் நீங்கள் கூறிய அடிப்படையில் இருந்தன மற ஏன் அவை டாப் 3 வரவில்லை என்பதே. They matched the criteria you set and yet you dismiss them without proper reason.

16 கதைகளை பற்றி நான் குறை சொல்லவில்லை காரணம் அப்பெயர்கள் மக்கள் சொன்னவை. ஆனால் டாப் 3 நீங்கள் சொன்னவை எனவே கேள்வி கேட்க எங்களுக்கு உரிமையும் உண்டு.

//உங்கள் தேர்வு சரியில்லை.

இந்த கேள்விக்கு அவர்கள் கொடுக்கும் பதில்: நீங்கள் விருப்பட்டால் அனைத்து கதைகளையும் படித்து விட்டு//

ஆனா இங்க ஒருத்தர் ரொம்ப நேரமா வாதாடிட்டு சொல்றாரு:

நீங்க முதலில் அனைத்து கதைகளையும் படித்ததற்கு என்ன சான்று கொடுத்தீங்க? என்ன ஒரு தெனாவட்டு, வேணும்னா எல்லா கதையையும் நீயே படிச்சுக்கோ அப்டின்னு. அந்த குழுவுல எல்லாரும் எல்லா கதையையும் படிச்சாங்களா அப்டி இல்லன்னா எப்டி எல்லாரும் ஒரு consensus முடிவுக்கு வந்தீங்க? நீங்க படிக்காத கதைய குழுவுல படிச்ச ஒருத்தர் நல்லாருக்குன்னு சொன்னாங்களா? 

//நீங்கள் வளர்ந்து வரும் விருதுகள் என்பதாலே தானே எங்களிடம் கேட்கிறீர்கள் இதே சாகித்ய அகாதமி(அவர்களின் எழுத்துப்பிழை ஆகும்) விருதுகளுக்கு உங்களால் எதிர்க்க(அவர்களின் இலக்கண பிழை ஆகும்) இயலுமா//

சாகித்ய அகாடமி விருதுக்கு judges யார் என்ற information உண்டு, ஒரு படைப்பாளி பத்திரிகையில் தன்னுடைய நியாயத்தை கேட்க அனுமதி, இல்லை உரிமை உண்டு. ஒரு முகமூடியை போட்டுக்கொண்டு நீங்கள் செலக்ட் செய்வதற்கு நாங்கள் காரணம் கேட்ககூடாது, காரணம் கேட்டால் தங்களை பரிதாபமாக victim கேம் விளையாடுகிறீர்கள்.

பிறகு அவர்கள் வைக்கும் ஒரு வேண்டுகோள்:

//எங்களிடம் தனிப்பட்ட முறையில் கலந்து விட்டு எங்கள் பதில்கள் பலன் அளிக்காவிட்டால் பொதுவாக கமென்ட் செய்யுங்கள். பிக் பாஸ் குடும்பத்தை போல கேமராவில் முறையிடாதீர்கள்//

ஒரு பெண் இன்னொரு பெண்ணை அவமரியாதை செய்தததும் தூற்றியதும் பொய் பழி சுமத்தியதும் பிக் பாஸ் போட்டு காட்டிய காமெராவினால் தான் தெளிவு அடைந்தது. தனிப்பட்ட முறையில் இருட்டில் பொய்களே ஆக்கிரமித்தன. வெளியில் வெளிச்சத்தில் நிற்க உண்மைக்கு மட்டுமே தைரியம் உண்டு.

ஏன் என் கதை டாப் 3 வரவில்லை என் நான் உங்களிடம் தனிப்பட்ட முறையில் கேட்கபோவது இல்லை. எல்லோரின் முன்னிலையிலும் தைரியமாக சுயமரியாதையுடன் (நீங்க தான் சொன்னீங்களே தைரியமான கதாபாத்திரம் நு) கேட்க எனக்கு உரிமை உண்டு. ஆனாலும் உங்களிடம் நான் கேட்பது ஒன்னு தான்: மிச்ச கதைகள் நீங்கள் கூறிய அடிப்படையில் இருந்தன மற ஏன் அவை டாப் 3 வரவில்லை என்பதே. I am stating that there is a lack of transparency in the selection process by tamilkudumbam.

நீங்கள் செய்வது சர்வாதிகாரம்.

என் கதைக்கு விளக்கம் அளிக்கவேண்டிய அவசியம் இல்லை என் கதையை நான் இப்போட்டியிலிருந்து விலக்கிகொண்டேன். ஆனால் தமிழ் wattpad இன் சமூகத்தில் ஒருவராக எனக்கு மற்ற கதைகளை பற்றி கேட்கும் உரிமை உண்டா இல்லை அதற்கும் உங்க கிட்ட அனுமதி கேட்கனுமாங்க?

விருது பெற்றவர் அவ்விருதை தூக்கி வீசினால் தான் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். விருது பெறாதவர்கள் சோகத்திலும் விரக்தியிலும் கேட்கிறார்கள் என்று நினைத்துக்கொள்வர். அப்டியே நினைச்சிக்கட்டும். ஏற்கனவே எனக்கு அட்வைஸ் வந்தும் I'm posting this to question lack of transparency.

எனக்கு என் கதையின் மேல் ஒரு கர்வம் உண்டு. என் கதையை படித்தவர்களுக்கு தெரியும், கதை முடிந்து 1.5 வருடங்கள் கழித்து இந்த விருது வந்தபோது அடுத்த நொடியே என் கதையை நியமித்தவர்களுக்கு தெரியும் எவ்வளவு ஆழமான தாக்கத்தை என் கதாபாத்திரம் ஏற்படுத்தியுள்ளது என்று.

 'அவள்' க்கு பெயர் இல்லை. தலைவனின் அருகில் மாதவியாய், அவன் தன்னை பிரிந்தபோது சீதையாய் பின் தன் தவற்றை உணர்ந்தபோது எல்லையில்லா அன்புடன் வரவேற்ற கண்ணகியாய் யாவுமாகி இருந்திருக்கிறாள் அவள். 1.5 வருடத்துக்கு பிறகும் குவியும் inbox messages சொல்கின்ற என் வெற்றியை. உங்களால் கிஞ்சித்தும் தர இயலாத விருதை. This chapter is not for me but for the other 27 stories that met the requirement but were not given proper reasons. 

All exact words of tamilkudumbam are in // signs without any compromise or change.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top