சிறையிலிருந்து ஒரு காதல் கடிதம்

இக்கம்பிகளின் இடைவெளியில் எனது உயிர் கசிந்துக்கொண்டிருக்கிறது. உனக்கு என்ன கவலை? நீ இத்தாலிக்கு ஓய்வெடுத்துவிட்டாய். அறுசுவை உணவு, மது, மாது, இல்லை, வேறு ஆண்கள் என உன் உலகம் சம நிலைக்கு திரும்பிவிட்டது. நான் தான் இந்த இருட்டில் போராடிக்கொண்டிருக்கிறேன். உடலுக்கு தீனி அளித்து மூளை மழுங்கி இச்சதுரத்தை சுற்றிவந்துக்கொண்டிருக்கிறேன்.

உன் வீட்டு பார்ட்டி ஒன்றுக்கு வந்தபோது உன் தாயார் சொன்னது நினைவுக்கு வருகிறது. ஆல்ப்ரெட் அழகுக்கும் பணத்துக்கும் அடிமை என்றபோது கண்ணியத்துக்கு ஒரு சிரிப்பு சிரித்தேன். இப்போது உன் அழகு என் செல்வாக்கு, அந்தஸ்து, அறிவின் மூர்ச்சை ஆகியவற்றை பறித்துக்கொள்ள உன் பணமோகம் என்னை கடனாளியாக்கியுள்ளது. நீ சாப்பிட்ட, குடித்த, சூதாடிய, களித்த எல்லாவற்றுக்கும் பணத்தை இறைத்தேன். சூதாட்டத்தின் தோல்வியில் எனக்கு டெலிகிரேம் போடுவாய், "பணம் கட்டிவிடு."

ஒன்று சொல்லட்டுமா? மூன்று மாதங்கள் எனை நீங்காது என்னுடனே உண்று, உடுத்தி, உறங்கி உரகதமாய் எனை சுற்றி இருந்தாயே அப்போது ஒரு முறைக்கூட என்னால் பேனாவை தொடமுடியவில்லை. நீ உடன் இருக்கும்போது என் படைப்பாற்றலும் கற்பனையும் அந்நியனை கண்ட பெண்ணாய் என் விரல் நுனியிலிருந்து விரைந்தோடின. உன்னை வெளிநாட்டிற்கு சுற்றுலா அனுப்பிய அந்த பத்து நாட்களில் எனது பேனா தாளை விட்டு நீங்கவில்லை. இரண்டு நாடகங்கள் எழுதி திருத்தி முடித்தேன். நீ உடன் இருந்தால் நஷ்டமே எனை நாடும் என அறிந்தும் காதலில் தளித்த இப்பேதை மனம் உன்னோடு சேர்ந்து களித்தது.

நம் காதலை உன் தந்தை நீதிமன்றத்தின் கூண்டில் ஏற்றியபோது அவருக்கும் உனக்குமான சண்டையில் நான் படகையானது தெரிந்தது. ஒழுக்கத்தின்பால் சென்ற மகனை காப்பாற்றியவர் என பெயரெடுத்துக்கொண்டு தன் எச்சரிக்கையை மீறிய மகனை கட்டிப்போட்ட கர்வத்துடன் உன் தந்தை நீதிமன்றத்திலிருந்து வெளியேறினார். என் தீய சக்தியால் திசைத்திருப்பப்பட்டவன் , தந்தையால் மீட்டெடுக்கப்பட்டவன் என மக்கள் உன்னை மன்னித்தனர். என்னை தண்டித்தனர்.

உன்னோடு சாப்பிட்ட டின்னரில் கதை பேசவில்லை, இலக்கியம் ஆராயவில்லை. அளவுக்கு அதிகமாய் சாப்பிட்டேன் குடித்தேன். இதன் முழு காரணி நான். எனது வீழ்ச்சிக்கு நானே வித்திட்டேன். குணத்தின் அடிப்படை கட்டுப்பாடு. அதை இழந்து உனது எல்லா இச்சைகளுக்கும் இசைந்த நான் தான் எனது அவமானத்தின் பழியை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

கவிஞன், எழுத்தாளன், சிந்தனையாளன், இலக்கியத்தின் புதினம் என்ற பட்டங்களுடன் சீரும் சிறப்புமாய் முடிந்திருக்கும் என் வாழ்க்கை. ஆனால் உன் மேலிருந்த காதலால் அனைத்தையும் இழந்துவிட்டேன். கைதி என்ற முத்திரை என் வரலாற்றை கிரகணமாய்(eclipse) மறைத்துவிடும் என அஞ்சுகிறேன்.

————————————————————

ஆஸ்கர் வில்ட்(Oscar Wilde) தனது காதலன் ஆல்ப்ரெட் டக்லஸ்ஸிற்கு(Alfred Douglas) சிறையிலிருந்து எழுதிய கடிதம். வில்ட் ஓரினச்சேர்க்கைகாக(homosexuality) 1895இல் இங்கிலாந்து நீதிமன்றத்தால் இரு வருடம் சிறையில் அடைக்கப்பட்டார். குடும்ப மானத்தை வாங்காதே என ஆப்ரெல்ட்இன் தந்தை கேட்டுக்கொண்டும் ஆல்ப்ரெட் வில்ட் உடன் ஒன்றாய் இருந்ததால் தந்தை வில்ட் மேல் கேஸ் போட்டார். அப்புரம் ஆல்ப்ரெட் குடும்பல் லார்ட்(Lord) குடும்பம் அதுனால அவங்க கேஸ் பிறாகு ஹாப்பியா இருந்தாங்க. வில்ட் திறமையும் புகழும் உள்ள எழுத்தாளன்(playwright, poet) ஆனா லார்ட்டு டபக்குதாஸ் இல்லயே அதுனால ஜெயில்ல போட்டுட்டாங்க.

இந்த லாக்டவுன்ல(Lockdown) வில்ட் சிறையிலிருந்து எழுதியதை(De Profundis) படிச்சிட்டு இருக்கேன். ஓரினசேர்க்கையோ இருஇன சேர்க்கையோ எல்லா காதலின் கசப்பான பிரிவிலும் குற்றம் சாடுதல் இருக்கும், சிறு விஷயங்களை பூதக்கண்ணாடியால் பார்த்து பெரிதுபடுத்துவதுண்டு. உன்னால வாழ்க்கையே போச்சுன்னு புலம்பும் வேடிக்கையும் இருக்கும், அதாவது தன்னோட செயல்களுக்கு மற்றவர்களை சாடுவது. சிறைவாசம் முடிந்ததும் வில்ட் உம் ஆல்ப்ரெட் உம் திரும்ப சேர்ந்து வாழந்தாங்க. இவ்ளோ திட்டிட்டு திரும்ப அவன்கிட்டயே போறியா நு கேட்கலாம் ஆனா அது தான் காதல்.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top