இறப்புக்கு பின் - Posthumous Works of Art

Posthumous works of Art

நமக்கு பிரியமானவர்களின் அதாவது குடும்பத்தாரின் அல்லது நண்பர்களின் இறப்பு ஜீரணிக்க முடியாததாயினும் அதன் உணர்வுகள் நம் மனதுக்கு தெரிந்தது, எதிர்பார்த்தது. நாம் சந்திக்காதவர்களின் மரணமும் நம்மிடையே சஞ்சலத்தை ஏற்படுத்தும் என்பது கொஞ்சம் காலம் கடந்ததும் தெரிய வரும், முக்கியமாய் கலைஞர்கள். Posthumous awards hold a potent force.

எதுக்கு இதுலாம் சொல்லிட்டு இருக்கேன்னு குழப்பமா இருக்கலாம். எனக்கும் கொஞ்சம் குழப்பமா இருக்கு ஆனால் ஆழ் மனம் கொட்டுவதை neat ஆ கோர்த்திட இயலாது.  என் கதை, அழகியல், எங்கேயோ தொடங்கி இரு வருடங்களைக் கடந்து எங்கோ முட்டி மோதி வந்து நிற்கிறது. வெளிநாட்டில் வேலைப் பார்க்கும் சில தமிழ் இளைஞர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வண்ணமாய் ஜப்பானில் அறிமுகமாகும் ராஜ். அதன் பின் ஒரு தமிழ் குரல் ஒலிக்க அறிமுகமாகும் ஜனனி. ஒருத்தன் பிழைக்க நாடு கடந்து வருகிறான் என்று தோன்றினாலும் அவனும் அவள் போல் ஒரு கடந்த வாழ்க்கையின் சுவடுகளை கரைக்கவே கடல் தாண்டி வந்திருக்கிறான். தாய்மை ஏய்தினாலே பெண் என்ற கூற்றை தொட்டும் தொடாமலும் கேள்வி கேட்டுவிட்டு கதையை நகர்த்திவிட்டேன். ஆனால் இக்கூற்று வெளிநாட்டில் இரண்டு, மூன்று தலைமுறையாய் வாழும் தமிழர்களும் நம்பும் ஒன்று. அமேரிக்காவில் வளர்ந்துவிட்டால் மட்டும் தமிழ் பெண்ணுக்கு சுதந்திரம் கிடைத்துவிடாது. 

அதன் பின் இக்கதை 9 வருட காதலின் பிரிவை கூடலின் மூலம் சொல்ல முயன்றது. கூடவே படித்து முடித்ததுமே எழும் கேள்விகளும் இதுவரை சமுதாயம் அவனுக்கு கொடுத்த மாணவன், இளைஞன், (liminal space given to adolescents and young men) ஸ்பெஷல் இடத்தை பறித்துவிட்டு ஆண் என்ற அடையாளத்தையும் அத்தகுதிக்கான் யோக்கியத்தையும் கேட்க ஆரம்பித்தது. பெண் என்பவள் எதையும் சாதித்துவிடுவாள் என்பதை புரிந்துக்கொண்ட ராஜ் அவளிடம் இருக்கும் தைரியம் தன்னிடம் இல்லாததை எண்ணி வெட்கப்படுவது அடுத்த கட்டம். ஆனால் அவள் தன்னவனை எக்காலத்திலும் தனக்கு நிகராய் ஒப்பிடுவாளே தவிர குறைத்து எண்ண மாட்டாள். 

இதை எல்லாம் உங்களிடம் சொல்ல, ஐ மீன், காட்ட முயற்சி பண்றேன். உங்களுக்கு வந்து சேருதான்னு தெர்ல. அதைக் கொண்டு செல்லும் அளவுக்கு என்னிடம் எழுத்து திறமை இருக்கான்னு தெர்ல. ரொம்ப எளிமையான தமிழில் எழுதுவது காரணம் அவ்வளவு தான் தெரியும் ஹாஹா! 

இரு கதைகளை, இரு காலங்களை ஒரே இடத்தில் சேர்க்க முற்படுகிறேன். ஆதலால் பல குழப்பங்கள் உங்களுக்கு தொணலாம் படிக்கும்போது. ஆயினும் என் மனம் நேர்த்தியாய் இருக்கிறது. எனக்கு தெரிந்த நண்பரின் 9 வருட காதல், நிச்சயதார்த்தம் வரை வந்த காதல், எப்படி உடைந்தது என அவர் கூறவில்லை என்பதால் என் எழுத்து மூலமும் கற்பனை மூலமும் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறேன். பிரிந்தோம் என சொன்னாரே தவிர அவர்களின் காதலை சொல்லவில்லை அவளின் கதரலையும் சொல்லவில்லை. முகம் தெரியா, உறவில்லா ஒரு பெண்ணின் கசங்கிய உலகம் கண் முன்னே வந்து போகிறது கெட்ட கணவாய். நிஜத்தை கடந்தவள் இன்று எப்படி இருக்கிறாளோ என எண்ணம் அசைபோடுவதுண்டு.

யாருக்கும் புரியாவிடினும் பரவாயில்லை. என் முதல் கதைக்கு கிடைத்த வரவேற்பு கிடைக்காவிட்டால் கவலையில்லை. அவள் மேல் வைத்திருக்கும் என்  அன்பின் பிரதிபலிப்பாக, என் சிறந்த எழுத்தாக, என் இதயத்தை அடகுவைத்து எழுதிய கதையாக அழகியல் இருக்கட்டும். என் இல்லாமையில் என் பெயர் சொல்ல இக்கதை போதும்.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top