அவனதிகாரம்
சில காலமாக தான் ஆங்கிலமே பிரதானமாக இருந்த இந்த wattpad siteஇல் தமிழ் பிரபலமாகியுள்ளது. இதற்கு முக்கிய காரணம், தமிழை tanglish இல் எழுதாமல் தமிழிலேயே எழுதும் வாய்ப்பு அதுவும் smartphoneஇல் வெகு எளிதாக கிடைக்கும் தமிழ் கீபோர்ட்.
ஹீரோ பெயர் அர்ஜூன், அழகானவன், திமிரானவன் என எண்ணிலடங்கா கதைகளின் முதல் chapter. கதை என்பது வார்த்தைகளால் ஓவியம் தீட்டுவது. படத்துக்கு லேட் ஆகிவிட்டதென no parking areaவில் பைக்கை பார்க் செய்யும் ஹீரோ. இங்க போலீஸ் ஜாஸ்தி, வண்டிய எடுத்துருவாங்க என்று நண்பன் கூற, அசால்ட்டாக பார்த்துக்கலாம் என சொல்வதில் தெரியவேண்டும் திமிர். திமிரானவன் என்று குறிப்பிடாமலே அவனின் திமிர் வெளிப்பட வேண்டும்.
ஆனாலும் ஓர் ஆணின் ஆண்மைக்கு எப்படி திமிர் ஈடாகும்? அதிகம் தமிழ் படங்களில் பார்ப்பதை கிறுக்கிக்கொண்டிருக்கிறீர்கள். High decibelஇல் கத்தும், ஆமா நான் அப்படி தான் ஆம்பளையா இருந்தா மோதி பாரு என படங்களில் இருக்கும் ஹீரோக்களை தவிர்க்கவே கதைகளின் பக்கம் திரும்புகிறோம். இங்கும் ஒரு ஆணின் ஆண்மைக்கு திமிர் தான் அளவுகோளா?
அமைதியாய், கண்ணியமாய் எல்லோரிடமும் சாதாரணமாய் பேசும் ஆண் எவ்விதத்திலும் குறைந்துபோகமாட்டான். ஏன், ஹீரோவுக்கு கோபம் அதிகம் என நிங்கள் சித்தரிப்பதைவிட கோபத்தைக் கட்டுப்படுத்தி நிதானமாய் முடிவு எடுப்பவர்களே அதிகம் கவர்கிறார்கள். நிஜ வாழ்க்கையில் கூட நீங்கள் குறிப்பிடும் இந்த கோபம் இருப்பதில்லை, ஆண்களின் உலகை நீங்கள் இவ்வளவு தான் புரிந்துவைத்திருக்கிறீர்கள்.
திருமணத்தை வெறுக்கும் ஆண்கள்... எத்தனை கதைகளில் இருக்கிறார்கள் என்பதைவிட எத்தனை கதைகளில் இல்லை என்று எண்ணிவிடலாம். உங்கள் கற்பனையில் மட்டுமே ஆண் திருமணத்தை வெறுக்கிறான். சாதாரண உலகில் ஒவ்வொரு ஆணும் திருமணம், குடும்பம் என்ற கட்டமைப்பை விரும்புகிறான். அதை தன் வாழ்க்கையிம் அடுத்த நிலையாக நினைக்கிறான். சுதந்த்திரத்தை பிடித்துக்கொண்டு நாம் சிங்கிளா தான் இருப்பேன்னு யாரும் சொல்லல.
கற்பனை அழகு தான். கதை கற்பனை தான். ஆனால் கற்பனை என்பது புதிதாய் எழுதுவதே தவிர மீண்டும் அதே திமிரான காதலையும் திருமணத்தையும் வெறுக்கும் 1000 இல் ஒரு இளைஞனை வைத்து romance எழுதுவதல்ல.
சமூக அக்கறைக் கதைகள் அவசியமல்ல ஆனால் பெண் என்பவளைத் தாண்டி குடும்பம், வேலை, நட்பு, தனி மனித யோசனை என ஒருவனின் வாழ்க்கை அகலமானது. அவன் வாழ்க்கையை காதல் என்ற வட்டத்துக்குள் குறுகிவிடுவது தங்களின் immaturity, lack of பக்குவம். புதிதாய் எழுதலாம் அல்லது குறைந்த பட்சம் அதே கதையைக் கூட அழகாய் காட்டலாம். எழுதுவதும் கதையை ஓவியமாய் காட்டுவதும் இரு துருவங்கள்.
[ காராராக எழுதுவதாய் நினைத்துக்கொள்ளவேண்டாம். ஒருவரின் கதை பிடிக்கவில்லையென்றால் குற்றம் சொல்லாமல் அடுத்த கதைக்கு நகர்ந்துவிடுவேன். ஆனால் பலரின் கதைகள் இந்த ஒரு template ஐ பின்பற்றி எழுதியிருந்ததால் சொல்ல வேண்டிய நிர்பந்தம். அடுத்தது அவளதிகாரம். Feel free to comment, I don't bite :D ]
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top