சுடும் சூரியனும், நீர் காணா நிலமும், முள் படர்ந்த செடிகளும் சூழ்ந்திருக்க , ஓயாது ஊளையிடும் ஓநாய்களுக்கும், உண்ண புல் கூட இன்றி உடல் மெலிந்த புலிகளுக்கும் மத்தியில் வேர்வையில் ஊறிய முகமும், கொடும் பசியில் வறண்ட கண்களும் , கருந்தேகமும் வெண் மனதும் கொண்ட எயினரின் கதை.…
மூன்று குடும்ப பெண்மணிகளின் சீரியல்களுக்குள் தொலைந்த வாழ்க்கை, சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அசாத்திய, அட்வெஞ்சராக மாறுவதை நகைச்சுவை கலந்து தொடுத்துள்ளேன். உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.…
ஆழி பேரலைகள் அனத்தமின்றி நிசப்தமாகும் பொழுது அவள் வருவாள்,அந்தி சூரியன் ஆழ்கடலில் அடங்கும் பொழுது அவள் வருவாள்,சொடுக்கும் நொடியில் கொடும் பனி சூழ்ந்தால் உடனே படகை நிறுத்து...தொலை தூரத்தில் விளக்கொளி தெரிந்தால் உடனே படகை திருப்பு....மதி மயங்கும் குரலில் ஒரு கானம் கேட்டால், உயிர் இருக்கும் வரை துடுப்பு போடு..இறுதியில் இளம் பெண்ணின் அழுகை கேட்டால், அசைவற்று நின்று கொள், இனி ஓடி பயனில்லை..அவள் உன்னை நெருங்கியிருப்பாள், இரு கண்களை மூடி இறைவனை வேண்டிக்கொள்.. மரணத்திற்கு அஞ்சாதே..மறந்தும் அவளிடம் கெஞ்சாதே..மனமெங்கும் சொல்லிக்கொள்..அவள் பெண் இல்லை.. அவளுக்கு இரக்கம் இல்லை.. அவள் ஆழ்கடல் அரக்கி.. அவள் பெயர்....மூளி.....…
வாழ்வில் மறக்க முடியாத பதின் பருவ காதலை பேசும் கதை தான் இது, இறக்கை முளைக்கும் வயதில் இறகாய் பறக்கும் இரு இதயங்களில் அழகிய நடனமே இந்த எளிய காதல் கதை. இறகாலான இந்த காதல் காலம் எனும் சூறை காற்றில் சிக்கி சிதைந்து திசையறியா தொலைவிற்கு சென்றாலும், திருடிய நினைவுகள் தெகிட்டாமல் அவர்கள் வாழ்வில் செய்யும் மாயன்கள் இந்த கதை.…