வானவில்

வானவில்லே உன்னை,

சிறுவயதில் தாய் சொன்னாள் அர்ச்சுனனின் வில் என்று,
சீரான பள்ளியிலோ ஒளிக் கற்றைச்சித றல் என்று;
அன்றொரு கவி சொன்னான் வானமகள் புருவம் என்று,
மற்றொரு விஞ்ஞானியோ இயற்கையின் மாய உருவம் என்று;
புத்தகத்தில் படித்தறிந்தேன் உன்வண்ணம் "விப்கியார்" என்று,
பிரசங்கத்தில் கேட்டறிந்தேன் உன்னை படைத்தவன் இறை அன்றி வேறு யார் என்று;
தோழி குதித்தாள் நீ வானில் தீட்டிய ஓவியம் என்று,
ஆனால் வானவில்லே நான் உன்னைக் காண்கையில் ,
நிற்கின்றேனே மெய்மறந்து வார்த்தையின்று,
தெரியவில்லையே...... ஏன் என்று!!

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top