பெண்ணே உனக்காக ஒரு நொடி
மகளாய் வளர்ந்தாய்,
புகழை பெற்றோர்க்கு அளித்து மகிழ்தாய்;
மனைவியாய் அமைந்தாய்,
துணைவனின் சுமைகளை அணியென புனைந்தாய்;
அன்னையாய் மலர்ந்தாய்,
தன்னையே கொடுத்து ஆனந்தம் கண்டாய்;
குடும்பத் தலைவியாய் திகழ்ந்தாய்,
உடும்பென பந்தங்களை பற்றி இணைத்தாய்;
அலுவலில் சிறந்தாய்,
பலுவென்றாலும் போராடி வென்றாய்;
இத்தனையும் செய்தாய் சரி தான் பெண்ணே,
உன் ஆசைகளை குழிதோண்டி புதைத்தாய் சரியா கண்ணே!
மனம் தளர்ந்து உடல் நலிந்து வாடிய பின்னர்,
மனம் அழுந்தி தனிமையில் வாடுகிறாய் பெண்ணே;
நீ நேசித்த சொந்தங்கள் உன்னோடு தானிருக்க,
அவர் மீது ஆவேசம், உன் மீதும் துவேசம் ஏனடி கண்ணே;
பிறர்க்கென வாழ்தல் நல்லதடி பெண்ணே;
ஆனால்,
உனக்கென ஒரு நொடியேனும் செலவிடடி கண்ணே...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top