நட்பு
உணவு ருசிக்க வேண்டும் உப்பு,
வாழ்வு ரசிக்க வேண்டும் நட்பு;
ஒன்று கூடி உண்டு களிப்பதா நட்பு?
நன்று கூறி தோள் கொடுப்பதன்றோ நட்பு!
துரியோதனன் நட்பு கர்ணனுக்குச் சாபம்,
மதுசூதனன் நட்பு பார்த்தனுக்கு லாபம்;
பணம் கண்டு தோழமை வரின் நடிப்பு,
குணம் கொண்டு கொள்வோம் நாம் நட்பு.
பி.கு.:இவை என் சொந்த கவிதைகள். உங்களுக்கு பிடித்திருந்தால் வோட் செய்யவும். நன்றி
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top