நிலவு
எங்கள் பூவுலகத் தாயோடு நீ பிறந்தாய்,
திங்களே உலவுகிறாய் அவளோடு நீ தங்கையாய்;
எனவே சிற்றன்னை முறை வைத்தேன் நான் உனக்கு,
தண்ணொளியால் வழி காட்டு நீ எனக்கு;
சுவாசிக்கும் காற்றுதனை தமக்கைக்கு நீ விடுத்து,
நாள்தோறும் தேய்கின்றாய் ஓடாக நீ சிறுத்து;
உன்மீது நான் கொண்ட அன்புதனை நீ கண்டு,
பெருமகிழ்ச்சி கொண்டு வளர்கின்றாய் மீண்டும் இன்று;
உன் முழு மதி முகம் கண்டு மனக்கலக்கம் நீங்குதன்றோ,
பொன் நில ஒளி சூழலிலே நல் உறக்கம் தோன்றுதன்றோ!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top