தீண்டாமை வேண்டும்

வேண்டுவன அளிக்கின்ற பராசத்தி தாயே
தீண்டாமை வேண்டும்; தீண்டாமை வேண்டும்!

மனிதனே மனிதனை தீண்டாமல் பழிக்கின்ற
கேடுகெட்ட எண்ணங்கள் எந்நாளும் எம்மைத்
தீண்டாமை வேண்டும்; தீண்டாமை வேண்டும்!

சாதிகளில் உயர்வென்றும் தாழ்வென்றும் ஏசி
மோதிக்கொள்ளும் அற்பர்தம் உறவு எப்பொழுதும் எம்மைத்,
தீண்டாமை வேண்டும்; தீண்டாமை வேண்டும்!

பொறாமை, இல்லாமை, அறியாமை ஆகிய
தீராத ஆமைகள் வேராக இங்கிருக்க,
மாந்தருள் தீண்டாமை என்ற நோயும் சேர்ந்திருக்க,
இவைதாமே களையட்டும் என்றெண்ணிக் காத்திருக்கும்
கோழைகளின் மடமைதனம் என்றென்றும் எம்மைத்
தீண்டாமை வேண்டும்; தீண்டாமை வேண்டும்!

        

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top