குழந்தை

To kalpusaran

குழந்தையின் சிரிப்பில் மயங்காதோர் உண்டோ,
மழலையின் சொல்லில் கிறங்காதோர் உண்டோ;

தவழ்ந்து வரும் சிறுதேரின் அழகுக்கு ஈடுமுண்டோ,
அசைந்து வரும் அன்னத்தின் ஒயிலுக்கு இணையுமுண்டோ;

துறுதுறு விழியில் தெய்வம் தெரியுதன்றோ,
தூங்கியபின் சிரிப்பில் அமைதி துலங்குதன்றோ;

குழந்தையின் உள்ளம் பாலின் தூய்மையன்றோ,
அதில் சூதெனும் நஞ்சு கலந்திடல் பாவமன்றோ!

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top